Advertisement

12

உனக்கும் எனக்கும் 
ஒற்றை நிலவு தான்., 

உனக்காக நான் 
தேய்கிறேனா.., 

இல்லை எனக்காக நீ 
தேய்கிறாயா..,  

என்று தெரியாமல் 
குழப்பத்தில் நிலவு 
தேய்ந்து கொண்டிருக்கிறது…

எதிர்வீட்டு பெரியம்மா வீட்டில் இருந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு.,  அதிர்ச்சியுடன் கண்ணில் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமர்ந்தாலும்.., அவளால் கண்களை மித்திரனின் புகைப்படத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை.,

அப்போது தான் பக்கத்து வீட்டு பெரியம்மா “இது தான் இவங்க பையன் சந்தோஷ்”., என்று சொல்லி புகைப்படத்தில் மித்ரனின் அருகில் இருந்தவரை காட்டினார்.

அவளும் பார்த்துக் கொண்டே “உங்க பையன் டாக்டரா”., என்று கேட்டாள்.

“எப்படி தெரியும் டாக்டர் னு.,  போர்டு கூட வைக்கலையே..,  ஹாஸ்பிடலுக்கு   போறான்., வருவான்., ஆனா இங்க இருக்கவங்க ட்ட ரொம்ப பழக்கம் இல்ல., ஆனா இங்கே உள்ளவங்கள் ட்ட கூட சொன்னது இல்லை.,  உனக்கு எப்படி தெரியும்”., என்று கேட்டார்.

சிரித்தபடி “கேட்டேன்” என்று மட்டும் சொன்னவள்.,  “என்ன மேஜர் எடுத்து படிச்சிருக்காங்க” என்று கேட்டாள்.

“குழந்தைகள் நலப்பிரிவு” என்று அவர்கள் சொல்லும் போது ஒரு முறை மித்ரன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவனுக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்டது எடுத்து படிக்க தான் ஆசை என்பதை பேச்சுவாக்கில் சொல்லியிருந்தான்., அதை இப்பொழுது நினைத்துக் கொண்டவளுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் தேங்கியது.

“உங்க பையன் எப்ப வருவாங்க., நான் பார்க்கலாமா”.., என்று கேட்டாள்.

பக்கத்து வீட்டு பெரியம்மா தான் “இவள் யாரையும் பார்க்க வேண்டும் என்று இதுவரை சொன்னதே இல்லையே., முதல்முறை புகைப்படத்தில் பார்த்து அவனைப்  பார்க்கவேண்டும் என்று சொல்கிறாளே”.,என்று கேட்டார்.

அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் யாரிடமும் நின்று பேசாதவள் முதன் முதலாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று பிரிய படுவது எதனால் என்று தெரியாமல் குழம்பிப் போயினர்…

அதே நேரம் அவர்கள் வந்ததை அறிந்த ராஜாவின் அம்மா காப்பியோடு வந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள் சிரித்தபடி காபியை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தாள்., அப்பொழுது தான்  பெரியம்மா அவளிடம் “மீனா” என்றவர்.,   “எப்போ சந்தோஷ் வருவான் னு கேளு” என்று சொன்னார்.

அவளோ “அத்தை இன்னைக்கு சீக்கிரம் வந்துடுவேன் னு சொல்லிட்டு போனாங்க.,  கடைக்கு போகனும் னு சொல்லிட்டு இருந்தாங்க., ராஜா க்கு ஏதோ வாங்கணுமாம்.,  அதுக்காக சீக்கிரம் வந்து கடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.., இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.,  ஈவினிங் போகும் போதே சொன்னாங்க”.., என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அமைதியாக அமர்ந்திருந்தவள்., காபியை குடித்து முடித்ததும்., பெரியம்மா தான்.,  “ஏதாவது முக்கியமான விஷயம் பேசனுமா”என்றார்.

மீனாவும் அவள் முகத்தையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

” பேசணும்” என்று மட்டும் சொன்னாள்.,  அதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.,

இவள் கிளம்பலாம் என்று எழும்பவும் பக்கத்து வீட்டு பெரியம்மாவும் “சரி மா.,  நீயும் நேரத்துக்கு சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்குவ”.,  என்று கிளப்பிக் கொண்டிருந்தனர்.

இருவரும் எழும் நேரத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு மீனா போய் திறக்கவும் உள்ளே நுழைந்தவன். அவர்களை பார்த்து விட்டு லேசான தலையசைப்போடு அங்கிருந்து நகர போனவன்., எப்போதும் போல அவன் மகனை பேர் சொல்லி அழைக்கவும்..

சாருவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய தொடங்கியது. ஏனெனில் சந்தோஷ் அவன் மகனை மித்து என்று அழைத்திருந்தான்.

மீனாவோ பதறிப்போய் “ஏன் அழுறீங்க”., என்றாள்.

முதன் முறையாக கேட்டாள் “உங்க பையனோட பெயர் என்ன”., என்று கேட்டாள்.

“மிதுன்” என்று சொன்னாள்…

மீண்டும் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிய ஷாலை வைத்து துடைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.,

இது எதுவும் தெரியாதவன் மகனை அழைத்துக் கொண்டு நேராக உள்ளறைக்கு சென்றிருந்தான்., குழந்தையோடு அவன் பேசிக்கொண்டிருக்கும் சத்தமும்.,  குழந்தையின் சிரிப்பு சத்தமும் கேட்டது…

அமைதியாக சிரிப்பு சத்தம் கேட்ட பக்கமே பார்த்துக்  கொண்டிருந்தவளிடம்

மீனா “அவங்க வேற யார்ட்டையும் அதிகமா பேச மாட்டாங்க..,   அவங்க பையன் தான் அவங்களுக்கு.., அவன் கிட்ட மட்டும் தான் உட்கார்ந்து கதை பேசுவாங்க.,  நாங்க யாருமே அதை பெருசு  பண்ணிக்க மாட்டோம்., ஏன்னா அவங்களுக்கு அவன் தான் எல்லாம் அப்படிங்கற மாதிரி யோசிப்பாங்க”.,  என்று சொன்னாள்.

அவளும் சிரித்தபடி தலையாட்டினாள்., கண்கள் கலங்கி போய் தான் இருந்தது., கிளம்பி மீண்டும் அமர்ந்து விட பக்கத்து வீட்டு பெரியம்மாவும் அமர்ந்தபடி..,

“என்னம்மா என்ன விஷயம்” என்று கேட்டார்.

“நான் அவங்க கிட்ட பேசலாமா” என்று சந்தோஷ் அம்மாவிடம் கேட்டாள்.,

மீனாவிடம் சொல்லி பெரியம்மா சந்தோஷை அழைத்து வர சொன்னார்.

சந்தோஷம்  வந்த உடன்.., சந்தோஷ் சாருவை பார்த்தான்., சற்று நேரம் அவ்விடமே  அமைதியாக இருக்க., “என்ன விஷயம்., யாரு”.,  என்று கேட்டான்.

அப்போதுதான் சந்தோஷ் அம்மா சொன்னாள்., எதிர் வீட்ல இருக்குறவங்க.,   நான் சொன்னேன்ல.,  அந்த பொண்ணு வேலை விஷயமா  வந்து இருக்கு  மாப்பிள பாரின் ல இருக்காங்க னு.,   அப்படின்னு ஒரு நாள் பேச்சு வாக்குல உன்ட்ட சொன்னேன் இல்ல”.,  என்று சொன்னார்.,

அவனும் “அம்மா என்ன விஷயம்., ஏதோ முக்கியமான விஷயமா  பேசணும்னு சொன்னீங்களா”.,  என்றபடி அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவனிடம் சற்றுநேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,

அவனில் இருந்து பார்வையை விலக்கி சுவரில் இருந்த போட்டோவை பார்த்தபடி “மித்ரன்க்கும்., உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா.,   ஏதனால நீங்க ரெண்டுபேரும் பிரிஞ்சிருக்கீங்க”.., என்று கேட்டாள்.

அவன் ஒரு நிமிடம் அவளை அதிர்வுடன் பார்த்தாலும் “உங்களுக்கு யார் சொன்னா.,   இல்லையே எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் கிடையாது..,  நாங்க இப்ப வரைக்கும் பிரண்ட்ஸ் தான்., உங்களுக்கு எப்படி மித்ரன் தெரியும்”., என்று அவன் வேகமாக கேள்வி கேட்டான்.,

“இப்ப வரைக்கும் இரண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆ இருக்கீங்களா., பேசுறீங்களா”  என்று கேட்டாள்.

“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத கேள்வி.., உங்களுக்கு எதுக்குங்க நான் பதில் சொல்லணும்”என்று சற்று கோபமாகவே கேட்டது போலிருந்தது.,

பெரியம்மாவும் ‘அய்யோ இதைப் பற்றித்தான் கேட்க போகிறாள் என்றால் அதைப் பற்றி பேச விட்டுருக்க மாட்டேனே’ என்று பதறினார்.,

சற்று நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவள்.,  “இப்ப வரைக்கும் உங்களுக்குள்ள பிரண்ட்ஷிப் இருக்கு” என்றாள் கேள்வியாக.

“ஆமா நாங்க ரெண்டு பேரும் இப்ப வரைக்கும் பிரண்டு தான்”., என்றான்.

“இப்ப வரைக்கும் பிரண்டு தானா.,  அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு வரலை”.,  என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் அவன்  அவளை அதிர்வோடு பார்த்தப்படி இருக்க., “நீங்க கல்யாணத்துக்கு வரலை., அப்படினாலும்,  இவ்வளவு க்ளோஸ் னா., கண்டிப்பா மேரேஜ் ஆனவங்க உங்களை பார்க்க வந்திருப்பாங்க., இங்கேயும் வரலை..,  அப்போ நீங்க எங்க இருக்கீங்க ன்னு ஒன்னு மித்ரனுக்கு தெரியாமல் இருக்கணும்..,

ஆனா  அவங்க அதே இடத்தில் தான் இருக்கிறாங்க., உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்.., என்ன பிரச்சனை எதனால் நீங்களும் மித்ரன் பிரிந்து இருக்கீங்க அதை சொல்லுங்க” என்றாள் அழுத்தமாக.

இப்பொழுது கண்கலங்க முறைத்த படி பார்த்திருந்த  சந்தோஷ்., “நீ யார் உனக்கு எதுக்கு நான் இதெல்லாம் சொல்லணும்”., என்று அவன் கோபமாக கேட்டான்.,

தன் கழுத்தில் இருந்த தாலி சரடை எடுத்து காட்டவும்.., ஒரு நிமிடம் அவன் அவளை வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தான்.,

“இப்ப சொல்லுவீங்களா”., என்று கேட்டாள்.

கண்கலங்கிய படி ” உங்க ரெண்டு பேருக்கும் அதுக்குள்ள என்ன பிரச்சினை” என்று அவன் கேள்வி கேட்கத் தொடங்கி இருந்தான்.,

“எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்ல., உங்களுக்குள்ள என்ன பிரச்சனை”., என்று இவள் அவனை கேட்டாள்.

“மாத்தி மாத்தி கேள்வி கேட்டால் பதில் வராது எனக்கு உண்மை சொல்லுங்க” என்று அவனிடம் பிடிவாதமாக நின்றாள்.

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

சந்தோஷின் அம்மாவோ கண்கலங்க  சாருவின் அருகில் வந்தவர்., அவள் தலையை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்., அவள் தலையை தடவிக் கொடுத்து நெற்றியில் முத்தம் வைத்தவர்., “முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா என்கிட்ட” என்று கண்கலங்கி கேட்டுக்கொண்டிருந்தார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷுக்கு கண் கலங்கி கண்ணீர் வெளியே வர., அதை மறைத்தபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன்.,

“ஃபாரின் போய் இருக்கானு சொல்றாங்க., என்ன விஷயம்”., என்று கேட்டான்.,

அவளோ  “நான் சொல்றது இருக்கட்டும்., நீங்க இப்ப எனக்கு சொல்லியே ஆகணும்” என்று பிடிவாதமாக நிற்க…

“உன் பெயர் என்ன” என்று மகிழ்வோடு தான் கேட்டான்.,

“நீங்க எப்படி மி., மீ   னு  பொண்ணு பார்த்தீங்களா., அதே மாதிரி அவரும்  ச., சா  பொண்ணு தேடி இருக்காரு”.., என்று சிரித்தபடி சொன்னாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “எப்படி புரிஞ்சது உனக்கு” என்று கேட்டான்.,

போட்டோ பார்த்த உடனே தோணுச்சு ரெண்டு பேரும் குளோஸ் பிரெண்ட் ஆ இருக்கணும்னு., அவர் இந்த அளவுக்கு யார் கூடவும் க்ளோசா நான் யாரையும்  பார்த்தது இல்ல.,  இப்பவும் அங்க நாலு பேர் இருக்காங்க.,  பேசுவாங்க.., ஆனா இவ்வளவு க்ளோசா யார்கிட்டயும் அவர் தோளில் கைபோட்டு இந்த அளவுக்கு நெருக்கமாக.., முகத்தில் எந்த அளவுக்கு ஒரு சந்தோஷத்தையும்., சிரிப்பையும்  நான் பார்த்தது இல்ல..,  கண்டிப்பா நீங்க ரொம்ப க்ளோஸா இருக்கும்னு தோணுச்சு.., அதான் கேட்டேன்”.., என்றாள்.

Advertisement