Advertisement

34
இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது.
வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது.
வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் சுந்தரி.
“என்னம்மா?” என்று அவரை நோக்கி கேட்டாள்.
“இந்தாடா தண்ணீர் கேட்டியே! குடிச்சிட்டு போய் க்ருஷ்வந்த் ரூம்ல ரெஸ்ட் எடு.” என்றார்.
“சரிம்மா” என்று மேலே சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்துகொண்டிருந்த க்ருஷ்வந்த் மேலே செல்ல போக, “எங்கடா போற நீ?” என்றார் சுந்தரி.
“என் ரூமுக்கு” என்றான் மெதுவாக.
“நீ போய் பக்கத்து ரூம்ல ரெஸ்ட் எடு” என்றார்.
“அம்மா” என்று அவர் அருகினில் வந்தவன். “அம்மா ப்ளீஸ்! நான் ரெண்டு நிமிஷம் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு வந்துறேன்.” என்றவனை முறைத்தார்.
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் அவ ரொம்ப டயர்டா இருக்கா. கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்றார்.
“அப்ப நான் சோர்வா இல்லையா? மருமக வந்தவுடனே மகன மறந்துட்டியே டார்லிங்” என்று அவர் நெற்றியில் மோதினான்.
“அட எரும மாடு. பொண்டாட்டி வந்துட்டா… இன்னும் அம்மாவ டார்லிங்க்ன்னு கூபிட்ற??.. படவா பிச்சிடுவேன்” என்றார்.
“எனக்கு புள்ள பிறந்தப்புறமும் உன்னை டார்லிங்க்னு தான் கூப்பிடுவேன் மம்மி” என்றான்.
“சரி. சரி போதும் ஐஸ் வச்சது போயிட்டு ரெண்டே நிமிஷத்துல வந்துரனும்” என்றார் கறாராக.
“அதெல்லாம் முடியாது. நான் என் ரூம்ல தான் ரெஸ்ட் எடுக்க போறேன். நீ வேணா உன் மருமகளை வேற எங்கயாவது ரெஸ்ட் எடுக்க சொல்லு” என்று மேலேறினான்.
“பாப்பா கிட்ட டிரஸ் கொடுத்தனுப்புறேன்” என்றாள்.
தன்னறைக்குள் நுழைந்தவன் மீராவின் உருவில் நிற்கும் அருன்மொழிதேவியை பார்த்தபடியே அவளருகில் வந்து நின்றான்.
“என் வார்த்தைகள் பலித்தனவோ?” என்று அவனை பாராமல் கேட்க.
“நிச்சியமாய் அன்பே! நீ அன்று உரைத்த சத்தியம் இன்று மெய்யானது. ஒரு நொடி யோசிக்காமல் என்னை மட்டும் விட்டு உன்னை மறித்து கொண்டாயே என் நிலை உன் சிந்தையில் தோன்றவில்லையா?” என்றான் சற்று கோபமாக.
“அன்று நான் இருந்த மனநிலை அவ்வாறு. ஒரு கயவன் என் அனுமதி இல்லாமல் என்னை தொட்டு தூக்கி என் கழுத்தில் நீர் கட்ட வேண்டிய மாங்கல்யத்தை கட்டினால் என் மனநிலை என்னவாக இருக்கும் என்று உம்மால் யோசிக்க முடியவில்லையா?” என்றாள் எங்கோ வெறித்தபடி.
“எப்படி இருந்தாலும் நீ அன்று அவனிடம் செய்த சவாலில் வெற்றி கண்டுவிட்டாய் அன்பே. அதனால் தான் இன்று நாம் ஒன்றாக இருக்கிறோம். அல்லவா?” என்றான்.
“உமக்கு தெரியும் நிச்சியம் என் ஆத்மா உன்னையே சுற்றி திரியும் என்று. ஆம் உன்னோடு தான் உன் மரணம் வரை நீ அறியாமல் இருந்தேன் உன் நிழலாக” என்று அவன் புறம் திரும்பினாள்.
“எத்தனை யுகங்கள் ஆனாலும் உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது என்பதற்கு நாம் ஒரு சாட்சியாக இருக்கிறோம் அல்லவா? உடலால் வேறொரு உருவம், மனதால் வேறொரு உருவம் இதெப்படி சாத்தியம் அன்பே” என்றான்.
“இனி எத்துனை யுகங்கள் இருந்தாலும் உன்னை நான் வந்து சேர்வேன் என்னையும் நீ வந்து சேர்வாய் அல்லவா?” என்றான்.
“அதிலேதும் சந்தேகம் உள்ளதோ உமக்கு?” என்றாள்.
“சரி. இவ்வளவு யுகங்கள் கழித்து உன் மனம் கவர்ந்தவன் உன்னை வந்து மணாளனாய் சேர்ந்திருக்கிறேன். எனக்கேதும் பரிசுபொருள் கிடையாதா?” என்றான்.
“என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
அவள் இடையினில் கரம் கொடுத்து தன்னிடம் அணைத்தவன். அவள் செவ்விதழின் மேல் தன் விரலால் வருட அந்த தீண்டலில் மேனியெங்கும் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தவள் அவனை விட்டு விலக எத்தனிக்கையில் இரும்பு கரம் இன்னும் இறுக்கியது.
“என்ன செய்கிறீர்? யாரேனும் வரக்கூடும். என்னை விடுங்கள்?” என்றாள்.
“யார் வந்தால் எனகென்ன? நான் என் மனைவியிடம் தானே நிற்கிறேன். அதுவும் இந்த இதழ்களின் மேல் எனக்கிருக்கும் மோகத்தின் தாபம் யுகங்களாய் எரிந்து கொண்டிருகிறது. அதை அணைக்கும் மருந்து நீ தான் என்பது உனக்கு தெரியாதோ அல்லது என் உணர்வுகளுடன் விளையாடுகிறாயோ?  இத்தனை யுகங்களாய் உன் மேல் இருந்த காதல் கூடியதே தவிர குறையவில்லை. இன்று தான் இவை எனக்கு உரிமையானவையாக இருக்கும் பொழுது எப்படி உன்னை நீங்குவேன் என்று நினைக்கிறாய்” என்று ஆசையோடு நோக்க அவனின் முகம் பார்க்கமுடியாமல் நாணத்தில் விழிகளை தழைத்து வேறொங்கோ பார்வையை செலுத்தினாள்.
“அண்ணா!” என்று வெளியே குரல் கேட்டதும் விழி மூடி அவளை விடுவித்து, “இதோ வரேன்டா” என்று அவளை பார்த்தபடியே கதவருகில் சென்று திறக்கும்போது அவலை நோக்கி புன்னைகயோடு, “இத்தனை வருட காதல் தாபமாய் என்னுள் தகிக்கின்றது. அதையும் என்னோடு சேர்த்து இன்றிரவு என்னை சந்திக்க தயாராக இரு… அன்பே! சந்திப்போம்” என்று கண்சிமிட்டி வெளியேறினான்.
“அண்ணி! இந்தாங்க உங்க திங்க்ஸ் எல்லாமே இங்க ஷிபிட் பண்ணியாச்சு இது உங்க ட்ரெஸ் சூட்கேஸ். நாம பொறுமையா நாளைக்கு அடுக்கிகலாம். இப்போ டிரஸ் மட்டும் மாத்திகோங்க. “ என்று வெளியேறினாள்.
மீராவை மாறியிருந்தவள் மீண்டும் அருண்மொழிதேவியின் உருவம் கொள்ள அங்கே தமிழ்க்செருகனின் வார்த்தைளின் மயக்கத்தில் அவளின் முகம் செந்தாமரையாக மின்னியது.
இரவு உணவின் போது, அருண்மொழியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டவன். “இன்னும் கொஞ்சம் போடட்டுமா?” என்ற குரலில் திரும்பினான். 
“அண்ணி எப்டி இருக்கீங்க?” என்றான் எதிரே நிற்பவரை பார்த்து.
“நான் நல்லா இருக்கேன் தம்பி.” என்றவள் மீராவை பார்த்து சிநேகமாய் சிரிக்க.
“மீரா. இவங்க ஜகன் அண்ணாவோட மனைவி” என்றான்.
“அக்கா நல்லா இருக்கிங்களா?” என்றாள் மீரா.
“நல்லா இருக்கேன்டா” என்றவள் மீராவின் அருகில் வந்து, “கல்யாணம் முடிஞ்சிடுச்சி. ஆனா, நாம சந்திக்கிற சந்தர்பம் கிடைக்கவே இல்லை. அவருக்கு இங்க எல்லாரும் ஓன்னா இருக்கணும்னு ஆசை. அதனால இங்க வரதுக்காக ஏற்பாடு பண்ணிட்டு இருந்தார். அதான் எங்களால் வர முடியலை தப்பா எடுத்துகாதடா.” என்றார்.
“அய்யோ! அக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று சிரித்தாள் மீரா.
“எனக்கு தங்கச்சி இல்ல. இனி, நீ தான் எனக்கு செல்ல தங்கச்சி” என்று அவளின் கண்ணத்தை கிள்ளினாள்.
“சரிக்கா” என்றாள்.
“அண்ணி பாப்பா எங்க? நான் பார்க்கவே இல்லை” என்று கேட்டான் க்ருஸ்வந்த்.         .
“இருப்பா. தூக்கிட்டு வரேன்” என்று உள்ளே சென்று குழந்தையோடு வந்தவளை இருவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
மீரா க்ருஸ்வந்த்தை அதிர்ச்சியாய் பார்க்க.
“அண்ணி பாப்பா எப்போ பிறந்தா?” என்று கேட்டான்.
தேதி சொன்னவுடன் இருவரும் பார்வையை பரிமாறிக்கொண்டனர்.
“ஏன் அண்ணி உங்களுக்கு குழந்தை பிறக்கலையா?” என்றவுடன் அதிர்ச்சியாய் க்ருஷ்வந்த்தை பார்த்தாள் அவனது அண்ணி.
“ஏன் தம்பி? இது என்னோட குழந்தை தான்.” என்றாள்.
“இல்ல… இது உங்களோட குழந்தை இல்ல?” என்றான் அதிகாரமாக.
அந்த நேரம் உள்ளே வந்த ஜெகனும் அதிர்ச்சியோடு பார்க்க.
“சொல்லுங்க என்ன நடந்தது? இது உங்களோட குழந்தை கிடையாது” என்று விடே அதிரும்படி கத்தினான்.
“உனக்கெப்படி தெரியும்?” என்று முறைத்தான் ஜகன்.
“ஏன்னா இந்த குழந்தை காணாம போனப்ப கண்டுப்பிடிச்சவன் நான் தான். அதோட இல்லாம இது மீராக்கு பிறந்த குழந்தை“ என்றான்.
“என்ன?” என்று அதிர்ச்சியின் உச்சத்தில் ஜெகனும் அவன் மனைவியும் இருக்க மீராவின் கதை முழுவதும் கூறினான் க்ருஷ்வந்த்.
குழந்தையை வாங்கி பார்த்த சுந்தரியும், “இது மீராவோட குழந்தை தான். ஏன்னா நான் தான் பிரசவம் பார்த்ததேன். ஒரே மாதிரி குழந்தைகள் இருக்கிறது சாத்தியம் என்றாலும் இதோ இவளுக்கு இருக்கும் இந்த மச்சம் இருக்காது.” என்று குழந்தையின் தோள்பட்டையில் இருந்த நட்சத்திர வடிவ மச்சத்தை காட்டினார். “சொல்லுங்க என்ன நடந்தது?” என்று கோபமாய் இருவரையும் பார்த்து கேட்டார்.

Advertisement