Advertisement

30
அவர்களின் இடத்திற்கு சென்றவன். காலியாக இருந்த இடமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கொள்ளை அழகோடு ஒரு நர்சரியை ஆரம்பித்திருந்தாள். 
“ஸ்ருஷ்டிவந்த்” என்று பெயர் பலகை மாட்ட பட்டிருந்தது.
அதை பார்த்தவன் தன் வாயின்மேல் கைகளை வைத்து ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு நின்றான்.
‘இந்த பச்சைமிளகாய் இதெல்லாம் எப்டி பண்ணா? நானும் அவளை இத வாரம் முழுக்க வேலை பிஸில பார்க்கவே இல்ல. அப்பா எவ்ளோ சூப்பரா இருக்கு? என் ஸ்வீட் டார்லிங் உன்னை அப்டியே தேன்ல ஊறவச்சி சாப்பிட போறேன்’ என்று வழக்கம் போல் அவனுக்குள் பேசிகொண்டிருக்க.
“ஏன்டா வந்தவன் எதுக்கு இங்க நின்னு யோசிச்சிட்டு இருக்க?” என்று அவனின் அம்மா கேட்டார்.
“அம்மா நீங்க எப்டி இங்க?” என்று கேட்டான்.
“நான் எப்டியா?” என்று முறைத்தார்.
“இல்லம்மா மீரா என்னை போன் பண்ணி கூப்பிட்டா? உங்களையும் கூப்பிடாளான்னு கேட்டேன்” என்றான் மழுப்பலாக.
“இந்த ஒரு வாரமா நானும் அவளும் தான் இதெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கோம்.” என்றார்.
“என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல இவ உங்களை ஏன் அலைய வைக்கணும்” என்றான் பொய் கோபத்துடன்.
“போதும்டா. நீயாவது அவமேல கோபப்பட்றதாவது. அப்புறம் என்னை ஒரு வேலையும் செய்யவிடலை எல்லாத்தையும் அவ முடிச்சிட்டு என்னை காட்றதுக்கு கூட்டிட்டு வருவா அவளோ தான்” என்றார்.
‘ஹ்ம்ம் இருடி பச்சைமிளகாய் வரேன்’ என்று “சரிம்மா உள்ளே போய் பார்த்துட்டு வரேன்” என்றான்.
“சரிடா நான் கிளம்புறேன். நீ மீராவா கூட்டிட்டு வந்துரு. வேலை இருக்குன்னு விட்டுட்டு போயிராதடா” என்று கிளம்பினார்.    
‘என்னது நான் அவளை விட்டுட்டு போயடுவேனா? எங்கம்மாக்கு என்னை பத்தி தெரியல.’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அந்த இடம் முழுவதும் பச்சை நிற சிறு செடிகள் நிரம்பி வழிந்தன.
அவளை தேடும் கண்களுக்கு விருந்தானாள் அவனின் பச்சைமிளகாய்.
அடர்நீல புடவையில் கோல்டன் நிற பார்டர் பான்சி சில்க் புடவையில் மிகவும் அழகாக இருந்தாள்.
அங்கே இருக்கும் ஒரு பெண்ணிடம் பேசிகொண்டிருக்கும் அவளின் அங்க அசைவுகளை பார்த்தபடி நின்றிருந்தான்.
அசைந்தாடும் சிறு ஜிமிக்கி கன்னத்தில் குழிவிழ சிரிக்கும் அவள்.
“ஒரு நொடியும் 
உன்னை பார்வையாலும்
பிரிய நினையேன் அன்பே!
நீ என்னை வந்தடையும் வரை…” 
பேசிக்கொண்டே ஓரகண்ணில் அவனை கண்டு கொண்டவள் அவனிடம் வந்தாள்.
“ஏன் இங்கயே நின்னுடிங்க. உள்ள வாங்க” என்று அவன் கை பிடித்து கூட்டிசென்றாள் 
“உன் ஸ்பரிசம் 
என்னுள் ஆயிரமாயிரம் மின்னல்களை 
உருவாக்குகிறதடி பெண்ணே!
என்னை தீண்டாமலே    
உன் ஒற்றை பார்வையில் 
வதைக்கும் மாயமென்னவோ?”
“இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு மீரா” என்றான்.
“தேங்க்ஸ். வாங்க” என்று நடந்தவள் ஒரு பெண்ணிடம் சென்று நின்றாள்.
“இவங்க என் கஸ்டமர் கல்பனா. இவங்களுக்கு ஏற்கனவே மூணு நற்செரி கார்டன் இருக்கு எனக்கு பூக்கள் பிடிக்கும்னு என்னையும் ஒரு நர்சரி ஆரம்பிக்க சொல்லிட்டே இருப்பாங்க. இந்த பூச்செடிகள் எல்லாம் இவங்க கார்டன்ல இருந்து வாங்கினது தான்.” என்றாள்.
அறிமுகபடுத்தி கொண்டு பேசியவன் பின் தள்ளி நின்று தன்னவளின் நடையும் சிரிப்பும் வருபவர்களை உபசரிக்கும் விதமும் எல்லாவற்றையும் நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
அவனருகில் வந்தவள் மற்றவர்களை பார்த்து சிரித்து கொண்டே, “என்ன பண்றிங்க என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள்.
“யார் என்ன நினைச்சா எனக்கென்ன? நீ எவ்ளோ அழகா இருக்க? நானா இருக்க தொட்டு சும்மா நின்னு பார்த்துட்டு இருக்கேன். இதே வேற யாராவது என் இடத்துல இருந்தா மயக்கமே போட்ருப்பாங்க” என்றான்.
“என்ன கிண்டலா?” என்றாள் மீரா.
“சத்தியமா டி. சரி எப்போ முடியும் நாம வீட்டுக்கு போலாம்” என்றான்.
“இன்னும் அரைமணி நேரம் ஆகும். அதுவரைக்கும் என்னையே பார்த்துட்டு இருக்காம வேற எதவாது செய்ங்க” என்றாள்.
“எனக்கு தெரிஞ்சுது உன்னை சைட் அடிக்கறது மட்டும் தான். அதையும் செய்யவேணாம்னா என்ன பண்றது?” என்றான் பாவமாக.
“உங்களை இருங்க அப்புறம் பேசிக்கிறேன்” என்று நகர்ந்தாள்.
“ஹக்கம் அப்டியே பேசிட்டாலும்” என்று மறுபடியும் தன் வேலையை சிறப்பாக செய்ய ஆரம்பித்தான்.
இப்படியே இவங்க நாட்கள் மிக அழகாக நகர்ந்தது. நம்ம க்ருஷ்வந்த் தான் ரொம்ப ஆவலா கல்யாண நாளை பார்த்துட்கிட்டு இருந்தார்.
அவர் மட்டுமா நாமளும் தான?
செல்ல சண்டைகளும் சின்ன சீண்டல்களும் அவர்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
மீரா தான் க்ருஷ்வந்த்தை தன்னை நெருங்க விடாமல் ஒரு கோட்டுக்குள்ளேயே வைத்திருந்தாள். அவளுக்குள் இருக்கும் பயம் அவன் தன்னை நெருங்கினால்  எங்கே தன்னை அவனுக்குள் இழந்து விடுவோமோ என்று. அதை அவனும் அறிந்திருந்ததால் சீண்டினாலும் சற்று தள்ளியே இருந்தான்.
திருமண பத்திரிக்கை அச்சடித்து வந்துவிட்டது. எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். கல்யாண புடவை நகைகள் என்று எல்லாம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். எல்லா  ஏற்பாடுகளும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.   
“மீரா“ என்று சுந்தரி வர, “சொல்லுங்கம்மா” என்றாள் ஷ்ருஷ்டிமீரா.
“இன்னும் இருபது நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு அதனால இந்த வாரதுக்குள்ள பத்திரிக்கைய கொடுத்து முடிச்சிடுங்க. அதுக்கப்புறம் வெளிய அனுப்ப மாட்டேன் சொல்லிட்டேன்” என்றார்.
“சரிங்கம்மா “ என்று சிரித்தாள்.
அவளின் கண்டிப்பும் மீராவிற்கு பிடித்திருந்தது.
தன் நெருங்கிய தோழிகள் மற்றும் ஒரு சிலருக்கு மட்டும் பத்திரிக்கை வைக்கவேண்டும் என்று மீரா சொல்ல க்ருஷ்வந்தும் அவளை அழைத்து கொண்டு சென்றான்.
“உன்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துருக்கேன். எனக்கு ஒன்னும் கிடையாதா?” என்றான் ஏக்கமாக.
“பசிக்குதா வாங்க போற வழில சாப்டுட்டு போவோம்” என்று உள்ளுக்குள் சிரித்தாள் மீரா.
“எல்லாம் என் நேரமடி” என்று அவள் பின்னே சென்றவன். காருக்குள் அமர்ந்தவுடன் இயக்காமல் இருக்க. 
“என்ன ஏன் கார் ஸ்டார்ட் பண்ணலை. போங்க இப்ப கிளம்பினா தான் நைட்குள்ள வீட்டுக்கு போகமுடியும்” என்றாள்.
“ஹ்ஹும்ம்” முடியாது என்று தலையாட்டினான்.
“எதுக்கு இப்ப வம்படி பண்ணிட்டு இருக்கீங்க?” என்று பொறிந்தாள்.
“கோபமா இருக்கும் போது கூட அழகா தான்டி இருக்க பச்சைமிளகாய்” என்றான்.’
“என்னது மறுபடியும் பசைமிளகாயா? உங்களை…” என்று கை ஓங்கியவளை தடுத்து, “பின்ன எவ்ளோ நாளா ஒரே ஒரு கிஸ் கேட்டுட்டு இருக்கேன். ரொம்ப தான் பிக்கு பண்ணிக்கிற? இன்னைக்கு என்ன ஆனாலும் சரி நீ கொடுத்தா தான் வண்டியை எடுப்பேன்” என்றான்.

Advertisement