Advertisement

         பேசும்போதே சற்று லேசாக மூச்சு வாங்க., “ஓகே ஓகே நிதானமா சொல்லு” என்று சொன்னான்.

அதேநேரம் குட்டி மிதுன் “அப்பா கடைக்கு” என்ற படி வந்தான்.

“நாளைக்கு கடைக்கு போகலாம் டா.,  இதோ இவங்க தான் உனக்கு அத்தை” என்று சொல்லி காட்டி தந்தான்.

“நான் எப்பவுமே ஆன்ட்டி தானே சொல்லுவேன்”என்று அவனும் பதிலுக்கு சொன்னான்.

“ஆன்ட்டி சொல்லாத இனிமேல் அத்தை சொல்லு” என்று சொல்லிக் கொடுத்தான்.,

அவளும் அவனையே பார்த்தபடி “அப்போ நீங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கும் போதே பேசி வச்சிருக்கீங்க இல்ல.,  பேர் இப்படித்தான் இருக்கணும்.,  இந்த மாதிரி தான் செலக்ட் பண்ணனும் எல்லாம் சொல்லி இருக்கீங்க இல்ல”., என்று அவனிடம் சிரித்தபடி கேட்டாள்.

இவன் இவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை தெரியாமல் பெரியவர்களும் சந்தோஷின் மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மற்றவர்களுக்கு தான் இவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்களோ என்று தோன்ற தொடங்கியது.

அப்போது தான் அவன் மீனாவிடம் சொன்னான்., “இவங்க  என் மித்ரனோட ஒய்ஃப்” என்று சொல்ல முதல் முதலாக அவன் முகம் அத்தனை சிரிப்போடு இருப்பதை மீனாவும் கண் நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை அவனிடம் சொல்லவும் செய்துவிட்டாள்., “நீங்க இன்னைக்கு தான்  அந்த அண்ணன் பேரு முழுசா சொல்லி இருக்கீங்க.,  மற்றபடி எதுவும் எனக்கு நீங்க சொன்னது கிடையாது., அத்தையும் சொன்னது கிடையாது”.,என்றாள்.

அவனோ.,  “சொல்ல கூடாதுன்னு இல்லை”என்று சொன்னான்.

“இல்லை இல்லை.,நான் தப்பா நினைக்கலை., கேட்டேன் அவ்வளவு தான்” என்று சொன்னாள்.

சாருவும் “அவங்க எதுவும் சொன்னது கிடையாது., ஆனால் என்னை கல்யாணம் பண்ணனும் அப்படின்னு நினைக்கும் போது.,  உன் பெயர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்னு மட்டும் தான் சொன்னாங்க.., நான் சாரு னு கூப்பிடுவேன் அப்படின்னு தான் சொன்னாங்க., நான் கூட என் பேரு சாரூபா நீங்க வேற மாதிரி ஏதாவது கூப்பிடுங்க னு என்று கேட்டேன்., இல்ல சாரு னு தான் எனக்கு கூப்பிட ரொம்ப பிடிச்சு இருக்கு.,  அப்படின்னு சொன்னாங்க..,

அப்புறம் ஒரு தடவை பேபி பற்றி பேசும் போது என்று சொன்னது., பையன் பிறந்த ச னு ஆரம்பிக்கிற மாதிரி தான் பெயர் வைக்கணும் அப்படின்னு சொன்னாங்க.., நான் கேட்டது க்கு கூட உன் பேர் ஆரம்பிக்கிற எழுது அப்படின்னு சொன்னார்களே ஒழிய..,  வேறு எதுவும் சொல்லல”.., என்று சொன்னாள்.

மீனாவும் இடுப்பில் கை வைத்தபடி சந்தோஷைப் பார்த்து “நீங்களும் இப்படி தானே என் ட்ட சொல்லி ஏமாற்றினீங்க” என்று கேட்டாள்.

“இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி வச்சிருப்பாங்க”.,   என்று சொன்னாள்.

அவனும் அதை  தலையாட்டி “ஆமாம்” என்றான்.,

“சரி சொல்லுங்க”  என்றாள்.

” இப்ப நீ சொல்லு., மித்து எங்கே”என்று அவனும் உரிமையோடு கோபமாக கேட்டான்.,

“படிக்க போயிருக்காங்க”., என்றாள்.

“உன்னை இப்படி ஒரு நிலைமையில்  விட்டுட்டு  அவன் கண்டிப்பா படிப்பு தான் முக்கியம் ன்னு போயிருக்க மாட்டான்” என்று சொன்னான்.

“நான் இப்படி இருப்பதே அவங்களுக்கு தெரியாது” என்று கண்கலங்க சொன்னவளை   கண்டவனுக்கு அத்தனை அதிர்ச்சி.,

” என்ன பிரச்சனை”  என்று  நேரடியாக கேட்டான்.

அவனைப் பார்த்தவள் “நீங்க முதல்ல சொன்னால் தான் நான் சொல்லுவேன்., ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது”., என்று பிடிவாதமாக நின்றாள்.,

“இப்போ உங்க பிரண்டு கிட்ட பேசனுமா சொல்லுங்க., நான் கால் பண்ணி தரேன் நீங்க பேசுங்க” என்றாள்.

அப்புறமா பேசறேன் என்று சொன்ன படி அவர்களுடைய நட்பின் ஆழத்தைசொல்லத் தொடங்கினான்.,

அதற்குள் சந்தோஷ் அம்மா தான் சொன்னார். “19 வருஷம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிரிந்தது கிடையாது.,  தூங்குறதுக்கு மட்டும்தான் ரெண்டு பேரும் அவங்களுக்கு தனித்தனி வீடு இருக்கு என்ற எண்ணமே வரும்., அதுவரைக்கும் ரெண்டு பேரும் கை கோர்த்து தான் இருப்பாங்க.., ஸ்கூல் லைஃப் ல கூட ஸ்கூல்ல மட்டும்தான் ரெண்டு பேரும் கை கோர்த்து சுத்துனாங்க.,  ஸ்கூல் லைஃப்லையுமே ஒரு ஸ்டேஜ் வந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா  படிக்க போறோம்., குரூப் ஸ்டடி போறேன்னு சொல்லிட்டு  போவாங்க.., ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிஞ்சு இருந்தது ரொம்ப கம்மியான நேரமா தான் இருக்கும்..,

காலேஜ் வந்ததுக்கு அப்புறம் ரொம்ப சுத்தம்., தூங்க கூட வீட்டுக்கு வர்றது அதிசயம் தான்.,  கேட்டா ஹாஸ்டலில் பசங்களோட உட்கார்ந்துப்பாங்க.,

கட்டாயப்படுத்தி போன் பண்ணி தான் ரெண்டு பேத்தையும் வீட்டுக்கு வர வைக்கணும்.., இரண்டு பேர் பழக்கத்தை பார்த்து  ஊர் கண்ணு தான் பட்டுருச்சி போல”.,  என்று கண் கலங்கிய படி சந்தோஷ் அம்மா சொன்னார்.

சந்தோஷம்  அம்மாவை அருகே அமர்த்திக் கொண்டு அவர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

“நாம பெத்தா தான் பிள்ளையா.., மித்ரனும் என்  பிள்ளை தான்.., அப்படித்தான் அவன் என் கிட்டே இருந்தான். அம்மா அம்மா என்று அவ்வளவு பாசமா இருப்பான்.,  இவங்க அப்பாவ எல்லாம்  அவனுக்கு அவ்ளோ பிடிக்கும்.., இப்போ  அப்பா இல்லைன்னு தெரிஞ்சா அவ்ளோ வேதனைப்படுவான்.., அவனுக்கு எதுவும் தெரியாது”.., என்றார்.

“அப்படி என்ன பிரச்சனை” என்று சாரு கேட்டாள்.

சந்தோஷ் சொல்லத் தொடங்கினான்.

நாங்க ரெண்டு பேரும் எல்கேஜிலிருந்து., இதோ இவனை விட கொஞ்சம் பெரிய பையனா இருக்கும் போதிலிருந்து  ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்., ஒரே ஸ்கூல்., ஒரே கிளாஸ்., அதுக்கப்புறம் செக்சன் மாத்தி போட்டா கூட அழுது அடம்பிடிச்சு நாங்களே கேட்டு மாத்திப்போம்.,  அந்த அளவுக்கு கிளோஸ்.,

டென்த் வரைக்கும் ஸ்கூல் ல மட்டும் தான் ப்ரண்ட்ஸ் ஆ இருந்தோம்., ஆனாலும் கையை கோர்த்துட்டு சுத்துற விடமாட்டோம்.,

என்னால அவனை எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது., அதே மாதிரி அவனாலும் என்னை எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது., அப்புறம் லெவன்த்., டூவல்த் பேரும் ஒரே டியூஷன்.,  ஒரே குரூப்..,  அப்புறம் குரூப் ஸ்டடி னு  ஃப்ரெண்ட்ஸோட இருந்தாலும்.,  நாங்க ரெண்டு பேரும் தனி தான்.,  அதுல இன்னும்  பயங்கர க்ளோஸ் ஆகிட்டோம்.,  மித்ரனுக்கு மெடிசன் பிடிக்காது சோ அவன் வந்து என்ஜினியரிங் பண்ணனும் அல்லது வேறு ஏதாவது எடுக்கணும் அப்படிங்கற மாதிரி யோசிச்சுகிட்டு இருந்தான்.,

எனக்கு மெடிசன் பண்ணனும்னு ஆசை அந்த நேரத்துல மித்ரன் மெடிசின் போக மாட்டேன்னு சொன்னான்.,  நான் மெடிசன் தான் போவேன் அப்படின்னு சொன்னேன்.,

அவங்க வீட்ல கண்டிப்பா மெடிஷன் தான்  எடுக்கணும் அப்படின்னு கட்டாயப்படுத்தவும்.., இவன் முடியவே முடியாதுன்னு சொன்னான்.

அவங்க அம்மா வந்து என் ட்ட  சொன்னாங்க.,  நீ சொன்னா அவன் கேட்பான்  சொல்லு னு.,  என்னைய சொல்ல சொன்னாங்க..,

அப்புறம் அவன் கிட்ட நான் சொன்னேன்.,  டேய் நான் மெடிஷன் தான் போக போறேன்., அப்புறம் நம்ம ரெண்டு பேரும் ஒரே படிப்பு இல்லாமல் பிரிஞ்சிடுவோம் அப்படின்னு சொன்னேன்.,

அவன் அப்ப கூட என் கிட்ட கேட்டான்., சரி ஒரே பீல்டு கடைசி வரைக்கும் ஒரே மாதிரி ஒன்னா தான் இருக்கணும் அப்படின்னு கேட்டான்.,  சரின்னு சொல்லி ப்ராமிஸ் பண்ணி கொடுத்தேன். எனக்காக மெடிசின் ஜாயிண்ட் பண்ண சம்மதிச்சான்.,

ஆனால் ஃபர்ஸ்ட் இயர் ஃபுல்லா மே எரிச்சலோடு சுத்திட்டு இருப்பான்., அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இன்ட்ரஸ்ட் ஆனான்.,

ஏற்கனவே  படிப்பில் எப்பவுமே விட்டுக்கொடுக்க மாட்டான்., அதனால அதை அப்படியே மெயின்டெயின் பண்ணி படிச்சிட்டான்.,   பைனல் இயர் வரைக்கும் எங்க பிரெண்ட்ஷிப் ல எந்த பிரச்சினையும் இல்லை., எங்களுடைய படிப்புக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.., நல்லா போச்சு..,

அப்புறம் பி.ஜி பண்ணனும் அப்படின்னு முடிவு பண்ணும் போது தான்  பிரச்சினை ஸ்டார்ட் ஆச்சு..,

நான் பிடியாட்ரீசன் எடுக்கணும்னு சொல்லி வரவும்., அவனுக்கு ஏற்கனவே பிடியாட்ரீசன் தான் பிடிக்கும்., மற்ற எதுவும் வேண்டாம்., ரெண்டு பேருமே பி ஜி யில் இது தான் பண்ணனும்னு முடிவு நாங்க பண்ணிகிட்டோம்.,

அவங்க அம்மாவோட ஃபீலிங் வேறயா இருந்துருக்கு., அவங்க அம்மாவோட எதிர்பார்ப்பும் வேறயா இருந்துருக்கு.., அது அவனுக்கும் தெரியாது.., எனக்கும் தெரியாது அப்புறம் அதில் பிரச்சினை ஆரம்பிச்சுச்சு ..,

அவன் வீட்டில் கட்டாயப்படுத்தி நான் சொல்றது தான் எடுத்து படிக்கணும்னு அவங்க அம்மா சொல்லி சத்தம் போட்டு சண்டை போட பிரச்சனை ஆரம்பமாகி.., படிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லி பிரச்சனை பண்ண ஆரம்பிச்சான்..,

அப்போ அவங்க அம்மா என் கிட்ட வந்து சொல்லும் போது.,  நான் சொன்னேன் பிஜி மட்டும் அவனுக்கு இஷ்டப்படி படிக்கட்டுமே.., அவனை மெடிசன்  எடுத்து  படிக்க வச்சது கஷ்டப்பட்டு தான்.., அதுக்காக சொல்ல போக அவங்க வேற மாதிரி தப்பா பேசிட்டாங்க..

ரொம்ப இளக்காரமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.., என்னமோ  அவனும் நானும் பிரெண்ட்ஷிப் அப்படிங்கறது தாண்டி வேற மாதிரி இருக்கோம்., அப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.., பேசினது மட்டும் இல்லாம ரொம்ப கேவலப்படுத்துற மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..,

எங்கள மட்டமா பேசி.., நாங்க இருந்த ஏரியால மித்ரன் தான் எனக்கு படிப்பு செலவு பண்றான்.,  எங்க அப்பாக்கு ஒன்றும் செய்ய முடியாது அப்படிங்கற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க..,

அப்பவும் மித்ரன் வந்து சண்டை போட்டான்.,  அது எப்படி நீங்க என் பிரெண்ட் அ பார்த்து சொல்லுவீங்கன்னு சொல்லி எவ்வளவோ ஃபைட் பண்ணான்., எவ்வளவோ போராடி., எனக்காக எவ்வளவோ பேசினான்.., பதிலுக்கு பதில் பேசி அவனுக்கும்., அவங்க அம்மாவுக்கும் பெரிய பிரச்சினையாகி ரெண்டு மூணு நாள் எங்க வீட்டிலிருந்து போகவே மாட்டேன் அடம் பிடிக்கிற அளவுக்கு இருந்துட்டான்.

Advertisement