13

நிலவு இல்லாத வானம் 
போல வெறுமையாய் 
இருக்கிறது வாழ்க்கை., 

நீ என் அருகில் 
இல்லாத நேரங்களில்.., 

உன்னை தொலைத்து 
விடக்கூடாது என்று தான் 
தொலைவில் இருக்கிறேன்.., 

மீண்டும் கைகோர்க்கும் 
நாள் தேடி.., 

அன்று  மதிய நேரம் அவன் அவனுடைய வேலைக்கு செல்லாததால் அறைக்கு வந்தவன்.,
சற்று நேரம் தன்னை மறந்து படுக்கையில் சரிந்தவன்.,பின்பு ரெப்பிரஷ் செய்து கொள்ள மட்டும் நேரம் எடுத்துக்கொண்டான்.,

அவளுக்கு இப்பொழுது என்ன நேரம் இருக்கும் என்று யோசனையோடு ஒரு கப் காபி கலந்து கொண்டு அவன் தங்கியிருந்த வீட்டின் பால்கனியில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தான்.,

இன்னும் சற்று நேரத்தில் அவளுக்கு பேச வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்  பதிந்து இருந்தது., இங்கு மணி மூன்று தாண்டுகிறது என்றால் அங்கு கண்டிப்பாக இரவு 8 ஐ தாண்டி இருக்கும் என்று இந்திய நேரத்தையும் லண்டன் நேரத்தையும் கணக்கு செய்துகொண்டே அமர்ந்திருந்தான்..,

இன்னும் கொஞ்ச நேரம் தான் வெகு நாட்களுக்கு பிறகு சாருவின் குரல் கேட்க போகும் தருணம் என்று மனதிற்குள் எதிர்பார்ப்போடு  தன் கையிலிருந்த காபியை பருக தொடங்கியிருந்தான்…

அப்போது அவனுக்கு போன் அடிக்க சற்று நேரமாக போனை எடுக்காதது நினைவு வர வேகமாக சென்று எடுத்தான்.,

ஹாஸ்பிடல் விஷயமாக நண்பனொருவன் பேச.., பேசிவிட்டு வைத்தவனுக்கு அப்போது தான் தோன்றியது., கிட்டத்தட்ட பகலில் வீடு திரும்பும் நேரத்தில் கூட இன்று போனை எடுக்காதது.., அவன் போனை எடுக்காமல் கட்டுப்பாடோடு இருந்ததற்கு காரணம் எங்கே அவளோடு பேச வேண்டும் என்று நினைத்த நொடியில் இருந்து அவள் அறியாமல் அழைத்து விடுவானோ..,  விரைவாக அழைத்து அவளுக்கு அலுவலக வேலையை ஏதும் தொந்தரவு கொடுத்து விடுவானோ என்று தான் காத்திருந்தான்..,

இப்போது எடுக்கவும்.,  அவனுடைய இந்திய எண்ணும் அவன் அங்கு வாட்ஸ் அப்பிற்கு உபயோகித்துக் கொண்டிருந்ததால்.., அதை ஒபன் செய்து பார்த்ததும் அவளுடைய மெசேஜ் இருப்பதைக்கண்ட அவன் அவசரமாக ஒப்பன் செய்தான்..,

எப்பொழுதும் எதுவும் மெசேஜ் கூட அனுப்ப மாட்டாளே., தினம் தினம் ஒபன் செய்து பார்த்து விட்டு வைப்பவன் தான்., அதே யோசனையோடு.,   காபி கோப்பையுடன் அமர்ந்தவன்., கோப்பையைக் கீழே வைத்துவிட்டு மெசேஜை ஓபன் செய்தவனுக்கு அவன் முகத்தில் வந்து போன பாவங்களுக்கு..,  அவன் தான் பதில் சொல்ல வேண்டும்..,

அத்தனை சந்தோஷம் அவன் கண்ணில்.,  அதில் தேங்கிய கண்ணீர் அனைத்தையும் மீறி அவனுடைய சாரு அவனுக்காக  அனுப்பிய புகைப்படங்கள்..,  அது மட்டுமல்லாமல் அவள் அனுப்பியிருந்த முத்தம் கொடுக்கும் ஸ்மைலியும்.., ஹார்ட் ம்மாக இருக்க அதை பார்த்து சிரித்துக் கொண்டே அவன் கண்ணீரை கட்டுப்படுத்தியபடி.., தேங்க்யூ சாரு., ஐ லவ் யூ சாரு என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் சந்தோஷ் ன்  புகைப்படத்தை  பார்த்துக் கொண்டிருந்தவன்.., அதில் இருந்த நண்பனுடைய மகன் படத்தையும்., மனைவி அம்மா என அனைவரின் பார்க்கும் போது மனதில் ஒரு நிம்மதி படர்வதை உணர முடிந்தது.,

அம்மாவை பார்க்கும் போதே தெரிந்தது தற்சமயம் அப்பா இல்லை என்பது., மனதிற்கு வேதனையாக உணர்ந்தான்..,  எப்படி என் ட்ட சொல்லாம விட்டாங்க.., ஒரு பிள்ளை மாதிரி அத்தனை வருஷம் கூட இருந்துட்டு கடைசி நேரத்தில் இல்லாமல் போய்விட்டனே.,  என்ற அவன் மனம் வருந்ததை எப்படிப் புரிய வைப்பது என்றும் தோன்றியது.,

உடனடியாக சாருவிற்கு அழைத்தான்.,

சாருவும் அவன் பார்த்ததற்கான அடையாளம் இல்லாத காரணத்தால் சற்று நேரம் சந்தோஷ் வீட்டில் இருந்து விட்டு அவள் வீட்டிற்கு அப்போது தான் வந்து சேர்ந்தாள்.

அங்கு சாப்பிட சொல்ல பக்கத்துவீட்டு பெரியம்மா தான் “இன்னொரு நாள் சாப்பிடலாம்., இப்ப  அங்க சேர்த்து  செய்ய சொல்லிட்டேன்., அவளுக்கு டயட் சாப்பாடு தான் கொடுக்கணும்., பிரஷர் வேற இருக்கு” என்று சொன்னார்.

“எந்த டாக்டரிடம் பார்க்கிறாள்” என்பதை விசாரித்துக் கொண்டிருந்தான்.

பின்பு “அடுத்த முறை நான் வந்து டாக்டரை பார்த்து பேசுகிறேன்” என்றும் சொல்லியிருந்தான்..

அவன் அவளுடைய ரீப்போர்ட்டை கேட்க.., அவளோ நாளை தருவதாக சொல்லி விட்டாள்.,

சந்தோஷின் அம்மா தான்., “சாரு ரெஸ்ட் எடுக்கட்டும்.,  அவள் வீட்டுக்கு கூட விடாம உட்கார வைச்சி பேச வச்சுட்டேன்”., என்று சொன்னார்.

அப்பொழுது  தான் அம்மா பத்திய சாப்பாடு ஞாபகப்படுத்த.., அவள் இன்னொரு நாள் இங்கு சாப்பிடுவதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்து உடை மாற்றி விட்டே அவளுக்கு துணைக்கு இருக்கும் அக்கா அவளுக்காக சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க., அப்போது தான் சாப்பிட்டு முடித்தாள்.

பின்பு அவளுடைய எப்பொழுதும்  பழக்கமாக சித்துவோடும் பேசிவிட்டு சற்று நேரம் டிவி பார்க்கலாம் என்று அமரும் போது தான் அவனிடமிருந்து அழைப்பு வந்தது..,

இருவரும் அவர்களுக்காக வைத்துக் கொண்ட பாடல் அது.,  திருமணமான புதிதில் மித்ரன் சொல்லியிருந்தது.,  அவளை போட்டோவில் பார்ப்பதற்கு முன் அவன் கேட்ட பாடலின் அவனை கவர்ந்த வரிகளை  சொல்லி இருந்தான்.

அதையே இருவரின் ரிங்டோனாக வைத்திருக்க அவன் அழைக்கவும் அந்த பாடல் ஒலித்தது.,

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக”

கண்ணில் நீர் தேங்க போன் அட்டென்ட் செய்தாள்., இவள் ஹலோ என்று சொல்லும் முன்பே அவன் சாரு என்று அழைக்க அவளுக்கு மீண்டும் கண்ணீர் வடிய தொடங்கியது.,

அதை துடைத்தபடி “எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள்.

அவன் “நீ எப்படிடா இருக்க” என்று கேட்டான்.

“நாங்க நல்லா இருக்கோம்” என்று நாங்க என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.

அவனுக்கு பேச்சு சுவாரஸ்யத்தில் அது புரியவில்லை., அவன் சித்துவையும் சேர்த்து சொல்கிறாள் என்று நினைத்துக்கொண்டான் போல..,

அமைதியாக அவளின் நலம் விசாரித்து விட்டு அதன்பிறகு சந்தோஷ் பற்றிய பேச்சை எடுத்தான்..,

“தேங்க்யூ தேங்க்யூ சோ மச்., உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டான்.

“தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவீங்களா என்ன.,  அப்ப நான் வேற யாரோ வா” என்று கேட்டாள்..,

“ஏய்… ச்சே ச்சே.. நீ என்னோட உயிருடா.., தேங்க்ஸ் வாபஸ் சரியா.., இப்ப சொல்லு எங்க பார்த்த”., என்று கேட்டான்.,

” கொச்சின் ல” என்று சொன்னாள்.

” கொச்சின் ல லையா” என்றான்.

” நான் இப்ப  ப்ராஜெக்ட் விஷயமா கொச்சின் ல இருக்கேன்.., நான் இங்க வந்து 5 மன்த் ஆச்சு.., இங்கே நான் தங்கி இருக்க வீட்டுக்கு எதிர் வீட்ல தான் அவங்க இருக்காங்க.., எனக்கு பஸ்ட் தெரியாது,  ஜஸ்ட் இன்னைக்கு அவங்க வீட்டுல அந்த குட்டி பையனோட போகும் போது தான் பார்த்தேன்..,  உங்க போட்டோ இருந்துச்சு அதை வச்சு தான் கண்டுபிடிச்சேன் அதுக்கப்புறம் கேட்கும் போது தான் சொன்னாங்க”., என்று சொன்னாள்.

அவன் “சந்தோஷ் எப்படி இருக்கான்., என் மேல எதுவும் கோவமா இருக்கானா.,  எனக்கு எங்க அம்மா மேல தான் டவுட்., உனக்கு சொன்னால் புரியுமா”., என்றான்..,

” உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டாள்.

” முழுசா தெரியாது ஆனா கேள்விப்பட்டேன்., அவன் எங்க இருக்கான்னு தெரியாம தான் அவன்கிட்ட  தேடிப் போய் சாரி கூட கேட்க முடியாத சிட்டுவேஷன்.., முழுசா சொல்லு என்ன விஷயம்” என்று கேட்டான்.

இவள் முழுதாக சொல்லாமல் சுருக்கமாக நடந்தவற்றைச் சொன்னாள்.,

சற்று நேரம் மித்ரன் இடம் எந்த பேச்சும் இல்லை.., “நான் எதிர்பார்க்கவே இல்லை சாரு., இவ்வளவு மட்டமாக இருப்பாங்கன்னு..,  அம்மா  என்கிற ஸ்தானத்தில் மரியாதை கொடுத்து வைத்திருந்தேன்.,  அவங்களே அவங்களோட மதிப்பைக் கெடுத்துக்கிட்டாங்க.., இப்போ உன் விஷயத்தில்  அவங்க பேசும் போது கூட  வீட்டில் உள்ள அத்தனை பேரும் அமைதியா இருந்தது காரணம் இதா தான் இருக்கும்.,