Advertisement

11

இடைவெளிகள் சற்று அதிகரிக்கிறது 
  கை தொடும் தூரம் தாண்டி 
  கண்கள் துளாவும் தூரத்தில் 
  நீண்டு கொண்டிருக்கிறது 
  நம் பிரிவு.., 

இது நிரந்தரம் ஆகிவிடுமோ

என்று தூக்கத்தை தொலைத்து விட்டு 
இருளிலும் துலாவி 
கொண்டிருக்கிறேன் 
உன் நினைவுகளோடு 
நம் தொலைந்த நிஜங்களை….

“ஹலோ டாக்டர் சார்.,  என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க”., என்றபடி அவன் புது தோழி அவனுக்கு எதிராக அமர்ந்தாள்.,

அவன் அவள் சொல்வதை கவனித்தாலும்., அவனது யோசனை வேறெங்கோ இருப்பதை கண்டவள்.,  “ஹலோ டாக்டர் சார்” என்று அவன் டேபிளில் லேசாக தட்டி விட இவன் நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தான்.

அவனிடம் பதில் இல்லை., சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,

“கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.,   உங்க பர்சனல் தான் இது.,  நான் தலையிட கூடாது., ஆனால்  ஒரு சின்ன டவுட் உங்களுடைய யோசனைக்கு பின்னாடி இது தான் காரணமாக இருக்குமோ., அப்படி ங்கிற சந்தேகத்தில் கேக்குறேன்., நீங்க உங்க வொய்ப் கிட்ட பேசி டீங்களா” என்று  கேட்டாள்.

அவன்  இல்லை என்று தலையசைக்க “நான் ஒன்னு சொன்னா கேட்பிங்களா.,  தப்பா எடுத்துக்காதீங்க., முதல்ல பேசிருங்க.,  பேசினால் உங்களுக்கு இந்த அளவுக்கு டென்ஷன் இருக்காது., ரொம்ப ப்ரீயா ஃபீல் பண்ணுவீங்க.., அவங்க கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு அதுக்கப்புறம் உங்களோட இந்த  மனநிலை சமநிலைக்கு வர வாய்ப்பு இருக்கு பேசுங்க”., என்றாள்.

“அதுமட்டுமில்லாமல்  அவங்களோட சிட்டுவேஷன் இப்ப என்னன்னு தெரியாது.,  அவங்களும் உங்க கிட்ட பேசுறதுக்கு யோசிச்சிட்டு இருக்கலாம்., நம்ம பேசினா எதுவும் நீங்க தப்பா எடுத்துப்பாங்களோ  அப்படிங்கற பயத்தில் கூட அவங்க  பேசாம இருக்கலாம்.., எனக்கு தெரிஞ்சு நீங்க அவங்க கூட பேசி இருங்க.., அது இன்னும் ரொம்ப நல்ல பீல் இருக்கும்” என்று சொன்னாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தபடி.,  “ஒவ்வொரு தடவை குழப்பத்தில் இருக்கும் போதும்., கரெக்டா வந்து சொல்லி இருக்கீங்க..,  நான் யோசிச்சிட்டே தான் இருந்தேன்., கண்டிப்பா  இந்த விஷயத்தை எப்படி  ஹேண்டில் பண்ண னு யோசிச்சிட்டு இருந்தேன்., நீங்க சொல்லிட்டீங்க” என்று சொன்னான்.

அவளும் சிரித்தபடி அவனிடம் சொன்னாள்., “ஒன்னு சொல்லட்டுமா.,  இப்போ இந்த பிரச்சனை வந்தது., கண்டிப்பா உங்க வீட்டு பக்கத்துல இருந்து தான் வந்திருக்கிறது.,   உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியாது., இந்த பிரிவுக்கு காரணம் உங்க வீட்டு சைடா தான் இருக்கணும்.., பொண்ணுங்களோட மென்டாலிட்டி எப்படி தெரியுமா.,  தன் வீட்டு சைடில் இருந்து பிரச்சனை வந்துடிச்சின்னா..,   எல்லாரையும் உதறிட்டு தன் ஹஸ்பண்ட் பின்னாடி போகறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கு.,  ஆனா ஹஸ்பன்ட் வீட்ல பிரச்சினை வரும் போது.,  தன்னோட கவுரவத்தையும் மரியாதையை இழந்துட்டு அப்படி போய் நிக்கனுமா அப்படிங்கிற மென்டாலிட்டி வந்துரும்” என்று சொன்னாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்க்கவும் “என்னை இப்ப கேட்பீங்க உன் சைடில்  பிரச்சனை இருந்தாலும்., நீ  ஹஸ்பண்ட் பின்னாடி  எதுக்கு போகலை னு தானே.,  எங்க வீட்ல உள்ளவங்க பேசின வார்த்தைகள் சரி கிடையாது அதுல தான் அவருக்கு இப்போ கோபம்., அதான் சொன்னேன்ல நான் சரி பண்ணி விடுவேன் னு.,  நீங்க இப்போ உங்க வைஃப் பேசுங்க” என்றாள்.,

“பேசுறேன்” என்றான்.

“என்ன நல்ல நேரம் பார்க்க போறீங்களா”., என்று கேட்டாள்.,

“இல்ல அவளோட டைம்  செட் ஆகுமா னு பார்த்து கூப்பிடுறேன்., ஒருவேளை ஆபீஸ்ல இருக்கலாம்., இல்ல ஏதாவது ஒரு கால்ல இருக்கலாம்., ஆபீஸ் காலில் இருந்தா அப்படின்னா போன் அட்டென்ட் பண்ண மாட்டா., எனக்கு தெரியும்., சோ
அவளோட நைட் டைம்ல கால் பண்ணுனா.,  கண்டிப்பா அவளுக்கும் ப்ரீயா இருக்கும்., பேசவும் முடியும்., அதுமட்டுமில்லாம நானும் இன்னைக்கு ஈவினிங் வொர்க் கு லீவு போடுறேன்., சோ  இன்னைக்கு ஃப்ரீ தான்.,  கண்டிப்பா பேசுவேன்”., என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எப்படியோ பேசுறீங்க.., நம்பலாம் இல்ல.,  பேசிட்டு எனக்கு எப்ப சொல்லுவீங்க” என்று கேட்டாள்.

“கண்டிப்பா சொல்லுவேன் ங்க.,  ஏன்னா நீங்க தான் காரணம்”., என்று சொன்னாள்.,

அவளோ “பிரச்சனை எப்பவுமே இருக்க தாங்க  செய்யும்., லைஃப்ல ஒவ்வொருத்தர் க்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.,   பிரச்சனை இல்லாத வீடும் கிடையாது., பிரச்சினை இல்லாத குடும்பமும் கிடையாது.,  எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு”… என்றாள்.

தனக்கு அறிவுரை வழங்கவே  வந்தவள் போலவே அவனுக்கு தோன்ற தொடங்கி இருந்தது.., ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவன் குழப்பத்தில் இருக்கும் போதெல்லாம் அவள் சொல்லும் தீர்வுகள் அவனுக்கு சரியாக அமைவதாக தோன்ற தொடங்கியிருந்தது.,

சிரித்தபடி எப்பொழுதும் போல போட்டோ பார்த்துக் கொண்டிருக்க., அவள் தான், “நான் அவங்களை பார்க்கலாமா” என்று கேட்டாள்.

அவன் சாருவின் புகைப்படத்தை அவளிடம் காட்ட தொடங்கினான்., சற்று நேரம் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவள்.,

“உங்களை அவங்களுக்கு  ரொம்ப பிடிக்குமா”.,  என்று கேட்டாள்.

அவன் நிமிர்ந்து பார்த்து “எப்படி சொல்றீங்க” என்று கேட்டான்.

அவளோ “பார்த்தாலே தெரியுது, அவங்க உங்களை பார்க்கிற பார்வையில் அவ்வளவு லவ் தெரியுது., சோ கண்டிப்பா உங்கள ரொம்ப ரொம்ப பிடிச்சி தான் கல்யாணம் பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு தோணுது.., அதனால தான் நீங்க சொல்ற அத்தனையும் கேட்டுட்டு..,  அவ்ளோ அமைதியா இருக்கிறாங்க”.,  என்று சொன்னாள்.

மறுபடியும் அந்த புகைப்படத்தை தான் அவனும் பார்த்தான்.,  அது அவர்கள் இருவரும் ஹனிமூன் சென்றிருக்கும் போது எடுத்த படம்., அவன் செல்பி எடுப்பதற்காக அவளை தன்னோடு சேர்த்து பிடித்து நிறுத்தி இருக்க.., அவளோ அவன் முகத்தை பார்த்த படி சிரித்த முகமாக இருந்தாள்.,  அந்தக் கண்ணில் தெரிந்தது தான் காதல் என்றால்.., காதலிப்பதை விட காதலிக்கப்படுவது,  எவ்வளவு சுகம் என்பதை அவளோடு வாழ்ந்த நிமிடங்களில் இருந்ததை இப்போது உணரத் தொடங்கினான்….

அவளோடு இருந்த ஒவ்வொரு நிமிடமும் அவன் நிம்மதியை மட்டுமே உணர்ந்திருக்கிறான்.,  எந்த சூழ்நிலையிலும் அவள் அவனிடம் இதுவரை எதுவும் கேட்டதும் கிடையாது., ஆர்டர் போடுவது போல பேசியதும் கிடையாது.,

அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் தான் அவள் எப்பொழுதும் இருப்பாள்.., இப்போது தான் புரிந்தது அவனுக்கு.., அவளுடைய முகபாவமும் எப்பொழுதும் அவனைப் பார்க்கும் பொழுது சிரிக்கும் கண்களோடு.,  அவள் தேடியது  மட்டும் தான்., அவளை தவிக்க விட்ட தன்னைப்பற்றி அவனுக்கு சற்று கோபம் கூட வந்தது…

அன்று அலுவலகத்தில் சாருவிற்க்கு சற்று அதிகப்படியான வேலை.,  அங்கு சிலர் அவளை தோழமையுடன் நெருங்க தொடங்கியிருந்த சமயம்.,  அவள எழப்போகவும் அருகிலிருந்த கேரளத்து தோழியோ.,

“சாரு  முடியலையா”., என்று அவள் இடுப்பை பிடித்த படி ஏழும் போதே கண்டு கேட்டாள்.,

” இல்ல இல்ல., ஜஸ்ட் ஒரு வாக்  மாதிரி போயிட்டு வந்து உட்கார்ந்தா நல்லாயிருக்குமே னு தான்.,  கால் வலிக்கிற மாதிரி இருக்கு”., என்று சொன்னாள்.

அவளும் சிரித்தபடி “நீ போயிட்டு ரெப்பிரஷ் ஆகி வா.., நான் உனக்கு பால் கலந்து எடுத்துட்டு வரேன்”.,  என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு காபி டீ  பால் என வைத்திருக்கும் இடத்திற்கு சென்றாள்.

இவளும் அவள் சொன்னது போல ரெப்பிரஷ் ஆகி வர., அவளும் சூடான பாலோடு இடத்திற்கு வந்தாள்.

நிதானமாக பாலை அருந்தியவளிடம் “உங்களுக்கு வளை காப்பாமே., உங்க பிரண்ட்., அன்னைக்கு வந்தவங்க எங்கிட்ட  போன்ல சொன்னாங்க..,  நாங்க எல்லாரும் வந்து விடுவோம்” என்று சொன்னாள்.

“கண்டிப்பா”., என்று சிரித்த முகமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.,

அதையே நினைத்தபடி அன்று மாலை வீட்டிற்கு வர., பக்கத்துவீட்டு பெரியம்மா எதிர்த்த வீட்டு பெரியம்மா என அனைவரும் அப்பார்ட்மெண்டில் கீழே உள்ள பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இவளும் அவர்களோடு போய் சற்று ஆசுவாசமாக அமர்ந்து விட்டாள்., அவர்கள் இருவரும் மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்க.., இவள் நிதானமாக அங்கு விளையாடும் குழந்தைகளை பார்வையிட்ட படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்து வந்துவிட்டு இப்பொழுதுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றிருக்கிறாள்., இவளுடைய பரிசோதனைக்காக வந்தது.,

இந்த முறை ஸ்கேன் செய்து பார்க்கும் போது சித்துவும் கூட இருந்தாள்., பக்கத்து வீட்டு பெரியம்மா உடன் சென்றிருந்தனர்.,  வீட்டிற்கு வந்தவுடன் இவள் சற்று சோர்வாக இருக்கிறது என்று தூங்கி விட சித்து பெரியம்மாவிடமும்., எதிர்வீட்டு பெரியம்மாவிடமும்., வளைகாப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

Advertisement