14

    வரம் கொடுக்கும் தேவதையடி 
     வரமாய் வாழ்வில் வந்தவளடி.,

     கண்சிமிட்டும் நொடிகளில் 
     கூட காதலை உணர்த்துகிறாய்., 

     காற்றில் கூட உன் வாசத்தோடு 
     என் சுவாசத்தை சேர்த்திருக்கிறேன்., 

     நீ மட்டும் போதுமடி என் 
     ஜென்மம் நிறைந்து விடும்

வளைகாப்பு நாளுக்கான காலை நேரம் அழகாக விடிந்தது., எல்லோரும் அவரவர் வேலையில் இருந்தனர்.,

இருவரின் எண்ணம் மட்டும் ஒருவன் வரவை எண்ணி தவித்து இருந்தது.,  இருவருக்கும் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.., இன்னும் வரவில்லையே என்று.,

அதிகாலை 6 மணிக்கே வாசலை வாசலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்., சாரு.

தலைக்கு குளித்து தலையை காய வைத்துக் கொண்டிருந்தாள்., அவளுக்கு முடியை விரிய விட்டு ஹேர் ட்ரையர் போட்டு தலையை காய வைத்து கொண்டிருந்தாள் சித்து.,

இவளின் பார்வை எல்லாம் வாசலில் இருக்க.,  “அண்ணன் இன்னும் வரல னு நீ யோசிச்சிட்டே இருக்கிறாயா” என்று கேட்டாள்.,

சிரித்தபடி “வந்துடுவாங்க ன்னு தெரியும்., சஸ்பென்ஸ் ன்னு சொல்லிட்டு  வந்து நிப்பாங்க..,  ஆனா என்னவோ தெரியல  கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது”.,என்றாள்.

சித்து தான் “பாக்கணும் போல இருக்கா” என்று கேட்டாள்.

இல்ல அவங்களும்., சந்தோஷ் அண்ணாவும்  மீட் பண்றத பாக்கணும் போல இருக்கு.., சந்தோஷ் ண்ணா பாவம் நேற்றிலிருந்து  வாசலை பாத்துட்டு நிக்கிறாங்க., கதவை திறந்து விட்டு உட்கார்ந்து இருக்கிறாங்க.., அதை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு..,  அட்லீஸ்ட் என்ட்ட சொல்லாட்டிலும் அவங்க ட்ட மட்டுமாவது எப்போ வருவாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்திருக்கலாம்..,

அந்த எதிர்பார்ப்பை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.., எத்தனை வருஷம் பிரண்ட்ஷிப் இல்ல..,  அவங்க  19 வருஷம் சேர்ந்து இருந்தது., 8 வருஷம் பிரிந்து இருந்துருக்காங்க., இனி எந்த விதத்திலும் மாறாமல் நீட்டிக்கனும்”., என்றாள்.

“அதுதான் சான்சே இல்லடி எப்படி இவ்ளோ நாள் பிரண்ட்ஸ் ஆ இருக்காங்க..,  பொண்ணுங்க தான் பிரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பிரிஞ்சுருவாங்க இல்லை”.,  என்று கேட்டாள்.

“நான் உன்னை பிரியவே இல்லை.,  நீ என்னை பிரிஞ்சிருவீயா” என்று கேட்டாள்.

” நம்ம ரெண்டு பேரும் வொர்கிங் டைம் லையும் ஒன்னா வந்த பிறகு இனிமே பிரிய மாட்டோம்., னு வை., ஆனால் நம்ம ஸ்கூல்ல னு.,  காலேஜ்ல னு.,  யோசிச்சு பாரு.., நமக்கு யாருமே இல்ல இல்ல., அந்த ப்ரண்ட்ஸ் சிப் இல்லாம போயிருச்சு இல்ல” என்றாள்.

“அது என்னவோ உண்மைதான்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

அதேநேரம் “சந்தோஷ் வாடா கோவிலுக்கு  போயிட்டு வந்திடலாம்” என்று அவரின் அம்மா அழைத்தார்..,

“நான் கிளம்பிட்டேன் ம்மா போகலாம்” என்று சொன்னான்.

மிதுன்  கிளம்பியிருந்தவன்.,  “அப்பா நானும் உங்க கூட வர்றேன்”என்று  கழுத்தில் கட்டிக் கொண்டு கோவிலுக்கு கிளம்பி இருந்தான்.,

மீனா மட்டும் கிளம்பி கொண்டிருக்க சந்தோஷ் ன் அம்மா “அம்மாடி நீ கிளம்பிட்டு போயி சாரு என்ன பண்றா ன்னு பாரு.,   காலை சாப்பாடு  வெளியே இருந்து வந்துரும்.., யாரையும் சமைக்கவேண்டாம் னு சொல்லிருக்கேன்”., என்றார்.

“சரி அத்த பார்த்துக்கிறேன்” என்றாள்.

நாங்க கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம்.,  ஒரு அர்ச்சனை மட்டும் அவ
பெயரில் பண்ணிட்டு வந்துருவேன் , சாருவோட வளைகாப்பு நல்லபடியா  முடியனும்.,  நீ கிளம்பிட்டு.,  அங்க  திங்க்ஸ் எல்லாம்  ஹால்ல வெச்சி இருக்கேன்., நீயும் அந்த சித்தாரா பொண்ணும்  இருக்கும்ல.,   சேர்ந்து எல்லாத்தையும் எடுத்து வச்சுருங்க..,

இன்னும் கொஞ்ச நேரத்துல சாருவோட ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ் வந்துடுவாங்க”..,  என்றபடி சந்தோஷ் ம்மா வேகமாக கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.,

சந்தோஷ் வாசலை பார்ப்பதும் கோயிலுக்கு கிளம்பறேன் என்று ஏக்கத்தோடு  அவன் கிளம்புவதும் ஆக இருந்தான்..,

“ஏன்டா ரொம்ப யோசிக்கிற..,  கிளம்பு கிளம்பு வா கோவிலுக்கு போகலாம்”., என்று சந்தோஷை இழுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினர்.

காரில் ஏறி கோயிலை நோக்கி போகும் போது  மிதுனை தன் மடியில் வைத்துக் கொண்டு சந்தோஷ் டன் முன்புறம் அமர்ந்திருந்த சந்தோஷின் அம்மா.,

” ஏன்டா ஒரு மாதிரி இருக்க.,  நீ ஒரு மாதிரி இருக்குன்னு சொல்ல போய் தான் உன்னை சேர்த்து இழுத்துட்டு வந்தேன்.,  இல்லாட்டி நான் மட்டும் தனியா போயிட்டு வந்துர மாட்டானா”.. என்றார்.  “நீ ஏன்டா ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டார்.,

“மித்ரன் வந்துடுவான் னு எதிர்பார்த்தேன்., அவனை இன்னும் காணோம்.., அதுதான் என்ன பண்றது ன்னு தெரியல யோசிச்சிட்டு இருக்கேன்., எந்த பிளேட் ல வர்றான்னு கேட்டேன்., அதையாவது சொல்லி இருந்திருக்கலாம்.,

நமக்கு ஒரு கெஸ்ஸிங்  இருந்திருக்கும்., இந்த டைம்ல வரும்னு.., இவன் சொல்லவே இல்ல வந்துருவேன் சொல்றான்..,   சோ கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு”., என்றான் சந்தோஷ்.,

“ஏண்டா., இத்தனை வருஷத்துல நீ  இவ்வளவு தேடலையே”., என்றார்.

“இத்தனை வருஷம் எப்படியும் நல்லா இருப்பான் னு நம்பினேன்.,எனக்கும் தேடுச்சி., ஆனாலும் மனச தேத்திப்பேன். நாங்க பிரிஞ்சி இருந்தாலும் எங்க நட்பும்., அன்பும் குறையாது..,  ஆனா இப்ப எனக்கும் அவன பாக்கணும்.,  அதே நேரத்துல பாவம்மா  சாரு  அவன் மேல உயிரையே வச்சிருக்கா.., அதுவும்  பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி நேரத்துல தான்., ஹஸ்பென்ட் பக்கத்துல இருக்கணும் அப்படின்னு ஆசை இருக்கும்.,   குழந்தையோட ஒவ்வொரு முமன்ட்டும்  காட்டணும் அப்படி ன்னு.,  பொண்ணுங்க நினைக்கிறது தானே ம்மா..,  அவனுக்கு நினைப்பு  இல்லாமலா இருந்திருக்கும்.,  அந்த சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் மிஸ் பண்றான்., அதுதான் வருத்தமா இருக்கு..,

இங்கே இருக்குற நாட்களில் அந்த  சின்ன சின்ன சந்தோஷங்கள் எல்லாம் மித்ரனுக்கு கிடைச்சிடனும்  அப்படின்னு நினைச்சேன்., லேட் ஆகுறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..,

அதுமட்டுமில்லாம அந்த பொண்ணோட எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்  என்னால புரிஞ்சுக்க முடியுது..,  சீக்கிரமே வந்துட்டானா நல்லா இருக்குமே னு ஒரு பீலிங் அவ்வளவு தான்., எனக்கும் தேடுது இல்லன்னு சொல்லல..,

ஆனா அவனுக்கு இந்த பங்க்ஷன் எவ்வளவு முக்கியம் தெரியும் அம்மா., ஆனால் அவனுக்கு கஷ்டம் னு தான் வர வேண்டாம் நாங்க சொன்னோம்.,  ஆனால் வாரேன் சொன்னதுக்கு அப்புறம்., நான் நான் போட்டோ சூட்க்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன்மா., இத்தனை நாள் அவனுக்கு கிடைக்காத சின்ன சின்ன சந்தோஷம் எல்லாம் இதுல கிடைக்கணும் நினைக்கிறேன்..,  எதிர் பார்த்திட்டு இருக்கேன் இல்ல., அது ஒரு மாதிரி படபடப்பு டென்ஷன் ஆயிடுச்சு” என்று சொன்னான்.

அம்மாவோ அவனைத் தோளில் தட்டியபடி “ஒன்னும் இல்லடா வந்துருவான்.,  நல்ல புள்ளைங்க ரெண்டு பேரும்.,  கண்டிப்பா  நல்லபடியா நடக்கும்., நீ டென்ஷன் ஆகாத., நீ டென்ஷன் ஆகுறத  பார்த்தா., சாரு பீல் பண்ணுவா”.., என்று சொன்னார்.

“ஆமா இல்ல மா.,  நம்ம வீட்டில் இந்த மாதிரி ஒரு புள்ள இருந்திருந்தா இந்த மாதிரி ஒரு பாசம் முன்பே எனக்கு கிடைச்சிருக்கும்.,என்றான்.

அவரும் சிரித்தபடி அவன் சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தார்.

“ஆமா மா சாரு., உங்க கிட்ட  பேசும் போது நானுமே யோசித்து இருக்கேன்.,ஆனா அவளை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப தோனுதம்மா.., கூட ஒரு பொண்ணு பிறந்து இருந்தா இப்படி தானே உரிமையா கூடவே சுத்தும் னு., ஏன் ம்மா நான் பிள்ளையா போயிட்டேன்”.,  என்று கேட்டான்.

“பேரன் எடுத்துட்டேன் டா..,  இப்போ உனக்கு தங்கச்சி இல்லை னு வருத்தம் வருதா.., நீ தான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இன்னொரு  குழந்தை அப்படின்னு பேச்சு எடுத்தாலே.,  சண்டைக்கு வருவ., நான் மட்டும் தான் வேற யாரும் இருக்கக்கூடாது ன்னு தான் சொல்லுவ., ஆனா எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு நீ மித்ரன் கூட குளோஸ் ஆனது.,   ஆனா இப்ப பாரு எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நல்லா இருக்கும்னு பேசிகிட்டு இருக்க., சரியா தான் உனக்கு இப்ப சாரு இருக்கால்ல., உரிமை கொண்டாடிக்கோ போ”., என்று சொல்லி சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்.,

கோயிலுக்கு போய் சாரு., மித்ரன் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு நடக்கப்போகும் வளைகாப்பு விழா நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

அதற்குள் மீனாவும் கிளம்பி இருக்க ஹாலில் திங்ஸ் எடுத்து வைப்பது எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.,

சாரு  அமைதியாக  முழு நீல கவுன்  போன்ற தளர்வான உடையை அணிந்திருந்தாள்., பிறகு சேலை கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவளது தலையை  மட்டும் கட்டி விட்டிருக்க.,  மேக்கப்பை தொடங்கியிருந்தனர்.

கடைசியாக புடவை கட்டிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தனர்.,

கோயிலுக்கு போயிட்டு வந்தவர்கள் வீட்டு வாசலிலேயே பக்கத்து வீட்டு பெரியம்மாவோடு பேசிக்கொண்டே சாருவை அழைக்க எழுந்து வந்தவளை பார்த்தவன்.,

“என்னமா இன்னும் கிளம்பலையா” என்றார் அம்மா.

“கொஞ்ச நேரம் போகட்டுமே அப்புறமா புடவை கட்டிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,

” 9 மணிக்கு மேல தான் பங்க்ஷன் நீ ஒரு எட்டரைக்கு கட்டிட்டு கிளம்பு சரியா இருக்கும்., இன்னும் 1 மணி நேரத்துக்கு மேல டைம் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே இருக்க., சாருவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.,

சாருவும் அவனைத் திரும்பி ஆராய்ச்சி பார்வையோடு பார்த்தவள்., என்ன அண்ணா நீங்களுமா கோவிலுக்கு போனீங்க” என்று கேட்டாள்.,

“ஆமா மா., ரொம்ப நாளைக்கு அப்புறம் கோயிலுக்கு போயிருந்தேன்” என்று சொல்லி பேசிக்கொண்டிருக்கும் போது சந்தோஷ் அம்மா அவளுக்கு நெற்றியில் கோயில் பிரசாதத்தை வைத்துவிட்டார்..

அதே சமயம் அவர்கள் நின்றதற்கு சற்று தள்ளி லிப்ட் வரும் ஓசை கேட்க.., ஏற்கனவே ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்போடு ஏமாந்து கொண்டிருந்தவர்கள் இந்த முறை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி திரும்ப.., வாட்ச்மேன் தான் முதலில் வெளியே வந்தார்.,

வந்தவர் பெரிய சூட்கேஸோடு  வர பின்னே மித்ரன் வந்தான். அவனைப் பார்த்தவுடன் சந்தோஷ் மித்து  என்று சத்தமாக அழைக்க.,  அவனும் வேகமாக ஓடி வராத குறையாக வர., இவனும் அவனை நோக்கி எதிர்கொண்டு செல்ல இருவரும் பாதிவழியில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.,

வழியில் எதிர்கொண்டு அணைத்த இருவர் கண்ணிலும் கண்ணீர்., அதே நேரம் அவர்களது நட்பை பார்த்த மற்றவர்களுக்கும் லேசாக கண்கலங்க தொடங்கியது…

மீனாவும் சித்துவும் மித்து என்ற சத்தத்தில் வேகமாக வெளியே வர இருவரும் அணைத்து கண்கலங்க நிற்பதைக் கண்டு அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..,  மற்றவர்கள் சிரித்த படி  சந்தோஷ் அம்மாவை பார்த்தனர்.

சந்தோஷ் ம்மாவோ.,  “நாலு வயசுல இருந்து ரெண்டு பேரும்  எப்பவும் ரெண்டு பேரும் அப்படித்தான்.., ஸ்கூல்ல கொண்டு போய்விட போகும் போதே இப்படித்தான் இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தரப் பார்த்த உடனே  ஓடிப்போய் கட்டிப்புடிச்சு நின்னுப்பாங்க.,  எத்தனையோ நாள் ரெண்டு சேர்ந்து கட்டிப்பிடிச்சுக்கிறோம்  சொல்லி உருண்டு எழுந்துருக்காங்க”.., என்று சொல்லி மகிழ்ச்சியோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்….