Advertisement

இந்த விஷயங்களை எல்லாம் சித்து விடம் சொல்லியிருந்தாள் சாரு..,

அவளோ “எப்படிடி இப்படி ஒரு பொம்பள” என்று கேட்டாள்.

“நிறைய பேர் இருக்காங்க.,  கண்ணால பாக்கறோமே.,  நல்ல மாமியாரும் இருக்கிற தான் செய்றாங்க..,  நல்ல அம்மாவா.., நல்ல மாமியாரா எல்லா இடத்திலேயும் தங்களுடைய ரோல சரியா  செய்யுறாங்களே..,

சில இடங்களில் எதுவா இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும் சொல்றாவங்களும்  இருக்கத்தான் செய்றாங்க.,

சரி சரி விட்டுட்டு போக வேண்டியது தான் ஏன் நம்மள சுத்தி இருக்கிறவங்களில் எத்தனை பேர் இப்படி இருக்காங்க..,

எத்தனையோ பேர்  பிள்ளையை வெளியே விடக்கூடாது என்கிற நினைப்பில் இருக்காங்களா இல்ல..,  தான் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்குது  வெளியே கெத்து காட்டுவதற்காக நடந்துக்கிறாங்களா னு தெரியாது..,

ஆனால் நிறைய லேடிஸ்  மென்டாலிட்டி இப்படித்தான் இருக்கு..,  வயசான லேடிஸ் தான்னு இல்ல..,  இப்ப எல்லாம் சின்ன வயசு பொண்ணுங்க கூட., தான் சொன்னதைக் கேக்கணும்.., தான் சொல் படி நடக்கணும் னு., பிள்ளைகள் ல இருந்து., புருஷன் ல இருந்து எல்லாரும் அவங்க சொல்படி கேட்டு நடக்கணும் னு நினைக்கிற  லேடிஸ் பேர் இருக்கத்தான் செய்றாங்க.,  புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறவங்க குடும்பம் ஸ்மூத்தா போய்கிட்டு இருக்கு..,

புரியாம போட்டி வந்துச்சுன்னா அந்த இடத்தில் பிரச்சினை அதிகமாககுது., சண்டை அதிகமாகுது., இப்போ மித்ரன் வீட்ட பொருத்த வரைக்கும் அது தான்..,  அவங்க அம்மாவோட மென்டாலிட்டி இப்படித்தான் இருக்கு அவ்வளவுதான்..,  என்ன பண்ண முடியும்., சரின்னு பாத்துட்டு போயிட்டே இருக்கணும்., சரி நீ எப்ப வருவ” என்று கேட்டுக்கொண்டாள்…

மறுநாளே சந்தோஷ் அனைவரிடமும் சொல்லி இருந்தான்., சாருவின் வளைகாப்பு தங்கள் வீட்டுப் பொறுப்பு என்று..,  அவ என்னை அண்ணன் னு கூப்பிடுறா., அண்ணன் னா., என் தங்கச்சியா இருந்தா., நான் தானே வளைகாப்பு பண்ணியிருப்பேன்.,

நான் தான் செலவு பண்ணுவேன் யாரும் இதில் தலையிட கூடாது”., என்று சொல்லிவிட்டான்.,

எல்லாரும் “சரி விடு”., என்றனர்.

“எங்க கிட்ட சொல்லுறது சரி., மித்து என்ன சொல்றாங்களோ., அவங்க பாடு, உங்க பாடு” என்று சொன்னாள்.

“மித்ரன் கிட்ட  நான் பேசிக்கறேன்.,  நீ ஒன்னும் பேச வேண்டாம்”என்று சந்தோஷ் ம் பதில் சொன்னான்.

“பேசுங்க எனக்கு என்ன”., என்று சொல்லிகொண்டிருந்தாள்.,

“அவன் என்ன சொல்வான் தெரியுமா… கஞ்சதனமா பண்ணாத., கிரன்ட் ஆ பண்ணு னு சொல்லுவான்” என்றான்.

“நானும் அதுக்கு தான் சொன்னேன்.. செலவு பெரிசா வந்துற போகுது”., என்றாள்.

மீனா தான் எப்படி உங்களால் இப்படி இருக்க முடியுது.,  இரண்டு பேரும் பக்கத்தில் மட்டும் தான் இல்லை., மத்தபடி அவ்வளவு பேச ஆரம்பிச்சுட்டாங்க., எனக்கு தெரிஞ்சு தினமும் காலையில் அரைமணிநேரம்., சாயங்காலம் அரைமணி நேரம் பேசுறாங்க., அப்படி என்ன பேசுவாங்க” என்று கேட்டாள்.,  மீனா…

“மதியத்தை விட்டுட்டீங்க” என்றாள். சிரித்தபடி.,

பக்கத்து வீட்டு பெரியம்மா… “டாக்டர் னு பேச்சிலுமா காட்டனும்., காலை , மதியம் இரவு னு” என்றார். அனைவரும் சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

“என்ன பேசுவீங்க” என்று மீனா சந்தோஷிடம் கேட்டாள்.

அவன் சிரித்தபடி அமைதி காக்க… சாரு தான் பேசினாள்.

‌”பேசுறதுக்கா இருக்காது., ஒரு வாரம் பிரிஞ்சு இருந்தாலே பேசுவதற்கு ஓராயிரம் விஷயம் இருக்கும்.,  கிட்டத்தட்ட எட்டு வருஷம் பிரிஞ்சி இருந்து இருக்காங்க.,  அவங்களுக்குள்ள பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும்.,  பேசட்டுமே” என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த சந்தோஷ்  சிரித்தபடி “அப்புறம் நீயே ஒருநாள் சொல்லுவ.., ரெண்டு பேரும்  ஓவரா பேசுறீங்க ன்னு., சொல்லி சண்டை போடப் போற”., என்று சொன்னான்.

அவள் சிரித்தபடி சொன்ன ஒரு வார்த்தை தான் சந்தோஷ் க்கு அவள் மேல் இன்னும் ஒரு  பாச உணர்வை அளித்தது.,

“மித்து வோட சந்தோஷம் உங்க கிட்ட பேசுறதுல இருக்குன்னா.., அதை விட எனக்கு  வேறு எதுவுமே முக்கியம் கிடையாது” என்று சொன்னாள்…

மீனா சிரித்தபடி அவளைப் பார்க்க சந்தோஷ் “ஓவர் லவ் சாரு., அவன்  மேல உனக்கு”.,  என்று சொல்லி சிரித்து விட்டு போனான்

ஆனால் மனதிற்குள் ‘கடவுள் நல்ல அம்மாவை கொடுக்காவிட்டாலும்.,  அவனைப் புரிந்து கொண்ட நல்ல மனைவியை கொடுத்திருக்கிறார்’., என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான்..

அடுத்த வாரத்தில் அவளுக்கு வளைகாப்பு என்னும் நிலையில் மித்ரன் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

சந்தோஷ்  இப்ப  நாங்க பார்த்துக் கொள்கிறோம்., நீ டெலிவரி நேரத்தில் அருகில் இருப்பது போல பார்த்துக் கொள்.., அப்போது லீவு சேர்த்து போட்டுக் கொள்., ஸ்டடி டைம் லீவ் போடாத,  ட்ரெயினிங் டைம் லீவு போட்டா கூட  எக்ஸ்ட்ராவா டைம் எடுத்துக்கலாம்., கிளாஸ் கட் பண்ணாத”.,  என்று சொன்னான்.

மித்ரன் “அதெல்லாம் இல்லடா.,  நான் பார்த்துக்கிறேன்., எப்படியும் வந்துவிடுவேன்”., என்று சொன்னான்.

“வீட்டுக்கு தெரிஞ்சா.,  பெரிய பிரச்சினையாகும்.., ஏற்கனவே நீ பார்க்கறதுக்கு வர்றது தெரிஞ்சாலே வேற மாதிரி பிரச்சினை ஆயிடும்னு.,  நானும் சாருவும் பயந்துட்டு இருக்கோம்.., நீ என்னன்னா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை லீவு போடப் போறேன்னு சொல்றே”.., என்றான்.

அப்போது மித்ரன் சொன்னான்., “என் உயிர்., என் பிரண்ட் ., என் குழந்தைய  பார்க்கறதுக்கு..,  நான் யார் கிட்டேயும் பெர்மிஷன் கேட்கணும் அவசியம் இல்லை., யார் பெர்மிஷனனும்  தேவையில்லை..,   அவங்களுக்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியது இருக்கு.., இல்லாட்டி அந்த பக்கமே போக மாட்டேன்.,னு  சொல்லி இருக்கலாம்.., ஆனால் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடத்தை கரெக்டா கற்றுக் கொடுத்தா  தான் நல்லா இருக்கும்..,  அதுவரைக்கும் நான் வந்து போவது தெரியாத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன்”..,  என்று சொல்லி விட்டான்.,  “கண்டிப்பாக வருவேன்”என்றான்.

“சரி என்னைக்கு வர்ற னு சொல்லு.,  நான் பிக் பண்ண வாறேன்” என்று சந்தோஷ் சொன்னான்.,

” நீ ஒன்னும் வர வேண்டாம்., நானே வந்துடுவேன்.,  நீ அட்ரஸ் மட்டும் அனுப்பு”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

“நீ எப்படா வர அதையாவது சொல்லு” என்று கேட்டான்.,

“அதுவும் சஸ்பென்ஸ்., கண்டிப்பா வந்துருவேன்” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான்..

மித்ரன் கண்டிப்பாக வருவான் என்று தெரிந்த பிறகு..,  சாருவிற்கு இன்னும் மூன்று நாட்களில் வர  வாய்ப்பு இருக்கிறது என்பதே., மூன்று முகமாக கழியும் போல தோன்றியது..,

அன்று தான். சித்துவும் வந்து இறங்கி இருக்க.., அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.,

“அவங்க அங்கேயும்., நான் இங்கேயும் இருக்கும் போது கூட இப்படித் தோனல,  இப்பவும் வளைகாப்புக்கு வர்றாங்க.,  ஜெஸ்ட்  ஒன் வீக்.,   டிராவலிங் டைம் தவிர மீதி நாளில் தான் இங்க இருப்பாங்க..,

ஆனாலும் என்னமோ ரொம்ப  வித்தியாசமாக பீல் பண்றேன்.., அவங்க எப்போ வருவாங்கன்னு ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள்.,

சந்தோஷ் ம் அதுபோலவே எண்ணிக்கொண்டு காலண்டரில் தேதிகளைக் கிழித்துக் கொண்டிருந்தான்.,

பல வருடங்களுக்கு பின்பு சந்திக்கப்போகும் தோழமையும்., பல மாதங்கள் கழித்து பார்க்கப்போகும் காதலும் காத்திருந்தது., ஒருவனின் வரவுக்காக..

உருட்டும் பகடைகள் பல நேரங்களில் ஒய்யாரமாய் ஏணியை மட்டும் குறிவைத்து எண்களை அள்ளித் தெளிக்கிறது. விதி வலியது“.,

Advertisement