Advertisement

      எங்க ரெண்டு பேருக்குள்ள அம்மா வந்து பிரச்சினை பண்ணும்போதே வீட்டிலுள்ள எல்லாரும் சப்போர்ட் பண்ணுனாங்க..,  அந்தக் கோபம் தான் அவங்களுக்கு.,   ஆக்சுவலா இந்த தடவை கண்டிப்பா நீ இத படிச்சே ஆகணும் சொல்லும் போது இந்த படிப்பு தேவையில்லை என்று சொல்வதற்கு எல்லாருக்கும் ஒரு நிமிஷம் ஆகாது..,

ஆனா எங்க உனக்கு சப்போர்ட் பண்றதா நினைச்சு., ஒரேடியா எதுவும் செய்திருவாங்களோ ன்னு பயந்து போய் தான் யாரும் பேசி இருக்கமாட்டாங்க ன்னு எனக்கு தோணுச்சு., நானே அதுக்கு தான் பேசலை.,  வேற ஏதும் பிரச்சினை பண்ணிட கூடாது  அப்படின்னு யோசிச்சேன்.,   பார்த்துக்கலாம் அப்படிங்கற மாதிரி தோணுச்சே தவிர.,  எங்க உன்னையும் எங்கிட்ட இருந்து பிரிச்சிருவாங்களோ ன்ற ஒரு பயம் இருந்துச்சு.., அதனால தான் நான் அமைதியா இருந்தேன்.,

அந்த நேரம் உனக்கு கூட கோபம் வந்திருக்கும் இல்ல” என்று மித்திரன் விடாமல் பேசினான்.

அவள் சிரித்தபடி “அப்பப்பா என்ன பேச்சு பேசுறீங்க..,  இத்தனை நாள் இந்த பேச்சு எல்லாம் எங்க இருந்துச்சு” என்றாள்.

“அதெல்லாம் உள்ளே தான் இருந்துச்சு., சொல்லு சொல்லு”., என்று கேட்டான்.

அவளும் “இல்ல அப்படி தோணலை.,  நீங்க எதுக்கோ அமைதியா இருக்கீங்க அப்படின்னு  தோணுச்சு.., அதுமட்டுமில்லாம  ஏதாவது ரீசன் இருக்கும் னு தோணுச்சு.., அதனால தான் அமைதியா  நானும் இருந்தேன்.,என்றாள்.,

அவனும் “சரி சொல்லு நீ எப்படி இருக்க.,  எப்ப  கொச்சின் போன., நீ எங்கே இருக்க னு கூட தெரியாமலேயே நான் கிளம்பி வந்து விட்டேன்., சாரிடா” என்றான்.,

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்  “சாரி” என்றாள்.,

“என்னடா எதுக்கு சாரி” என்றான்.

“அது உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லல.,  நானும் மெசேஜ் பண்ணலாமா, இல்ல  போன் பண்ணி சொல்லி விடுவோமா னு எல்லாம் யோசிப்பேன்., ஆனால் உங்க அம்மாக்கு தெரிஞ்சா ஏதும் பிரச்சினை வந்துடிச்சின்னா., வேற மாதிரி எதுவும் டிசிஷன் எடுத்து விடக்கூடாது என்கிற பயத்தில் தான் நான் சொல்லல..,  தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”., என்று கேட்டாள்.

“என்னடா என்ன விஷயம்” என்றான்.

” வீடியோ கால் வரீங்களா” என்றாள்.

“ஏன்டா பாக்கணுமா” என்று கேட்டவன்  “சரி அப்படியே இரு வாறேன்” என்று சொல்லி வீடியோ காலுக்கு வர.,  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சற்று நேரம் அமைதியாகவே இருந்தனர்.,

இருவருக்குமே கண் கலங்குவது தெரிந்தது., அதே நேரம் அவளின் முகம் எப்பொழுதும் போல இருந்தாலும் ஏதோ அவளிடம் ஒரு சோர்வும்., முகம் வெளிறியது போல வித்தியாசம் முகத்தில் அறிந்தவனாக., ஏன் முகம் ஒரு மாதிரியா தெரியுது., சாப்பிட்டியா இல்லையா., பார்க்க அனீமிக் ஆ  தோணுது., ஏதாவது டாக்டர் கன்சல் பண்ணு., இல்லை னா., நான் சந்தோஷ் ட்ட பேசும் போது சொல்லுறேன்” என்றான்.,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.,  அது ரீசன் வேற ஒன்னும் இல்ல”.,  என்றபடி வீடியோ காலில் லேயே மெதுவாக தன் மேடிட்டிருந்த வயிற்றை காட்டவும்., மீண்டும் அவன் முகம் மாறுவதை அவள் கண்ணால் காண.,  அவனுடைய சந்தோஷமும் அவன் கண்ணில் கண்ணீரோடும் பார்த்தவன்.,   “என்கிட்ட சொல்லல” என்றான்.

“எப்போ தெரிஞ்சது”., என்று கேட்டான். அவள் அதன் பிறகு உள்ள விஷயங்களை சொன்னாள்.,

“நீ சொல்லி இருக்கலாம் இல்ல.,  நான் கிளம்பும்போது கரெக்டா சிக்ஸ்டி டேஸ் இருக்கும்.., நீ சொல்லிருந்தா ஜஸ்ட் உன்ன வந்து பார்த்துட்டு வந்து இருப்பேன் இல்ல” என்றான்.,

” இல்லப்பா இருக்கட்டும் அவங்க பார்க்க கூடாது., பேசக்கூடாது சொன்னார்கள் என்பதற்காக தான் அமைதியா இருந்தேன் ஆனால் எனக்கு என்னவோ  உன்கிட்ட பேசணும்னு கிட்டத்தட்ட ஒரு ஒன் வீக்கா யோசிச்சிட்டே தான் இருக்கேன்.,  டெலிவரிக்கு வந்துருவீங்களா”., என்று மெதுவாக கேட்டாள்.

அவளைப் பார்த்தபடியே பேசியவன் “நிச்சயமா நான் உன் பக்கத்திலே இருப்பேன் கவலைப்படாதே” என்று சொன்னான்.,

“நீங்க சந்தோஷ் அண்ணாவ பார்க்குறீர்களா” என்று அவள் கேட்டாள்.

“உன் ட்ட பேசிட்டு அப்புறம் பேசுறேன் இப்ப பார்க்க போய்., நான் பேச ஆரம்பிச்சா உன் போன்ல சார்ஜ் தீரும் வரைக்கும் பேசினாலும் பேசுவேன்.., அப்புறம் நீ வருத்தப்பட கூடாது”., என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் வருத்தப்பட மாட்டேன்” என்று சொன்னவள்., வளைகாப்பு விஷயத்தை சொன்னாள்.,

“நான் கிளம்பி வர்றேன்”., என்றான்.

இவளோ “இல்ல இல்ல நீங்க வர வேண்டாம்., ஒரேடியா டெலிவரிக்கு வாங்க” என்று  அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஏன்டா” என்றான்.

“இல்ல நீங்க இப்ப வந்தீங்க னா.,  அப்புறம் வர முடியாது கஷ்டம் இல்ல.,  அதுமட்டுமில்லாமல்  லீவு கிடைக்கலை னாலோ.,  வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகும்” என்ற சென்னாள்.

“இங்க பாரு என் ஒயிஃப்., என் குழந்தைய விட இந்த படிப்பு ஒரு விஷயமே கிடையாது., அன்னைக்கே படிப்பு வேண்டாம் னு நான் தூக்கி போட்டா எங்க அம்மா ஏதாவது வம்பு பண்ணிருவாங்க னு வந்தேன்., ஆனால் இப்ப  இதில் யாரும் தலையிட கூடாது.,  நிறைய பிரச்சினைகளை கிளியர் பண்ண வேண்டியது இருக்கு..,  மொத்தமா வந்துட்டு பேசிக்கிறேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இவளும்  “என்ன” என்று கேட்டாள்.

” உனக்கு தெரியாது நிறைய விஷயம் இருக்கு விடு”., என்றவன் “அப்புறம்  உங்க வீட்டுக்கு சொல்லலையா” என்று கேட்டான்.

“இல்லை” என்றாள்.

“சரி அதையும் நானே வந்து கிளீயர் பண்ணிக்கிறேன்.,  உங்க அம்மா க்கும் தெரியணும்., அன்னைக்கு ஒரு வார்த்தை அட்லீஸ்ட் உன்கிட்ட கேட்கணும்., இல்லை என் கிட்ட கேட்டு இருக்கணும்.., வெறுமனே எங்க அம்மா சொல்றது மட்டும் நம்பிட்டு வந்து பேசினது அவங்க தப்பு., ஆனா எங்கம்மா பயங்கரமான ஆளு னு தெரியும்.,  ஆனா ரொம்ப பயங்கரமா இறங்கி பண்ணுவாங்க னு இப்ப தான் தெரியுது..,  உங்க வீட்ல என்ன எல்லாம் சொன்னாங்களோ யாருக்கு தெரியும்..,

நீ இந்த விஷயத்துல உங்க வீட்டில் சொல்றது பத்தி கொஞ்சம் யோசனை பண்ணலாமே” என்று கேட்டான்.

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு சந்தோஷ் பற்றியும் பக்கத்து வீட்டு பெரியம்மாவை பற்றியும் அவனிடம் சொல்லிவிட்டு அப்படியே  இருங்க என்று சொல்லிவிட்டு மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள்..,

எதிர் வீட்டு கதவைத் தட்டவும் கதவைத்திறந்த சந்தோஷ் அம்மா “என்னமா” என்று கேட்டார்.,

“அண்ணன் எங்க” என்றாள்.

“கூப்பிடுறேன் நீ உள்ள வாடா” என்று அழைத்தார்.

“இல்ல கூப்பிடுங்க”என்று சொல்ல., அவர் அழைக்கவும் சந்தோஷ் அம்மா பேச்சை மட்டுமே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.,

சந்தோஷ் வரவும் “அண்ணா கண்ண மூடுங்க” என்றாள்.

“எதுக்கு மா” என்றான்.

“நீங்க கண்ணை மூடுங்க” என்று சொல்லி விட்டு போனில் வீடியோ காலை அவன் முன் காட்டி “இப்ப திறந்து கொள்ளலாம்” என்று சொன்னாள்.

இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி வெகு நாட்களுக்கு பிறகு சந்தோஷ்  ம் மித்ரனும் வீடியோ காலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இருவரும் கண்கலங்க சற்று நேரம் மீட்பு சந்தோ என்றும்.,  மித்ரன்  என்றும் இருவரும் மாறி மாறி அவர்கள் பெயரை சொல்லிக் கொண்டிருக்க..,

சாரு தான்.,  “ரெண்டு பேர்  பேரும் எல்லாருக்கும் தெரியும்.., சீக்கிரம் பேசுங்க” என்று சொல்லி விட்டு.,  போனை அவன் கையில கொடுத்து “பேசுங்க அண்ணா” என்று சொன்னபடி நகர்ந்தாள்.

அதற்குள் சந்தோஷ் அம்மாவும் மித்ரனிடம் பேச.,   சந்தோஷ்  பேசிக்கொண்டிருக்கும் நேரம் பக்கத்து வீட்டு பெரியம்மாவும் வர அனைவரையும் சாரு போனில் காட்டிக் கொடுத்தால்., பின் வளைகாப்பு பற்றிய பேச்சு எழுந்தது.,  சந்தோஷ்  ம்  மித்ரனும் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.,

‌அதன்பிறகு இருவரும் தினமும் பேசிக் கொண்டாலும் அவனை டெலிவரி நேரத்தில் வரும்படி சொல்லிக்கொண்டிருந்தனர்.,

“வளைகாப்பு எப்போது” என்று அவன் கேட்க அவள் வளைகாப்பு தேதியை சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவனும் சரி என்று கேட்டுக்கொண்டான்.

தினமும் சாருவோடு  பேசுவது  போல சந்தோஷத்துடனும் பேசிக்கொண்டிருந்தான்.

Advertisement