Advertisement

அப்புறம் அவங்க அப்பா தான் வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க..,   அவங்க அப்பாவ  நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்.., அவர் நல்ல மனுஷன்.., ஆனா அவங்க அம்மா வந்து பயங்கரமான ஆளு..,

எங்கே நான் அங்கே இருந்த மித்ரன்  என்னோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவான் அப்படிங்கிற பயம் அவங்களுக்கு..,

அது மட்டுமில்லாம ஏற்கனவே அவங்க அம்மா கிட்ட  அவன் ரொம்ப க்ளோஸ் கிடையாது., ஆனா எங்க அம்மாட்ட ரொம்ப க்ளோசா இருப்பான்., அது அவங்களுக்கு பிடிக்காமல் போயிருச்சு..,

மித்ரன் பொறுத்தவரைக்கும் பாசத்தை மட்டும் தான் எதிர் பார்ப்பான்.,  அவனுக்கு அவன் எதிர்பார்த்த பாசம் வீட்ல கிடைக்கல”.,  என்று சொல்லும் போதே அங்கு சந்தோஷ் அம்மா தன் கண்ணில் வழியும் கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொள்ள சாரு பார்த்துக்கொண்டே இருந்தாள்..,

எங்க வீட்ல நான் ஒரே பையன் தான்.,  அதனால அப்பாவும் மித்ரன எங்க வீட்ல ஒருத்தனா தான் பார்த்தாங்க.., ஆனால் அவன் அப்படி எங்க வீட்ல உங்க ஒருத்தனா இருக்குறது அவங்க அம்மாவுக்கு பிடிக்கல..,

அவங்க சொல்லுறத படிச்சா மட்டும் தான் ரெண்டு பேரையும் பிரெண்ட்ஷிப் ஆயிருக்க விடுவேன் மிரட்டி அனுப்பி வச்சாங்க.,    அதை நம்பி  அவங்கப்பாவோட மித்ரன் என்ட்ரன்ஸ் எழுதுறதுக்கு ன்னு வெளியூர் போயிருந்த நேரம்..,

அவங்க அம்மா வீட்டுக்கு வந்து ரொம்ப அசிங்க படுத்திட்டாங்க., பேசக் கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசி.,  ரொம்ப அசிங்க படுத்தி.,  அந்த ஷாக்லே அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு..,

இது எதுவுமே மித்ரனுக்கு தெரியாது.,  அப்புறம் என்னோட பிஜி காக வெளியூர் போய்ட்டேன்., நான் படிச்சது திருச்சியில் அப்பா சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப்., டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டோம்., அவனுக்கு தெரியாது.,  நாங்க எல்லாரும் போன் நம்பரில் இருந்து எல்லாத்தையும் மாத்திட்டோம்..,  ஏன்னா அவங்க அம்மா சொன்னது அது தான் எந்த சூழ்நிலையிலும் மித்ரனோட லைஃப்ல சந்தோஷ் னு ஒருத்தன் திரும்பி வரவே கூடாது..,

வந்தா நான் உங்க குடும்பத்தை இதைவிட மோசமாக கேவலப்படுத்துவேன் னு., சொல்லிட்டு போனாங்க.,

வார்த்தைகள் அதிகமா விட்டுட்டாங்க.,  நல்லவேளை நான் பொண்ணு இல்ல..,   பொண்ணா இருந்தா எனக்கு வேற பட்டம் கட்டி இருப்பாங்க.,  பையனா இருந்தே என்னையும் அவனையும் தப்பா பேசினாங்க..,   அதை எப்படிம்மா சொல்றது..,   ஆனால் இது மித்ரனுக்கு இப்ப வரைக்கும் தெரியாது.., தெரிஞ்சிருந்தா வீட்ல பெரிய பிரச்சினையாகி இருக்கும்..,

அவனுக்கு கோபம் என்னன்னா நான் அவன்கிட்ட சொல்லாம வெளியூர் வந்திட்டேன்., அவனோட பிரெண்ட்ஷிப் மதிக்கல அப்படிங்கற கோபம்..,

கேள்விப்பட்டேன் ஏன்னா அவன் மத்த பொதுவான  பிரண்ட்ஸ் ட்ட அப்படித்தான் சொல்லி இருக்கான்.,

தற்செயலா சென்னையில் உள்ள ஒரு ப்ரண்ட் அ இடையில் ஒரு டாக்டர் மீட்டிங்ல பார்க்கும் போது அவர் சொன்னது இது..,

மித்ரன் நீங்க விட்டுட்டு வந்துட்டீங்க ன்னு  சொல்லி அவனுக்கு பயங்கர கோபம்..,  நீங்க கடைசி வரை அவன் கூட இருப்பேன் னு சொல்லிட்டு., இப்ப போன் நம்பர் கூட மாத்திட்டு போயிட்டான்., னு சொல்லியிருக்கான்.

ஃபர்ஸ்ட் நடந்த பிரச்சினைகள் மட்டும்  தெரியும்., ஆனா அவங்க அம்மா அப்புறம் பேசினது எதுவும் தெரியாது., இப்ப வரைக்கும்”., என்று சொன்னான்.,

இப்போது கண்ணில் கண்ணீர் வழிவது சாருவின் முறை ஆயிற்று கண்ணீரை துடைத்தபடி “ஏன் அவங்க அம்மாக்கு இப்படி ஒரு கோபம்” என்று கேட்டாள்…

“அவங்க அம்மா  ஹாஸ்பிடல் அன்ட் மணி மைன்ட்., இப்படி தான் இருக்கணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க..,

ரொம்ப அன்பா  இருக்கிறத வந்து நடிப்பு அப்படின்னு சொல்லுவாங்க., அவன் ஏற்கனவே முன்னாடியே சொல்லி இருக்கான்.,

எங்க அம்மாவுக்கு யார் அன்பா இருந்தாலும் பிடிக்காது., டாக்டர் னா இப்படித்தான் இருக்கணும்.,  அப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ் பேசிட்டே இருப்பாங்க.,  வீட்ல அப்படின்னு  அடிக்கடி சொல்லி இருக்கான்.,

அன்பா இருக்கிறவங்க காரணம் இல்லாமல் அன்பா இருக்க மாட்டாங்க., அவங்க வந்து ஏமாத்திடுவாங்க அப்படிங்கிற எண்ணம் அவங்களுக்கு அதிகமாக உண்டு.., அதனால கூட இருக்கலாம்., நாங்க அப்படி தான் பீல் பண்ணினோம்..,

அவங்க சொன்ன ஒரு வார்த்தை தான் அந்த சண்டைல., என் பையன் கிட்ட அன்பா இருந்து என் பையனை லைஃப்ல முன்னேறவிடாமல் பண்ணி இருக்கீங்க..,   அப்படின்னு சொல்லி சொன்னாங்க..,

அதுமட்டும் இல்லாம  பசங்களையும் சேர்த்து வைத்து அசிங்கப்படுத்தி அதுதான் எங்கப்பாவால தாங்கிக்க முடியல.,   என்னைக்கும் மாமா மச்சான் கூட பேசினது கிடையாது..,  எல்லாரும் கேட்கிறது ரெண்டு பேரும் ஒரே வயிற்றில் பிறக்கலை மத்த படி உங்களுக்குள்  வித்தியாசம் இல்ல., அப்படின்னு சொல்ற லெவலுக்கு ரெண்டு பேரும் பயங்கர குளோஸ்.,

அப்படி இருந்த எங்களை அசிங்கப்படுத்திட்டாங்க., அவன் லைஃப் நல்லா இருக்கணும் மறுபடியும்   பிரச்சினை வரக் கூடாது னு., தான் வெளியே வந்தோம்.,

எங்க வீட்ல வந்து இருந்த இரண்டு நாளிலேயே ரொம்ப புலம்பினான்.,  அப்பவே உள் மனசுல உள்ள ரொம்ப பீல் பண்ணான்.,

எப்படி டா எங்க அம்மா இப்படி ஒரு குணத்துல இருக்காங்கன்னு சொல்லி ரொம்ப புலம்பி இருக்கான்., மறுபடியும் இவ்வளவு பெரிய பிரச்சனை அதனால் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு போச்சுன்னு தெரிஞ்சா.,  அவன் ரொம்ப வெறுத்திடுவான் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான் நாங்க சொல்லாம வந்துட்டோம்..,

அது மட்டுமில்லாம அவங்க அம்மா ஏற்கனவே கொஞ்சம் பகட்டான ஆளு.,  எப்படிடா ஏதாவது பிரச்சினை பண்ணலாம்னு யோசிப்பாங்க.., அதனால துஷ்டனைக் கண்டால் தூர விலகு., ன்னு   தான் நாங்க ஒதுங்கி வந்துட்டோம்.,

நான் பி.ஜி முடிச்சு.,  என்னோட மேரேஜ் வரைக்கும் தான்., அப்பாவோட ஹெல்த் தங்குச்சி..,  அதுக்கப்புறம் அப்பா இல்லை.., அந்த சமயம் கூட அம்மாவுக்கு ஒரே எண்ணம் மித்ரனு க்கு சொல்லு டா ன்னு.., சொல்லி கேட்க தான் செஞ்சாங்க..,

நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்., என்ன அவங்க  அம்மாக்கு தெரிஞ்சா அப்பவும் பிரச்சினையாகும்.,  அவனாவது சந்தோஷமா இருக்கனும் னு  நினைச்சேன்., ஆனால் இப்பவும் ஏதோ சரியில்லை போல ”  என்றான்.

“உன்னைய விட்டுட்டு மித்ரன் இதுக்கப்புறம் என்ன படிக்கப் போனான்” என்று கேட்டான்.

சாரு வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

சந்தோஷ் அம்மா தான்.., “என்ன மனுஷி மா., பிள்ளையோட வாழ்க்கையை விட அவங்க  நினைப்பு தான் முக்கியமாப் போச்சா” என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார்.,

“சரி., நான் தான் சொன்னாங்க னு.,  அவனோட முன்னேற்றம் நிம்மதி முக்கியம் னு சொல்லி., விலகி தனித்து வந்தேன்..,  நீ  எதுக்கு வந்துருக்க.,  என்று சற்று கோபமாகவே கேட்டான்.,

“நானும் அவங்க நிம்மதி முக்கியம் அப்படிங்கிறது காக தான் தனியா வந்தேன்”.,  என்று சொல்லும் போது தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிந்தது.,

அவள் எதற்காக தனியாக இருக்கிறாள்., ஏன் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வளைகாப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள் என்று..,

அதை சொல்லி கேட்க அவள் அமைதியாக பார்த்தவள்.,  இப்பவும் அவங்க ட்ட பேசுறதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல.., அவர் படிப்பு முடியட்டும் னு  நானும் வெயிட் பண்றேன்., ஆனா இப்போ படிப்பு பாதியில் கெட்டு போனாலோ., இல்ல அவர் படிக்காம போனாலோ., அதை வச்சு அவங்க பெரிய இஷ்யூ வாக்குவாங்க ன்னு எனக்கு தெரியும்.., நான் என்ன சொல்ல வர்றேன் னு  உங்களுக்கு புரியுதா..,  என்று சந்தோஷப் பார்த்து கேட்டாள்.

சந்தோஷ் ம் “புரியுது” என்று சொன்னான்..

“உங்க வீட்டுல எப்படி நம்புனாங்க” என்று பக்கத்து வீட்டு பெரியம்மா கேட்டார்.

“எனக்கு பிடிக்காத பீல்டு னு நான் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னதை வைச்சி பில்டப் பண்ணிட்டாங்க… அதுவும் பேசியே காரியம் சாதிக்கும் ஆள் எப்படி பேசினாங்க னு யாருக்கு தெரியும்… நானும் விட்டுடேன்”.. என்றாள்.

அவள் செல்லை எடுத்து சந்தோஷ்., அம்மா., மீனா., குட்டி மிதுன் எல்லோரையும் போட்டோ எடுத்து நாலைந்து போட்டோவை மித்ரனுக்கு அனுப்பி வைத்தாள்… பின் ஸ்மைலி இமேஜ் ல் ஹார்ட்., முத்தம்  என மெஸேஜ் தூது விட்டாள்.,

அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் அவள் செல்லில் இருவரும் சேர்ந்து தனியே என இருந்த போட்டோவை பார்த்தனர். சந்தோஷ் தனக்கு மித்ரன் போட்டோவை அனுப்ப சொல்ல நம்பரையும் சேர்த்தே அனுப்பி வைத்தாள்.

“நான் இன்னைக்கு கண்டிப்பா போன் பண்றேன் நீங்க பேசுறீங்க” என்று சொன்னாள்.
“என்னைய  சாக்கு வச்சு நீ பேச போற” என்றான்.

“அவங்க கண்டிப்பா கூப்பிடுங்க..,  எனக்கு தெரியும்.,  அமைதியா இருக்காரு னா ஏதோ ஒரு ரீசன் இருக்கு னு தோணுச்சு.,  எனக்கு இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசியே ஆகணும்”..,  என்று சொல்லி பிடிவாதமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அவனும் சரி பேசறேன்” என்று சம்மதித்தான்.

அவங்களை டெலிவரி சமயத்தில்   போன் பண்ணி கண்டிப்பா வரச் சொல்லனும் னு நினைச்சிட்டு தான் இருந்தேன்.., இப்போ இதை சாக்கா வச்சி கூட ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட பேச வைக்கிறேன் னு., நானும் பேச போறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…..

உருட்டும் பகடைகள் என்றும் எப்பொழுதும் ஒருவருக்கு சாதகமாகவே இருந்து விடாது., பாம்பை தாண்டி ஏணி மட்டுமே நோக்கி செல்லும் அதிர்ஷ்ட நேரங்களும் வந்து விடும்“.

Advertisement