Advertisement

           அவளும் சிரித்தபடி “நல்லா ஹெல்தி யா தான் இருக்கேன்.,  ஒன்னுமில்ல” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

சற்று நேரம் குழந்தையைப் பார்த்தாலும் “சரிடா நீ சீக்கிரம் தூங்கு.,  நான் நாளைக்கு பேசுறேன் சரியா” என்று சொன்னான்.

“நீங்க  ஹாஸ்பிடல் போகலையா”., என்றாள். “உடம்பு முடியலையா நீங்க இப்படி வீட்டில் இருக்க மாட்டீங்களே” என்று கேட்டாள்.

“ஒன்னும் இல்லடா” என்று சொல்லி அவளுக்கு ஆறுதல் படுத்தி விட்டு போனை வைத்தவன்.யோசனையோடு படுக்கையில் சரிந்தான்.

இரவு விளக்கின் ஒளியில் படுக்கையின் பக்கவாட்டில் இருந்த அவர்களது திருமண போட்டோவை பார்த்துக் கொண்டே இருந்தவன்.,  ‘நாளைக்கு 11 மணிக்கு பேசலாம் சொல்லியிருக்காங்க.,  எனக்கு மட்டும்தான் தெரியும் ஏதோ பிளான் பண்றாங்கன்னு..,  பண்ணட்டும் பண்ணட்டும் என்ன பிளான் பண்ணினால் தான் என்ன., நான் மீட் பண்ண தயாரா இருக்கேன்., ஆனா இதுவரைக்கும் அவங்களை பத்தி முழுசா தெரியாம இருந்துச்சு..,  இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரியுது.., கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லியே ஆகணும் இது என்னோட வாழ்க்கை நான் தான் முடிவு எடுக்கனும்’.,  படுத்து கண்ணை மூடி  அந்த யோசனையோடே உறங்கிப் போனான்.,

காலை 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் கூடி இருக்க அமைதியாக வந்து அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.,

அவன் அமர்ந்து தோரணையே வீட்டில் உள்ளவர்களிடம் அவனது நிமிர்வு எடுத்துச் சொல்லியது., அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்களாக பேச தொடங்கட்டும் என்று அமைதி காத்தான்.

சற்று நேரத்தில் அங்கு வந்து ஒரு கார் நிற்க அதிலிருந்து ஒரு இளம் வயது பெண்ணும்.,  அவளுடைய பெற்றோர்கள் போலிருந்த இருவரும் வந்தனர்.

மித்ரனின் அம்மா அவர்களை வரவேற்று மற்றவர்களிடம் அவர் பெயரைச் சொல்லி டாக்டர் எங்கே இருக்கிறார் என்ற விபரங்களை சொல்லி அந்த பெண்ணையும் காட்டி அவளும் டாக்டர் என்று சொல்லி., அவள் எந்த துறையில் பிஜி முடித்து இப்போது எங்கு வேலை பார்க்கிறாள்.,என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் கண்டுகொள்ளாமல் அமர்ந்துகொண்டான். அனைவரும் வாங்க என்று கேட்டதோடு நிறுத்திக்கொள்ள மித்ரன் அப்படி ஒருவர் வந்ததையே கண்டுகொள்ளாமல் இருக்க வந்தவர்களின் முகம் சுண்டிப் போனது.

அதேநேரம் சாருவின் அம்மா அப்பாவும் தம்பியும் வர.., அவர்களை மித்ரன் அம்மா வரவேற்று அமர செய்தார்., சாருவின் தம்பி மித்ரனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க மித்ரன் அவர்களை மட்டும் வாங்க என்று கேட்டான்.,

இது அதற்கு முன் வந்தவர்களுக்கு மூஞ்சில் அடித்தது போல இருந்தது.,

அனைவரும் வந்தவுடன்  மித்திரன் அம்மா பேச்சை தொடங்கி வைத்தார்.,

சாருவின் அம்மாவிடம் “நான் நேத்தே உங்க கிட்ட போன்ல சொல்லிட்டேன் எல்லா விஷயத்தையும்.., இப்ப நீங்க தான் பேசணும்”., என்று சொன்னார்.

சாருவின் தம்பி தான் ஏன் அத்தான் இப்படி தாடியும் தலைமுடியும் வித்தியாசமா இருக்கு., ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.,  எப்பவும் போல நீட்டாக ஷேவ் பண்ணிருங்க.,  அட்லீஸ்ட் ட்ரிம் பண்ணி தாடிய கொஞ்சம் குறைச்சிக்கோங்க., என்றான்.,

சொல்ல சிரித்தவன் “ஏன் இப்படி இருந்தா நல்லா இல்லையா.., உங்க அக்காவுக்கு பிடிக்காதுன்னு சொல்றியோ” என்று கேட்டான்.

“இல்லத்தான்., அப்படி சொல்லல உங்க முகம் பாக்குறதுக்கு கொஞ்சம் டல்லா தெரியுது”என்று சொன்னான்.

போடா., என்று சிரித்தவன் “நான் சந்தோஷமா தான் இருக்கேன்” என்று சொன்னான்.

சாருவின் அம்மாதான் “தம்பி எங்க பொண்ண பத்தி எங்களுக்கு தெரியும்.,  அவளுக்கு மெடிகல் பீல்டு பிடிக்காது ன்னு சொன்னவ  தான்.., ஆனால் என்னவோ உங்களை கல்யாணம் பண்ண சம்மதிச்சா..,  ஆனா உங்க லைஃப்ல இவ்வளவு  பிரச்சினையை உருவாக்குவா ன்னு தெரியாது..,

இப்ப நீங்க வேலை வேண்டாம் படிப்பை நான் தூக்கி போட போறேன்னு சொல்றீங்களே.., அதெல்லாம் நல்லவா இருக்கு எங்க பொண்ணால அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.., உங்க அம்மா சொல்றது தான் சரி., இவ உங்களுக்கு சரி பட்டு வர மாட்டா., அம்மா உங்களுக்கு வேற பொண்ணு பாத்துட்டாங்களாமே” என்று சொன்னார்.,

மித்ரன் நிமிர்ந்து பார்த்தவன் “யாருக்கு யாரு பொண்ணு பாக்குறது”என்றான்.

“தம்பி ஏன் இப்படி பேசுறீங்க” என்று சாருவின் அப்பா கேட்டார்.

நான் அவங்க பையனா இல்லாமல் சாருவோட ஹஸ்பன்டா மாறி ரொம்ப நாளாச்சு.., என் ஒய்ஃப்., என் கு.. ”  என்று சொல்லி நிறுத்தி அவன் சற்று  அமைதியாக இருந்து.., மூச்சு வாங்கி பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு தன்னை அடக்குவது அனைவருக்கும் புரிந்தது.,

சற்று அமைதியாக மீண்டும் தன் அமைதியான குரலில் ஆனால் அழுத்தமாக சொன்னான்.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு., எனக்கு பொண்ணு பாக்குறவங்களும்., பொண்ணு கொடுக்கனும் நினைக்கிறவங்களும்  சேர்ந்து உள்ள போகனும்., சாரு கையெழுத்து நானே போட்டு கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்., என்று சொன்னான்.

“இல்ல தம்பி சாரு தப்பு பண்றா., பாருங்க., அவ உங்க கிட்ட பேசினாளா வேலைக்கு போக கூடாது சொன்னாளா”..,  என்று கேட்டார்..

அதிகாரமான குரலில் சாருவின் பெற்றவர்களிடம் பேசத்தொடங்கினான்.

” தப்பா எடுத்துக்காதீங்க நான் பேசுறதுக்கு.,  சாருவை பற்றி இவ்வளவு கம்ப்ளைன்ட் பண்ணது யாரு” என்று கேட்டான்.,

அவர்கள் யோசனையோடு மித்ரனின் அம்மாவை திரும்பிப்பார்க்க மித்ரனின் அம்மா “பின்ன நீ வேலைக்கு போக மாட்டேன்னு சொன்ன.., அவ சொல்லித்தான் நீ சொல்லி இருப்பேன் னு”
அவன் பார்த்த பார்வையில் பேச்சை நிறுத்தி விட…

“நான் உங்க கிட்ட பேசல.,  நீங்க வாய மூடுங்க” என்று சொன்னவன்.

மறுபடியும் சாருவின் பெற்றோரை நோக்கி கேள்விக் கணைகளை வீசினான்.

சாருவின் பெற்றோர்கள் “இல்ல தம்பி அவளுக்கு மெடிகல் பீல்டு பிடிக்காது., எங்களுக்கு தெரியும்., அம்மா சொன்னதால  ஒருவேளை அவ சொல்லியிருப்பாளோ நினைச்சுதான் பேசிட்டோம்”.., என்று சொன்னார்கள்.,

“உங்களுக்கு சாருவை பற்றி என்ன தெரியும்.., அவளப் பத்தி எனக்கு தெரிஞ்சதில் பாதி கூட உங்களுக்கு தெரியாது.., அவளுடைய குணம் தெரியுமா.., அவளோட பழக்கவழக்கம் தெரியுமா.., அவ எப்படி பழகுவா ன்னு தெரியுமா., எதுவும் தெரியாது நீங்க வேலை வேலைனு வேலை பின்னாடி ஓடிக்கொண்டிருந்த சாதாரண பேரண்ட் அவ்வளவு தான்., அவளோட படிப்பு  எல்லாமே அவ இஷ்டப்படி விட்டீங்க..,

ஆனா என்னைக்காவது  மனசுவிட்டுப் பேசிருக்கீங்களா..,  அவ என்னைய புடிச்சு தான் கல்யாணம் பண்ணினா.,  நானும் அவளை ரொம்ப புடிச்சி தான் கல்யாணம்  பண்ணினேன்.,  இதுக்கு மேல சாரு பத்தி பேசினா நடக்கிறதே வேற” என்று சொன்னான்.

சாருவின் பெற்றோர்கள் “தப்பு தான் தம்பி., உங்க அம்மா பேசினது வச்சு நாங்க வந்தது ரொம்ப தப்பு” என்று சொன்னவர்.,

அதே நேரம் மித்ரனின் அம்மாவிடம் “தம்பி இப்படி சொல்றாங்க நீங்க மித்ரன் தம்பி வேற  பொண்ணு பாத்துட்டு தா சொல்றீங்க” என்று சொன்ன அடுத்த நிமிடம்..,

அவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன்.,  அவன் கால் அருகில் இருந்த டீபாயை  மிதித்து தள்ளி உடைத்தான்..

ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவில் அமைதியாக இருந்தது.. அவ்விடம்.

அவசரப்பட்டு வார்த்தையை விடக்கூடாதே என்று அமைதி காத்தவன் நொறுங்கிக் கிடந்த கண்ணாடி டீப்பாயை சற்றுநேரம் வெறித்தவன் எழுந்து நின்று தன் தொண்டையை செருமிய படி பேச தொடங்கினான்.,

“நாளைக்கு இதே டைமுக்கு எல்லாரும் இதே மாதிரி வந்துருங்க முக்கியமான விஷயம் பேசணும்” என்றான்.

“என்னடா மாத்தி மாத்தி பேசுற.., நீ நினைத்த நேரத்தில் எல்லாம் வர முடியாது.,  எனக்கு இன்னைக்கு முடிவ சொல்லு அதற்கு தான் எல்லாத்தையும் கூப்பிட்டு இருக்கேன்”என்று மித்ரனின் அம்மா கோபமாக பேசினார்.

“முடிவு தெரியனும் நினைக்கிறவங்க வெயிட் பண்ணனும்.., நாளைக்கு தான் முடிவு சொல்ல முடியும்..,  நாளைக்கு இதே டைமுக்கு வந்தீங்கன்னா முடிவ தெரிஞ்சுக்கோங்க.., இல்லையா போய்க்கிட்டே இருங்க..,

நான் என்ன முடிவு பண்ணனும் ன்னு., நான் பார்த்துக்குறேன்.,  என் விஷயத்துல இனிமேல் யாரும் தலையிடக்கூடாது” என்று சொன்னான்.,

சாரு  வீட்டினர் கிளம்ப தொடங்க,  அவர்களை நிறுத்தியவன் “நாளைக்கு நீங்களும் கண்டிப்பா இங்க வர்றீங்க” என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.,

நாளை என்ன நடக்கும் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்பதால் யாராலும் எந்த முடிவும் செய்ய முடியாமல் அமைதி காத்தனர்..

பகடையை அடுத்தவர் கைக்கு கொடுக்காமல் உருட்ட தெரிந்துவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம்“.,

Advertisement