Advertisement

இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென சந்தோஷ் பற்றி பேச்சு எடுக்கவும் அங்குள்ள அனைவருக்கும் சற்று படபடப்பாகத்தான் இருந்தது..,  ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று.,

ஆனால் மித்திரனின் அம்மாவும் மிக நிதானமாக “ஆமா சொன்னேன் படிக்க சொல்லுன்னு சொன்னேன்., நீ அவன் சொன்னதால படிச்ச, அதுக்கு இப்ப என்ன” என்றார்.

எம்பிபிஎஸ் முடிச்ச அப்புறம் என்ன பண்ணேன்.,  எனக்கு புடிச்ச கோர்ஸ் எடுக்கணும் னு ஆசைப்பட்டேன்., நீங்க எடுக்ககூடாதுனீங்க.,  அப்ப தான் சண்டை வந்துச்சு..,  அப்ப என்ன கட்டாயப்படுத்தி உங்க இஷ்டபடி படிக்க வச்சிங்க இல்ல.,  எனக்கு அந்த படிப்பு தேவையில்லை.., நான் இஷ்டப்பட்டு  ஜாயிண்ட் பண்ண என்னுடைய படிப்பு மட்டும் எனக்கு போதும்., எம்.பி.பி.எஸ் குவாலிஃபிகேஷன் வச்சு தான்.,  நான் இப்போ இந்த கோர்ஸ் போய் லண்டனில் பண்ணினது.., இதுவும் என்னோட செலவில் பண்ணேன்.., சோ  அந்த கோர்ஸ் மட்டும் எனக்கு போதும்..,  நடுவுல எனக்கு பிடிக்காம நான் படிச்ச பிஜி எனக்கு தேவை இல்லை”.,  என்று அதிகாரமாக சொன்னான்.

அனைவரும் சற்று அதிர்ச்சியாகவே அவனை பார்த்தனர்., மித்திரனின் அம்மாவும் அறிவுகெட்ட தனமா பேசாதடா.., படிச்சவன் மாதிரியா பேசுற .., உனக்கு அறிவு இல்லை யோசிக்கவே மாட்டியா..,  எனக்கு வேலை வேண்டாம்ன்னு சொல்லப் போறியா.., வேலையை விட்டுவிட்டு வெறும் எம்பிபிஎஸ் ல  உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்” என்றார்.

“எவ்வளவு கிடைத்தாலும் போதும்மா.,  அதாவது என்னால வாழ முடியும்”., என்று சொன்னான்.

“யோசிக்காம பேசாத.,  நான் என்ன எல்லாம் யோசிச்சு வெச்சிருக்கேன் தெரியுமா”.., என்றார்.

“நீங்க என்ன எல்லாம் யோசிச்சு வச்சிருப்பீங்க னு எனக்கும் தெரியும்..
இனிமேலாவது எனக்காக நீங்க யோசிக்கிறத விடுங்க.., எனக்கு யோசிக்க தெரியும்..,  நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல..,  இன்னும் உங்க பேச்சு கேட்டு உங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்க.., என் லைஃப் எனக்கு பாத்துக்க தெரியும்.., எனக்கு வெறும் எம்பிபிஎஸ் மட்டும் போதும்., இல்ல அந்த எம்பிபிஎஸ் சர்டிபிகேட் வேண்டும் னாலும் நீங்களே வச்சிக்கோங்க.., எனக்கு தேவையே இல்ல”., என்றான்.

“அப்போ வேலைக்கு போகாம அப்படியே உட்கார்ந்து இருக்க போறியா” என்று கோபமாக கேட்டார்.

அங்கு அம்மாவுக்கும் மகனுக்குமான பேச்சு வாக்குவாதமாக நடந்துகொண்டிருக்க மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்., ஏனெனில் ஏற்கனவே சந்தோஷ் பற்றி பேசியதால் என்ன பிரச்சனை வருமோ என்ற பயம் அனைவரிடமும் இருந்தது…

“கவலையே படாதீங்க உங்க வீட்ல உட்கார்ந்து உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டேன்.., உங்கள் சம்பாத்தியத்தில் இனிமேல் நான் சாப்பிடவே மாட்டேன்” என்று சொன்னவன்

“நான் என் சாரு கிட்ட போக போறேன்”., என்றான்.

“அங்கு போக போறீயா., என்னடா நெனச்சிட்டு இருக்க.., பத்து மாசம் முடிஞ்சிடுச்சி., இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கு” என்றவர்.,  “ரெண்டு மாசம் கழிச்சு அவளை வர சொல்லி நான் பேசி முடிவு பண்ணிக்கிறேன்”., என்று சொன்னார்.,

“நீங்க யாரும்மா., எனக்கும் என் வொய்ப் க்கும் நடுவில., நீங்க என்ன முடிவு பண்ணுவீங்கன்னு எனக்கும் தெரியும்., இங்கே எல்லாரும் கெஸ் பண்ணி இருப்பாங்க.., மே பி எல்லாருக்கும் கூட தெரிந்து இருக்கலாம்.,  நீங்க எனக்கு மட்டும் மறைத்து எல்லா விஷயத்தையும் ஏற்பட்டு பண்ணிட்டு இருக்கீங்க.., ஆனா எதுவும் நடக்காது.., கனவுகூட காணாதிங்க” என்று சொன்னவன்.,

நான் என் வொய்ப் ட்ட போறேன்..,  வேலையே இல்லாட்டிலும் ஹவுஸ் ஹஸ்பென்ட் ஆ  இருந்துருவேன்.,   ஏன் பொம்பளைங்க வீட்ல இருந்து வீட்டை பார்த்து விட்டு ஆம்பளைங்க ஒருத்தங்க சம்பாத்தியத்தில் குடும்பம் நடுத்தர குடும்பங்கள் எல்லாம் இல்லையா., என்ன., அதே மாதிரி இருந்துட்டு போறேன்.., இப்ப என்ன வந்து போச்சு”., என்று மிக எளிதாகவும் மிக சந்தோஷமாகவும் சொன்னான்., அங்கு அனைவரும் அதிர்ச்சியோடு அவனையே பார்த்திருந்தனர்…

அவனுடைய நண்பர்களும் அப்பாவும் “டேய் என்னடா பேசுற” என்று கேட்டனர்.,

” அதில் என்ன தப்பு இருக்கு” என்று சொன்னான்.

அவனுடைய அக்காவோ “நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா டா” என்று கேட்டாள்.

“இதில  என்ன தப்பு.., உன் பிள்ளைகளுக்கு கேக்குறத கூட வாங்கிக் கொடுக்க முடியாமல்.,  நீ ஓடி ஓடி சம்பாதிச்சு என்ன செய்ய போற..,  புள்ளைய வெளிய கூட்டிட்டு போக முடியுதா  உன்னால.,  சரி  உன்னால முடியல அத்தான் லா முடியல.,  அப்பா அந்த பிள்ளைங்க நிலைமை.., கடைசி வரைக்கும் படிப்பு மட்டும் தான் வாழ்க்கை.., என்று மிஷின் மாதிரி பறக்க போறியா..,  வேலைக்கு போ வேண்டாம்னு சொல்லலை.., ஆனா குறிப்பிட்ட  நேரத்தை ஒதுக்கி பிள்ளைங்க  கூட நேரம் செலவு பண்ணு..,  பிள்ளைங்க முகத்துல இப்பதிக்கு என்னைக்காவது சந்தோஷத்தை பார்த்துருக்கியா..,  ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தேன் சொன்னியே.., அதுக்கு அப்புறம் என்னைக்காவது அந்த சந்தோஷத்தை காப்பாத்தணும்னு நினைச்சு இருக்கியா…,  நீயும் நினைக்கல., அத்தான் னும் நினைக்கல.., அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் யர்ன் பண்ணுறீங்க., உங்களுக்கு னு  டைம் ஒதுக்கி கோங்க.,  வேலையை கண்ட்ரோல் க்கு கொண்டு வாங்க.,  பிள்ளைகளை விட உலகத்துல வேற எதுவும் முக்கியமில்லை..,  அத புரிஞ்சிக்க முதல்ல” என்று சொல்லவும் வாயடைத்துப்போய் அமைதியாகி விட்டாள் மித்ரனின் அக்கா..,

மித்ரனின் அக்கா மாப்பிள்ளையோ “நல்ல சொல்லுப்பா.., நான் உங்க அக்கா கிட்ட இத ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன்” என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.

அதன் பிறகு அவனிடம் அட்வைஸ் பண்ணுமாறு யாரும் பேசவில்லை. மித்ரனின் அம்மா சற்று யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்.,

அனைவரிடமும் சேர்த்தே “நாளை காலை 11 மணிக்கு எல்லாரும் வாங்க.,  நம்ம பேசி முடிவு பண்ணலாம்., உனக்கும் சேர்த்துதான் மித்ரா சொல்றேன்.,  நாளை காலை 11 மணிக்கு பேசி முடிவு பண்ணலாம்” என்று சொன்னார்.

அவ்விடத்தைவிட்டு எழுந்தவன் “நீங்க என்ன பேசுவீங்க., என்ன முடிவு பண்ணுவீங்கன்னு எல்லாம் தெரியும்.., பேசுவோம் பேசுவோம்” என்று அழுத்தமாக சொன்னான்.

அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அவனுடைய நண்பர்களுக்கு மித்ரன் இடம் ஏற்பட்ட மாற்றம் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.,

மித்ரன் ரோபோ போல் இருந்தாலும் அவன் யாரையும் எடுத்தெறிந்து பேசியது கிடையாது., முதல் முதலாக அலட்சியமான பாவத்தோடு பேசுபவனை இப்பொழுதுதான் அனைவரும் பார்க்கின்றனர்….

அதன் பிறகு சற்று நேரம் அவனுடைய நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க மித்ரனின்  அம்மா நண்பர்களிடம் சந்தோஷ் பற்றிய பேச்சை எடுத்தானே என்னவென்று விசாரியுங்கள் என்று சொல்ல.., அதற்கு ஏற்றார் போல் அவன் நண்பர்களும் பேச்சை எடுக்க.., அவன் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை பழைய விஷயங்களை மட்டுமே சொல்லி அதுதானே உண்மை  என்று சொன்னான்.,

அதற்கு மேல் அவனிடம் யாரும் எதுவும் பேசவில்லை.,மற்றபடி நண்பர்கள் சாதாரணமாக பேசி விட்டு அவனிடம் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது என்பது தெரிந்த பின்பே காலையில் பார்க்கலாம் என்றபடி அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.,

அறைக்கு வந்ததும் சந்தோஷை அழைத்தவன் சற்று நேரம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இங்கு நடந்த எதைப்பற்றியும் சொல்லவில்லை.,

” என்னடா ஹாஸ்பிடல் கிளம்பிப் போக தொடங்கிட்டீயா”., என்று கேட்டான்.

” இல்லை இல்லை எனக்கு சீக்கிரத்தில் ஒரு முடிவு தெரியணும் ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்., முடிவு தெரிந்தது அப்புறம் தான் எதனாலும்., உனக்கு நாளைக்கு சொல்றேன்” என்று சொன்னான்.

“டேய் எதுவும் பிரச்சினை பண்ணிடாத.,  பெரிய இஸ்யூ ஆகக்கூடாது பாத்துக்கோ.,  இது சாதாரண விஷயம் கிடையாது., நீயும் சாருவும் மட்டும் இல்ல.., பாப்பா இருக்கா.,  நீ யோசிச்சு கோ”., என்று சொல்லி வைத்தான்..,

“தெரியும்டா எனக்கு தெரியும்., நான் பாத்துக்கிறேன்” என்று சொன்னான்.

அதன்பிறகு வீடியோக்காலில்  சாருவிடம் பேசிவிட்டு., அவன் மகளை கொஞ்சி விட்டு அதன் பிறகே வைத்தான்.,

அவனின் முகம் சற்று வாடி இருப்பதை பார்த்த சாரு தான் “மித்து மா ஏதும் பிரச்சனையா., ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.,  உடம்பு ஏதும் முடியலையா”.,  என்று கேட்டாள்.

” அதெல்லாம் ஒன்னும் இல்லடா., ஒரு சின்ன யோசனை சீக்கிரத்தில் அங்க எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்துருவேன்., என்னால உன்னையும் குழந்தையும் விட்டுட்டு ரொம்ப நாள் இங்கே இருக்க முடியாது” என்று சொன்னான்.

“யோசிச்சு பாருங்க., இன்னும் டூ மன்த்ஸ் தான்., அவங்க சொன்ன டைம் படி” என்று சொன்னாள்.

” பேசாம இரு சாருமா., அதெல்லாம் உனக்கு தெரியாது எங்க அம்மா பயங்கர கிரிமினல் கில்லாடி., எனக்கு மட்டும் தான் தெரியும்.., நான் பேசிக்கிறேன் சரியா.,   என் சாருக்கு நான் அவளோட மித்துவா வந்து நிப்பேன் சரியா..,  பாப்பா நல்லா பாத்துக்கோ.., ஹெல்த் பாத்துக்கோ நல்லா சாப்பிடு சரியா.., உன் ஹெல்த் முக்கியம்” என்றான்.

Advertisement