Advertisement

      சாருவின் அம்மா.,  “தெரியாத தம்பி  இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.,  எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல., இந்த சித்தாரா பொண்ணுட்ட  அப்பப்ப இவன் பேசி விசாரிப்பான்., அவளும் அவ கூட இருக்குற மாதிரி தானே பேசினா”., என்றார்.

எப்படி சொல்லுவா நீங்க அவள  நம்பலை இல்லை.,  நம்பாதவங்க ட்ட  எதுவும் சொல்லனும்னு தோணாது அப்படித்தான் இதுவும் விட்டுருங்க..,  இதுக்குமேல இதப்பத்தி பேசாதீங்க” என்று சொன்னவன்.

“ஓகே பா இப்ப சொல்றேன்., நான் இந்த வீட்டில் இருந்து நான் எடுத்துட்டு போற திங்ஸ் அப்படின்னு சொன்னா.,  நான் என்னோட எக்ஸைஸ் ஈக்விப்மன்ட்ஸ்., அப்புறம் என் கல்யாணத்தப்ப நான் சாருக்காக வாங்கி வச்ச டிரஸ் கப்போர்டு., அப்புறம் எங்க கல்யாண போட்டோ., அதைத்தவிர என்னோட டிரஸ்.,  இங்கே இருக்கிற சாருவோட டிரஸ்  இதை மட்டும் தான் நான் எடுத்துட்டு போக போறேன்.,

மத்தபடி இந்த வீட்டில் இருந்து வேற ஒரு  திங்ஸ் கூட நான் எடுத்துட்டு போகல.,  அதான் உன் கிட்ட சொல்லனும் இல்ல அதுக்கு தான் சொல்றேன்”.,என்று சொன்னான்.

“இந்த வீட்டில எல்லாமே உனக்குரியது நீ ஏன்டா இப்படி பிரிச்சி பேசுற”., என்று சொல்லி திட்டினாள் அக்கா.

” கோபப்படாத  எனக்கு எதுவுமே வேண்டாம்.., தயவு செய்து என்னை விட்டா போதும் மாதிரி இருக்கு இப்போ” என்று சொன்னான்.

வெளியே ஒரு டெம்போ போல் சிறிய வண்டி வந்து நின்றது., உடனே அங்கிருந்த ஆண்களை அழைத்தவன் வந்த ஆட்களை அழைத்து அவன் எந்த பொருளை எடுக்க வேண்டும் என்று சொல்லி காட்டிக்கொண்டிருந்தான்..

அவர்கள் எடுத்து டெம்போவில் ஏத்த இவனோ அட்ரஸ் எழுதிய பேப்பரில் கையில் கொடுத்து “வெயிட் பண்ணுங்க., ஒரு டூ ஹவர்ஸ் இல்ல நானும் வரேன் சேர்ந்தே கிளம்பிட்டலாம்., நான் முன்னாடி கார்ல போனா நீங்க பின்னாடி வந்துருங்க சேர்ந்து கிளம்பலாம்”.,என்று சொன்னான்.

” சரி சார்” என்று சொல்லி பொருள்களை ஏற்றி அவர்கள் காத்திருந்தனர்.,

நேற்று அவன் மதிய பொழுதில் வெளியே சென்றிருக்கும் போது பேங்க்கில் சென்று அவன் அம்மாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டான்.

வரும் வழியில் துணிகளை வைப்பதற்கு பெரிய பெரிய அளவில் சூட்கேஸ்களையும் வாங்கிக்கொண்டு வந்தான்.

இரவு நேரம் சாருவிடமும் சந்தோஷமும் பேசிய பிறகு அவற்றை எல்லாம் பேக் செய்து தயார் செய்து வைத்தான்….

இதோ இப்போது அனைத்தையும்  டெம்போவில் ஏற்ற சொல்லி எடுத்துக் கொடுத்து அனைத்தையும் ஏற்றிவிட்டு.,    சாரு  இருக்கும் வீட்டில் ஏற்கனவே பர்னிச்சர் இருக்கும் என்பதால்.,  இதை எங்கெங்கு வைக்க வேண்டும் என்று அவனே முடிவு செய்து கொண்டான்.

சாவி சந்தோஷ் வீட்டில் இருப்பதால் கிளம்பும்போது போன் செய்து சொன்னால் வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்து வைப்பார்கள். ஏற்கனவே இவர்கள் குழந்தை இருப்பதால் தினமும் சுத்தம் செய்யும் வீடுதான் என்பதால் போய் கூட பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்…

பொருட்களை ஏற்றி அவர்கள் சற்று வண்டியோடு தள்ளி நிற்க இவன் மறுபடியும் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.

எல்லா பொருட்களையும்  சிறிய டெம்போவில்  ஏற்றினாலும் அவனுடைய பெரிய அளவிலான திருமண புகைப்படத்தை மட்டும் காரில் எடுத்து வைத்தான்..,

அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த     சாருவின் அம்மா “தம்பி நல்லா யோசிச்சுகோங்க” என்றார்.

” நான் பாத்துக்குறேன்  தயவுசெய்து இதுல நீங்க தலையிடாதீங்க இது எனக்கான வாழ்க்கை., நானும் சாருவும் சேர்ந்து தான் முடிவு பண்ணனும்., வேற யாரும் இதில் தலையிட கூடாது” என்றான்.

மித்ரனின் அம்மா “போறேன் போறேன் சொல்றியே.,  ஹாஸ்பிடல் ஷேர் வேல்யூ தெரியுமா உனக்கு., நீ வேண்டாம் ஈஸியா சொத்து தூக்கிப் போட்டுட்டு போறேங்க.,  நான் அவ்வளவு சொத்தையும் உங்க அக்காக்கு எழுதிக் கொடுத்திடுவேன்” என்றார் மிரட்டும் குரலில்.

” தாரளமா எழுதிக் கொடுங்க., எனக்கு தேவையில்லை” என்று இவன் சொன்னான்.

இந்த வீட்டோட மதிப்பு தெரியுமா., ஹாஸ்பிடல் ஷேர்ஸ் மதிப்பு தெரியுமா., எதுவுமே வேண்டாம் ன்னு தூக்கி போட்டுட்டு போறேங்க.,  கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா.,  பணத்தோட அருமை தெரியாதவன் நீ எப்படி  பணத்தை தூக்கி என் முன்னாடி வைத்து இருக்க பாரு” என்று சொன்னார்.

நான் தூக்கி வைச்சி இருக்கிற பணத்தோட அருமை தெரியும்., ஏன்னா அது நான் சம்பாதிச்சது., ஒருவேளை நீங்க சொல்லுற மாதிரி எனக்கு பணத்தோட அருமை தெரியாமல் இருந்தா கூட பரவாயில்லை., ஆனால் எனக்கு எதுக்கு பணம் தேவையோ அதுக்கு மட்டும் தான் தேவை னு யோசிப்பேன்.., உங்களுக்கு உறவுகளோடு அருமை தெரியல., எனக்கு உறவுகளோடு அருமை புரிஞ்சிருக்கு”., என்று சொன்னான்.

” என்னடா பெரிய உறவு பணம் இருந்தால் தான் சொந்த பந்த உறவு எல்லாம் வரும்.., இல்லாட்டி ஒருத்தரும் வர மாட்டாங்க”., என்று கத்த தொடங்கினார்.

“என்ன பெரிய பணம்.,  நீங்க இந்த பணத்தை வச்சி உங்க விதியை மாத்த முடியுமா., பணத்தை வச்சி போற உயிரை நிறுத்த முடியுமா., என்று சொல்லி பேசியவன்.

தேவையில்லாமல் வார்த்தையை விட வைக்காதீங்க.. உங்க வேலை எது உண்டு அதை பாருங்க., நான் முடிவு பண்ணிட்டேன் இதுதான் என் முடிவு ., இதுக்கு தான் நாளைக்கு சொல்லுறேன் னு நேத்து சொன்னேனே”., என்றான்.

“அப்போ நான் இந்த பொண்ணு வீட்டு ஆள்களை வரச்சொல்லி  வச்சிருக்கேனே.,  அதற்கு யார் பொறுப்பு”என்றார்.

” யாரை கேட்டு சொன்னிங்க., என்ன கேட்டா சொன்னீங்க.., என்னை கேட்டு சொன்னா தான் நான் பதில் சொல்லணும்.,  என்ன கேட்டு சொல்லாத அப்ப நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று சொன்னான்.

அந்த பெண்ணின் தகப்பனாரும் அமைதியாக எழுந்து நிற்க., அந்த பெண்ணோ “ஆன்ட்டி நீங்க தான் உங்க பையன் மேரேஜ்க்கு சம்மதிப்பார்., என்று சொன்னீங்க இப்ப வேற மாதிரி பேசுகிறாரே” என்றார்.

திரும்பி முறைப்போடு பார்த்தவன்.,   “அவங்க ஹஸ்பண்டுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க பொண்ணு பார்த்தாங்களா இருக்கும்.,  எங்க அப்பாவும் டாக்டர் தான் பேமஸ் டாக்டர் கூட., இரண்டாவது கல்யாணம் பண்றது க்கு சம்மதிச்சு வந்து இருக்கீங்க., வேணும் னா எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றான்.

கடுப்போடு அந்த பெண்ணின் அம்மா “என்ன என்ன பேசுறீங்க டாக்டர்”என்று சத்தமாக கேட்டார்.

“உண்மையத்தான் சொல்றேன்., ஏற்கனவே கல்யாணம் ஆச்சு னு தெரியும்.,   நேத்தே நான் சொல்லிட்டேன் எனக்கு என் சாரு எவ்வளவு முக்கியம்னு., மறுபடியும் இன்னைக்கும் இவங்க கூப்பிட்டாங்க னு நீங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்களே., எந்த நம்பிக்கைல வந்தீங்க.,  அப்புறம் உங்களை நான் எப்படி பேசுறது”., என்றான்.

மித்ரன் அம்மாவிடம் சண்டை போடும் தோணியில் அந்தப் பெண்ணும்.,  பெண்ணின் அம்மாவும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்..

அவர்கள் போன கோபத்தை அவனிடம் காட்டினார்., “நீ எவ்ளோ பெரிய சொத்தை வேண்டாம்னு சொல்லிட்டு போக போற தெரியுதா.., போய் அங்க போய் கஷ்டப்பட்டா  தான்டா உனக்கு எல்லாம் அறிவு வரும்.,  சொத்தோட அருமை தெரியும்., என்றார்.

“இந்த சொத்து பணம் எதுவும் எனக்கு முக்கியம் இல்ல.,   என் பொண்ணோட கால் தூசுக்கு கூட இதெல்லாம் சமமாக முடியாது”    என்று சொன்னான்.

அத்தனைபேரும் கேள்வியாக அவனைப் பார்த்தனர்.,

மித்ரன் அப்பா தான் “என்னடா சொல்ற” என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

“இப்ப  சாருவ  வரச்சொல்லி இருக்கேன். என் பொண்ணோட வாரா” என்று சொன்னான்.

“எவ்வளவு சந்தோஷமான விஷயம் இத முதல்ல சொல்ல வேண்டாமா., எனக்கு பேத்தி பிறந்திருக்கா., ரொம்ப சந்தோஷம்” என்று கந்தசாமி மகிழ்வோடு சொன்னார்.

சாருவின் அம்மா அழத் தொடங்கினார். “ஏன் தம்பி அந்த அளவுக்கு நான் ஆகாதவளா போய்ட்டேனா.,  குழந்தை பிறந்தது கூட என்று சொல்லக்கூடாதா.., இந்த நேரத்தில் தானே எல்லா பொண்ணுங்களுக்கும் அம்மாவ தேடும்..,  ஆனால் அவ என்னைய  ஒரு வார்த்தைக்கு கூட தேடலையே..,  நான் அந்த அளவுக்குப் ஆகிவிட்டனா” என்று சொல்லி கண்ணீர் வடிய நின்றார்.

மித்ரனின் அம்மாவோ அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்…

புரட்டிப்போடும் பகடைக் காய்களில் தான் ஓராயிரம் விஷயங்கள் ஒளிந்திருக்கிறது.,  நிறுத்தி நிதானமாக ஆடுகிறது விதி திருப்பி அடிக்க அதிகம் நேரம் எடுக்காது“.,

Advertisement