Advertisement

எதிர்வீட்டு பெரிய “நாங்கல்லாம் செய்ய மாட்டோமா.., நீதான் செய்யணுமா” என்று கேட்டார்.

சித்து “நா மட்டும் செய்யலை., எங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்யுறோம்.,  அவ ஹஸ்பன்ட் பக்கத்துல இருந்திருந்தால் இந்த வளைகாப்பு பங்க்ஷன் எவ்வளவு கிராண்டா இருக்குமோ.., அவ்வளவு கிராண்டா வைக்கணும்., அப்பார்ட்மெண்ட் ல எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்க ஆன்ட்டி.,  கண்டிப்பா கூப்பிடுங்க.,  கூட ஒர்க் பண்ற பிரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லணும்.,   இங்கு உள்ள ஒரு பிரண்டையும் கூப்பிட்டு நான் சொல்லிட்டேன்., மத்தது எல்லாம் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க”.,  என்று சொன்னாள்.

இவளுடைய முகூர்த்தப் புடவை அவளது மாமியார் வீட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டவள்., சரி நம்ம புது புடவை வாங்கிகலாம் என்று சொன்னாள்.

பெரியவர்கள் “நாங்க வாங்குறோம்”.,  என்று  சொல்லிக் கொண்டிருந்தனர்.,

இங்குள்ள முறைப்படி வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி., புடவை வாங்குவது., வளையல் வாங்குவது என அவர்களுக்குள் யார் யார் என்னென்ன வேலையை செய்யவேண்டும் என்று பிரித்துக் கொண்டார்கள்.,

அவள் மனதில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர்.,

இப்போதெல்லாம் அதிகமாக வாய் திறந்து எதுவும் கூறுவது இல்லை என்றாலும்., சில நேரங்களில் அவள் கண்கள் காட்டிக் கொடுப்பதை கண்டுகொள்ள முடிந்தது..,

தன்னை மற்றவர்கள் முன்னிலையில் மாற்றிக் கொள்ளும் அவளை என்னவென்று சொல்வது., இந்த முறை ஏற்கனவே மருத்துவ பரிசோதனையில் பிரஷர் சற்று அதிகமாக இருப்பதாகவே மருத்துவர் சொல்லியிருந்தார்.,

உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லியிருப்பதால்.,  பக்கத்து வீட்டு பெரியம்மா இனி தானே உணவு முறைகளை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.,

“அதிகமான எண்ணெய் உணவுகளைகொடுக்கிறதே இல்லம்மா.,  அசைவமும்., ரொம்ப அதிகமா சாப்பிடமாட்டா.., ஆனாலும் பிரஷர் கூடிருச்சே”என்றார்.

எதிர்வீட்டு பெரியம்மா தான் “இல்லை இல்லை.,  இனிமேல் கொஞ்சம் நடக்கணும், ஏழாவது மாசம் பொறந்திருச்சு இல்லை” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.,

ஏழு மாதம் பிறந்து இதோ 4 நாட்கள் ஆகியிருக்க., இன்னும் ஒரு பதினைந்து நாள் கழித்து வளைகாப்பு என்று முடிவு செய்திருந்தனர். ஏழாம் மாதம் முடியப் போகும் நேரம் வளைகாப்பு வைத்து.., அதன் பின்பு இவ்வளவு வேலை முடிந்த உடன்  இவளை அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.சித்து.

அப்போது பெரியம்மா இருவரும்தான் “அதெல்லாம் கிடையாது டெலிவரி நாங்க பார்க்க மாட்டோமா.,  நீ ஏம்மா இப்படி சொல்ற”., என்றனர்.

அது போல அலுவலகத்திலும்.,  ஏற்கனவே சொல்லி இருந்தாள்., வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போல வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி இருந்தனர்.,  எல்லாம் அவளுக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்க., அவளோ அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் இதெல்லாம் எதுக்கு வேண்டாம் என்று சொன்னாலும் அவள் மனம் மட்டும் ஏங்கியது.,

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அவள் உணரும் போதெல்லாம்.., அவள் மனம் மித்ரனைத் தேடியது., அவளைப் பொருத்தவரை மித்ரன் ஆசைப்பட்டது.,  ‘அவனுக்கு குழந்தை வேண்டும்., முதல் முதலில் அவன் கையில் ஏந்த வேண்டும்’ என்று அவன் பேசிய சில விஷயங்கள் அவளுக்கு நினைவுக்கு வந்து சென்றது.,

திருமணம் முடிந்த புதிதில் ஒரு முறை குழந்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான்., அவளிடம் சொல்லி இருந்தான் “எனக்கு பேபி வேணும்., குழந்தை பொறக்குற அந்த சமயம் நான் உன்கூட தான் இருப்பேன்.,  குழந்தையை நான் தான் கைல வாங்குவேன்., எந்த சூழ்நிலையிலும் அந்த சான்ஸ் மிஸ் பண்ணக்கூடாது..,  என் குழந்தை முதன் முதலில் என் கையில வாங்கினேன் அப்படிங்கற சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம்.,  அந்த தருணத்தை  நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னான்.

அவனிடம் சிரித்தபடி “கண்டிப்பா நீங்க தான் வாங்குவீங்க” என்று இவள் சொல்லி இருக்க அதையே இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தாள்.,

இவளது டெலிவரி நேரம் தான் அவளுடைய அவனுடைய படிப்பு முடிந்து  ட்ரெய்னிங் போய்க் கொண்டிருக்கும் நேரமாக இருக்கும்., என்பதில் அவளுக்கு சற்று வருத்தம் தான்., இப்போது அவர்கள் பேசக்கூடாது என்று சொல்லியிருப்பதும் வருத்தம் தான்.,

‘சில சமயம் பேசாமல் அலைபேசியில் அழைத்து சொல்லி விடுவோம்., அல்லது ஒரு மெசேஜ் ஆவது போட்டு விடுவோம்’.,  என்றெல்லாம் தோன்ற தொடங்கி இருந்தது.

ஏனெனில் இந்தியாவில் உபயோகித்த அந்த எண்ணையும் வாட்ஸ்அப் விற்காக வைத்துக் கொண்டு தான் இருக்கிறான்.,

வெளிநாட்டிற்கு சென்று வேறு எண் உபயோகித்தாலும்.,  இந்த எண்ணும் அவனிடம் இருப்பதை அவள் கண்டு கொண்டு தான் இருந்தாள்., அப்படி நம்பர் கிடைக்கவில்லை என்றாலும் அவன் நண்பர்கள் யாருக்காவது அழைத்து நம்பர் வாங்கி விடுவோமா.,  என்று கூட தோன்ற  தொடங்கியிருந்தது.., ஏனெனில் இப்பொழுதெல்லாம் அவன் ஞாபகம் அதிகமாக வரும் சமயங்களில் தான்.,  இவளுக்கு பிரஷர் ஏறுகிறது என்பது இவளுக்கு தெரியும்..,

இந்த முறை பிரஷர் ஏறியதற்கு காரணமும் அவள் அறிந்தது தான்.,  ஸ்கேன் செய்யும் போது அவன் அருகில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று உணரத் தொடங்கி இருந்தாள்., கண்டிப்பாக என்ன குழந்தை என்று நம்மிடம் சொல்ல மாட்டார்கள் என்பது தெரியும்.,  ஆனால் அவன் இருந்தால் கண்டிப்பாக தெரிந்து இருப்பானே என்றும் அவனை தேடியது.,

மனம் அதிகமாக   அவனுடைய அருகாமை தேடினாலும்., குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அவன் உணர வேண்டும்.,  அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் குழந்தையை அவன் கையில் வாங்க வேண்டும்., என்பதில் அதிக ஆர்வம் உடன் இருந்தாள்.,  அதனால் தான் இம்முறை அவளுக்கு பிரஷர் கூடியிருப்பது..,

இங்கு வளைகாப்பு  ஏற்பாடு பெரியவர்கள் மூலம்  செய்து கொண்டு சித்து மறுநாளே பெங்களூர் கிளம்பிவிட்டாள்.,  மீண்டும் பெரியவர்கள் துணையோடு அவள் வேலை மற்றும் வீடு எனப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அப்பார்ட்மெண்டில் பார்க்கில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு பழைய நினைவுகளில் இருந்தவள்., பெரியவர்கள் இருவரும் போவமா என்று கேட்டப் படி கிளம்பினர்.,

போலாமா என்று சொல்லி  எதிர்வீட்டுப் பெரியம்மாவின் பேரன் வர “ஹாய் குட்டி வாங்க போலாம்” என்று சொல்லி அழைத்தாள்.

அவனது பெயரை எப்போது கேட்டாலும் அவன் சொல்வது.,  “அம்மா ராஜா கூப்பிடுவாங்க., பாட்டியும் ராஜா தான் கூப்பிடுவாங்க.,  அப்பா மட்டும் தான் வேற பேர் சொல்லி கூப்பிடுவாங்க” என்று அவன் சொன்னதால்  அனைவரும் அவனை ராஜா என்றே அழைத்தனர்.,

ஆனால் அவனுடைய பெயர் என்று என்ன என்று அவள் அறியவில்லை.,  “அது என்ன எல்லாரும் ராஜா னு கூப்பிடுறாங்க., உன் பேரு ராஜா தானா”.,என்று கேட்டாள்.

“அது எங்க அப்பா மட்டும் தான் கூப்பிடுவாங்க.,  வேற யாரையும் அந்தப் பெயர் சொல்லி கூப்பிட விட மாட்டாங்க” என்று சிறுகுழந்தை அதற்குரிய செய்கையோடு சொல்லிக்கொண்டிருந்தது.,

“செமவாய்”  என்று சொன்னாள்.

அவனது பாட்டியோ “ஆமா ம்மா ரெண்டு வயசு முடிஞ்சு 3 மாசம் தான் ஆகுது”  அந்த வாயை அடைக்க முடியலை., ஃபுல்லா அப்பா வந்தாச்சி னா.,  பேச்சு தான்., அவனும்  முழுக்க முழுக்க இவன பெரிய மனுஷன் மாதிரி நினைச்சு.., இவன் கூட எல்லாத்தையும் பேசப் போக..,  இவன் அவன் கூட சேர்ந்து நல்ல பேச ஆரம்பிச்சான்.,  அதனால தான் இந்த வாய் அடிக்கிறான்” என்று சொல்லி சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

“உங்க பையன் பிஸினஸ் ஆ பண்ணுறாங்க.,   பார்த்ததே இல்லை இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு பெரியம்மாதான் “அந்த தம்பி  காலையில் வேலைக்கு போனா சாயந்திரம் தான் வருவான்.,பல சமயம் திருப்பி வர நைட் ஆகும்.,  அப்போ நீ பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை”.,  என்று சொன்னார்.

அப்போது தான்  எதிர்வீட்டு பெரியம்மா “நீ எங்க வீட்டுக்கு வந்ததே இல்ல இல்ல வா”.,  என்று அழத்தார்.

“ஐயோ இல்லமா வேண்டாம்.,  இன்னொரு நாள் வரேன் உங்க வீட்டுக்கு.,  போயிட்டு வேலைய பார்க்க வேண்டியது தான்” என்று சொன்னாள்.,

“ஏன் இன்னும் ஆபீஸ் வேலை வச்சிருக்கியா., அது தான் இவ்வளவு லேட்டா வந்திருக்க ஆபீஸ் வேலைய முடிச்சிட்டு தானே வந்து இருப்ப”., என்று கேட்டார்.

“ஆபீஸ் வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு மா., கொஞ்ச நேரம் நடக்கணுமா”.,என்றாள்.

“நடப்ப., நடப்ப., எங்களுக்கு தெரியாதா.,  நீ நடக்கிறதே கிடையாது அதுக்கு தான் இன்னைக்கு உன்னை மாடிப்படி ஏற விட்டிருக்கோம்”., என்று சொல்லி குழந்தையோடு படி ஏறி வந்தனர்.

அதிகமாக ஏறவிடாமல் சிரித்தபடி ஒரு மாடி மட்டும் ஏற விட்டு அதன் பிறகு இரண்டு மாடி லிப்ட் ல் வந்து மூன்றாவது மாடியில் இறங்கிக் கொண்டனர்.,

அப்போது பக்கத்து வீட்டு பெரியம்மாவும்.,  எதிர்வீட்டு பெரியம்மாவும்.,  பேச்சுவழக்கில் எதிர்வீட்டு பெரியம்மா வீட்டிற்கு சென்றனர்.

இவள் வீட்டிற்கு போக போனவளை எதிர்வீட்டு பெரியம்மா கட்டாயப் படுத்தி “வீட்டுக்கு வந்துட்டு தான் போகணும்” என்று சொல்லி அவளை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்தார்.,

“இருக்கட்டுமே பேக் எல்லாம் வச்சுட்டு வரேன்” என்று சொன்னாள்.

“அதெல்லாம் வச்சிக்கலாம் வா” என்று சொல்லி அவள் லேப்டாப் பேக்கோடு., அவர்கள் வீட்டிற்குள் நுழைய முதலில் பெரியவர்களும் அவர்களது பேரனும்  உள்ளே சென்ற பிறகு இவள் நிதானமாக செருப்பை கழட்டி பேக்கோடு உள்ளே நுழைய போகும் நேரம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தார்.

அவர் கையில் பேக் எல்லாம் கொடுத்து “வீட்டில் வைத்து விடுங்கள்” என்று சொல்லி விட்டு., செல்போனை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நிதானமாக நுழைந்தாள்.

அங்கு ஹாலில் பெரிய சைஸில் மித்ரனின் போட்டோவை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது., சற்றுநேரம் அப் புகைப்படத்தில் தெரிந்த மித்ரன் ஐ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.,

அது கண்டிப்பாக இப்போது எடுத்தது அல்ல கல்லூரி காலத்தில் எடுத்ததாக இருக்கக்கூடும்., சற்று சிறிய வயதாகவே தெரிந்தான் மித்ரன்.,  அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்கலங்க தொடங்கிய பிறகு தான்.,

‘ஐயோ இன்னொரு வீட்டில் நின்று கொண்டு கண்கலங்கி இருக்கிறோம்’ என்று அவசரமாக கண்ணை சரி பண்ணிக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.  அவளுக்கு கண்ணெல்லாம் ஹாலில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்திலேயே இருந்தது.,

அப்போது தான் அவரிடம் “இந்த போட்டோ” என்று மெதுவாக கேட்டாள்.,

ராஜாவோ குதித்துக் கொண்டு ஓடி வந்தவன்., “இது அப்பா., இது மாமா”., என்று சொல்லி புகைப்படத்தில் இருந்த இருவரையும் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.,

இருவரும் ஒருவரை ஒருவர் தோளோடு சேர்த்து அணைத்த படி அத்தனை நெருக்கமான போட்டோ அது…..

புரட்டிப்போட்ட பகடைகள் ஒற்றை நொடியில் தூக்கிவிடும்., முதல் முதலாய் ஏணியில் காலெடுத்து வைக்கும் போது ஆடுபவரின் மனதில் தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை“.,

Advertisement