Advertisement

29
“எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக.
அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன்.
“என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி வளையல் கேக்குற?” என்றான் மீண்டும் நம்பாமல்.
“என்னது தங்கமா? நீங்கள் வேற இந்த கண்ணாடி வளையல்ல இருக்க அழகு எத்தனை வைர வளையல் தங்க வளையல் போட்டாலும் வருமா? இங்க பாருங்க எத்தனை கலர் இருக்குல்ல?” எனக்கு அந்த கிரீன் கலர் அப்புறம் அந்த பிங்க் கோல்டன் பட்ட வச்சது வேணும் வாங்கி தரமுடியுமா முடியாதா?” என்றாள் அடம் பிடிக்கும் குழந்தையாய்.
“சரி சரி வாங்கி தரேன்” என்றவன் அவள் சொல்ல சொல்ல கேட்காமல்  அங்கு இருந்த அணைத்து நிற வலையல்களிலும் ஒரு ஒரு டசன் வாங்கி கொடுத்தான். அதில் இருந்து அவள் புடவை நிறத்திற்கு ஏற்ற வலைகளை எடுத்து கைகள் நிறைய போட்டு கொண்டவள். அவன் முகத்திற்கு நேரே இரு கைகளையும் முட்டி வரை  தூக்கி கண்களை சிமிட்டி முகம் முழுவதும் விளக்கொளியில் மின்ன ஆட்டி காட்டினாள்.
மிகுந்த பிரமிப்புடன் அவள் முக தேஜசை அசந்து போய் கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
‘இவ உண்மையா இன்னைக்கு  என்னை ஒரு வழி பண்றதுன்னே முடிவு பண்ணிருக்கா. எவ்வளவு அழகா இருக்கால்ல?  இவ முகத்துலர்ந்து என் பார்வைய எடுக்கவே முடியலையே? ஓஹ காட்! என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு? எவ்ளோ நாள் காத்துட்டு இருக்கேன் இன்னும் ரெண்டு மாசம் சீக்கிரமா கண் மூடி திறக்கறதுக்குள்ள போயடக்கூடாதா? இவ்வளவு நாளா எப்பவும் முகத்தை உம்முன்னு வச்சிட்டு இருப்பா அப்பயே இவள பிடிச்சி போய் தான் விரும்பினேன். இப்ப அதைவிட மோசம் என் நிலைமை. எந்த நேரமும் ஜொலிக்கிற அழகோட இப்படி  என்கிட்டே வந்தா நான் என்ன பண்ணட்டும்?’ என்று தனக்குள்ளேயே பேசிகொண்டிருக்க..
அவன் நெற்றியில் விபூதியை இட்டவள். “ஆரத்தி காட்டி எவ்ளோ நேரம் ஆகுது? பரவால்ல இவ்ளோ பக்தியா உங்களுக்கு? ஆமா இவ்ளோ நேரம் கண்ண திறந்துகிட்டு கைய கூப்பி என்ன வேண்டிகிட்டிங்க?” என்றாள் வெகுளியாய்.
‘என்னது ஆரத்தி காட்டிடாங்களா? நான் எங்க கும்பிட்டேன்? என் நிலைமைய சாமிக்கு விளக்கமா சொல்லிட்டு இருந்ததுல இத கவனிக்கல’ என்று நினைத்தவன். “ஒண்ணுமில்ல நீ எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்னு தான் வேண்டிகிட்டேன். போலாமா?” என்றான்.
“போலாம்” என்று வெளியில் வந்தவர்கள். 
“அந்த விநாயகர் சிலை அழகா இருக்குல்ல? வாங்கிக்கலாம்” என்றாள்.
“சரி” என்றவன். 
“இந்த பொம்மை எவ்ளோம்மா?” என்றான் விற்கும் பெண்ணிடம்.
“முந்நூறு ரூவா சாமி” என்றாள் அந்த பெண்.
தன் சட்டை பாக்கெட்டில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்து கொடுக்க போனவனிடம் இருந்து பிடுங்கியவள் அவனை முறைக்க. “நீ தானே வேணும்னு கேட்ட?” என்றான் ஒன்றும் புரியாமல்.
“என்னது முந்நூறு ரூபாவா? எங்களுக்கு வேண்டாம் நீயே வச்சிக்க“ என்றாள் மீரா.
“அக்கா அக்கா.. ஏன் அக்கா வேண்டாம்னு சொல்றிங்க? நீங்க ஒரு விலை கேளுங்கக்கா தரேன்” என்றாள் அந்த பெண்.
க்ருஷ்வந்த் அந்த சாய்பாபா சிலையையே பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்தவள். “உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். அதோ அந்த சாய் பாபாவும் இந்த விநாயகரும் சேர்த்து இரநூறு ரூபா கொடுத்திரு” என்றாள்.
க்ருஷ்வந்த் அவளையே ஆச்சரியாமாக பார்த்திருந்தான்.
‘எம்மா பலே கேடியா இருப்பா போல இருக்கே? ஒரு பொம்மை முன்னூறு சொன்னா இவ ரெண்டு பொம்மைய இரநூறு கேக்குறா?’ என்று யோசிக்க.
“அக்கா இரநூத்திம்பது கொடுங்க” என்று கேட்டால்.
“இல்ல வேணாம் நீயே வெச்சுக்க. அதோ அந்த கடைல வாங்கிக்குறேன்” என்று நகர முயல, “சரி இந்தாங்க” என்று இரு பொம்மைகளையும் கொடுத்தாள் அந்த பெண்.
அவற்றை ஆசையோடு வாங்கி கொண்டாள்.
“போலாமா?” என்றாள்.
 “போலாம்” என்று தன் காரினருகே சென்றான்.
“ஹே மீரா” என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க திரும்பினாள் அங்கே அவளின் தோழி.  நின்றிருந்தாள்.
“ஹே திவி! ஹொவ் ஆர் யு?” என்று கேட்டபடி அவளை கட்டிகொண்டாள் மீரா.
“ஐ அம பைன். ஹொவ் ஆர் யு? ஹொவ் இஸ் யுவர் லைப்? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டேன். உன் ஹஸ்பண்ட எங்க?” என்று கேட்க மீரா அருகில் நின்று கொண்டிருந்த க்ருஷ்வந்த்தை அருகில் இழுத்து நிற்க வைத்து. “ஹி இஸ் மை ஹஸ்பன்ட் க்ருஷ்வந்த்” என்று அறிமுக படுத்தினாள்.
ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக அதிர்ச்சியாகவும் பார்த்துகொண்டிருந்தான் அவளின் க்ரிஷி.
‘இப்போ தான் முதல் முறையா என்னை ஒருத்தங்க கிட்ட அறிமுக படுத்துறா என்னை லவர்னு அறிமுகபடுத்துவான்னு பார்த்தா நேரா புருஷன்னு சொல்லிட்டா?’ அவனுக்குள்ளேயே கேட்டுகொண்டான்.
“என்னங்க இவ என் காலேஜ் மேட் திவ்யா. யு.எஸ்ல இருக்கா.” என்று அறிமுகபடுத்தினாள்.
அவனும் “ஹாய்” என்று சிறிது நேரம் பேசியபின் “சரி திவி கிளம்புறோம்.  ரொம்ப நேரம் ஆகிடுச்சு வீட்ல அத்தை எங்களுக்காக காத்திட்டு இருப்பாங்க” என்றாள்.
‘என்னது அத்தையா? எங்கம்மாவையா சொல்றா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுகொண்டான்.
திவ்யா மீராவின் காதில் ஏதோ சொல்ல அவளின் முகம் செந்நிறமாய் மாறி பின் இயல்பு நிலைக்கு வருவதை கண்டவன் ‘அப்டி என்ன சொல்லிருக்கும் இது? என் மீரா முகம் இவ்ளோ ப்ளாஷ் அடிக்குது’
“பாய்” என்று இவர்கள் கிளம்பினார்கள்.
அமைதியாக வரும் மீராவை கண்களில் கண்டுகொண்டே வந்தவன். 
“ஆமா அந்த பொண்ணு உன் காதுல என்ன சொல்லுச்சு?” என்று கேட்டான்.
“அது இப்ப உங்களுக்கு ரொம்ப முக்கியமா?” என்று கேட்டவளை முறைத்து, “இப்போ சொல்றியா இல்லையா? நிச்சியமா என்னை பத்தி தான் ஏதோ சொல்லிருக்கு. தெரிஞ்சிகலை எனக்கு தலையே வெடிச்சிரும்” என்றவனை பார்த்து மெல்ல வெட்க புன்னகை சிந்தியவள்.
‘இப்போ என்ன கேட்டேன்? எதுக்கு இவ வெட்க படுறா?’ 
“அது …” என்று  தயங்க, “ஹ்ம்ம்” என்றான். 
”அது நீங்க ரொம்ப அழகா இருக்கிங்களாம்” என்றாள்.
“சரி. அது தான் எனக்கே தெரியுமே? இது மட்டும்தானா சொன்னா இதுக்கா நீ வெட்கபட்ட?” என்று கேட்டான்.
“அது அது நீ வேற ரொம்ப அழகா இருக்கியா? அதனால சீக்கிரம் உன்னை மாதிரிஈ….” என்று இழுக்க.
“ஒரு லைன் சொல்றதுக்கு எவ்ளோ திணர்றா.. ஆனா என்னை திட்டனும்னா மட்டும் எவ்ளோ நிறுத்தாம பேசுறா இந்த பச்சை மிளகா’ க்ருஸ்வந்த்.
“”மாதிரி ….” என்று வேண்டும் என்றே வம்பிழுத்தான்.
“உன்னை மாதிரியே ஒரு குழந்தைய சீக்கிரம் பெத்துகனுமா இல்லன்னா வேற எந்த பொண்ணாவது உன்னை கொத்திட்டு போய்ட போறான்னு சொன்னா” என்று சொல்லி முடித்தாள் அவனை பார்க்காமல்.
‘அட அட அட என்னமா நம்மளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு போயிருக்கு அந்த பொண்ணு’ என்று தனக்குள் சிரித்தவன்.
“அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றான் அவளை சீண்ட.
“ஹ்ம்ம் நான் ஒன்னும் சொல்லலை” என்றாள்.
“அப்டியா?” என்றான் நம்பாமல்.
“ஐயோ இப்ப என்ன? சரின்னு சொன்னே போதுமா?” என்று அவள் உள்ளுக்குள்ளே சிரிப்பது அவனுக்கு தெரியாமலில்லை 
“ஓஹ அப்ப சரி” என்று வண்டியை நிறுத்தினான்.
“எதுக்கு நிறுத்திட்டிங்க?” என்றால் மீரா.
“நீ தானே சரின்னு சொன்ன?” என்று வண்டியை விட்டு கிழே இறங்கினான்.
“அதுக்கு?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“கிழ இறங்கு” என்றான் அவள் பக்கம் வந்து.
“முடியாது எதுக்கு இறங்கனும்?” என்றாள் கோவமாக.
“சரி தான் இறங்குடி” என்று அவள் கையை பிடித்து இறக்கினான்.
“என்ன பண்றிங்க என் கைய விடுங்க” என்று மீரா கூறிக்கொண்டிருப்பதை காதில் வாங்காமல் அவளை இழுத்து கொண்டு எதிரில் காம்பௌண்டு சுவர் மட்டும் போடப்பட்ட காலி இடத்திற்குள் கூட்டி சென்றான்.
“கிருஷி என் கைய மரியாதையா விட்றிங்களா இல்லை என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்றாள் மிகுந்த கோபத்துடன்.
அவள் கையை விடுவித்தவன் அவளை பார்த்துக்கொண்டே நெருங்கி, “மீரா இது தான் நான் முதல் முதலா என் சொந்த சம்பாதியத்துல வாங்கின இடம்” என்றான்.
அப்போதான் மீராக்கு சீரான மூச்சி வந்தது.
வந்த கோபத்திற்கு அவனை அடிக்க கையை ஒங்க அவளிடம் இருந்து தப்பித்து உள்ளேயே ஓடினான்.
“ஏண்டி எவ்ளோ ஒருத்தி சொல்லிட்டா நானும் கைய புடிச்சி இழுத்துட்டு வந்தா உடனே நீ என்னை பத்தி தப்பா நினைப்பியா?” என்று அடிக்க வந்தவளின் கையை மடக்கி அணைத்துகொண்டான்.
“இவ்ளோ நாள் இருந்தேனே என்னைக்காவது உன்னை கட்டாய படுத்திருப்பேனா?” என்று அவளின் கண்களில் தன் இதழை பதித்தான்.
“சாரி” என்றவள் அந்த இடத்தை நன்கு சுற்றி பார்த்தாள்.
“இவ்ளோ பெரிய இடம் எதுக்கு காலியா வச்சிருக்கிங்க?” என்று கேட்டாள்.
“எனக்கும் வேலையே கரெக்டா இருக்கு. அதோடு அப்பப்ப அப்பாவோட பிசினெஸ் கவனிக்க டைம் பத்தல அதான் அப்டியே விட்டுட்டேன்.” என்றான்.
“சரி. அப்போ இந்த இடத்தை எனக்கு கொடுத்திடுங்க பிசினெஸ் பண்ண” என்றாள்.
“என்ன? நீயா என்கிட்டே இது வேணும்னு கேக்குற என்னால நம்பவே முடியலை?” என்றான்.
“சும்மா ஒன்னும் இல்ல. இந்த இடத்துக்கு வாடகை வாங்கிகோங்க” என்றாள்.
“அதானே பார்த்தேன்” என்றான்.
“சரி. இது காலி இடமாச்சே இதுல என்ன பண்ண போற?” என்றான்.
“அதெலாம் உங்களுக்கு ஏன்? எனக்கு நாளைக்கு இந்த இடத்த கிளீன் பண்ணி கொடுங்க”  என்றாள் மீரா.
‘அதானே நா கேட்டா எதாவது சொல்லிட்டாலும் கல்லூலிமங்கி’ என்று நினைத்துகொண்டவன். “சரி வா போலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு போனான்.
அதன் பிறகு இரண்டு நாளில் அந்த இடத்தை சுத்தபடுத்தி கொடுத்தான் க்ருஷ்வந்த்
“நான் கூப்பிடும்போது வந்தா போதும்” என்றாள்.
“உனக்கு கேஷ் ஏதும் வேண்டாம் பிசினெஸ் ஏதோ ஆரம்பிக்கக் போறேன்னு சொன்ன?” என்று கேட்டவனிடம் “வேண்டாம் என்கட்ட இருக்கு. நான் பாத்துகிறேன்” என்றாள்.
அதன் பிறகு அவன் மீராவை பார்க்கவே முடியவில்லை. அவளும் வீட்டில் இல்லை இவனுக்கும் வேலை அதிகம்.
அடுத்த நாள் க்ருஷ்வந்த்திற்கு மீராவிடம் இருந்து போன் வந்தது.
“க்ரிஷி எங்க இருக்கீங்க? இன்னும் அரைமணி நேரத்துல நம்ம இடத்துக்கு வந்துருங்க” என்று அவன் பேசும் முன்னே வைத்துவிட்டாள்.
தலையில் அடித்து கொண்டவன். “என்னைக்கு தா என்னை பேசவிடபோறாளோ?” என்று கேட்டபடி அங்கே கிளம்பினான்.

Advertisement