Advertisement

32
குளித்துவிட்டு வந்த ஸ்ருஷ்டிமீரா கிருஷ்வந்த் அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டிருந்தாலும்  அவளின் இதழ்கள்  புன்னகையை தத்தெடுத்து கொண்டிருந்தது.
அவளின் நினைவுகள் க்ருஷிவந்தின் வார்த்தைகளில்  சுழன்று கொண்டிருந்தது.
“உனக்காக ஆசையாசையா நாலஞ்சு கடைகளில் தேடிபுடிச்சு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை கட்டினப்புறம் நா தான் முதல்ல பார்க்கணும்.”  என்றான்.
“ஹ்ம்ம் அப்டியா சொல்ற? அப்போ நீ   தான் கடைசியா பார்க்க போற” என்றாள்.
தன் மொபைல் அடிப்பதை கவனித்தவள் எடுத்து, “சொல்லுங்க?” என்றாள்.
“ஹாய்! பொண்டாட்டி!” என்றான் உற்சாகமாக.
“ஹலோ! இன்னும் ரெண்டு நாள் இருக்கு அப்புறம் தான் உன் பொண்டாட்டி” என்றாள் அவனை சீண்ட.
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடிலருந்தே நீ என் பொண்டாட்டி தான்டி பச்சைமிளகா” என்று அவனும் அவளை சீண்டினான்.
“ஹ்ம்ம்! சொன்னாங்க சொன்னாங்க!” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
“ஆமா.. என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் கிருஷ்வந்த்.
“ஹ்ம்ம் சொல்லியே ஆகணுமா? சொல்ல முடியாது போடா!” என்று சிரித்தாள்.
“அப்ப ஓகே! நானே வந்து பார்த்துக்குறேன்” என்று போனை வைக்க போனவனுக்கு மீராவின் குரல் கேட்டது.
“இல்ல இல்ல ! நான் குளிச்சிட்டு வந்து புடவை கட்டிக்கிட்டு இருக்கேன். நீ ஒன்னும் வரதேவயில்லை.” என்றாள் பதட்டத்துடன்.
“தேங்க்ஸ் பார் தி அடிஷனல் இன்பர்மேஷன். ஐ லவ் யு பொண்டாட்டி. ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன்.” என்று போனை வைத்திருந்தான்.
‘அய்யய்யோ மாட்டிகிட்டேனா? நம்மளே உளறிட்டோமோ? இப்போ என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவள் ‘டேய்! புருஷா! நான் உன் பொண்டாட்டிடா! கொஞ்சமாச்சும் அறிவு இருக்காது?’ என்று தன் மொபலை எடுத்து போன் செய்தாள்.
“வாய் மொழியும் என் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி…………….. காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி.” என்று பாடி கொண்டே கிழே இறங்கியவனை தடுத்தார் சுந்தரி.
“எங்கடா போற?” என்றார்.
‘ஐயோ அம்மா! கல்யாணம் நடக்கற வரைக்கும் மீராவ பார்க்ககூடாதுன்னு சொல்லிருகாங்கல்ல? இப்போ என்ன பண்றது? ஒருவேளை இந்த பச்சைமிளகா தான் மாட்டி விட்ருப்பாலொ? சரி சமாளிப்போம்’ என்ற யோசித்தான்.
“என்ன கேள்விம்மா இது? வெளிய போகும் போது? வேலை விஷயமா வெளிய போறேன்” என்று சமாளித்தான்.
“எங்க நீ கூட மீராவ பார்க்க போறியோன்னு நினைச்சிட்டேன்” என்றார் சுந்தரி.
“எனக்கு வேற வேலையே இல்லையா? போங்கம்மா” வெளியே வந்துவிட்டான்.
நேராக மீரா வீட்டின்முன் கதவை தட்டினான்.
“மீரா! மை டார்லிங் கதவை திறடி” என்றான்.
“முடியாது இன்னும் ரெண்டு செகண்ட்” என்றவள் புடவையை கட்டி முடித்திருந்தாள்.
‘ஹ்ம்ம்.. இப்போ போய் கதவை திறக்கலாம்’ என்று கதவை திறந்து நின்றிந்த க்ருஸ்வந்தை “உன்னை தான் இங்க வரகூடாதுன்னு சொல்லிருகாங்கள்ள? எதுக்கு வந்த?” என்றாள் மீரா.
“யாரு சொன்னது? யாரும் சொல்லலையே” என்று உள்ளே அவள் பின்னாலேயே கதவை தாழிட்டான்.
“இப்ப எதுக்கு கதவை மூட்றிங்க?’  என்று கண்ணாடியின் முன் நின்று நெற்றியில் போட்டு வைத்து கொண்டிருந்தாள்.
கண்ணாடியில் அவளை பார்த்தபடியே பின்னாலிருந்து நெருங்கி அவள் இடையினில் இருகரம் கொடுத்து தன் மார்போடு அணைத்தான்.
இடையினில் அவன் கரம் பட்டவுடன் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் ஓர் உணர்வு தோன்ற “என்னை விடுங்க” என்று திமிறினாள்.
“அவள் பின்னாலிருந்து கண்ணாடியில் அவளை பார்த்தபடியே அவளின் கழுத்தினில் முகம் புதைத்தவன், “நான் தான் சொன்னேன்ல இந்த புடவையை நா தான் நீ கட்னப்புறம் பர்ஸ்ட் பார்ப்பேன்னு” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
கிறங்கும் குரலில், “எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? கல்யாணகளையான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இப்பெல்லாம் உன் முகத்துல தனி அழகு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது” என்றான் அவள் செவியருகில்.
“ப்ளீஸ் தள்ளி போங்க” என்று அவனை பார்க்காமல் அவளின் இதழ்கள் முனுமுனுத்தாலும் அதற்கான செயல்களை இருவரும் மறந்திருந்தனர்.
“முதல் முறையா என் பச்சைமிளகா என்கிட்டே இவ்ளோ அடக்கமா பேசுறதை இன்னைக்குதான் பாக்குறேன். இதுவும் நல்லா தான் இருக்கு” என்றவன்.
“நான் எதுக்கு தள்ளி போகணும். இவ்ளோ நாள் உன்னை விட்டு தள்ளி இருந்ததே எனக்கு நரகத்துல எமன் கூட உக்கார்ந்து இருந்த மாதிரி இருந்தது.” என்றான்.
அவனின் பேச்சு அவளின் நடுக்கத்தை சற்று குறைத்திருந்ததால் மணியோசை போல் எழுத்து அவளின் சிரிப்பு.
“எல்லாம் இருக்கட்டும் ப்ளீஸ்… “ என்று அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
எதுவும் பேசாமல் க்ருஷ்வந்த் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அதன்பிறகு ஸ்ருஷ்டிமீரா எத்தனை முறை போன் செய்தாலும் எடுக்கவில்லை. மனப்பெண்ணிற்கு நலுங்கு வைக்கும் வைபவம் முடிந்தது  
இதோ இன்று வரவேற்ப்பு, மாலை ஐந்து மணி எல்லோரும் பரபரப்பாக மண்டபத்திற்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்.
க்ருஷ்வந்தும் உற்சாகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வருத்தம் அவனுக்குள் தெரிய முகம் வாட்டம் கண்டிருந்தது.
சுந்தரி மற்ற எல்லோரும் மண்டபத்திற்கு முன்னயே சென்றிருந்தனர். 
மாப்பிள்ளையுடன் சந்தோஷும் மீராவுடன் க்ருஸ்வந்தின் தங்கை மைதிலியும் இருந்தனர். 
திடிரென்று ஓடிவந்த மைதிலி, “அண்ணா”
“என்னம்மா எல்லாரும் போய்டாங்களா? நாமளும் போலாமா?” என்றான் அவளை பேசவிடாமல்.
“அண்ணா அண்ணி ரெடியாகிட்டாங்க. ஆனா…” என்றாள் மைதிலி.
“ஆனா என்ன?” என்று பரபரப்பானான்.
“இல்ல அண்ணி அழுகுறாங்க. வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க” என்றாள்.
“சரி. நான் போய் கூட்டிட்டு வரேன். சந்தோஷை கார் எடுக்க சொல்லு” என்று மீராவின் வீட்டை நோக்கி சென்றான்.
அவள் இருக்கும் இடத்திற்கு சென்றவன் அப்படி ஸ்தம்பித்து தான் போனான்.
கொள்ளை அழகு கொண்ட மங்கையை, ஒளி தரும் வெளிச்சமாய், அவனை திணறடிக்கும் சுவாசமாய் நின்றிந்தாள் அழகின் ஓவியமாய் அங்கே.
“போலாமா?” என்றான் ஒற்றை வார்த்தையில் அவளை பார்க்காமல்.
சுருக்கென்று இருந்தது அவளுக்கு.
“நான் கொஞ்சம் பேசணும்” என்றாள் தெளிவாக.
“இப்போ பேச நேரமில்லை. அப்புறம் பேசிக்கலாம்” என்று வாசலை நோக்கி நடந்தான்.
“இல்ல. நாளைக்கு உங்க மனைவியா தான் இங்க வர போறேன். அதனால, இப்போயே இங்கேயே பேசணும்” என்றாள் விடாபிடியா.
“என்னை மன்னிச்சிடுங்க. உங்களை பிடிக்காமல்லாம் உங்களை விட்டுவிலகி போல… என்னோட பயம் தான் காரணம்” என்று அவனை நோக்க அவன் எதுவும் பேசாமல் அமைதியாக கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
“ஆமா! சின்ன வயசுலர்ந்தே நான் ஆசப்பட்ற எதுவும் எனக்குன்னு நிலைச்சதில்ல. உண்மை தான் அம்மான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். கடவுள் நான் சந்தோஷமா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டார் போல… முதல்ல எங்க அம்மா இறந்துட்டாங்க. அடுத்து அப்பானா என் உயிர் அதனாலதானா என்னவோ அடுத்து அப்பாவும் இறந்துட்டார். அடுத்து என் மேல எந்த சுயநலமும் இல்லாம நீங்க காட்டன அன்புக்கு எப்பவுமே நான் அடிமை” என்று அவனை நோக்க எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் க்ருஷ்வந்த்.
“நீங்க ஒவ்வொரு தடவை என்கிட்டே நெருங்கி வரும்போதும் எனக்கு பிடிக்கும். ஆனா, பயமா இருக்கும்” என்றாள்.
“என்னை பத்தி கேள்வி பட்டு என்னை போய் கல்யாணம் பண்ணிக்கிறிங்கன்னு உங்களை யாராவது ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது. இப்போ கூட கல்யாண மண்டபத்துல் ஏதாவது சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு. நீங்களும் என்னை விட்டு போய்ட்டா இந்த உடலும் உயிர் விட்டு போயிருக்கும். ப்ளீஸ் என்னை புரிஞ்சிகோங்க” என்றாள் தவிப்பாய்.
பெருமூச்சிவிட்டவன், “என்னை விரும்புறியா? என்னை இத்தனை நாள் காக்கவச்சதுக்கு சாரி கேக்கனும்னு நினைக்கிறியா?” என்றான்.
“ஆமாம்” என்று தலையசைவில்அவள் கூற.
“இங்க வா” என்றான்.
அருகில் வந்து நின்றாள் ஸ்ருஷ்டிமீரா.
“உண்மையா என்னை விரும்புறியா? என்னை மனசார தான் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
“ஆமாம்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
“தென் கிஸ் மீ” என்றான்.
மெல்ல விழிகளை மூடியவள் பின் திறந்து அவனின் கன்னத்தில் தன் இதழை தொட, “நோ! நான் சின்ன குழந்தை கிடையாது. ஐ வான்ட் ஹியர்” என்று தன் இதழை சுட்டி காட்டினான்.
“இப்போ கூட இழுத்து வச்சி நானே கொடுத்துருவேன். பட், உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னே டவுட்டாகிடுச்சு. அதான் நீயே கொடு” என்றான் சிரிக்காமல்.
அவன் இதழோடு தன் செவிதழை சேர்த்து தன் அன்பினை பகிர்ந்த நொடி இருவருக்குள்ளும் ஒரு பந்தம் உருவானது போல் தோன்றியது.
க்ருஸ்வந்தின் மொபைல் அடிக்க இருவரும் பிரிந்தனர்.
மீராவின் முகமோ செங்கதிரின் சூரிய ஒலி போல் சிவந்திருக்க அதை கண்டவன் உள்ளுக்குள் சிரித்தாலும் ‘என்ன எவ்ளோ பாடு படுத்தின பச்சைமிளாகா’ என்று நினைத்து கொண்டு “போலாம் அம்மா தான் சீக்கிரம் வாங்கன்னு கூப்பிட்றாங்க” என்றான்.
மணமக்கள் இருவரும் மனநிறைவோடு மண்டபத்தை அடைந்தனர்.
ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துவரபட்டனர்.
க்ருஸ்வந்த் மீராவின் கைகளை இறுக பற்றிக்கொண்டு, “ஒன்னும் பயபடாதே. நான் இருக்கேன். இனி, இந்த நொடில இருந்து என் மரணம் வரை உன் கூட ஏதுவா இருந்தாலும் உனக்கு துணையா நான் இருப்பேன். சரியா?” என்று தைரியமூட்டினான்.
வாழ்த்த வந்தவர்கள் மணமக்களை மனமார வாழ்த்திவிட்டு சென்றனர்.
வரவேற்ப்பு முடிந்து மறுநாள் காலை நாலரை மணிக்கு முகுர்ந்தம்.
எல்லோரும் உறங்கி விட்டனர் இரு உள்ளங்களை தவிர.
“ஹலோ! என்ன பண்ற?” என்று பேசிக்கொண்டிருந்தான் பக்கத்துக்கு அறையில் இருந்த மீராவிடம் க்ருஷ்வந்த்.   
    .        
.   

Advertisement