“தரமுடியாது  போடா” என்று சொல்லி அவனை பிடித்து தள்ள வாசலிலேயே அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு சிறு சண்டை நடந்தது.,

பின்பு “தூங்கும் போது தர முடியாது போ” என்று சொன்னாள்.,

அவள் ஏற்கனவே அடிக்கடி சித்து விடம் பேசுவது சாருவிற்கு தெரியும் அதனால் தான் அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது..

அதன்பிறகு வீட்டிற்குள் வந்தவுடன் முதல்முதலாக கந்தசாமி தன் கையில் குழந்தையை வாங்கிக் கொண்டார்.,  தூங்கம் லேசாக கலைந்து கொண்டிருந்த குழந்தையை கேட்டார்.

அவள்  கொடுப்பதற்குள் மித்திரன் வாங்கி தன் தந்தையின் கையில் கொடுத்திருந்தான்.,

ஏனெனில் அவர் மட்டும் தான் அவனின் ஆசைக்கும் அவனுடைய உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுப்பவர் என்பது அவனுக்குத் தெரியும்.,

சந்தோஷமாக பேத்தியை கையில் வாங்கியவர் முகத்தை பார்த்தவர் மித்ரனிடம் “அப்படியே உன்னை மாதிரி இருக்காடா எம்பேத்தி”., என்று சொன்னார்.,

நண்பர் குடும்பத்தினர்., அனைவரும் ஒவ்வொருவராக மித்ரன் அப்பாவின் அருகில் வந்து குழந்தையை பார்த்து செல்ல., அதற்குள் அங்கு ஒரு சந்தோஷம் சங்கமும் நிகழ்ந்திருந்தது.,

மித்ரன் அம்மாவையும்., சாருவின் அம்மாவையும் மட்டும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை., சாருவின் அப்பா வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க அவள் பதில் பேசுவதை தவிர்த்து கொண்டாலும்.,

அவர் எதையும் கண்டு கொள்ளாமல் மித்ரனின் அப்பாவின் மடியில் இருந்த பேத்தி கையை பிடித்து “உங்க அம்மா மன்னிக்காட்டிலும் பரவாயில்லடா.., நீ தாத்தாவ மன்னிச்சுடு” என்று சொல்லி குட்டி கை விரல்களை பிடித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் மித்ரனின் அக்கா குழந்தையை கையில் வாங்கிக் கொண்டவர்., சாருவிடம் சண்டை போடாத குறையாக பேசிக் கொண்டிருந்தார்.

” நான் தான் உனக்கு டெலிவரி பார்க்க நினைத்து இருந்தேன்., இப்படி பண்ணிட்டியே” என்று சொன்னார்.

” நீங்க என்கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தீங்க னா.,  நான் உங்களுக்கு போன் பண்ணி வரச் சொல்லி இருப்பேன்” என்று சொன்னாள்.

“என் தம்பிக்கு மட்டும்  போன் பண்ணி வர சொல்லிருக்க”., என்றாள்

“உங்க  தம்பி தான் சொன்னாரு.,  டெலிவரி நேரத்தில் நான் கூட இருக்கணும்.,  பேபிய நான் தான் முதல்ல கைல வாங்கனு சொன்னாரு., அதுக்கு அவங்க கிட்ட சொன்னேன்., நீங்கள் இப்படி னு  சொல்லியிருந்தீங்க னா., உங்களுக்கு போன் பண்ணி இருப்பேன் இல்ல”.,  என்று சொன்னாள்.

அதற்குள் வீட்டு டிரைவரை அனுப்பி அவள் மகனைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சொல்லி இருந்தாள்.,

பள்ளியிலிருந்து வந்த சிறுவர்கள் இருவரும்  சாருவை கண்டதும் ஓடி வந்து கழுத்தோடு கட்டிக் கொண்டனர்.,

“அத்தை எங்க போனீங்க அத்தை., இத்தனை நாளா, நீங்க இல்லாம எவ்வளவு போரடிக்குது தெரியுமா”.,  என்று சொல்லி கழுத்தை கட்டிக் கொண்டு அவளிடம் கொஞ்சி விட்டு அதன் பிறகு குழந்தையை பார்த்தனர்.

“இனிமேல் இங்க எங்ககூட தானே பாப்பா இருப்பா” என்று கேட்டனர்.

மித்ரன் ” நீங்க தான் பாப்பா பாக்கணும் னா ஊருக்கு வரணும்.,  இனிமேல் லீவுக்கு வேற ஊருக்கு வரலாம்.,  இங்க வீட்ல இருக்கனும்னு அவசியமில்லை” என்று சொல்லி குழந்தைகளின் மனதை மாற்றிக் கொண்டிருந்தான்.

“ஏன் மாமா இங்க இருக்க மாட்டீங்களா” என்று கேட்டான்.

” மாமா வேற ஊருக்கு போறேன்னு சொன்னேன் இல்ல.,  இனிமேல் லீவு விட்டாச்சு மாமா இருக்கிற ஊருக்கு வந்துருங்க., அங்க வந்தீங்கன்னா பாப்பா கூட ஃபுல்லா இருக்கலாம்., ஸ்கூல் போறதுக்கு மட்டும் இங்க வந்துருங்க”., என்று சொன்னான்.

“எங்களையும் கூட்டிட்டு போயிருங்க மாமா” என்று பசங்க இருவரும் சொல்வதைக் கேட்டு முதன் முதலாக மித்ரன் அக்காவிற்கு வருத்தம் வந்தது., தான் சரியான  தாயாக இருக்க வில்லையோ என்று….

அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மித்திரனின் அம்மா தொண்டையை செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்.,

ஏற்கனவே அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் எப்படி என்றாலும் ஒரு பிரச்சனையை உருவாக்க முயல்வார்.,  பார்த்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான்.,

இப்போது  பேச ஆரம்பித்தவர் “நீ பார்க்க அமைதியான பொண்ணு நினைச்சேன்., ஆனா இவ்வளவு பெரிய காரியம் இருக்க”., என்று சாருவை பார்த்து கேட்டார்.

சாருவும் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு பின்பு மித்ரனை பார்த்தவள்.,  “நான் எதிர்த்து பேசினா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே”., என்று கேட்டாள்.

அவனும் தோளை குலுக்கிய படி “உன் ட்ட அவங்க என்ன கேட்டாலும் அதுக்குரிய பதிலை அவங்களுக்கு புரியுற மாதிரி அழுத்தமா சொல்லு” என்பது போல சொன்னான்.

திரும்பி அமர்ந்தவள் “என்ன காரியம் னு  சொல்றீங்க., என்ன விஷயத்தில் காரியக்காரி னு சரியா சொல்லுங்க” என்று சொன்னாள்.

“குழந்தை பிறக்க போற விஷயத்தை சொல்லி இருக்க.,  டெலிவரிக்கு வர வச்சிருக்க” என்றார்.

” தப்பா சொல்றீங்க., வளைகாப்புக்கே வந்தார்”., என்று சொன்னாள்.

இது அவருக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது., அப்போது தான் தன் செல்லில் இருந்த வளைகாப்பு புகைப்படங்களை எடுத்துக் காட்டினாள்.

நம்பிக்கை யில்லனா பாருங்க.,   நீங்க  சொன்னதற்காக., அந்த நேரத்தில் செய்ய கூடியது எதையும் செய்யாமல் இருக்க முடியாது.,  நான் அனுபவிக்காமலும் இருக்க முடியாது., எனக்கு தேவையான விஷயங்களை நான் பார்த்து தான் ஆகணும்.., நானும் உங்க பேச்சை மீறக்கூடாது னு நிறைய விஷயங்களை அவாய்ட் பண்ணிட்டு தான் இருந்தேன்.,

ஆனா எப்ப நீங்க சந்தோஷ் ண்ணா விஷயத்துல அவங்களையும் இவங்களையும் பிரிச்ச அந்த விஷயம் தெரிஞ்சதோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்.,  வளைகாப்பு இப்படித்தான் நடக்கணும்., அவரை பக்கத்தில் வைத்து தான் நடத்தணும் னு.,  இப்போ ஓகேவா”..,  என்றாள்.

“சந்தோஷ்..? சந்தோஷை எப்படி உனக்கு தெரியும்”என்று அதிகாரமாக கேட்டார்., மித்ரனின் அம்மா..,

“ஏன்னா எனக்கு வளைகாப்பு பண்ணி வச்சதே சந்தோஷ் அண்ணா தான்.,
அம்மா வீட்டு  சார்பா ஒரு அண்ணனா இருந்து எனக்கு வளைகாப்பு நடத்தி வச்சாரு.., அதுமட்டுமில்லாம என் குழந்தைக்கு தாய் மாமா இருந்து எல்லாம் செஞ்சிருக்காரு.,  அவருக்காக நான் சப்போர்ட் பண்ணி பேசுறது தப்பு இல்லையே.., என்றாள்.

கண்டிப்பா இன்னைக்கு ஒரு முடிவுக்கு வரும் என்ற நினைப்போடு பேசுபவர்களை பார்த்து கொண்டு இருந்தான்.,  ஏற்கனவே சந்தோஷ் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பது அவனுக்கு சற்று வருத்தமாக இருந்தது., இவள் தொடங்கவும் அவனும் அமைதி காத்துவிட்டான்….

“எனக்கு தெரியாம என்னடா நடக்குது” என்று அவர் கத்தினார்.

” எனக்கு தெரியாம நீங்க என்ன எல்லாமோ பண்ணி இருக்கீங்க., அப்போ உங்களுக்கு தெரியாம நான் பண்றது ஒன்னும் தப்பு இல்லையே”., என்று அவனும் பதிலுக்கு பேசி விட்டான்.

மித்ரனின் அப்பா தான் “சந்தோஷ் எப்படி இருக்கான்., அவங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க”என்று கேட்டார்.

மித்ரன் தான் பேச தொடங்கினான். அவன் அம்மாவை பார்த்து.,  “எப்படி உங்களால இப்படி எல்லாம் பண்ண முடிஞ்சது.,  சந்தோஷ் எனக்கு எப்போதும் ஒரு நல்ல ஃப்ரெண்ட் ., அவங்க அப்பா எப்படி பார்த்துகிட்டாங்க தெரியுமா.,  அப்பா மாதிரி பாத்துக்கிட்டாங்க., அவங்க வீட்டுல என்னைய பையன் மாதிரி அவ்வளவு நல்லா பார்த்துப்பாங்க., அப்படிப்பட்ட அப்பாவோட கடைசி காலத்தில் அவர் முகத்தை ஒரு தடவை கூட பார்க்க முடியாம பண்ணிட்டீங்க., என்கிட்டே அன்பா இருந்தவங்க.,  அதை நினைக்கும் போது அவ்வளவு வருத்தமா இருக்கு”.., என்றவன்.

அவன் அப்பாவிடம் திரும்பி “அவனுக்கு என்னப்பா நல்லா இருக்கான்” என்று சொல்லி அவர்கள் குடும்ப விஷயத்தை சொன்னான்.

அதன்பிறகு பக்கத்து வீட்டு பெரியம்மாவும்., சந்தோஷ் அம்மாவும் தான்.,  சாருவிற்கு டெலிவரி நேரத்தில் முழுவதும் பார்த்தது., இப்பொழுது வரை பார்த்துக் கொண்டிருப்பது என்று சொல்லி விஷயங்களை சொல்லவும் அவரும் மகிழ்வோடு கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்  பிறகு நண்பர்கள் சந்தோஷ் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். தன் செல்லில் இருந்த அவள் வளைகாப்பு புகைப்படமும் சரி., குழந்தையின் பெயர் வைக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படத்திலும் உள்ள அனைத்தையும் காட்ட அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம்…

சாருவின் குழந்தையை சற்று நேரம் சாருவின் தம்பி கையில் கொடுத்து வாங்கினான் மித்ரன்.,

ஆனால் மித்ரனின் அம்மாவிடமும் சாருவின் அம்மாவிடமும் குழந்தையை கொடுக்கவில்லை.,

மித்ரன் அம்மா கண்டு கொள்ளாதது போல் அமர்ந்திருந்தாலும்., இவனும் பதிலுக்கு கண்டு கொள்ளாமலே இருந்துவிட்டான்.