Advertisement

“ஏன்மா  என்ன ஆச்சு” என்று பதட்டமாக கேட்டாள்.

“ஒன்னும் இல்லடா.., உங்க அம்மா வந்திருந்தாங்க., உன் தம்பி வந்துருந்தான்.,  எல்லாத்தையும்., எடுத்துச் சொல்லி இருக்கு,  அவங்க உன்ன பாக்கணும் னு ஆசை படுறாங்க., வேற நான் உன் ட்ட சொன்ன விஷயம் தான்”., என்றான்.

“பாப்பா இருப்பதை சொல்லிட்டீங்களா”.,  என்றாள்.

“யாருட்டையும் எதுவும் சொல்லல., நீ நாளைக்கு கிளம்பி வந்துரு”., என்று சொன்னாள்.

” ஏன்மா ஏதும் பிரச்சினையா” என்றாள் மறுபடியும்.,

“ஏன் சாரு., என்ன விஷயம் னு தெரிஞ்சா தான் வருவியா” என்று கேட்டான்.

” ஐயோ அப்படி சொல்லல.,  வர்றேன்.,   டிக்கெட்  போட்டுட்டு சொல்லுங்க”., என்றாள்.

” நான் இப்போ டிக்கெட் பார்த்துட்டு இருக்கேன்., போட்டுறுவேன்” என்று சொன்னான்.,

காலையில உன்னை சந்தோஷ்  வந்து ஏர்போர்ட்ல கூட இருந்து ஏத்திவிட்டு தான் வருவான் பயப்படாத., எதுவும் எடுத்துக்க வேண்டாம்., பாப்பா க்கு மட்டும் தேவையானது எடுத்துக்கோ” என்று சொன்னான்.

“சரி நான் பாத்துக்குறேன்” என்று சொன்னாள்.

குழந்தையை கொண்டு ப்ளைட்டில் வருவதால்., அவளுக்கு தேவையான அறிவுரைகளையும் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவளுக்கு எப்படி உடுத்தினால் வசதியாக இருக்கும் என்று கேட்டு அதற்கு தகுந்தார் போல் சில அறிவுரைகளையும் ஒரு டாக்டர் ஆக சொல்லிவிட்டு.,  சரிடா காலையில கிளம்பி வரனும்., சீக்கிரம் தூங்கு அப்ப காலையில சீக்கிரம் எழுந்திருக்க முடியும்..,  நான் இன்னொரு முறை சந்தோஷ் ட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்”., என்று சொல்லி வைத்தான்.,

அதற்குள் மறுபடியும் சந்தோஷ்  கூப்பிட “என்னடா பேசிட்டயா”., என்று கேட்டான்.

சித்துட்ட பேசிட்டேன்., வேற எதுவும் சொல்லை., “சின்ன ப்ராப்ளம்   சென்னைக்கு சாரு போகணும்., நீ பெங்களூரில் இருந்து சென்னை வந்து., சாருவையும் குழந்தையும் பிக் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா., அவ ரொம்ப சின்ன குழந்தையோட வர்றா.. சிசேரியன் பண்ணி இரண்டு மாசம் தானே அவ ஹெல்த் அ யோசித்து தான் சொல்லுறேன்”., என்று கேட்டேன்., “அவளும் சரின்னு சொல்லிட்டா.,  ஒன்னும் தொந்தரவு இல்லையே” என்று கேட்டதற்கு “ஒன்னும் இல்ல ண்ணா” என்று சொல்லிவிட்டாள்.

“அவளுக்கு பிளைட் டிக்கெட் நாமளே போட்டுருவோம் ன்னு சொல்லி இருக்கேன்.,  கரெக்டா மார்னிங் பிளைட்  கிளம்பி சென்னை ஏர்போர்ட் வந்து.., சாரு வ பிக் பண்ணி பா” என்று சொன்னான்.

” எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு.,   நேரம் பார்த்து சொல்லு நான் டிக்கெட் போடுறேன்., நீ காலையில கிளம்பி ப்ளைட் ஏறும் நேரத்தில்  சித்து வந்து சென்னையில் பிக் பண்ணி பாங்க ன்னு சொல்லு..,  வேற எதுவும் சொல்லாதே”., என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.,

அவனும் சித்துவிற்கு ஒருமுறை பேசிவிட்டே  இருவருக்குமான சென்னை பயணத்திற்கான டிக்கெட்டை புக் செய்தனர்…

காலை எழுந்தவுடன் சாரு அங்கிருந்து கிளம்பியதை உறுதி செய்துகொண்டான்.,  அது போல சித்துவும் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு இவன் தன் வேலைகளை செய்தான்.

அதற்கு இடையில் அவன் என்னென்ன முடிவு செய்து இருந்தானோ., அதற்கு தகுந்த படி அனைத்தையும் ஒதுக்கி ஏற்பாடு செய்து விட்டு 10 மணி அளவில் கீழே வந்தான்.,

அவன் கீழே வரும்போது அவனுக்கான உணவு ஆர்டரில் புக் செய்திருந்தான்., அந்த உணவு வந்திருக்க வாங்கியவன்., டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கந்தசாமி தான்.,

“தம்பி இது என்ன..,  சாப்பாடு மா  வீட்ல சாப்பிடக்கூடாதா..,  அப்பா  சம்பாத்தியத்தில் சாப்பிடலாம் இல்லடா” என்று கேட்டார்.

“கண்டிப்பா சாப்பிடலாம்., ஆனால் பேசி முடிவு பண்ணதுக்கப்புறம்” என்று சொன்னான்.

“சரிடா உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டார்…

அதேநேரம் ஏர்போர்ட்டில் பெங்களூர் பிலைட் வந்து இறங்கி இருக்க.., அதில் இருந்து இறங்கிய சித்து சாருக்காக காத்திருந்தாள்.

அவள் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் சாருவும் வந்து சேர்ந்து விட குழந்தையின் ஆரோக்கியத்தையும் திடத்தையும் உறுதி செய்து கொண்டு.,  அங்கு ரெப்பிரஸ் செய்து கொண்டு குழந்தையின் பசி அமர்த்திய பின்னரே அங்கிருந்து கிளம்பினர்.,

அங்கிருந்து கிளம்பும் போது பத்து மணியை தாண்டி சற்று நேரம் ஆகி இருந்தது., சென்னையில் வாகன நெரிசலுக்கு சிக்கி எப்படியும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல நேரமாகும் என்பதால் இருவரும் பேசியபடியே வந்தனர்.

அவர்களுக்கான உணவை கையில் வாங்கிக் கொண்டு வந்ததால் முதலில் குழந்தையை சித்து வாங்கி கையில் வைத்துக் கொண்டு.., காரில் வரும் போது சாருவை உன்ன வைத்தாள். அதன் பிறகு குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு இவளும் உண்டு விட., அவர்களுடைய காலை உணவு விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் முடிந்திருந்தது.,

குழந்தை நல்ல தூக்கத்தில் இருக்க “இப்படித் இதனை அவசரமா உன்னை கஷ்டப்படுத்தி வர்ற அளவிற்கு எதுவும் பிரச்சனையா”என்று கேட்டாள்.

” கஷ்டமாதான் இருந்துச்சு ஆனா இவங்க திடீர்னு கிளம்பி வா., என்று சொல்லும்போது என்ன பண்ண தெரியல அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன்.,  ஆனா ஏர்போர்ட்ல வந்து தான் சொன்னாங்க.., நீ வர்றேன்னு., எனக்காக உன்னையும் அலைய வைச்சிட்டோம்” என்றாள்.

” லூசு என்ன பேசுற உனக்காக இது கூட செய்ய மாட்டேனா., இந்த மாதிரி பேசாத சரியா”., என்று சொல்லிவிட்டு “இப்படி எல்லாம் பேசின அடி வாங்குவ பாத்துக்கோ” என்று சொல்லி அவளை தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்….

சாரு அவள் குழந்தையோடு வாகன நெரிசலில் மிதந்து வந்து கொண்டிருக்க இங்கோ..

அனைவரும் அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருக்க மித்ரன் வந்து அமர்ந்தவன்  அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு பெரிய பேக் இருந்தது.

அப்போது தான் மீண்டும் ஒருமுறை கேட்டான்., “படிப்பிற்கான செலவை சொல்லுங்கள்., குத்துமதிப்பாக இவ்வளவு இருக்குமா”., என்று ஒரு தொகையை சொன்னான்.

மித்ரனின் அப்பாவோ ” இது அதிகம் தாண்டா”., என்றார்.

“பரவால்ல இருக்கட்டும்” என்று சொல்லி அப் பையை திறந்தவன் அதிலிருந்து அவன் குறிப்பிட்ட தொகையை எடுத்து அவன் அம்மாவின் முன்வைத்தான்.

“உங்களுக்கான பணம் செட்டில் பண்ணிட்டேன்., சர்டிபிகேட் தந்துட்டு போறேன்., நான் எடுத்துட்டு போறது எம்பிபிஎஸ் சர்டிபிகேட் மட்டும் தான்” என்று சொன்னான்.

“நீ எங்கடா போற” என்றார்.

” இனிமேல் நான் இங்கே இருக்க மாட்டேன் நான் போறேன்” என்று சொன்னான்.

மித்ரன் அப்பாவும் அக்காவும் “என்னடா பேசுற.,  நீ இல்லாம நாங்க எப்படி இந்த வீட்ல இருக்கிறது”என்று சொல்லி மித்ரனின் அக்காவும் கோபப்பட்டார்.

அதே நேரம் மித்ரன் அப்பாவும் “என்னடா பேசுற” என்று சொன்னார்.

“இல்ல எப்பவும் என் வாழ்க்கையில எல்லாத்தையும் கெடுக்கணும்னு இவங்க முடிவு பண்ணினாங்களோ., அப்பவே நான் சுதாரித்து இருக்கணும்.., தப்பு பண்ணிட்டேன்.

சில விஷயங்களை மறக்க முடியாது., சில விஷயங்களை மன்னிக்க முடியாது.,  அப்படி தான் இப்பவும் மறக்க முடியாத விஷயம் னா சந்தோஷ் ட்ட இருந்து பிரிச்சத. ,   சந்தோஷ் ம் நானும் சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் கையை கோர்த்துட்டு இருந்தோம்.,  அதை மறக்கவே முடியாது..

இப்ப  என் வைஃப்., என் வாழ்க்கை,  என்னோட பாதியை  என்கிட்ட இருந்து பிரிக்கணும் நினைக்கிறாங்களே அப்படி உள்ளவங்களை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாது..,

ஒரு அம்மாவா இருக்க தகுதியே இல்லாதவங்க இப்பவும் வாழ்க்கைல நிறைய அம்மா இப்படி தான் இருக்கிறார்கள்., என்று கேள்விப்படுகிறேன்., அதனாலதான் நிறைய வீட்டிலும் கேஸ் வெடிக்குது மாமியார்-மருமகள் சண்டை நடக்குது., போலீஸ் ஸ்டேஷன் ல தான் குடும்ப பஞ்சாயத்து போகுது., காரணம் யாருங்க   நான் சொன்னது தான் நடக்கணும் நினைக்கிற ஆட்கள் தான்.., இந்த இடத்திலேயே வாழ முடியாது., என் வாழ்க்கை வீணாகிவிடும்.,

அதனால நான் போறேன் நான் போறது தான் நல்லது.., எனக்கு என் குடும்பம் ன்னு நான் வாழ ஆரம்பிக்க முடிவு பண்ணிட்டேன்” என்று சொன்னான்.

“மித்ரா  என்னப்பா எங்கடா போற”.,  என்று கேட்டார்.

“ப்பா சொல்றேன் கொச்சின் போக போறேன்., இப்ப சாரு அங்க தான் ஒர்க் பண்ணிட்டு இருக்கா” என்று சொன்னான்.

Advertisement