Advertisement

35
“இப்ப சொல்ல போறிங்களா இல்லையா?” என்ற சுந்தரியின் அதட்டலில்.
“நானே சொல்றேன்“ என்று முன் வந்தான் ஜெகன்.
“அம்மா! எங்களுக்கு கல்யாணம் ஆன மூணு மாசத்துல, நான் என் புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிற விஷயமா பெங்களூர் போக வேண்டியதாயிடுச்சு. கடைசியில் அங்கேயே புது ஆபிஸ் ஆரம்பிச்சு செட்டில் ஆக வேண்டியதா போச்சு. ஆறு மாசம் எங்களுக்குள்ள எந்த ஒரு மனசு கஷ்டமும் இல்லாம தான் ரொம்ப சந்தோஷமா எங்க வாழ்க்கை இருந்துச்சு. ஆனா, ஆறு மாசத்துகப்புறம் குழந்தை நிக்கலன்ற ப்ராப்லம் எங்க ரெண்டு பேர்ககுள்ளயும் ரொம்ப பெரிய கேப்பா விழ ஆரம்பிச்சது.”
“இதுக்கிடைல நீங்க வேற அப்பப்போ குழந்தை நின்னுருக்கான்னு கேட்டுட்டே இருப்பிங்க. எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை நிக்காததால ரெண்டு பேரும் அங்கேயே ஹாஸ்பிடல்ல செக் பண்ணப்ப சுதாக்கு கற்பப்பை ரொம்ப வீக்கா இருக்குன்னு எவ்வளவோ ட்ரீட்மென்ட் எடுத்தும் இம்ப்ரூவ்மென்ட் இல்ல.  அடுத்தடுத்து மூணு அபார்ஷன் ஆகிடுச்சு. அப்பகூட சுதா உங்ககிட்ட சொல்லலாம்னு தான் சொன்னா. எனக்கு யார்கிட்டயும் சொல்லி அவ மேல பழி வரத விரும்பல அதனால யாருக்கும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன்.” என்று தன் மனைவி சுதாவை பார்த்தான்.
விழிகளில் நீரோடு, “எங்களை மன்னிச்சிருங்க அத்தை. அப்புறம் ஒரு தடவை என் தூரத்து சொந்தம் சித்தப்பாவ இவர் ஆபீஸ் விஷயமா பார்ககப்போனப்ப இதை கேள்விப்பட்டு எங்களுக்கு ஒரு ஐடியா சொன்னார். அவர் அந்த ஏரியால மிகபெரிய புள்ளி. அதனால இங்க சென்னைல அவருக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட சொல்லி யாருக்கும் தெரியாம சர்ரோகேட் மதர் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னார்.” என்று ஜெகனை பார்க்க.
“ஆனா, இவ அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அதோட இவ என்ன பண்ணான்னு கேளுங்க?” என்று அவளை முறைக்க.
‘என்ன பண்ண?’ என்பது போல் புருவத்தை உயர்த்தி சுதாவை சுந்தரி பார்க்க.
“அது…அது…?” என்று முழுங்கினாள்.
“என்னால குழந்தை பெத்து தரமுடியாதுன்னு கண்டிப்பா தெரிஞ்சப்புறம் உங்ககூட இருக்க மாட்டேன்னு சொல்லி என் ஆபீஸ்க்கு டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பிட்டா.” என்று அவளை பார்த்தான்.
“அதுக்கப்புறம் தான் அவங்க சித்தப்பா ஒரு நாள் வீட்டுக்கு வந்து சென்னைல இருக்க அவங்க டாக்டர் பிரெண்ட்கிட்ட  பேசி எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. எங்களுக்கு குழந்தை இல்லாததால நாங்க தான் குழந்தையோடு அப்பா அம்மான்னு ஹாஸ்பிட்டல்ல கொடுத்துருககோம் பட் உங்க ரெண்டு பேரோட கருமுட்டைகள் தான் எடுத்து வேறு ஒரு பொண்ணோட உடம்புல செலுத்தி குழந்தை பிறக்க ஏற்பாடு பண்ணியாச்சு” என்றார்.
“எங்க ரெண்டு பேரோட கருமுட்டைகளும் எடுத்து இன்னொரு பெயர் தெரியாத பொண்ணோட உடம்புல வைத்து குழந்தையா உருவாக்க எல்லா வேலையும் வேகமா நடந்துச்சு. குழந்தை எங்க கைக்கு வந்தப்புறம் தான் இங்க வரணும்னு முடிவு பண்ணிட்டோம். ஆனா இது மீராவுக்கு இவ்ளோ பெரிய தொந்தரவ கொடுக்கும்னு எனக்கு தெரியாது.” என்றான் ஜகன் வருத்ததுடன்.
அவனை நெருங்கி வந்த சுந்தரி அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டார்.
“எதையெல்லாம் மறைக்கணும்னு தெரியாத சின்ன பிள்ளைகளா நீங்க? வெக்கமா இல்ல உங்களுக்கு. ஐ அம அஷேம்ட்டு போத் அப் யு” என்றார்.
நிலைமை மிகவும் மோசமாகி போவதை உணர்ந்த மீரா, “அம்மா! விடுங்க நடந்தது நடந்து போச்சு. இந்த குழந்தைய என் மூலமா இந்த குடும்பத்துக்கு வரணும்னு இருக்கு அவ்ளோ தான். இப்படி நடக்கலைன்னாலும் நான் நிச்சியமா அந்த நரகத்துல இருந்து இன்னும் வெளிய வந்துருப்பேனான்னு எனக்கே தெரியலை. நடந்தது எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சிக்க வேண்டியது தான். இப்போ இந்த குட்டிபாப்பாக்கு ரெண்டு அம்மா. ரெண்டு அப்பா.” என்று அந்த குழந்தையின் கன்னத்தை லேசாக வருடினாள்.
“ரொம்ப நன்றி மீரா. உன் மனசு யாருக்கும் வராது.” என்ற சுந்தரி ரெண்டு பேரையும் முறைத்து விட்டு குழந்தையுடன் உள்ளே சென்றார்.
“அக்கா மாமா… அம்மா ஏதோ கோவத்துல இப்படி சொல்றாங்க.. கொஞ்சம் டைம் கொடுங்க அவங்க சரி ஆகிடுவாங்க.” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த கிருஷ், மீராவின் கையை தரதரவென இழுத்து கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
“என்ன கிருஷ்? எதுக்கு இப்ப இப்படி கூட்டிட்டு வந்திங்க? அவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள்.
“எப்டி மீரா? உன்னால இவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியுது. நீ இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு இவங்களும் ஒரு காரணம்.” என்று சீறினான்.
“கிருஷ் உண்மை தான். இவங்க ஒரு காரணம் மட்டும் தான் இது எல்லாத்துக்குமே மூலக்காரணம் அந்த சுதன் தான். இவுங்க இல்ல. இன்பாக்ட் இவங்களுக்கு எதுவும் தெரியலை. ப்ளீஸ் அவங்க பாவம்.” என்றாள் மீரா.
‘எப்போ பாரு கோபமா பேசிகிட்டிருக்க மீராவா இது. பச்சைமிளகா உனக்கு தான் எவ்ளோ நல்ல மனசு’ என்று அவளை நெருங்க.
“என்ன பண்றிங்க? எல்லாரும் கிழ இருக்காங்க. இது மாதிரிலாம் நடந்துக்க கூடாது. வாங்க போலாம்” என்று அவனை அழைத்து கொண்டு கிழே இறங்கினாள்.
ஜெகனிடம் வந்த கிருஷ், “ விடு டா. அம்மா கொஞ்ச நாள் கோபமா இருப்பாங்க. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்” என்றான்.
பின் வெளியே வந்த சுந்தரி குழந்தையை சுதாவிடம் கொடுத்து, “குழந்தைக்கு பசிக்குது. போ. சாப்பிட எதாவது கொடு.” என்றார்.
பின் எல்லோரும் சாப்பிட்டு முடித்து வருவதற்குள் க்ருஷ்வந்தின் அறை முழுவதும் மலர்களால் அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க அலங்கரிக்க பட்டிருந்தது.
கிழே க்ருஷ்வந்த் தனியாகவும் ஸ்ருஷ்டிமீரா தனியாகவும் புது உடை உடுத்தி தயாராக்க பட்டனர்.
க்ருஷ்வந்த் மேல சென்ற பின் சுந்தரி மீராவிடம், “மீரா இதுவரைக்கும் உன் வாழ்க்கைல எவ்வளவோ கஷ்டங்களை அனுபவச்சிருக்க. இனி, எப்பவுமே சந்தோஷம் மட்டுமே நிறைஞ்சிருக்கனும். உன் புருஷன் மேல இருக்கான். நீங்க ரெண்டு போரும் எப்பவுமே சந்தோஷமா இருங்க” என்று  க்ருஷ்வந்தின் அறைவரை கொண்டு வந்துவிட்டு சென்றுவிட்டனர்.
மெல்ல கதவை நடுங்கும் கரத்தால் திறந்து உள்ளே சென்றவளின் விழிகளில் அருண்மொழிதேவியின் வெட்கம் குடியிருக்க அவ்விழிகள் அறைமுழுவதும் நோட்டமிட்டன. 
அவனின் சொற்கள் மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலிக்க தன் மேனியில் சிறு சிறு பட்டாம்பூசிகளின் நர்த்தனங்கள் நடப்பதை உணர்ந்து ஒரு வித பரபரப்போடு அறையை முழுதும் விழிகளால் சுழலவிட்டாள்.
பின்னாலிருந்து இரும்பு கரங்கள் இரண்டு அவளின் இடையினில் சுற்றி பின்னிழுக்க, அவளிடம் இருந்து சிறியதொரு இன்பதிர்ச்சி ஏற்பட்டது.
“யாரை தேடுகிறாய் அன்பே?” கணிரென்று அதேநேரம் கிறங்கும் குரலில் அவளின் காதோரம் கேட்க…… அவளின் மேனியில் பட்ட அந்த வெப்பப் காற்றினால் உடல் முழுவதும் சில்லிட்டது.
அவனிடம் இருந்து விடுபட முயன்று முடியாமல் போக மேனி முழுவதும் நாணத்தால் சிவந்திருந்தாள் அருண்மொழித்தேவி.
“என் கண்கள் காண்பது கனவா? அல்ல நினைவா? கயவனின் வீரவாளை கொண்டு அவனை வதம் செய்த அருண்மொழிதேவியா இவ்வாறு நாணம் கொள்வது?” என்றான் மீண்டும் அதே கிறங்கும் குரலில்.
அவனின் தீண்டலில் தன்னை இழந்து கொண்டிருந்த தேவியின் மனம் இத்துணை யுகத்து தாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்க அவளை மேலும் சீண்டினான். அவள் இடையினை இன்னும் இறுக்கியபடி, “உன் இதழினில் இருக்கும் முத்துகளை என் இதழ்களுக்கு மட்டும் தான் பரிசளிப்பது என முடிவு செய்துள்ளாயோ அன்பே?” என்று அவன் கரங்கள் அவள் மேனியில் முன்னேற அதை தாளாது அவளின் இதழ்கள் இன்பத்தால் முனக ஆரம்பித்தன.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதிலல்லவே தேவி? உன் செவ்விதழ் திறந்து பதில் உரைக்கமாட்டோயோ.” என்று அவனின் கரங்கள் மேலும் அவள் மேனியில் அத்துமீறியது.
“மனதில் நினையாத ஒருவன் செய்த அநீதியை தட்டி கேட்ட தேவி, மனம் விரும்பியவனின் கரத்தினில் இருக்கும் பொழுது வெட்கம் கொள்வது ஒன்றும் பிழை அல்லவே? அவளும் ஒரு பெண் தானே???” என்றாள் திக்கி திணறி.
 “கள்வனின் கதை முடித்த வீரமங்கை அருண்மொழிதேவியை எனதாக்கி கொள்ள நித்தமும் தவித்த என் காதலின் ஆண்மையை எதிர்கொள்ள… “ என்று அவன் முடிப்பதற்குள் அவளின் கரங்கள் அவள் முகத்தை மூடியது.
மெல்ல அவளை தன்புறம் திருப்பிய தமிழ்செருக்கனின் விழிகளில் நிறைந்திருந்த காதலை காண அவள் கரங்களை அகற்றினான். 
“நாம் இருவரும் மனதால் இணைத்த பின் என்னை கண்டு முகம் மூடுவதென்ன அன்பே?”
அவனின் ஒவ்வொரு தொடுதலில் அவளின் தேகம் சிலிர்த்து போவதை கண்டு அவன் மேனியும் சிலிர்க்க தொடங்கியது. 
“உன் விழிச்சிறையினில்
என்னை பூட்டிவைத்தாயோ…?
ஆதலால் தான் 
இத்துணை யுகங்கள் கடந்தும்
உனக்குள் இருக்கும் நான்
உன் உயிராய்
அழியாமல் இருந்தேனோ…?”
“உன் விழி தரும் போதை எந்த மதுவிலும் இல்லை அன்பே. அதிலும், இந்த செவ்விதழ் தரும் போதை வேறெதிலும் கிடைக்காத திகட்டாத இன்பம்.” என்றவன் அவளில் அதரத்தில் தன் ஒற்றை விரலை கொண்டு அவள் விழிகளை தன் விழிகளோடு கலக்க செய்தான்.
“உன் மாயவிழியின் ஒற்றை தீண்டலுக்காக என் ஆயுள் முழுவதும் தவமிருக்க வைக்கிறாயடி என்னை.” என்று அவள் இதழின் மேல் தன் விரல் வைத்து வருடியவன்.
 “எத்தனை யுகங்கள் கடந்தாலும் தமிழ்செருக்கன் தமிழ்செருக்கன் தானே…..? தன் மனையாளே ஆனாலும் அவளின் ஒப்புதலோடு ஒன்றிணைய துடிக்கும் காதலன் நான். அருண்மொழிதேவியாய் நிற்கும் உன்னை என்னுள் காதலில் கரைத்துகொள்ள நீ தரும் ஒற்றை சொல்லம்பை எதிர்நோக்கி தவித்துகிடக்கின்றேன் அன்பே. என் தேகத்தேடுதலின் முடிவும் நீ அல்லவோ? உன் விழிச்சிறையினில் இருக்கும் என்னை விடுவித்து என்னுள் உயிராய் உணர்வாய் கரைய உனக்கு சம்மதமா?” என்றான் தமிழ்ச்செருக்கன்.
.
   .
.      

Advertisement