Advertisement

15

காதல் என்பது என்னவென்று 
தெரியாமல் அலையும் 
இவ் வுலகில்., 

புல்லுக்கும் பனித் துளிக்கும் 
உள்ள உறவாய் கரைந்து 
போகாமல்.,

வேருக்கும் மண்ணுக்கும் 
உள்ள உறவாய் இறுக்கி 
பிடித்தபடி தான் இருக்கிறது 
நம் காதல்..

லண்டனில் இருந்து நேரே சென்னை வந்தவன் வீடு வந்து சேர்ந்தான்.,  யாரிடமும் எதுவும் அநாவசியமாக சொல்லிக் கொள்ளவில்லை.,
உடல் சோர்வை காரணம் காட்டி இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தான்., வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டவன்., அன்று மாலை தன் அக்காவின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றிருந்தான்..,

பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் கிளம்பி வரச்சொல்லி பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று பிள்ளைகள் எப்பொழுதும் செய்யும் டிராயிங் மற்றும் அவனுக்கான ஆஃர்ட் க்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கி குவித்தான்.

பிள்ளைகள் கூட “மாமா ரொம்ப நாள் கழிச்சு இப்ப மறுபடி வாங்கியிருக்கோம்” என்று சொன்னார்கள்.

” ஏன் உங்க அம்மா வாங்கி தர்றலியா” என்று கேட்டான்.

“அம்மாவுக்கு நேரம் இல்லைன்னு சொல்லிட்டாங்க மாமா..,  அப்பா ஒரே ஒரு தடவை  வாங்கி கொடுத்தாங்க.,  அதுக்கப்புறம் அப்பாகிட்டே சொன்னா அப்பா.,  வாங்கிட்டு வாறேன் ன்னு சொல்லி மறந்துருவாங்க”..,  என்று சொன்னான்.

” சரிடா இனிமேல் எதுனாலும் மாமாக்கு போன் பண்ணி சொல்லுங்க.., மாமா வாங்கி தரேன்” என்று சொன்னான்.

“சரி மாமா” என்றனர் பிள்ளைகள் சந்தோஷமாக.,  அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்…..

வந்தன்று நன்கு உறங்கி எழுந்தவன்.,  மறுநாள் பகலில் எல்லாம் வெளி வேலையாக சுற்றிவிட்டு.., மதியம் வீட்டிற்கு வந்து உணவு உண்டு விட்டு.., மறுபடியும் உறங்கி எழுந்தான்.,

மாலைநேரம் பிள்ளைகள் வரவும் தான் அழைத்துக்கொண்டு வெளியே சென்றது., அன்று மாலை 6 மணி அளவில் அனைவரும் ஹாலில் இருக்க..,  அவர்களுடைய நண்பர்கள் குலாம் அவர்களது குடும்பம் என அனைவரும் வந்திருந்தனர்.

இவன் வந்ததை தெரிந்துதான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவன் அமைதியாக அவர்களுடன் வந்து அமர்ந்தான்.,

எல்லோரும் அவனிடம் நலம் விசாரிக்க நல்லா இருக்கேன் என்று சொன்னான். எல்லோரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்., ஏனெனில் அவன் மாற்றம் அப்படி., எதுவுமே கண்டுக்காத மாதிரி தோளை குலுக்கி விட்டு அமைதியாக இருந்தான்.

அவனுடைய இந்த அமைதி சற்று வித்தியாசமாக தெரிந்தது., எப்பொழுதும் பேசாதவன் தான் ஆனால் இம்முறை முகத்தில் இருந்த அலட்சிய மனோபாவம் அதுமட்டுமல்லாமல்.., அவன் கண்ணில் தெரிந்த கூர்மையான எடைபோடும் பார்வை எல்லாமே சற்று வித்தியாசமாக தெரிந்தது., மித்திரனின் அம்மாதான் பேச்சை தொடங்கினார்….

“என்னடா வந்து ரெண்டு நாளாச்சு.,  யார்ட்டையும் எதுவும் ரொம்ப பேச மாட்டேங்குற.., வந்ததிலிருந்து எதுவும் எதுவும் சொல்ல மாட்டேங்குற..,  படிப்பு எப்படி போச்சு” கேட்டார்.

“நல்லபடியா போச்சுன்னு”., சொன்னவன்  அதுக்கு மேல் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

” நீ ஏற்கனவே ஒரு இருபத்தைந்து நாள் லேட்டா தான் வந்திருக்க.., என்ன விஷயம் கேட்டதுக்கு பதிலே சொல்லல” என்று கேட்டார்.,

25 நாள் லேட் னா.,  எனக்கு அவசியமான லீவு தேவைப்பட்டுச்சு நான் கிளாஸ் போகலை லீவு எடுத்தேன்.,  ட்ரெய்னிங் ப்ரீயட்லையும் லீவு எடுத்தேன்.,  எல்லாம் கால்குலேட் பண்ணி எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்தேன்.,  போதுமா இதுக்குதான் கேட்டீர்களா”.., என்று முகத்தையும் சிடு சிடு ன்னு வைத்துக் கொண்டு பேசினான்.

அவனுடைய பேச்சில் அனைவருமே வித்தியாசம் உணர்ந்தனர் .,

அப்போது மித்ரனின் அப்பா தான் “ஏன்டா சேவ் கூட பண்ணாம என்ன இது., இப்படி இருக்க..,  முடியும் வித்தியாசமா வெட்டி.., ஏண்டா இப்படி இருக்க.., பார்க்க டாக்டர் மாதிரியா இருக்க” என்று கேட்டார்.

அவரை திரும்பி பார்த்தான் “நான் எப்படி இருக்கணும் நினைக்கிறேனோ அப்படி தான் இருப்பேன்., டாக்டர் னா இப்படி தான் இருக்கனும் னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன.., கோர்ட்டு மட்டும் தான் வைட் போட சொல்வாங்க…, வேற எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன”.., என்று கேட்டான்.

அனைவருக்குமே புரிந்தது., அவனது எடுத்தெறிந்து பேசும் குணம் அவனுடைய கோபத்தை காட்டுகிறது என்று..,  ஏதோ ஒரு கோபம் அவனுள் கன்னென்று கொண்டு உள்ளது என்பதை உணர்ந்தவர்கள்..,

“சரி விடு மித்ரா.., ஏன் இப்ப என்ன விடு விடு.., இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா”என்று சொன்னார்கள்.

நண்பர்கள் தான் “எப்போ ஹாஸ்பிடல் வர்ற., நம்ம எல்லாம் சேர்ந்து உட்கார்ந்து பேசி ரொம்ப நாளாச்சு”., என்று சொன்னார்கள்.

“எட்டு மாசமா  நம்ம பிரிஞ்சிருக்கோம்  இல்ல “.,  என்று சொன்னவன் சிரித்தபடி “பேசலாமே ஒக்காந்து பேசலாம்.,  இப்ப கூட பேசலாம் இல்ல., உங்களுக்கு எப்ப ஃப்ரீ டைம் சொல்லுங்க அப்போ உட்கார்ந்து பேசுவோம்” என்று சொன்னான்.

“என்னடா இப்படி சொல்ற ஹாஸ்பிடல் வரமாட்டியா”..,என்றனர்.

“ஹாஸ்பிடல் வந்தால் எப்படி பேச முடியும்., அங்க வேலை தான் பார்க்க முடியும்., நம்ம பேசணும் ஃப்ரீயா இருக்கணும்னு நினைச்சா வீட்ல வச்சு தான் பேச முடியும்., சோ நாளைக்கு ஒன்னு பண்ணுங்க  லீவு போடுங்க வாங்க நம்ம உட்கார்ந்து பேசலாம்”., என்று சொன்னான்.

அவனை சற்று விசித்திரமாகவே பார்த்தனர் அனைவரும்., அவன் இப்படி சொல்லும் ஆள் கிடையாது என்று…

மீண்டும் மித்ரனின் அம்மா “என்னடா அவங்களை லீவு போட்டுட்டு வா பேசலாம் ங்கிற., ஹாஸ்பிடல் வருகிற  ஐடியா இருக்கிற மாதிரி தெரியலையே., வந்து ரெண்டு நாள் ஆச்சு., எப்பவும் நார்மலாக ஒரு நாள் கூட ரெஸ்ட் எடு என்று சொன்னா கூட எடுக்க மாட்ட..,  இப்போ வீட்டை விட்டு நகரவே இல்லை”., என்றார்.,

” இப்ப என்ன செய்யணும் நினைக்கீங்க” என்றான்.

“ஒழுங்கா  நாளையிலிருந்து ஹாஸ்பிடல் வந்துரு.,அப்புறம் படிப்பதற்காக போகும் போது எடுத்துட்டு போன சர்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்து  ஆபீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடு.,  அப்புறம் இப்ப வாங்கிட்டு வந்த சர்டிபிகட் சேர்த்து கொடு” என்று சொன்னார்.,

“ஒஒ.. அதுவும் இருக்குல்ல” என்று சொன்னவன்  சாதரணமாக பார்த்தபடி “என் படிப்புக்காக நீங்க எவ்வளவு செலவு பண்ணி இருப்பீங்க”., என்றான்.

“என்னடா பேச்செல்லாம் வித்தியாசமா போகுது” என்று கேட்டார்.

“ம்ம்ச்ச் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க.,  நீங்க தான் அப்பப்ப கணக்கு சொல்லுவீங்களே.., உங்களுக்கு படிக்கிறதுக்கு நான் இப்படி செலவு பண்ணேன்.,  அப்படி செலவு பண்ணேன் ன்னு.,  உங்க படிப்புக்காக தான் நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ன்னு எல்லாம் சொல்லுவீங்க இல்ல., அது தான் எவ்வளவு செலவு பண்ணுனீங்க” என்று கேட்டான்.,

கந்தசாமி தான் “ஏண்டா இப்படி கேக்குற.., நீ எம்.பி.பி.எஸ் மெரிட்டில் தான் பாஸ் பண்ண.., மிஞ்சி மிஞ்சி போனா பீஸ் அப்படி இப்படின்னு ரொம்ப கம்மி தான்.,   இப்ப எதுக்கு அந்த கணக்கெல்லாம் கேட்கிற” என்று கேட்டார்.

“இல்லப்பா அம்மா ரொம்ப கணக்குப் பார்ப்பாங்க.,  அதுதான் கணக்கு கேட்டேன்” என்று சொன்னவன் “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”., என்று நிறுத்தி நிதானமாக சொல்லத் தொடங்கினான்.,

” இப்போ இந்த படிப்பு நான் போய் படிச்சிட்டு வந்தது.., என்னோட செலவுல  தான் படிச்சேன் உங்க யார் கிட்டேயும் ஒரு ரூபாய் கூட வாங்கல சரியா., எம்பிபிஎஸ் புல் புல் மெரீட் தான் படிச்சேன்.., அதுக்கு மேக்சிம் போனால் நீங்க ஒரு செலவு கணக்கு சொல்லுங்க.,  எவ்வளவு இருந்தாலும் ஓகே.., அப்புறமும் ப்ளஸ் டூ  வரைக்கும் எதுவும் ஃபீஸ் கட்டி அந்த கணக்கு சொல்லணும் னாலும் சொல்லுங்க”  என்றான்.

கோபமாக மித்திரன் அம்மா “ஏன்டா புதுசா கணக்கு கேட்குற”என்றார்.

“ஏன்னா நான் இனிமேல் வேலைக்கு வரப்போவதில்லை.., நான் டாக்டர் தொழிலை விட போறேன்.., எனக்கு வேண்டாம் எனக்கு பிடிக்காத பீல்டில் என்னால   ரொம்ப நாள் இருக்க முடியாது..,  உங்களோட கட்டாயத்தினால்  படிச்சேன்”.,  என்றான்.,

மித்ரனின் அம்மாவோ கோபத்தில் “அறிவுகெட்ட தனமா பேசாதே” என்று சொன்னார்.

“நான் ப்ளஸ் டூ  முடித்தவுடன் என்ன சொன்ன உங்ககிட்ட.,  எனக்கு இந்த ஃபீல்ட் வேண்டாம் நாங்க படிக்கல ன்னு சொன்னது க்கு.,  நீங்க என்ன சொன்னீங்க.,  அப்போ சந்தோஷ் ட்ட போய் கெஞ்சினீங்க இல்ல..,  அவனை எப்படியாவது எம்பிபிஎஸ் ல ஜாயின் பண்ண வை டா..,  நீ சொன்னா அவன் கேப்பான் னு., அவனுக்காக மட்டும் தான் படிச்சேன்” என்று சொன்னான்.

Advertisement