Advertisement

37.
விழிகளில் நிமிர்வோடு உள்ளத்தில் காதலோடு இருவரின் கரங்களும் கோர்த்தபடி அந்த பாழடைந்த அரண்மனையின் உள்ளே சென்றனர்.
வெகு காலங்களாய் யாருமே கவனிப்பாரற்று இருந்ததால் அந்த அரண்மனையின் பொலிவு இழந்து வெறும் தூசி படிந்து சீதலமடைந்த நிலையில் இருந்தது.
இருவரின் எண்ணங்களும் தத்தம் நினைவுகளில் உழன்றோட, கரங்களை மட்டும் பிரிக்காமல் ஒவ்வொரு அறையாக வலம் வந்து கொண்டிருந்தனர். 
அந்த யுகத்து ஞாயபங்கள் இருவரையும் அலைகழிக்க, “இது தான் நாம் காதலர்களாய் கடைசியாக உரையாடிய இடமல்லவா…?” என்று அருண்மொழிதெவியை நோக்க, அவளின் விழிகள் அவனை தனக்குள் முழுவதும் சேமித்து கொண்டிருந்தது.
“என்னை உன் விழிகளுக்குள் மீண்டும் சிறைபிடிக்கிறாயோ?” என்று குறும்பாய் கேட்டான்.
அவனின் கேள்வியில் முகம் சிவந்தவள். “என்னவரை நான் காண யார் அனுமதியும் தேவையில்லையே?” என்று எதிர் கேள்வி கேட்க, அவளின் செங்கரத்தை தன் பிடிக்குள் மீண்டும் கொண்டு வந்து நெற்றியில் ஒரு முத்தத்தை பரிசளித்தவன்.
 “நிச்சயமாக… உன்னவன் நான்… உனக்கு மட்டுமே சொந்தமானவன்… வா!” என்று மேலும் உள்ளே சென்று கடைசியாக அவர்கள் வந்து நின்ற இடம் அவளின் படுக்கையறை. 
“வா அன்பே” என்று அரண்மனையே இல்லாதபொழுது அமர இடமெங்கே இருக்கும்? தூணின் மேல் அமர்ந்தவன் தன்னவளை இழுத்து தன் மடிமீது அமரசெய்தான். 
இருவரின் விழிகளும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் பாஷைகள் இல்லாத மௌன போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தன.
முதலில் யார் மௌனத்தை கைவிடுவதென இருந்ததனால் தமிழ்செருக்கனே உரையாட ஆரம்பித்தான் பால்ய பருவத்தில் இருந்து பருவ வயது வரை அவன் மனதில் இருந்த அவனுடைய எண்ணங்களை மறைக்காமல் கூறியவுடன் தன் மேல் இத்துனை அன்பு இருந்ததை எண்ணி பெருமிதம் கொண்டாள்.
அவளின் எண்ணங்களையும் கூற, இருவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்த பின்னர் “அன்பே நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவர்களும் நம்முடைய பிரதி பிம்பங்களே! ஆதலால் இவர்கள் இருவரும் ஒருவரின் ஒருவர் எவ்வளவு அன்பு வைத்திருகிறார்கள் என்று நான் காண விரும்புகின்றேன்.” என்றதும் கண்கள் மின்ன விழிவிரித்து பார்த்தவள்.
 “அப்படியே செய்வோம். நானும் ஆவலாக அவர்களின் அன்பை காண காத்திருக்கிறேன்” என்றாள்.
அவளின் விழிகளையே பார்த்து கொண்டிருந்தவன் எதுவும் பேசாமல் இருக்க, “என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்க ஒன்றுமில்லை என்று புன்னகைத்தவன் அவளின் இதழை தன்னோடு சேர்த்து கொள்ள சில நொடிகள் இருவக்குள்ளும் உயிர் பரிமாற்றங்கள் நடந்தபின் பிரிந்தவர்கள் விழி நிறைய கண்ணீரோடு விழிகளை மூடி இருந்த நிலையிலேயே அவர்களின் உடலை விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தபடியே பிரிந்து ஒளி ஜோதியாய் மின்னினர்.
பத்து நிமிடங்கள் கழித்து தான் இருவருக்கும் நினைவு வர முதலில் விழித்தவள் ஸ்ருஷ்டிமீரா. விழித்தவள் தான் இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி பார்த்து கடைசியில் தான் எங்கே அமர்ந்திருக்கிறோம் என்று பார்த்து கொதித்து போனாள்.
க்ருஷ்வந்தின் மடியில்…
‘நாம எப்டி இங்க வந்தோம்? இவன் மடில உட்கார்ந்திருகேன்? இவனுக்கு இதே வேலையா போச்சு? இரு இவனை இன்னைக்கு நான் ஒரு வழி பண்ணாம விட போறதில்லை.’ என்று இரு கைகளாலும் அவனின் முடியை பிடித்து உலுக்கினாள்.
“ஆ ….. வலிக்குதுடி விடு விடு….” என்று கண் திறந்தவன் அவள் தன் மடியில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ‘ஹா ஹா பச்சைமிளகாய்க்கு நம்ம மேல ஓவரா காதலாய்டுச்சு போல…. இப்டி மடில உட்கார்ந்துருக்காளே?’ என்று சிரித்து விட்டு.
“ஏய்! நீயே ஏன் மடில உக்கார்ந்துட்டு இப்ப எதுக்குடி என் முடியை புடிச்சி உலுக்குற?” என்றான்.
“என்னது நான் உன் மடில வந்து உக்கார்ந்தேனா?” என்று மீண்டும் அவன் தோள் பட்டையில் குத்தினாள்.
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னை உன் மடில உக்கார வச்சிருப்ப?” என்று கேட்டுகொண்டே இன்னும் நாலு சாத்து சாத்த.
“அட போடி. நான் ஏன் இப்டி பண்ண போறேன்? எனக்கு வேற வேலையே இல்லையா?” என்றான் கள்ள சிரிப்புடன்.
“சரி. இப்பகூட என் மடில இருந்து உனக்கு எந்திரிக்க மனமில்ல தானே? மாமா மேல அவ்ளோ லவ்வாடி செல்லம்?” என்று கண்ணடித்து அவளை சீண்டினான்.
வேகமாக அவனிடம் இருந்து விலகி தள்ளி நின்றவள்.   
“இது கூட பரவால்லடா. ஆனா, நேத்து நீ என் அனுமதி இல்லாமலே……” என்று பேச முடியாமல் அவனை முறைக்க.
“உன் அனுமதி இல்லாமல் என்ன பண்ணேன்? சொன்னா தானே தெரியும்?” என்றான் சிரித்தபடி.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிக்கிறியா? இரு உன்னை….” என்று மீண்டும் அவனை அடிக்க வர, அங்கிருந்து ஓடினான்.
“ஏண்டி ராட்சசி. எதுக்குடி ஒன்னும் தெரியாத பச்சைபுள்ளைய போட்டு இப்படி அடிக்கிற? என்னை அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் உன்கிட்ட இருந்து வசூலிக்காம விடமாட்டேன்டி பச்சைமிளகாய்” என்று கத்திகொண்டே ஓடினான்.
“இரு டா… கல்யாணம் ஆன மறுநாளே புருஷன கொன்னுட்டான்னு என் பேரு போட்டோ பேப்பர்ல வந்தாலும் பரவால்ல… உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்” என்று துரத்திகொண்டே ஓடினாள்.
இறுதியில் எந்த பக்கமும் வழியில்லாத ஒரு அறையில் வந்து மாட்டிக்கொண்டான்.
“வேணாம்டி பச்சைமிளகாய்….  எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்… மாமா பாவம் உன்னை கல்யாணம் பண்ணத தவிர எந்த பாவமும் இன்னும் பண்ணலை…” என்று வேண்டுமென்றே அவனை சீண்டினான்.
“என்னது என்னை கல்யாணம் பண்ணது பாவமா?….  உன்னை….” என்று அவனை நோக்கி வேகமாக ஓடினாள்.
“போச்சு இன்னைக்கு நம்ம கதை அவ்ளோ தான்…” என்று அவளை பார்க்க, “இரு உன்னை நான் நேத்து என்ன பண்ணேன்.?” என்று கேள்வியை பார்க்க.
“ஏன் என்னை கேக்குற உனக்கு தெரியாதா?” என்று அவனை முறைத்தாள்.
“எனக்கு தெரியலைன்னு தானே உன்னை கேக்குறேன்….” என்றான். 
“என் அனுமதி இல்லாமலே நேத்து என்னை உன் பொண்டாட்டியாகிட்டல்ல?” என்று அவனை முறைக்க.
“ஆமா. நான் தான் நேத்து காலைலேயே உன் கழுத்துல தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டின்னு சொல்லிட்டேனே? அப்புறம் நேத்து நைட் ….” ஏதோ உணர்ந்தவன் போல் அதிர்ச்சியாய் அவளை பார்த்து, “என்னது நானா…? அதுவும் நீ விரும்பாமயா? ச்சே! என்ன நீ என்னை பத்தி இப்டி நினைச்சிட்ட?” என்று நம்பாமல் கேட்டான்.
“நடிக்காதடா? உன் மேல கொலவெறில இருக்கேன்… நான் காலைல உன் பக்கத்துல படுத்திருந்த கோலத்த பார்த்தப்புறம் எனக்கு தலை சுத்திடுச்சி.” என்றாள்.
“ஷட் அப் மீரா! திஸ் இஸ் தி லிமிட். உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் அதுக்காக நீ சொல்ற பழியெல்லாம் ஏத்துக்க முடியாது” என்று முறைத்தான்.
அவனை நெருங்கி அவன் கன்னத்தில் ரெண்டு அரைவிட்டவள் “நான் மட்டும் என்ன பொய் சொல்றேன்னு நினைக்கிறியா? எனக்கு இந்த விஷயத்துல பொய் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல?” என்று சொல்ல க்ருஷ்வந்த் குழப்பமானான்.
“நான் எதுவும் பண்ணலையே? இவ இப்டி சொல்றா? எனக்கு எதுவும் ஞாபத்துக்கு வர மாட்டேங்குதே?” என்று தனக்குள் பேசியபடி தலையை பிடித்து கொண்டு தரையில் அமர்ந்தான்.
அவர்களின் அருகில் இருஜோடி ஒளி பிழம்புகள் உருவாக வேகமாக க்ருஷ்வந்தின் அருகில் சென்று அவன் கையை இறுக பற்றினாள்.
‘பார்த்தியா இவ்ளோ நேரம் என்னை எவ்ளோ சாத்து சாத்திட்டு ஒண்ணுமே நடக்காதது போல் வந்து கைய பிடிக்கிறா?’ என்று நினைத்து கொண்டு அங்கே பார்க்க அவர்களை போலவே இரு பிம்பங்கள் தெரிந்தன.
சிரித்தபடி அவர்களின் முழு வரலாறையும் தமிழ்செருக்கன் கூறினான். 
ஸ்ருஷ்டிமீரா க்ருஷ்வந்த் இருவரின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
“நீங்கள் இருவரும் நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழ எங்களின் வாழ்த்துக்கள்“ என்று இருவரும் காற்றினில் கரைந்தனர்.
‘இதனால தான் பச்சைமிளகாய் என்னை அடிச்சாளா?’ என்று யோசித்தபடி.
அந்த அரண்மனையை பிரமிப்புடன் ஒரு வளம் வந்தனர். முன்னொரு காலத்தில் தாங்கள் வாழ்ந்த அரண்மனை என்று ஒரு பெருமிதம் இருந்தது.
மீரா எதுவும் பேசாமலே இருந்தாள்.
இருவரும் காரில் வந்து ஏறிக்கொள்ள பலத்த மௌனம் நிலவியது.
“என் மேல கோபமா?” என்று க்ருஷ்வந்த் கேட்டான்.
இல்லை என்று தலை ஆட்டியவள் “சாரி” என்றாள்.
தன்னையே ஒரு தரம் கிள்ளி பார்த்தவன். ‘யாரு பச்சை மிளகாயா? என் சண்டி ராணியா சாரி சொன்னது? உலக அதிசயமா இருக்கே’ என்று நினைத்தபடி, “எதுக்கு சாரி?” என்று அவளை பார்க்க அதற்கு மேல் அவனை பேசவிடாமல் அவனை கட்டிக்கொண்டாள் ஸ்ருஷ்டிமீரா. அவளின் திடீர் செயலால் விழிகள் ஆச்சர்யத்தில் மின்னின க்ருஷ்வந்திற்கு இருந்தாலும் இந்த நொடியை தொலைக்க விரும்பாமல் அவனும் அவளோடு இன்னும் நெருங்கினான்.
இரண்டு நிமிடங்களுக்கு பின் பிரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “இந்த ஜென்மம் இல்ல போன ஜென்மத்துலையும் நாம் விரும்பிருக்கோம் எனக்கு நினைச்சாலே உடம்பு புல்லரிக்குது. இது எதுவும் தெரியாம உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.” என்றாள் விழிகளில் நீரோடு.
“இங்க நடந்தது நம்மோடு இருக்கட்டும். யாரு கிட்டயும் சொல்லகூடாது. இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் உனக்காக நான் இருப்பேன்” என்று அவளை அணைத்து கொண்டான் க்ருஷ்வந்த்.
அங்கிருந்து அவர்களின் வீட்டிற்கு வந்தனர். வரும் வழி முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனரே தவிர எதுவும் பேசவில்லை.
வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆயிற்று.
“என்னடா இவ்ளோ நேரம் கழிச்சி வரிங்க?” என்று சுந்தரி கேட்க எதுவும் பேசாமல் மீராவை பார்த்துவிட்டு மேலே சென்று விட்டான்.
மீராவை சுந்தரி பார்க்க அவளும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை, ‘கல்யாணம் ஆன புதுசுல இதெல்லாம் சகஜம் அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும்’ என்று நினைத்து “மீரா இங்க வா“ என்று சமையலறையில் நுழைந்து ஒரு தட்டில் அவர்களுக்கு தேவையான இரவு உணவை வைத்து கொடுத்தனுப்பினார்.
மேலே வர வர மீராவிற்கு மேனி நடுங்க தொடங்கியது.
உள்ளே சென்று மேசையின் மேல் அந்த உணவுகளை வைத்துவிட்டு க்ருஷ்வந்த்தை பார்க்க அவன் லேப்டாப்பில் ஏதோ பார்த்து கொண்டிருந்தான்.
ஸ்ருஷ்டிமீரா பயண களைப்பு தீர சென்று குளித்துவிட்டு வர அவளை பார்த்து கொண்டே அவளருகில் வந்தான் க்ருஷ்வந்த்.
“வாங்க சாப்பிடலாம்” என்று அவனிடம் இருந்து நகர முயன்றவளை, “எனக்கு சாப்பாடு வேண்டாம்… எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா?” என்று இன்னும் நெருங்க மீராவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவளின் நடுக்கம் குறைய அவளை அணைத்து கொண்டான். “உனக்காக இவ்ளோ நாள் காத்துட்டு இருந்தேன் இனியும் எவ்ளோ நாள் இப்டி இருக்கனும்?” என்று அவளை பார்த்து மெதுவாய் கேட்க.
“ஐ லவ் யு?” என்றாள்.
விழிகள் விரிய அவளை பார்த்து “என்ன சொன்ன? இன்னொரு முறை சொல்லு?” என்றான்.
“இல்ல. நான் ஒன்னும் சொல்லலை. சாப்பிடலாம் வாங்க” என்றவளை விடாமல் “எனக்கு …” என்று ஆரம்பித்து எதுவும் சொல்லாமல் அவளிடம் இருந்து நகர அவனின் தோளை பிடித்து திருப்பி அவனை கட்டிகொண்டாள்.
இருவரும் ஆசையாய் மனதிற்குள் இத்தனை நாள் பூட்டி வைத்திருந்த காதலை தங்களுக்குள் புது மொழியில் உணர தொடங்கினர். அவற்களுக்குள் தங்களை அறியாமலே தொலைய தொடங்கினர்.  இதோ இவர்களின் வாழ்க்கையும் இனிதே தொடங்கியது. ஆனாலும் இவர்கள் என்றும் டாம் அண்ட் ஜெர்ரியாகவே இருந்தனர்.
உன் விழிச்சிறையினில்… (முற்றும்)
 .
.

Advertisement