Advertisement

33
“ஹலோ இன்னும் தூங்கலையா? என்ன பண்ற?” என்றான் க்ருஸ்வந்த்.
“இல்ல. எனக்கு தூக்கம் வரல. ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.
“ஏன்டா! உடம்பெதும் சரி இல்லையா? நான் அங்க வரட்டா?” என்றான் சற்று கவலையாய்.
“இல்ல இல்ல நல்லா இருக்கேன். க்ரிஷி…..” என்று தயங்கினாள்.
“என்ன?” என்றான் அவளை வருடும் மெல்லிய குரலில்.
“எனக்கு உன்னை பார்க்கணும்” என்றாள் மென்மையாய்.
உள்ளுக்குள் சிரித்து கொண்டவன். “இப்பவா? இப்ப மணி 2.௦௦ இன்னும் சில மணிநேரத்துல நம்ம கல்யாணம்” என்றான்.
“எனக்கு உன்னை பார்க்கணும். உடனே, வரமுடியுமா மூடியாதா?” என்றாள் விடாபிடியாக.
“வரேன்” என்று வெளியில் வந்தவன்.
‘சொன்னா கேட்கறாளா பாரு ராட்சஷி, கிராதகி’ என்று வசைபாடியபடியே அவள் அறையின் வாசலில் நின்று கதவை தட்டினான்.
கதவு லேசாக திறக்க உள்ளே வேகமாக சென்று கதவை சாத்தினான்.
மீராவை மேலும் கிழும் பார்த்தவன். “ஏன் யாராவது எதாவது சொன்னாங்களா? ஏன் அழுதுருக்க?” என்று அவள் கண்ணகளை வருடிகொடுத்தான்.
“இல்ல க்ரிஷி! எனக்கு பதட்டமா இருக்கு” என்றாள் கவலையாக.
“எதுக்குடா உனக்கு இந்த பதட்டம்?” என்றான் க்ருஷ்வந்த்.
“இல்ல நாளைக்கு கல்யாணத்துல யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா?” என்றாள்.
“யார் என்ன சொல்லுவாங்க?” என்றான் லேசான கோபத்துடன்.
“க்ரிஷி நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ….” என்றாள் மீரா.
“அதோடு டிவோர்சும் ஆனவள்…” என்றான் அவனும் விடாமல்.
“அதுமட்டும் இல்ல..” என்று இழுத்தாள்.
என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தும் அவள் வாய் வழியாக கேட்க வேண்டும் என்று “சொல்லு அது மட்டும் இல்ல அப்புறம்…” என்று அவளை பார்த்து நிறுத்தினான்.
“இல்ல அவனோட வாழலைன்றது உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். அதோட நான் ஒரு குழந்தைக்கு அம்மா!……” என்றாள்.
“அதனால …” லேசாக முகம் கறுத்தது.
“எல்லோரும் நாளைக்கு என்னை பார்த்துட்டு உன்னை எதாவது சொல்லுவாங்களான்னு பயமா இருக்கு. உங்க ஆபீஸ்ல இருந்து நிறைய பேர் வருவாங்க. பெரிய இடத்து ஆளுங்கல்லாம் வருவாங்கல்ல? ஏதாவது தப்பா நடந்துருச்சுன்னா என்னால உனக்கு ஏதும் அசிங்கமாகிடுமோன்னு நினைச்சா நிம்மதியா உக்காரக்கூட முடிய….” என்று அவள் முடிபதற்குள் அவளின் இதழை சிறைபிடிதவன் அவனின் ஸ்பரிச தீண்டலில் அவளின் மெலிய தேகம் நடுங்குவதை உணர்ந்து மெல்ல விடுவித்தான்..
பின் தன்னை மிகவும் சிரமப்பட்டு கட்டுபடுதியவன். “அவளிடம் மிக நெருக்கத்தில் சென்று நிற்க அவனின் சுவாசக்காற்று அவள் நெற்றியில் தீண்டி நடுக்கத்துடன் நிமிர்ந்தவள் அவன் விழிகளை நோக்கினாள்.
மெல்ல அவன் கரம் அவள் இடையினை பற்றி இழுக்க அவனின் நெஞ்சில் அவளின் தலை மோதி நின்றாள்.
தன் இரும்பு கரங்களால் அவளை கட்டியணைத்து அவள் முதுகினை மெல்ல வருடிகொடுத்தவன்.
“மீரா! நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. மத்தவங்க சொல்றத கேட்டு கவலைபட்ரதுக்கு. நான் என்ன செய்றேன்னு தெரிஞ்சு தான் எல்லா முடிவும் எடுக்கிறேன். அதுவும் உன் விஷயத்துல ஏன் என்னால உன்னை முதல்லயே பார்த்து மீட்க முடியலைன்னு ஒவ்வொரு நொடியும் தவிக்கறது உனக்கு தெரியாது. அதனால என்னை தவிர யாரையும் உன்னை விரல் நீட்டி பேச ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்.” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து.
“உன்கிட்ட எப்டி சொல்றதுன்னு தெரியலை க்ரிஷி. ஆனா எனக்கு இப்ப இருக்க ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் அதனால உன்கிட்ட சொல்றேன்.
என்றவள் சிறிது தயங்கி, “என்ன தான் அந்த குழந்தை எனக்கு சொந்தமில்லைனாலும் அதை பத்து மாசம் என் வயத்துல சுமந்திருகேன். எனக்கு குழந்தைய ஒரே ஒரு தடவை மட்டும் பார்க்கணும் க்ருஷ்வந்த்.” என்றாள் கெஞ்சலாய்.
“எனக்கு உன் தவிப்பு புரியுது. நிச்சயமா, நம்ம கல்யாணம் முடிஞ்சவுடனே நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.., நீ கவலை படாதே.” என்றவன்.
“சரி நேரம் ஆகுது. படுத்து தூங்கு. எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன். நீ டயர்ட்டா இருப்ப. யாராவாது வரபோறாங்க. நான் இங்க இருந்தா நல்லா இருக்காது. நான் கிளம்புறேன்.” என்று அவளை கட்டிலில் படுக்க வைத்து போர்த்திவிட்டு வெளியேறி தன்னறைக்குள் தஞ்சம் புகுந்தான்.
தன்னவளின் பயம் புரிந்தவன், “எந்த காரணத்துகாகவும் அவளை யாரும் எதுவும் சொல்ல விடமாட்டேன். ஷி இஸ் அன் இன்னொசென்ட் சோல்” என்று நினைத்தபடி விழி மூடினான்.
“க்ருஸ்வந்த் எழுந்துருப்பா. நேரம் ஆகுது” என்று அவன் தந்தையின் குரல் எழுப்பியது.
மடமடவென எழுந்து தயாராகினான் மணமகனாய்.
“அண்ணா வந்துடானாப்பா?” என்றான் ஏக்கமாய்.
“இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்ப்பா. நீ வா மணமேடைல உட்காரணும் ஐயர் கூப்பிட்றார்.” என்று சென்றார்.
நலுங்கு முடித்து பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரம் நிறைந்த ஆண்மகனாய் எல்லோர் விழிகளும் வியப்பில் ஆழ்த்திவிட்டு வந்தமர்ந்தான்.
அவனை இவ்வளவு நாள் தவிக்க வைத்தது போல் இல்லாமல் அழகு சிலையென அவன் விழிகளுக்கு வந்தமர்ந்தாள்.
‘இவ இவ்ளோ அடக்கமா இருந்து நான் பார்த்ததில்லையே? ஒருவேளை  கல்யாணப்பொண்ணு தலைகுனிந்து வாராளோ?’ என்று வேண்டுமென்றே அவள் தோளினில் மெதுவாக உரச எந்தவித முகபாவமும் இல்லாமல் அமைதியாக  குனிந்திருந்தாள்.
‘என்ன ஆச்சு இவளுக்கு? நைட் தான அவ்ளோ சொல்லிட்டு வந்தேன். அப்புறமும் பயபட்றாளோ?’ என்று.
“ஏன் இன்னும் டென்ஷனா இருக்க? நான் இருக்கேன்ல ஒன்னும் பயபடாதே” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவளின் கண்ணீர் ஒரு துளி கிழே விழு க்ருஷ்வ்ந்த் இப்போ டென்ஷன் ஆகிட்டான்.
“இப்போ எதுக்கு அழுகுற?” என்றான்   
“அப்பா இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்ல?” என்று கண் கலங்கினாள்.
“உங்க அப்பா தான் என்னை உனக்காக அனுப்பி வச்சிருக்கார். அதனால இந்த மொமென்ட்ஸ என்ஜாய் பண்ணு. அழகூடாது.” என்றான்.
“அண்ணா! எங்க காணவே இல்ல?” 
“அதோ பார் அங்க வந்திருக்கவங்களை கவனிக்கிறார்.” என்று கைகாட்டினான்.
அந்த திசையில் பார்த்து புன்னகைத்தவள்.
ஐயர், “நான் சொல்றதை சொல்லுங்க” என்று கூற, கிருஷ்வந்த்தும் “நான் சொல்ட்ரத்தை சொல்லுங்க” என்றான்.
அவன் கூறியதில் தன்னை மறந்து சிரித்தாள் மீரா. 
“ஐயோ! நான் சொல்ட்ரா மந்திரங்களை சொல்லுங்க” என்று அய்யர் மந்திரங்களை உச்சரிக்க இருவரும் அதை முனுமுனுத்தனர்.
“ஹாய் டா! எப்படி இருக்க?”  என்று வந்தான் க்ருஸ்வந்தின் அண்ணன் ஜகன்.
“நீ எல்லாம் ஒரு அண்ணாடா? தம்பி கல்யாணத்துக்கு இப்போ தான் வருவாங்கல்ல?” என்றான் பொய் கோபத்துடன்.
“இல்லடா. நான் என்ன பண்ண இம்பார்டன்ட் மீடிங்கஸ். அதான். சாரி சாரி. இனி எங்கேயும் போகமாட்டேன். உங்களோட தான் இருக்க போறேன். இங்க புது பிரான்ச் ஓபன் பண்ணிட்டேன்.” என்றான்.
“ஹாய் சூப்பர்! அண்ணி பாப்பா எங்க?” என்றான் விழிகளில் ஆர்வத்தோடு.
“பாப்பா தூங்கறா. அதான் அண்ணி ரூம்ல இருக்காங்க இப்போ வந்துருவா” என்று கிழே இறங்கினான்.
அயர் மந்திரங்கள் கூற எல்லோரின் வாழ்த்துகளோடு மீராவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டினான்.
அந்த நொடி இருவருள்ளும் ஏதோ ஒரு புது உணர்வு தோன்ற அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தபின் மொத்தமும் முழுவதாய் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்திருந்தனர் இருவரும்.
வார்த்தைகள் பேசாத மௌனமொழி உருவத்தில் க்ருஷ்வந்தாய் உயிரின் உணர்வுகளில் தமிழ்செருக்கனாய் மிடுக்கோடு இருந்தவனின் விழிகள் அர்த்தமுள்ள பார்வையால் புது மொழி பேசினான் ஸ்ருஷ்டிமீராவாய் அமர்ந்திருக்கும் அருன்மொழிதேவியிடம்.
அவளின் விழிகளில் மிளிர்ந்த ஏழு ஜென்மத்து காதலை புரிந்துகொண்டவன் அதை மற்றவர்கள் அறியும் முன்னர் அவள் வாய்திறக்காமல் இருக்க அவளின் செவிகளில் “தனிமையில் கதைகளை பேசுவோம் அன்பே” என்றதும் அவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவள் மெல்லிய சிரிப்போடு தலையசைத்தாள்.
சொல்ல முடியாத ஆனந்த பெருக்கின் ஊற்றில் இருவரும் திளைத்திருக்க சடங்குகள் நடந்தவண்ணம் இருந்தான்.
இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் திகட்டாமல் பருகிகொண்டிருந்தனர்.
.  

Advertisement