Advertisement

31
“ஒழுங்கா வண்டியை எடுங்க. இல்லை, அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
“அத்தைகாவது சொல்லு இல்ல சொத்தைகாவது சொல்லு. ஆமா உங்க அத்தைக்கு போன் பண்ணி என்ன சொல்லுவ?” என்றான்.
“ஹ்ம்ம் நீங்க ….” என்று அமைதியானாள்.
“சொல்லு?” என்றான் சிரித்தபடி அவளை பார்த்துக்கொண்டே.
“இல்ல நீங்க முதல்ல வண்டிய எடுங்க” என்றாள் விடாபிடியாக.
“முடியாது” என்றான் அவனும்.
இருவரும் கைகளை கட்டிக்கொண்டு வேறு வேறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொள்ள நேரம் ஓடியதே தவிர இருவரும் சமாதானத்திற்கு வரவில்லை.
“ஹையோ! நேரம் ஆகுது. ப்ளீஸ்! வண்டிய எடுங்க” என்றாள் ஸ்ருஷ்டிமீர.
“முடியாது. நீ நான் கேட்டத கொடு. உடனே வண்டிய எடுக்குறேன்” என்றான் கிருஷ்வந்த்.
“சரி. கண்னை மூடுங்க” என்றவுடன் கண்களை மூடியவன் ஒற்றை கண்ணை தீறந்து பார்க்க.
“இது சீட்டிங். ஒழுங்கா கண்ணா மூடுங்க” என்றாள்.
அவளின் கைகளில் நடுக்கம் தெரிவதை கண்டு க்ருஷ்வந்த் கண்களை மூடிகொண்டான்.
அவளும் மெல்ல தயங்கியபடி அவனை நெருங்கி கன்னத்தில் இதழ் பதிக்க செல்ல, கேடி க்ருஷ்வந்த் தன் இதழை அவளோடு சேர்த்தான்.
சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து பிரிந்தவள் அவனை நோக்காமல் முகத்தை திருப்பி கொள்ள இவனும் தன் எண்ணங்களில் மூழ்கி வண்டியை வீட்டிற்கு செலுத்தினான்.
வீடு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசாமல் வந்தனர்.
காரை விட்டு இறங்க போனவளின் கரத்தை பற்றியவன். “கோபமா?” என்றான்.
இல்லை என்று தலையை மட்டும் ஆட்டியவள் அவனிடம் கையை விடுவிக்க முயன்றாள்.
“சொன்னா தான் விடுவேன்” என்றான்.
“இல்லை கையை விடுங்க” என்றாள்.
“சரி. அப்டினா என் கண்ணை பார்த்து சொல்லிட்டு போ” என்றான்.
அவன் விழிகளை நோக்கியவள் அவளுக்கான தேடல் அங்கே நிறைத்திருக்க எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீர் வழிய அவனை கட்டிகொண்டாள்.
“ஹே! நான் சும்மா விளையாடினேன்.” என்றான் பதறிபோய்.
“இல்ல சும்மா தான்” என்று வேகமாக இறங்கி தன் வீட்டை அடைந்தவள் கதவை சாற்றி கொண்டு அவன் இதழ் பதித்த தன் இதழை தடவிக்கொள்ள கன்னம் தானாக சிவந்தது.
திருமணத்திற்க்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கும் பொழுது மீராவை பார்க்க வந்தான் க்ருஷ்வந்த்.
சத்தம் போடாமல் உள்ளே வந்தவன் தான் எடுத்து வந்த புடவையை அவளின் படுகையின் மேல் வைத்துவிட்டு சமையல் அறை வாசலில் கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்த மீராவை பின்னாலிருந்து அணைக்க, திடிரென்று இப்படி நடக்க பயந்து போனாள் மீரா.
“ஏய் பச்சைமிளகா நான் தான்டி. வெளில தான் தைரியமா இருக்க மாதிரி காட்டிக்குற. ஆனா, சரியான பய்ந்தாங்கொல்லிடி நீ.” என்றான்.
இடுப்பில் கை வைத்து முறைத்தபடி, “என்னது பச்சைமிளகாயா?” என்றாள்.
அவளை ஏற இறங்க பார்த்தவன். ‘ஐயோ இந்த புடவைய வேற இப்படி கட்டிக்கிட்டு என்னை பாட படுத்தி கொல்றாளே ராட்சசி. இவ்ளோ அழகா இருந்தா எவ்ளோ நாள் தான் சும்மா தூர இருந்து பார்க்கறது.’ என்று பெருமூச்சிவிட்டபடி அவன் பார்வை வந்து நின்ற இடம் பாவையவளின் மூடாத பாகமான வெண்ணை இடை. .
அதை பார்த்த மீரா. ‘என்ன இப்படி முறைச்சி பார்க்கறான். இவன் பார்வையே சரி இல்லையே?’ என்று அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தவள் பட்டேன்று தன் புடவையை சரி செய்து கொண்டாள். 
“ஏய் இப்ப எதுக்குடி இழுத்து விட்ட ரொம்ப தான் பண்றடி நீ.” என்றான் க்ருஷ்வந்த்.
“என்னது? உன் பார்வையே சரி இல்ல. நீ முதல்ல வெளில போ” என்று  வேலையை தொடர்ந்தாள்.
அவனின் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்து இருந்தது.
காரணம் அவனின் நாயகி அங்கே செய்து கொண்டிருந்த வேலை. 
பின்ன புடவைய நல்லா இடுப்புல தூக்கி சொருகிட்டு தனக்கு எட்டாத மேல் ஸ்லாபில் இருந்த டப்பாவை எடுக்க முயச்சி செய்துகொண்டிருந்தாள்.
அவள் மேனியின் அங்க வளைவுகள் அச்சு பிசகாமல் அம்சமாய் தெரிய பாவம் இவனென்ன செய்வான். மேலே தூக்கி கொண்டையிட்ட கூந்தலில் ஒரு சில அவளின் முன் நெற்றியில் சுருண்டு விழுந்து காற்றில் ஆடிகொண்டிருந்தது. தன் இடக்கையால் அதை ஒதுக்கி விட்டவள். தன் வேலையை தொடர்ந்தாள். அவளின் நெற்றியில் இருந்து கிளம்பிய வியர்வை துளிகள் அவள் அங்கங்களை தரிசித்துவிட்டு மெல்ல அவள் இடையினை வந்து சேர்ந்தன. 
 “இல்ல… இன்னைக்கு நான் ஆபிஸ் லீவ் நீயும் லீவ் போட்ரு நாம் வெளில போலாம்” என்றான்.
“முடியாது போடா” என்றாள் மீரா.
“என்னது டாவா?” என்றான் நம்பமுடியாமல்.
“ஆமாடா உனகென்னடா மரியாதை போடா” என்று வேண்டுமென்றே அவனை டா போட்டு கூப்பிட்டு சீண்டினாள்.
“வேணாம்டி. டா போட்டு கூஃப்பிடாத அப்புறம் நான் எதுக்கும் பொறுப்பில்லை. பாரு பச்சைமிளகாய்க்கு கையும் காலும் முளைச்ச மாதிரி இருந்துகிட்டு என்னை டா போட்டு கூபிட்றா” என்று புலம்பினான்.
“அப்படி தான்டா கூப்பிடுவேன். டா டா டால்டா போடா” என்று முடிப்பதற்குள் அவள் இடையினில் கரம் கொடுத்து தன்னருகே இழுக்க. அவன் கரம்பட்டவுடன் அவளின் மேனியில் மின்சாரம் பாய இதழ்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது.
“என்ன …பண்ற… என்னை… விடு..டா …” என்றாள் திக்கி திணறிய மெல்லிய குரலில். 
“இவ்ளோ நேரம் ஊருக்கே கேக்குற மாதிரி கத்திட்டு இருந்த இப்போ ஏன் இவ்ளோ உள்ள போன குரல்ல பேசுற?” என்றான் மிக மெதுவாக .
“ஹும்ம்” 
“ஏன்டி பச்சைமிளகா எவ்ளோ நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச? இப்போ …” என்று அவளின் கிழிதழை தன் இரு விரலால் “இப்படி தந்தி அடிக்குது?” என்று சீண்டினான்.
“ப்ளீஸ் என்னை…விடு…” என்றாள்.
“விட்டுட்டா போச்சு …” என்று விரலால் பிடித்திருந்த இதழை விட்டு பின் எதிர்பார்க்காமல், “எந்த ரசகுல்லா எப்டி இருக்குன்னு நான் டெஸ்ட் பண்ண போறேன்” என்று அவள் இதழருகே நெருங்க அவனை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள்.
அவளை தொடர்ந்து ஓடியவன் அவள் அருகே நின்று, “இது கூட நல்லா தான் இருக்கு. ஆனா, என் செல்ல ராட்சசி என்னால இதுக்கு மேல இங்க அமைதியா இருக்க முடியாதே? சோ, இப்போ நான் என்ன பண்ண?” என்று கண்ணடித்தபடி குறும்பாய் கேட்டான்.
வேகமாய் விலகி அறைக்கு ஓடி கதவை சாத்தினாள்.
“ஏய் பச்சைமிளகாய் கதவை திறடி டார்லிங்” என்றான்.
“முடியாது போடா” என்றாள் உள்ளே இருந்தபடி.
“கதவை சாத்திட்டா? என்னைக்கு இருந்தாலும் உன் மொத்த அழகும் எனக்கு தான். இன்னும் எவ்ளோ நாள் என்கிட்டே இருந்து தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன்டி பச்சைமிளகாய். சரி அங்க உன் பெட்மேல புடவை இருக்கு கட்டிக்கிட்டு ரெடி ஆகிடு இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்.” என்று சென்றான்.
‘ஹப்பா போய்ட்டான். இவன் என் பக்கத்துல வந்தாலே எனக்குள்ளே ஏகப்பட்ட தடுமாற்றங்கள் வருதே’ என்று நினைத்தபடி ரெடியானாள்
இப்படியே இருந்த கொஞ்ச நாளும் ஒடிற்று. இதோ, அவர்களின் திருமணநாளும் நாளை வந்துவிட்டது.

Advertisement