Advertisement

10

      கண்ணோடு கண் நோக்கி 
      காதல் சொல்ல வில்லையடி.., 

      கையோடு கைகோர்த்து 
      காதல் உணர வில்லையடி.,

      முதன்முதலாய் உணருகிறேன் 
      உன் மேல் நான்
      கொண்ட காதலை.., 

      காற்றில் உன் சுவாசத்தையும்
      வாசத்தையும் தேடிய படி., 

      ஒரேயொரு முறை சொல்லடி
      இதற்கு பெயர் தான் 
      காதலா என்று

லண்டன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது., தனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு தன் அறையைப் பூட்டி சாவியை அக்காவிடம் கொடுக்கும் முன் அறையில் இருந்த ஆளுயர திருமண போட்டோவின் அருகில் சென்று சாருவின் முகத்தை புகைப்படத்தில் தடவிய படி

‘சாரி சாரு அன்னைக்கு என்னால எதுவும் பேச முடியல..,  பேச கூடிய சூழ்நிலையில் நான் இல்லை.., நான் பட்ட அவமானத்தை., எப்படி சொல்ல நீ புரிஞ்சிப்ப னு நம்பினேன்.., புரிஞ்சிக்கிட்ட.., கடவுள் எனக்கு நல்ல அம்மாவுக்கு பதிலா., நல்ல  மனைவியை கொடுத்திருக்காரு., அந்த  விதத்தில நான் கொடுத்து வைத்தவன் தான்.., வந்திருவேன் சாரு.,   கண்ணை மூடிக் கொண்டு இருக்கிற  நேரத்துக்குள்ள நாட்கள் போயிரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்’.., என்று நினைத்தபடி.,

“நான் எங்க இருந்தாலும் என்னோட மனசெல்லாம் நீ  இருப்ப., மனசு எல்லாம் உன்னை தான் சுத்தி வரும்., அது உனக்கும் தெரியும்.., உன் நினைப்பில்  நான் தான் இருப்பேன்.,  உன் மனசும் என்ன சுத்தி தான் இருக்கும்.., எனக்கும் தெரியும்”., என்று வாய்விட்டு புகைப்படத்திடம் பேசினான்.,

“என்னால முடியாது. உன்னை எந்த சூழ்நிலையிலும் விட முடியாது.,  பொறுத்துக்கோ வந்துருவேன்”.,  என்று அவளிடம் மனமார பேசிக் கொண்டிருக்கும் போதே..,  அவன் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

புகைப்படத்தில் இருந்த சாருவிற்கு அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு தன் அறையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கீழே சென்றான்..

அக்காவின் கையில் சாவியை ஒப்படைத்தவன் “பத்திரம்” என்று மட்டும் சொன்னான்.,

ஹாலில் அனைவரும் இருக்க யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல்., பொதுவாக “கிளம்புகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

ஏர்போர்ட் வரை உடன் வருகிறோம் என்று சொன்ன நண்பர்களிடம்., வேண்டாம் என்று சொல்லி விட்டு டிரைவரை மட்டும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்றான்.,

ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்தவனுக்கு இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்த படி.,  அதன்படி நடந்துகொள்ள முடிவெடுத்துவிட்டான்..

ஏற்கனவே வெளியில் தெரிந்த நண்பன் ஒருவன் மூலம் தன் படிக்கப் போகும் இடத்தில் தனக்கான பகுதி நேர வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டான்.,

கல்லூரியில் சேர்ந்து பத்து நாட்கள் கழித்து தான் வேலையில் சேர வேண்டும்.,  அங்கு போவதற்குள் அவன் தங்குவதற்கு இடமும்  ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தான்.,

ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்ல அவரே வருவதாக சொல்லியிருந்தார்.,  ஏனெனில் அவனுக்கு உதவியதும்.,  இப்போது உதவி கொண்டிருப்பதும் அவனுடைய கல்லூரிக் காலத்தில் வகுப்பில் உடன்படித்த நண்பன் ஒருவன் தான்.,  இவனுடைய குணம் எப்படி என்று தெரியும்.,  அதனால் அவன் நம்பிக்கையோடு உதவி செய்தான்..

ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த மித்ரன் மனம்.,  சாருவிடம் ‘ஐ மிஸ் யூ’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது..

அதே நாள்., அதே நேரம் சாரு பெங்களூரிலிருந்து கொச்சின் செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தாள்., தன் நண்பர்களோடு., அவளுடைய கம்பெனியிலிருந்து அவளை ப்ராஜெக்ட் விஷயமாக கொச்சினுக்கு செல்ல சொல்லியிருந்தனர்.

அவள் ஒரு நாள் மட்டுமே யோசிக்க நேரம் எடுத்துக் கொண்டாள்.,  மறுநாளே கொச்சின் செல்வதாக ஒப்புக்கொண்டாள்.,

சித்து எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்க மறுத்துவிட்டாள்.,

“சொன்னா கேளு சாரு., அங்க போய் என்ன பண்ணுவ., தனியா வேற இருக்கணும்., இங்கே இரு நாங்க பாத்துக்குறோம்”., என்றாள்.

அவளோ.,  “இல்ல எனக்கு ஒரு சேஞ்ச் வேண்டும்., கொஞ்சம் இடமாற்றம் இருந்தால், மனசு கொஞ்சம் நிம்மதியாகும் ன்னு தோணுது.,  எதையாவது யோசிச்சிட்டே இருக்கறதுக்கு பதிலா.,  கொஞ்சம் வேலையில பிஸியா இருந்துட்டே இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது., பார்க்கலாம்., ஏதாவது எனக்காக பண்ணனும் னா.,  தங்க  மட்டும் தான் இடம் ரெடி பண்ணனும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சித்தும் தன் நண்பர்களுக்கு அழைத்து சொன்னாள்., அவர்களும் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு நண்பராக இருக்கும் அங்கு வேலை பார்க்கும் சீனியரும்., அவர் மனைவியும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய ஆள் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களின்  சீனியர் மனைவியின் உறவுக்காரர் ஒருவரின் மூலம் கேரளாவில்  வீடு பார்க்கப்பட்டது., அந்த அப்பார்ட்மெண்ட்  நல்ல முக்கியமான இடத்தில் அமைரந்திருந்தது.,  பயம் என்று எதுவும் கிடையாது எனும் அளவில் இருந்தது.,  அருகில் உள்ளவர்களிடம் சொல்லி கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு சென்றனர்…

அங்கு நிறைய தமிழ் குடும்பங்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை என்று சொன்னார்., அருகில் உள்ள வீட்டில் உள்ளார்கள் நல்ல குடும்பத்தில் உள்ளவர்களே.,  இருப்பதால் எந்த பயமுமில்லை என்று சொல்லிக் கொண்டனர்.,

பக்கத்துவீட்டில் வயதான தம்பதியர் இருப்பதாகவும்., எதிர் வீட்டில் ஒரு பெண்மணியும் அவரது மகன்., மருமகள் பேரனோடு இருப்பதாகவும்., இன்னும் அருகில் இருப்பவர்கள் இரண்டு மூன்று  தமிழ் குடும்பங்கள்., அதனால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவளுக்கு வீடு ஏற்பாடு செய்திருந்தவர் சொன்னார்.

வேலைக்கு மட்டும் ஒரு ஆள் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கேட்டனர்.,

எத்தனை மாதங்கள் அங்கு வேலை என்பது தெரியாததால்., மீதி ஏற்பாடுகளை கொச்சின் சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்…

இதோ அதற்காக தான் அவர்கள் நண்பர்கள் குழு அவளை அழைத்துக் கொண்டு கொச்சின் சென்று கொண்டிருக்கிறது.,  அனைவரும் சேர்ந்து செல்வதால் பிளைட் வேண்டாம் ட்ரெயினில் செல்லலாம் என்று முடிவெடுத்து கொண்டனர்., அவளை வீட்டில் அமர்த்திவிட்டு 3 நாள் அவளோடு தங்கி அங்கு எப்படி இருக்கிறது.., அலுவலகம் செல்ல எவ்வளவு நேரம் ஆகிறது என்று எல்லாவற்றையும் பார்த்து பிறகு திரும்பி வர வேண்டும் என்ற முடிவோடு தான் சென்றிருந்தனர்.,

வேலைக்கு ஆள் கிடைக்க வில்லையெனில் இங்கிருந்து அவர்களின் சொந்தக்கார பெரியவர்கள் யாரையாவது கொண்டு அவளுக்குத் துணை க்கு வைக்க வேண்டும்.., என்ற பேச்சோடு நண்பர்கள் முடிவு செய்து கொண்டனர்..

ஏனெனில் இப்போது சாருவிற்கு 60 நாட்களை தாண்டிவிட்டது., அவள் மித்ரன் குழந்தையோடு இருக்கிறாள்., அதனால் அவளை தனியே விட யாருக்கும் மனது வரவில்லை..,

சாரு  தான் பிடிவாதமாக “கொஞ்ச நாள் இருந்து விட்டு வருகிறேன்” என்று கிளம்பி இருக்கிறாள்., அது தான் எப்படி மற்ற வேலைகளை செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு தான் ஆள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.,

இல்லையெனில் ஆள் கிடைக்கும் வரை யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளோடு இருக்க வேண்டுமென்று முடிவு செய்து தான் சென்று கொண்டிருக்கிறார்கள்..

நண்பர்கள் கிடைப்பதெல்லாம் வரம் ஒருவருக்காக ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்யும் நட்பு கிடைப்பது அரிது.., அப்படி கிடைக்கும் பட்சத்தில் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.,  எல்லோருக்கும் அவ் வரம் வாய்ப்பதில்லை…

கொச்சின் சென்று சேர்ந்த பிறகு சாருவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து அவளுக்கு துணைக்கு ஆளும் ஏற்பாடு செய்த பின்பே நண்பர்களும் அங்கிருந்து கிளம்பினர்.,

சாருவின் வாழ்க்கை இங்கு எண்ணை தடவிய இயந்திரமாய் ஓடத்தொடங்கியது.,  அக்கம்பக்கம் வீட்டிலுள்ளவர்கள் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர்.,

மற்றவர்களிடம் அவள் கருவுற்றிருப்பதை சொன்னாலும்., கணவன் வெளிநாட்டில் இருக்கிறார்., மேற் படிப்பு விஷயமாக வெளியே சென்றிருக்கிறார் என்று மட்டுமே சொல்லி இருந்தனர்., எனவே இங்கு அனைவரும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டனர்.

ப்ராஜெக்ட் முடிந்தவுடன் மறுபடியும் பெங்களூர் சென்று விடுவாள்.,  என்று அனைவருக்கும் தெரியும் ஆதலால் மேற்கொண்டு அவளிடம் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை..,

ஏதேனும் விடுப்பு கிடைத்தால் அவளை அலைய விடாமல் நண்பர்கள் அவளை இங்கு வந்து பார்த்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.,

அருகிலிருந்தவர்களோடு  அவளுக்கு நல்ல பிணைப்பு ஏற்பட்டது., பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர்கள்  இருவரும் வயதானவர்கள் அவர்களுக்கு வீட்டோடு ஒரு பெண்மணி துணைக்கு இருந்தார்.,

சமையல் செய்து கொடுக்க பிற வேலைகளை செய்ய என..,

அப்பெண்மணி தான் சாருவுக்கும்  சமைத்து கொடுக்கவும் சாரு வீட்டில் இருக்கும் போது அவளோடு துணைக்கு இருக்கவும் பெரியவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்., பக்கத்தில் வீடு என்பதால் ஏதேனும் அவசரம் என்றால் அழைத்துக் கொள்வோம்., ஒன்றும் பிரச்சனை இல்லை அவளுக்கு துணை இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.,

எதிர் வீட்டு பெண்மணி மட்டும் இங்கு வந்து நன்கு பேசிக்கொண்டிருப்பார். மருமகள் எப்போதாவது பேசுவார்.,  மகன் வேலை உண்டு.,  அவன் உண்டு என்று இருப்பான்., குழந்தை சிறியது என்பதால் மருமகள் வரும்போது இல்லை.,  பாட்டி வரும் போது பேரனைத் தூக்கிக் கொண்டு வருவார்., யாரும் அவளிடம் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை., இவளும் யாரிடமும் எதுவும் அதிகமாக சொல்லவில்லை.,

காலையில் சமையல் செய்யும் பெண்மணி வந்து., காலை உணவு.,  மதிய உணவு., என  அவளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அனுப்பிய பிறகு.,  இவள் சாவியை அப்பெண்மணி இடமே ஒப்படைத்து விட்டு கிளம்பி விடுவாள்.,

பெரியவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு., அதன் பிறகு சாருவின் வீட்டை வந்து சுத்தம் செய்து மற்ற வேலைகளை செய்து வைத்து விட்டு அவள் வந்த பிறகு.,

இரவு உணவாக ஒன்று சாருவோடு சேர்த்து பெரியவர்களுக்கும் செய்யச் சொல்லி விடுவாள்., அப்படி இல்லை என்றால் பெரியவர்களோடு சேர்த்து சாருவுக்கு செய்யச் சொல்வார்கள்., அவளை தங்கள் பிள்ளை போலவே நன்றாகவே பார்த்துக் கொண்டனர்.

சாருக்கு பெரியவர்கள் துணையோடு பகல் நேரங்களும்.,  மாலை நேரங்களும் போய்விட்டாலும்., இரவு நேரம் மித்ரன் நினைவுகளோடு தான்.,

‘எப்படி இருக்கிறான்., என்ன செய்கிறான்.,  என்று எதுவும் தெரியாத ஒரு சூழல்., பேசிக்கொள்ள முடியாத வலி.,  எதற்காக பிரச்சினை வந்தது என்று தெரியாது., ஏன் பேசக்கூடாது என்று சொன்னார்கள் என்றும் புரியாது.., இந்த சூழ்நிலையில் போன் செய்யவும் தயக்கம்.,  இரண்டு முறை அவனுடைய நம்பர் வாட்ஸ் அப்பில் ஆன்லைனில் இருப்பதை பார்த்து விட்டு மெஸேஜ் டைப் செய்து விட்டு.,  திருப்பி அழித்து விடுவாள்’.,

அங்கு நேரம் என்ன என்று தெரியாது எந்த சூழ்நிலை என்றும் தெரியாது.,  என்பதால் அடிக்கடி இது போல யோசித்துக் கொண்டே அவன் நினைவுகளோடு நேரத்தை கழித்து கொள்வாள்.

யாருக்கும் தெரியாமல் போனில் இருக்கும் போட்டோவில் மட்டும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருப்பாள்., மித்ரன் ஆசைப்பட்டு கேட்ட ஒன்று தன்னிடம் இப்போது இருக்கிறது.. ஆனால் அதைக்கூட மித்ரனுக்கு தெரியப்படுத்த முடியாத சூழ்நிலையில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் அவளுக்கும் ஏற்பட்டது.,

மற்றவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளவே மாட்டாள்.,

மற்றவர்கள் முன் சிரித்த முகமாகவே வலம் வருவாள்.,  ஏனெனில் அவளிடம் சிறு மாறுபாடு ஏற்பட்டாலும் பக்கத்து வீட்டு பெரியம்மா., சித்துவிடம் சொல்லி விடுவார்கள்.,

Advertisement