Advertisement

18

சிப்பிக்குள் முத்தாக நீ இருந்தால்
உன்னை காக்கும் சிப்பியாக
நான் இருப்பேன்.,  

ஆழ்கடலாக நம் காதல்
நம்மை காத்து நிற்க., 

நம் காதல் இன்னும் இன்னும் 
ஆழமாய் போய்க் கொண்டே 
இருக்கிறது.,

நல்ல புரிதல் போதும் 
நம் காதல் வாழ்வதற்கு…

குழந்தை விஷயம் தெரிந்தவுடன் சற்று நேரம் ஒருவரும்  பேசவில்லை என்றாலும்., பிறகு ஆளாளுக்கு குழந்தையைப் பற்றியே கேட்கத் தொடங்கினர்.

நண்பர்கள் குடும்பத்தினரும் மித்ரனிடம் குழந்தையை பற்றி விசாரிக்க அவன் சொல்லிக்கொண்டு இருந்தான்.

அப்போது தான் சாருவின் அம்மா “ஏன் தம்பி நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல என்கிட்ட” என்று மறுபடியும் கேட்டார்.

“தயவு செய்து திரும்பத் திரும்ப நீங்க சொன்னதே சொல்லாதீங்க.., உங்க மேல தான் தப்பு இருக்கு., ஆனால் அத புரிஞ்சிக்க மாட்டீங்க.,  இப்பவும் நாங்க சொல்லாதது தான் தப்பு மாதிரி சொல்றீங்க..,  நீங்க பண்ணியது சரி னா.,  நாங்க பண்ணினதும்  சரிதான்” என்று சற்று அழுத்தமாக சொல்லவும் அதற்கு மேல் அவர் பேசவில்லை..

அனைவரும் குழந்தையை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள் “எங்களிடம் ஆவது சொல்லியிருக்கலாம்” என்றனர்.

” அதுக்கு என்ன இப்ப சொல்லிட்டேன்ல” என்று வாயை அடைத்தான்.

மித்ரனின் அக்கா தான்  கோபப்பட்டாள்.,  “ஏண்டா இப்படி பண்ணின.., நான் உனக்கு எந்த விதத்தில் சப்போர்ட் பண்ணாம இருந்திருக்கேன்., நீ படிப்பு விஷயத்தில் சொல்லும் போது கூட நான் உனக்கு சப்போர்ட் பண்ணி தானே பேசினேன்..,

நீ  என்கிட்ட கூட சொல்லல..,  எனக்கும் ஆசை இருந்துச்சிடா.,  நான் தான் சாருக்கு டெலிவரி பாக்கனும்னு., வீட்டுல ஒருத்தி கைனக்காலஜி முடிச்சிட்டு இருக்கேனே என்னைய யோசிக்கவே மாட்டியா நீ., செக்கப் அப்ப  சொல்ல வேண்டாம் சரி., அட்லிஸ்ட்  சொல்லி இருந்தா கூட நான் வந்திருப்பேனே..,  நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா.,  அவளுக்கு நான் தான் டெலிவரி பார்க்கணும்.., உன் குழந்தையை நான் தான் என் கையாலே எடுக்கணும்.., தன் எண்ணத்தை  சொன்னாள்.

என்னக்கா உன் மனசுக்குள்ள வச்சுட்டு இதை இப்ப வந்து சொல்ற..,  இது அன்னைக்கே சொல்லி இருக்கணும்., சரி என்கிட்ட சொல்ல வேண்டாம்.,  அட்லீஸ்ட் சாரு ட்ட நீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா..,  நான் உன்னை கூப்பிட வேண்டாம் னு சொன்னா கூட சாரு உன்னை கூப்பிட்டு இருப்பா.., நீ தான் தப்பு பண்ணிட்ட..,  என்றான்.

“எப்படியும் குட் நியூஸ் னா., முதல்ல என்கிட்ட தான் சொல்லுவீங்க நினைச்சேன்.,  நான் தான் அவளுக்கு ஒவ்வொரு மாதமும் செக்கப் பண்ணுவேன் னு  யோசிச்சேன்.,  இப்படி ஆகும்னு நினைக்கலையே”.,  என்று  வருத்தத்தோடு சொன்னவள்..,

அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். “டேய் இதுக்காகவே  உன்னோட அடுத்து பேபி நான் தான் டெலிவரி பார்ப்பேன்”., என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது..

அவனோ சிரித்தபடி “சாரு வந்த உடனே சொல்லு” என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தான்..

சாருவின் தம்பியும் “அத்தான் சித்து அக்காக்கு தெரியுமா”., என்று கேட்டான்.

தெரியும் இந்த மாச மாசம் கொச்சின் வந்து செக்கப் கூட்டிட்டு போறது எல்லாமே அவங்க தான் பார்த்துக்கிட்டாங்க., இப்ப கூட அவளுக்காக பெங்களூர் ல இருந்து வந்து சாருவ கூட்டிட்டு வர்றாங்க.,  ஏன் கேட்குற., என சொன்னான்.

“சித்து அக்கா வர்றாங்களா” என்று கேட்டான்.

“ஆமா” என்று சொன்னான்.

“வரட்டும் வரட்டும் நான் பேசிக்கிறேன்” என்றான்.

“ஏன்டா” என்று கேட்டான்.

“நான் அடிக்கடி சித்து அக்காகிட்ட பேசுவேன்.,  சாரு எப்படி இருக்கா., என்ன செய்யுறா., எங்க மேல இன்னும் கோவம் தான் இருக்கலா” ன்னு கேட்பேன்.,  ஏதாவது சொன்னாளா., எப்படி  இருக்கான்னு மாத்தி மாத்தி எவ்வளவு கேட்டிருப்பேன் தெரியுமா ஒருநாளும் எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டாங்க..,  கேட்டா எனக்கு தெரியாது எனக்கு தெரியாது ன்னு சொல்வாங்க.,  அட்லீஸ்ட் இந்த விஷயத்தை என் ட்ட சொல்லி இருக்கலாம்ல.., அவங்களும் இப்படி பண்ணிட்டாங்களே”., என்று சொன்னான்.

பதிலுக்கு மித்ரன் “ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு இருக்க., உனக்கு அப்படி தோணுச்சுன்னா நீ சாருக்கு போன் பண்ணி பேசி இருக்கணும்.., ஏன் உன் அக்கா தானே நீ ஒரு வார்த்தை சாரி சொல்லிட்டு பேசி இருக்க வேண்டியது தானே.., அல்லது நேர்ல போய் நின்னுருக்க  வேண்டியது தானே.,

அங்க போய் நின்றிருந்தா சாரு எங்கே ன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்.,  அவ எங்க இருக்கா னு கேட்டு தெரிந்து அங்க போய் அவ முன்னாடி நின்னு இருக்க வேண்டியது தானே.., அட்லீஸ்ட் போன் பண்ணி பேசி இருக்கணும்., இல்ல வாட்ஸ் அப்ல ஒரு சாரி மெசேஜ் போட்டு விட்டு இருக்கணும்.., எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் நீ அமைதியா இருந்துட்டு.,  சித்து மேல குறை சொல்லிக்கிட்டு இருக்கேயே” என்று சொல்லி சத்தம் போட்டான்.

ஒன்னும் அமைதியாக இருந்தவன்.,  இதுல நான் பேசணும் நினைப்பேன்.,  ஆனால் அம்மா அவளுக்கு நான் ஏற்கனவே ரொம்ப சப்போர்ட் பண்ணுறேன் ன்னு சொல்லி சத்தம் போட்டாங்க., அதனால தான் நான் அமைதியா இருந்தேன்”., என்றான்.

“உங்க வீட்டுல வளர்ந்த பொண்ணப் பத்தி மத்தவங்க சொல்லுறத எப்புடிடா நம்புறீங்க.,  உனக்கு நம்பிக்கை இல்லையா.,  இவங்க யாரு டா அவள பத்தி சொல்றதுக்கு” என்று தன் அம்மாவை பார்த்து கையை காட்டி கேட்டான்.

“உன் கூடப்பிறந்தவ., இத்தனை வருஷமா கூட பழகுன உனக்கு தெரியாதா., அவளைப் பற்றி” என்று கேட்க தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான்..

அதேநேரம் மித்ரன் போன் அழைக்க.,

“பக்கத்தில் வந்து விட்டோம்., என்ன பண்ணனும்”., என்று கேட்டாள்.

“கார் திருப்பி அனுப்பிரு வெயிட்டிங் போடாத..,  சித்துவ கூட்டிட்டு உள்ள வா” என்று சொன்னான்..

அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரனின் அப்பா.,அங்கு பொறுப்பில் இருக்கும் ஆன்ட்டியை அழைத்தவர்.,

“என் பேத்தி  முதன்முதலில் வீட்டுக்கு வர்றா ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடுங்க” என்றார்.

மித்ரன் “அதெல்லாம் வேண்டாம் ப்பா.,  இப்ப இந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் யாரோ தான்.,   அப்படி இருக்கும் போது இதெல்லாம் தேவையில்லை”., என்று சொன்னான்.

மித்ரன் அக்காவோ., “நீ வாயை மூடிட்டு சும்மா இருடா..,  உனக்கு உரிமை வேண்டாம் னா நீ வாயை மூடிட்டு போ., அதுக்காக அவளுக்கு இந்த வீட்டில் உள்ள உரிமையை யாரும் தர மாட்டேன்னு சொல்ல முடியாது., நீ உன் வேலையை பாரு”.,  என்று சொல்லியவள்

“ஆன்ட்டி சீக்கிரம் கரைத்து எடுத்து வாங்க”., என்றாள்.

வெளியே கார் நிற்கும் சத்தம் மற்றும் பேச்சு சத்தங்கள் கேட்க.,  மித்ரன் எழுந்து வெளியில் சென்றான்.,

அனைவரும் வேகமாக வந்து வாசலில் நிற்க., சாரு குழந்தையுடன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்.

அவளை அங்கேயே நிற்க சொல்லி ஆரத்தி எடுத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்தாள். மித்ரன் அக்கா.

அவள்  மித்ரனை  பார்க்க மித்ரன் இமை மூடி அனுமதிக்க சொன்னான்., அப்போதும் அவன் அப்பாவிடம் “உங்களுக்காக மட்டும் தான் இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்  அலவ் பண்ணுகிறேன்” என்று சொன்னான்.

மித்ரன் அம்மாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வாசலில் வரவேற்பதற்காக வந்துவிட்டனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து குழந்தையும் சாருவையும்  நேரில் பார்ப்பதால் மித்ரன் தோளோடு அணைத்துக் கொண்டான். தூங்கும் குழந்தையை கையில் வாங்கப் போக.,

அவளோ  “தூங்குறா மா.,  இப்ப கை மாற்றினா., முழிச்சுக்குவா” என்று சொன்னாள்.

டவலில் பொதிந்திருந்த மகளின் முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவன் குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தான்.,

தோளோடு சேர்த்து கொண்டிருக்க தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சாருவின் தம்பியும் வேகமாக வந்து சாருவை சேர்த்து அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினான்.

அவன் வேகமாக அணைத்ததில் லேசாக தடுமாறியவளை மித்ரன் பின்னிருந்து தாங்கிக்  கொள்ளவும்.,

இவளோ “தள்ளிப்போடா எருமை மாடு என்னையும்., பிள்ளையும் கீழே தள்ளிவிட பாக்குறியா போ” என்று விரட்டினாள்.

அவனும் அவளை கட்டிக்கொண்டு “ஏன் என்கிட்ட சொல்லல., ஒரு தம்பியா உனக்கு என்னவெல்லாம் செய்ய நினைச்சிருப்பேன்.,  உன் பிள்ளைக்கு மாமாவாக எவ்வளவு செய்ய ஆசைப்பட்டேன்.,  எல்லாத்தையும் கெடுத்துட்ட”.,  என்று சொல்லி அவளிடம் கோபப்பட்டு அழவும்.,

அவளால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை., ஏனெனில் அவள் வீட்டினரைப்  பொருத்தவரை அவளிடம் கொஞ்சம் ஒத்து  இருப்பவன்.,

அவன் தம்பி மட்டுமே அழுதவன் வேகமாக கண்ணைத் துடைத்துக்கொண்டு., பிள்ளையை வாங்க போனான்.,

Advertisement