Advertisement

சித்து அவர்களிடம்தான் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.,  “அவளிடம் ஏதாவது சின்ன மாற்றம் இருந்தாலும் உடல் நிலையிலோ.,  மன நிலையிலோ.,  அவளிடம் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் எனக்கு சொல்லி விடுங்கள்.,  உங்களை நம்பித்தான் விட்டு விட்டு செல்கிறேன்”.,  என்று சொல்லி இருந்ததால் லேசாக என்றாலும் உடனே சொல்லிவிடுவார்.,

சித்துவும் உடனே செய்து போன் செய்து “ஏன் ஒரு மாதிரி இருக்க., எதையும் நினைக்கிறாயோ.,  மனசை போட்டு குழப்பிக்காத” என்று சொல்லி இவளிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல் புலம்பத் தொடங்கி விடுவாள்.  இல்லையெனில் அலுவலகத்தில் விடுப்பு அல்லது வொர்க் பஃரம்  ஹோமோ வாங்கி கொண்டு.,  இவளைப் பார்க்க கொச்சினுக்கு வந்து இறங்கி விடுவாள்.

தன்னால் தன் தோழிக்கு அலைச்சல் என்ற ஒரே காரணத்திற்காக எதையும் வெளியே காட்டி கொள்ள மாட்டாள்.,   பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பெற்றவர்களை விட அருமையாக பார்த்துக்கொண்டனர்.,  அவர்களது மகனும் திருமணமாகி மனைவியோடு வெளிநாட்டில் இருக்க.,  மகளும் கணவர் குழந்தைகளோடு வெளிநாட்டில் இருக்க..,  பெரியவர்கள் இருவரும் தனியாக இருந்ததால்.., அவளை அவர்கள் பிள்ளை போல பார்த்துக் கொண்டனர்.,

நாட்கள் ஓட தொடங்கியிருந்தது.,  கொச்சின் வந்து இதோ நான்கு மாதம் கடந்து விட்ட நிலையில் அவளுக்கு வயிறு மேடிட தொடங்கியிருந்தது., அவள் குழந்தை வயிற்றில் இப்போது 6 மாதமாக இருந்தது.,

அதன் அசைவுகளை கண்டு ரசிக்க தொடங்கியிருந்தாள்.,  சிறு சிறு அசைவுகள் தான் தெரிய தொடங்கியிருந்தது.,

அப்போதுதான் ஒருநாள் சித்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.,  “மெதுவாக மீன் துள்ளுவது போல இருக்கிறது.,  அப்படித்தான் இருக்குமா”., என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

பக்கத்துவீட்டு பெரியம்மாவிடம் அவ்வப்போது சந்தேகங்களை கேட்பாள்.,  ஹாஸ்பிடல் செக்கப்புக்கு என்று கிளம்பும் நேரம் எப்படி என்றாலும் சித்து வந்துவிடுவாள். பக்கத்துவீட்டு பெரியம்மா எப்போதும் கூடவே செல்வார்.,

அதுமட்டுமல்லாமல் அங்கு அவர்கள் கேரள முறைப்படி அவளுக்கான பக்குவமான சாப்பாடு., மருந்து என்று கொடுக்க தொடங்கியிருந்தார்கள்.,

எதிர்வீட்டில் பெரியம்மாவும் அவரது மருமகளும் நன்றாக பேசினாலும்.,  அவரது மகன் இருக்கும் நேரங்களில் அவர்கள் இங்கு வருவது கிடையாது., என்பதால் அதிகமாகப் பேசிக் கொள்வது கிடையாது.,

அவர் மகன் இல்லாத நேரம் எப்படியும் வருவார்கள்., இவளைப் பார்ப்பார்கள் பேசுவார்கள்.,  நாட்கள் போய்க் கொண்டிருந்தது.,

அங்கு ஒரு நல்ல சொந்தத்தோடு இருப்பதை போல உணர்வை உணர தொடங்கியிருந்தாள்…

அங்கு மித்திரனின் வாழ்க்கை படிப்பு அதை தவிர மற்ற நேரங்களில் அவனுக்கு ஏற்பாடு செய்திருந்த வேலை மற்றபடி வெளியே சுற்றுவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.

மனம் முழுவதும் அவனுக்கும் சாருவை பற்றிய எண்ணங்களோடு அவ்வப்போது அவள்  அலைபேசி எண் அதையே தான் உபயோகிக்கிறாள் என்று தெரிந்தும் கூப்பிட முடியாத சூழ்நிலையிலும்.,  அவளது மனம் எந்த விதத்திலும் கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது.,

‘ஏன் இப்பொழுது போன் செய்தால் தெரியவா போகிறது அல்லது ஒரு மெசேஜ் செய்தால் கூட போதுமே.., என்று தோன்றினாலும் ஆனாலும் எதைப்பற்றியும் யோசிக்காமல் படிப்பு முடித்து விட்டு ஊருக்கு போய் இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும்’.., என்ற முடிவோடு தான் இருந்தான்.

அவனோடு அதே கோர்ஸ் ல் சேர்ந்திருந்த மலேசியாவை சேர்ந்த பெண் அவனிடம் தோழமையோடு.,  பழக தொடங்கியிருந்தாள்.

இவன் எப்பொழுதும் போல கேட்டால் பதில் மட்டுமே சொல்லும் அளவில் இருந்தான்.

அப்பொழுது ஒரு நாள். “ஏன் பேசுவதை அவாய்ட்  பண்றீங்க” என்று கேட்டாள்.

” பொதுவா நான் யார்கிட்டயும் பேச மாட்டேன் ங்க.,தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு நகல தொடங்கி இருந்தான்.

“ஏன் ஒதுங்கி போறீங்க.,  நீங்களும் இதே கோர்ஸ் க்கு வந்த டாக்டர் தானே., நீங்க மேரீட் ஆ”  என்று கேட்டாள்..,

திரும்பி பார்த்தவன் “ஆமா எதுக்கு கேக்குறீங்க” என்றான் முகம் எப்பொழுதும் போல கோபத்தை பூசிக் கொண்டு.

“ஜஸ்ட் கேட்டேன்., எல்லாம் கூட்டிட்டு முடிய போற நேரத்தில் அவங்க பாட்னர் அ வரவைப்பாங்க., உங்க வைஃப் வருவாங்களா”.,  என்றாள்.

“உங்களுக்கு என்ன வேலையோ.,  அதை மட்டும் பாருங்க”., என்று சொன்னான்.

மற்றவர்களில் இருந்து மாறுபட்டவனாக இருப்பது தெளிவாக தெரிந்தது., யாரிடமும் ஒட்டாமல்.,  அவனிடம் ஏதோ பிரச்சினை இருப்பதாக உணர்ந்தவள்., மெது மெதுவாக தான் தோழமை மட்டும் தான் காட்டுவேன் என்று அவனுக்கு சுட்டிக்காட்ட தொடங்கி இருந்தாள்.., அதன் பிறகு அவளிடம் லேசாக மட்டுமே பேசினான்.,

ஒரு முறை இவனது போனில் இருந்த போட்டோ வை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள்., “நானும் பார்க்கலாமா” என்று கேட்டாள்.

போட்டோவே வாங்கி பாத்தவள் பின் “என்ன விஷயம்., போட்டோவை பார்த்துட்டு இருக்குறீங்க”., என்று கேட்டாள்.

“ஒண்ணுமில்ல அவ பெங்களூரில் இருக்கா.., நான் இங்க இருக்கேன் அவ்வளவு தான்., இப்ப முடிச்சுட்டு போனதுக்கப்புறம் நேர்ல பார்த்துக்க போறேன்”.,  என்று சொன்னான்., இதை சொல்லும் போதே அவனறியாமல் அவன் கண்ணில் வந்து போன வலியை அவளால் அறிய முடிந்தது.

“இல்லயே அப்படி இருக்கிற மாதிரி இல்லை.,  ஏன் ஒரு போன் கூட பேசல.,  ரெண்டு பேருக்குள்ள ஏதும் பிரச்சனையா., பிரிஞ்சி இருக்கீங்களா”.,  என்று மேலே மேலே துளைத்து துளைத்து கேள்வி கேட்டாள்.

இவன் மறுபடியும் அவளிடம் கோபப்படும் போது., அவள்  ஒன்று மட்டும் தான் சொன்னாள்., “என்ன பிரச்சனை இருந்தாலும் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போயிருங்க..,  இல்லாட்டி ஃலைப்ப   மிஸ் பண்ணிருவோம்., அந்த வகையில் விட்டுக் கொடுத்து போகாம.,  நா என்னோட லைப்ல நிறைய மிஸ் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கேன்.., யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போனாலும் போதும்” என்று சொன்னாள்.,

அவனும் அவளை பார்த்து சிரித்தபடி “எங்களுக்குள்ள விட்டுக் கொடுக்கலை னு  யாரும் சொல்லலையே” என்று சொன்னாள்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.., “விட்டுக்கொடுத்து போறீங்க அப்படின்னா., ஏன் ரெண்டு பேரும் போன்ல கூட பேசியதில்லை”., என்று கேட்டாள்.

“அது ஒரு சேலஞ்ச்” என்று சொன்னவன்.,  “வேற ஒருத்தர்  பண்ணின சேலஞ்சுக்காக ரெண்டு பேரும் பேசாம இருக்கோம்”., என்றவன்., சிரித்தபடி நான் மேலோட்டமா சொல்லுறேன்., என்றான்.

இவன் ஏதோ மறைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்., அவனிடம் “நான் சொல்றேன் னு  நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..,  நீங்க ஏதோ விஷயம் மறைக்கிறீங்க னு தெரியுது., ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் தான் நான் சொல்லுவேன்., ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப் இடையில் மூன்றாவது மனுஷங்க யாரா இருந்தாலும் நடுவுல வரக்கூடாது.., அது யாரா இருந்தாலும் சரி.,  பெத்தவங்களா இருந்தா கூட.., உள்ளே வர விடக்கூடாது”., என்றாள்.

அவன் யோசனையோடு பார்த்தான்.,

“அவங்க மூன்றாவது மனுஷங்க தான்..,  கணவன்-மனைவிக்கிடையே ரெண்டு பேரோட பெத்தவங்களும் வேற யாரோ தான்.., அவங்க உள்ளே வந்தா.,  தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்லது  நினைக்கிறத  சொல்லி ஒருத்தருக்கு ஒருத்தர் பிரச்சினையை கிளப்பி விடுவாங்க.,

என் லைஃப்ல அப்படித்தான் நடந்துச்சு.., அதனால தான் சொல்றேன்.,  எந்த முடிவா இருந்தாலும் துணிச்சலான முடிவு எடுக்க கத்துக்கோங்க.., தைரியமா பேஸ் பண்ண கத்துக்கோங்க..,  உங்களை நம்பி சொந்த பந்தம்  எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவங்க  உங்களோட வைஃப்..,

அப்படி வந்த அவளுக்காக நீங்க என்ன விட்டீங்க., அப்படிங்கிறத  மட்டும் யோசிச்சு பாருங்க.., நீங்களும் சில முடிவுகளை தைரியமா எடுக்க கத்துக்கிட்டீங்க னா., உங்க லைஃப் ஸேப்.., டேக் கேர் மித்ரன்.,  ஒரு பிரண்டா சொல்லுறேன் அவ்வளவு தான்”.., என்று சொல்லிவிட்டு அமைதி காத்தாள்.

இவன் அவளிடம் “ஏன் என்ன ஆச்சு உங்க லைஃப்” என்று கேட்டான்.,

தனது அம்மாவால் நடந்த பிரச்சனைகளை அவள் கூறி.,  அதில் தன் கணவர் கோபப்பட்டு இருப்பதையும் சொன்னாள்.,

” இப்ப நீங்க போய் பேசிப் பார்க்க கூடாதா” என்றான்.

“இங்கே வர்றதுக்கு முன்பு பேசினேன்.,  இன்னும் கோபத்தில் தான் இருக்குறான்..,  நான் பாத்துக்குவேன்.,  நாங்க லவ் மேரேஜ் தான்., நான் இந்த ஸ்டடீஸ் முடிச்சு போயிட்டு சரி பண்ணிருவேன்., இப்பவும் மெஸேஜ் போட்டுட்டே தான் இருக்கேன்., நான் பாத்துக்குவேன்”.,  என்று சொல்லி தன் கணவனுடன் சேர்ந்து விடுவேன்.,  என்பதை உறுதியாகக் கூறினாள்.

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க., என்றான்.

” என்னால சமாதானப்படுத்த முடியும்.,   ஏன்னா எனக்கு என்னோட கணவன் தான் முக்கியம் அப்படின்னு..,  நான் நினைக்கும் போது அவருக்காக நான் எந்த அளவுக்குனாலும்   இறங்கி போகலாம்..,   அவருக்காக மட்டும் இறங்கி போகலாம்.,  ஆனால்  என்னோட மானம் மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன்.,

எனக்கு தெரியும்  வாழ்க்கை ல ஒருத்தருக்காக ஒருத்தர் சில இடங்களில் விட்டுக் கொடுக்கணும்., அதே நேரத்தில் உண்மையான அன்பு இருந்துச்சுன்னா.,  மறக்கவும் தெரியனும்.., மன்னிக்கவும் தெரியணும்., நாலு மாசம் ஸ்டடீஸ் முடிஞ்சிடுச்சு.., இன்னும் ரெண்டு மாச ஸ்டடீஸ்., ரெண்டு மாச ட்ரைனிங் முடிச்சிட்டு போய் நான் என்னுடைய லைஃபை ஸ்டாண்ட் பண்ணிப்பேன்” என்று சொன்னாள்.,

சிரித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்., “கண்டிப்பா நீங்க உங்க ஹஸ்பண்ட் கூட எங்க  ஊருக்கு வாங்க”.,  என்று சொல்லி அவளை வரவேற்றான்.,

“நீங்களும் போன உடனே  நல்ல முடிவு எடுங்கள்”., என்று சொன்னாள்.

இவன் சிரித்தபடி “நான் தான் என்ன பிரச்சினை னு  சொல்லலையே.,  நீங்க நல்ல முடிவு எடுக்க சொல்றீங்க” என்று கேட்டாள்.

“தெரியும் சார் ஒருத்தரை பார்த்தவுடனே பொண்ணுங்களுக்கு சைக்காலஜி தெரியும்..,  நீங்க சொல்றீங்க ஒருத்தங்க சேலஞ்ச் விட்டு இருக்காங்கன்னு.., கண்டிப்பா அந்த மூணாவது மனுஷங்க., ஒன்னு  உங்க வீட்டு ஆளா  இருக்கணும்.,  இல்ல அவங்க வீட்டு ஆள்களா  இருக்கணும்.., அதனால தான் இந்த சேலன்ஞ்., என்றாள்.

அவன் சிரித்தபடி செல்லை ஆன் செய்து பார்த்தப்படி இருந்தான்.

“இன்னொன்னு சொல்லட்டுமா., நீங்க அவங்க போட்டோ பாத்துட்டு இருக்கீங்க.,  இப்ப கண்டிப்பா உங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்கிறது தெரியுது.,  சண்டை இருந்தா போட்டோவை பார்க்கும் போது கோபம் வரும்.,  உங்க கண்ணுல கோபம் தெரியல., போட்டோவை பார்க்கும் போது காதல் தான் தெரியுது.,  என்றாள்

அவள் அப்படி  சொல்ல.., அவன் சிரிக்கவும்., “ஏன் சிரிக்கிறீங்க” என்றாள்.

“காதல் னு சொன்னதால சிரிச்சேன்..,  ஏன்னா.,  இது அரேஞ்ச் மேரேஜ்.,  எனக்கு அவளை அவ்வளவு புடிச்சிருந்துச்சு.,  ஓகே சொன்னேன்.,  அவளை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு பீல் பண்ணேன்.,  அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க., லவ் பண்றியா ன்னு.,  இல்ல னு  நான் சொன்னேன்..,  அதே மாதிரி நீங்க சொன்னதுக்கு அப்புறம் சிரிப்பு தான் வருது” என்று சொன்னான்.

“தனியா உக்காந்து யோசிச்சு பாருங்க சார்., ரொம்ப பிடிக்கிறது என்றால் என்ன.? காதல்னா என்னன்னு..,

எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது.,  எனக்கு மட்டும்தான் சொந்தம் அப்படினு உரிமை கொண்டாடுற அந்த மனசு வரும் போது அங்க தான் விருப்பம் ஆரம்பம் ஆகுது.,

அந்த அன்பு  தான்., நாம வைக்கிற ஆளை பொறுத்து மாறும்.,  எனக்கு முக்கியம் அவளோட அன்பு., அது எனக்கு மட்டும் தான் சொந்தம் அப்படின்னு நீங்க நினைச்சுட்டீங்க அப்படின்னா அந்த இடத்தில் காதல் வந்துருது” என்றாள்.

அவன் “அப்ப இதுக்கு பேரு காதலா” என்று கேட்டான்.,

அவள் சிரித்தபடி “டாக்டர் சார் விளையாடாதீங்க.,  நல்ல யோசிச்சு பாருங்க.,  வால்பேப்பர் ல வச்சி பார்த்துட்டே இருந்தா போதாது., நல்ல முடிவுக்கு வாங்க..,  கண்டிப்பா நான் இந்தியா வருவேன்”.,  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஏனெனில் வகுப்புகளிலும் அவன் அதிகமாக யாரிடமும் பேச மாட்டான் என்பது தெரிந்தது தான்., மற்ற வேளைகளில் அவன் வேலைக்கு சென்று விடுவதால் யாரிடமும் அதிகமாக பழக மாட்டான்., அன்று ஏதோ புட் கோர்ட் ல் அமர்ந்திருக்க அவளும் தற்செயலாக வர அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தனர்..

அவள் சென்றவுடன் மீண்டும் தன் செல்போனில் இருந்த சாருவின் போட்டோவை எடுத்து பார்த்துக்கொண்டே சிரித்தபடி தன் மருத்துவ தோழி சொல்லி விட்டு போனதை யோசித்துக்கொண்டே இருந்தான்.,  சோகத்தை தாண்டி அவன் அறியாமல் முகம் நிறைந்த  சிரிப்போடு அமர்ந்திருந்தான்.., சாருவின் புகைப்படத்தை பார்த்தபடி….

உருட்டும் பகடை எல்லாம் எண்கள் இன்றி விழுந்து தொலைகிறது., வேகமாக கடக்க முடியாமல் நிதானமாக நகர்ந்து போகிறது.,   எண்களாக விழுந்து சீக்கிரமாய் நாட்கள் கடந்து விட  முடியாதா..,   விதியோடு சேர்த்து சதி செய்யும் வாழ்க்கை.,  மதியை இழந்து விடுகிறது விதியின் விளையாட்டில்“.

Advertisement