Advertisement

28
‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான்.
அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை பார்த்தவன் ‘என்ன டிரஸ் இது? இன்னும் நல்ல புடைவையா கட்டிட்டு வந்துருக்க கூடாது” என்றான்.
“ஹலோ! டிரஸ் போடறது என்னோட விருப்பம். எனக்கு புடிச்ச டிரெஸ்ஸ தான் நான் போடுவேன். அதுவுமில்லாம நீங்க முதல்லயே சொல்லி இருந்தா நான் வேற போட்ருப்பேன். இப்படி தான் வருவேன் வேணும்னா கூட்டிட்டு போங்க இல்லைன்னா நான் உள்ள போறேன்.” என்று திரும்பினாள்.
‘கடவுளே ஆரம்பிச்சிட்டா இந்த பச்சைமிளகாய். இவளை வெச்சிகிட்டு நான் என்ன பண்ணப்போறேன்னு தெரியலையே? ஒன்னு சொல்ல கூடாதுன்னு சொல்றா உடனே என் மூக்கை உடைக்கிறதிலேயே இருக்கா. இருடி வரேன்.’ என்று உள்ளுக்குள் புலம்பியவன்.
“நான் எதுவுமே சொல்லலை மீரா. இந்த டிரஸ் நல்லா தான் இருக்கு இன்னும் கொஞ்சம் கிராண்டா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன் அவ்ளோதான். அதுக்கு போய் கோவிச்சிக்கிறியே? இந்தா உனக்காக டிரஸ் வாங்கிட்டு வந்தேன் இதை போட்டுக்க” என்றான்.
“இல்ல எனக்கு வேணாம்” என்றதும் முகம் சுருங்கியவனை பார்த்ததும் மனமிரங்கினாள் ஸ்ருஷ்டிமீரா.
“சரி கொடுங்க. வீட்டுக்கு போய் மாத்திட்டு போலாமா?” என்றாள்.
மனதிர்க்குள்ளேயே தலையில் அடித்து கொண்டான்.
“இங்க தான் யாருமில்லல. உள்ள போய் மாத்திட்டு வா. மணி இப்பயே ஆறு ஆகிடுச்சு. நான் இங்கயே வெயட் பண்றேன்.” என்றான்.
தயங்கி தயங்கி உள்ளே சென்று மாற்றி வந்தாள்.
ஒரு கணம் ஸ்தம்பித்து தான் போனான் அவளின் அழகில்…
கிளிபச்சைநிற புடவையின் இளம் பேபி பிங்க் பார்டரில் இருந்த அந்த புடவை அவளுக்காகவே நெய்யப்பட்டது போலிருந்தது. காதில் சின்ன ஜிமிக்கி மூக்கில் சின்ன வெள்ளை நிறகல் வைத்த மூக்குத்தி, கழுத்தில் எஸ் என்று பொறித்த டாலர் இணைந்த மெல்லிய செயின், மேக் அப் இல்லாத முகம் சிறிய வட்ட குங்கும பொட்டு அவ்வளவே தான் அவள் முகத்தில் உள்ள அணிகலன்களும் ஆடம்பரமும். 
‘கடவுள் எப்படி தான் இப்படி ஒரு பொண்ண படைச்சாரோ? அங்கங்க பொண்ணுங்க முகம் எங்க இருக்குன்னு தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டுட்டு அலையுதுங்க. இங்க என்னடான்னா பவ்டர் கூட போடாத இயற்கையான ஒரு முகம். நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் தான்.’ என்று யோசிக்கையில் அவன் முகத்திற்கு முன் தன் கைகளை அசைத்து “என்ன கனவுலக்கத்துல இருக்கியா? நான் ரெடி போலாமா?” என்றாள்.
“ஹ்க்கும் “என்று செருமி கொண்டவன் “போலாம்” என்று அவளை பார்க்காமல் வண்டியை எடுத்தான்.
போலிஸ் வண்டியில் வராமல் அவனுடைய காரில் வந்திருந்தான்.
இளம் பிங்க் நிற அறைக்கை சட்டை அடர்நீல நிற ஜீன்ஸ் போட்டு ஸ்டைலாக பிரவுன் நிற கூலிங் கிளாஸ் அணிந்து பார்க்கும் பெண்களின் மனம் கவரும் அழகுடன் படு ஸ்மார்டாக இருந்தான்.
‘நிச்சியமா இன்னைக்கு எங்க போனாலும் எல்லா பொண்ணுங்களும் இவனை தான் பார்க்க போறாங்க. இவன் எப்படி என்னை லவ் பண்ணான். நான் லக்கி தான்.’ என்று நினைத்தவள் அவன் எதுவும் பேசாமல் வர தான் பேசியது அவன் மனதை காயப்படுத்தியதோ என்று மனம் வருந்தினாள்.
“ஏன் அமைதியா வரிங்க? இதுமாதிரி அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்லையே?” என்று கேட்டாள் ஸ்ருஷ்டிமீரா.       
  “இல்ல… ஒண்ணுமில்லை…” என்றான் தடுமாற்றமாக அவள் முகத்தை பார்க்காமல்.
“ஐ ஆம் சாரி. நான் பேசனது உனக்கு கஷ்டமா இருந்தா?” என்றாள்.
எதுவும் பேசாமல் காரை நிறுத்தி தலையை பின்னோடு சாய்த்து கண்களை இறுக மூடினான்.
அவனின் நிலை எதுவும் புரியாததால் மீராவும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
“உடம்பேதும் சரியா இல்லையா? வேணா திரும்பி போய்டலாமா?” என்றாள்.
மெதுவாக கண்களை திறந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க அவளுக்கு இப்போது தடுமாறும் முறை ஆனது.
“எப்பவுமே வளவளன்னு பேசிட்டு இருப்ப? இப்போ ஏன் என்னை பார்க்க மாட்ற?” என்றான்.
“என்னை பாரு?” என்றவனை பார்க்காமல் அமைதியாக இருக்க.
“இப்போ என்னை பார்க்கல அப்புறம் இங்க என்ன நடக்கும்னே தெரியாது” என்று கிறங்கும் குரலில் சற்று காட்டமாக கூற, அவன் முகத்தை உடனே ஏறிட்டாள்.
அவளும் எதிர்பாராமல் இதழ்ரெண்டும் இணைய அங்கே காற்றும் இடமில்லாமல் இரு நிமிடங்கள் கழிய பெண்ணவளை விடுவித்து அவள் முகம் பார்க்க தன்னவனின் முகம் பார்க்க முடியா புதியதொரு உணர்ச்சி பெருக்கில் செந்தணலின் நிறத்தை தத்தெடுத்திட முகத்தை திருப்பி அவன் காணாமல் மறைக்க முயன்றாள். ஸ்ருஷ்டிமீரா.
அவளின் உள்ளம் மட்டுமல்ல உடலும் மெல்லிய நடுக்கத்தை தத்தெடுத்திருந்தது.
தன் வலக்கையை இறுக்கி ஸ்டியரிங்கில் மெதுவாக குத்தியவன். காரை விட்டு கிழறங்கினான்.
‘என்னடா இப்படி பண்ணிட்ட? என்ன சொல்வா? பச்சைமிளகா இப்ப சிவந்து சிவப்பு மிளகா மாதிரி ஆயிடுச்சு. வெளிய வந்து அடிக்கிறதுகுள்ள நீயா காருக்குள்ள உட்கார்ந்துரு.’ என்று அவன் மனம் பாடம் நடத்த.
‘போதும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா? இன்னையோட அவளை பார்த்து நானூறு நாள் ஆகுது. அவ என்னோடவ இவ்ளோ நாள் தான் அவளுக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இப்ப தான் எல்லாம் சரி ஆகிடுச்சு இல்ல. இவ்ளோ அழகா ஒரு சிலைய வெச்சிக்கிட்டு நான் சும்மா இருக்கறதுக்கு சாமியாரா போலாம்’ என்று நொடித்தவன். ‘அவ என்ன சொன்னாலும் பரவால்ல நான் பார்த்துக்குறேன்’ என்று உள்ளே அமர்ந்து அவளை ஓரக்கண்களால் பார்க்க தன் விழிநீரை அவன் அறியா வண்ணம் கைகுட்டையால் ஒத்தி எடுத்தாள்.
“ஐ ஆம் சாரி” என்றான் மெதுவாக.
“போலாம்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான். மீண்டும் பாதி வழியில் நிறுத்தினான்.
“ஐ ஆம் சாரி மீரா. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ இவ்ளோ அழகா உன்னை பார்த்தவுடனே என்னையே என்னால கண்ட்ரோல் பண்ணமுடியலை. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு” என்றான் மெதுவாக.
அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்தவள். “எதுக்கு இப்போ சாரி சொல்றிங்க? நிச்சியமா உங்களக்கு சொந்தமானவ தான். என் உயிர் உடல் எல்லாமே உனக்கு மட்டும் தான் சொந்தம். ஆனா இதுக்கப்புறம் என் கழுத்துல தாலி கட்டுனப்புறம் எதுவா இருந்தாலும். என்னை உரிமையா தொடர க்ரிஷி தான் எனக்கு வேணும். மன்னிப்பு கேக்கற க்ரிஷி வேணாம்” என்றாள்.
அவன் செவிகளையே நம்ப முடியவில்லை அவனால் அவனின் தேவதை இத்தனை நாள் அவன் காத்திருந்த காதலை முழுவதுமாக ஆமோதித்து விட்டாள்             
“உன் கழுத்துல மூணு முடிச்சி போட்டப்புறம் உன் அனுமதியே எனக்கு தேவையில்ல. ப்ளீஸ் ஒரே ஒரு தடவ மட்டும்…” என்றான்.
“என்ன ?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“ஒரே ஒரு தடவை மட்டும் உன்னை …” 
“என்னை?”
“உன்னை பச்சைமிளகாய்ன்னு கூப்பிடவா?” என்றான்.
“என்னது?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
‘சொதப்பிட்டியேடா கரிஷ்வந்த் ‘ என்றது அவன் மனம்.
“இல்ல ஒன்னுமில்ல’ என்று சிரித்தபடி காரை கிளப்பினான்.    
அவன் கையை தடுத்தவள் “என்னது பசைமிளகாய்ன்னு சொல்லுங்க” என்றாள்.
“அது அது… நீ எப்பவும் கோவமா என்கிட்டே பேசுவியா அதனால…” என்று நிறுத்தி அவளை பார்த்தான்.
“அதனால …?” என்று அதட்டலாய்.
“உன்னை செல்லமாய் மனசுக்குள்ள பச்சைமிளகாய்ன்னு கூப்பிடுவேன்.” என்றான்.
அவனின் காதை திருகியவள் “அப்போ அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அண்ணாவும் சந்தோஷ் அண்ணாவும் இதுக்காக தான் பச்சைமிளகா வாங்கிட்டு வந்து கொடுத்தாங்களா?” என்றாள்.
“ஆமாம்” என்று சிரித்தான்.
“என்னை வெச்சி நீங்க எல்லாரும் விளையாடிருக்கிங்க இல்ல” என்றாள்.
“இல்லடா நான் செல்லமா கூப்பிடுவேன்” என்றான்.
“இன்னொரு வார்த்தை பேசின என்ன பண்ணுவேன்னே தெரியாது?” என்றாள்.
“என்ன பண்ணுவ?” என்றான் அவளை சீண்ட.
‘ஹ்ம்ம்” என்று அவன் கன்னத்தில் தன் இதழை பதித்தாள்.
“இப்ப போலாமா?” என்றாள்.
தன் தலையை அசைத்து மெதுவாக தனக்குள் சிரித்தவன் “ம் போலாம் “ என்று வண்டியை எடுத்தவன் நேரே  சென்ற இடம் அவளுக்கு பிடித்த சிறு வயதில் இருந்து பார்க்க விருப்பம் கொள்ளும் இடம் திருவிழா. 
அலையலையாய் கடைகள். “ஹை!” என்று குதித்தாள்.
அவளின் குழந்தை தனத்தை பார்க்கவே அவனும் ஆசைப்பட்டு இங்கு அழைத்து வந்தான்.
“உனக்கு இங்க ரொம்ப பிடிக்கும்ல?” என்றான்.
“ஆமாம்” என்று தலையாட்டியவள் அவன் இறங்குவதற்குள் கிழே இறங்கி எல்லாவற்றையும் ஜொலிக்கும் கண்களுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
பஜ்ஜி போண்டா, பானிபூரி, சுண்டல் கடைகளை பார்த்தவள். அடுத்து தன் கண்களை சுழல விட்டாள்.        
சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள், பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், வளையல் கடைகள், இன்னும் நிறைய.
“வா போலாம்” என்று உள்ளே செல்ல கூட்டம் அலைமோதியது.
அவன் கைகளை கட்டிகொண்டி அவனோடு சேந்து நடந்தாள்.
ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பாட்டுகச்சேரி, வண்ணவிளக்குகள், ஒளியில் அங்கே எல்லாமே ஜொலித்தது.
“எனக்கு ராட்டினம் சுத்தணும்”  என்றாள் சிறுபிள்ளையாய். 
“ஹ்ம்ம் “ முடியாது என்று தலை ஆட்டினான்.
“ப்ளீஸ் “ என்றாள் குழந்தையாய்.
“முடியவே முடியாது” உன்னை சுத்தி பார்க்க தான் கூட்டிட்டு வந்தேன்.
“போ” என்று கோபித்து திரும்ப சிரித்தபடி ”சரி. போயிட்டு வா” என்றான்.
“என்னது நான் மட்டுமா? முடியாது. நீங்களும் வாங்க” என்றாள்.
“இல்ல நா வரல” என்றான்.
அவன் எதையோ கூறியவுடன் அவள் முகத்தை உற்று நம்ப முடியாமல் பார்த்தான்.
“நிஜமா” என்றான்.
“ப்ரோமிஸ்” என்றாள்.
இருவரும் மூன்று நான்கு ராட்டினங்களில் சுற்றினர்.
ஏறுவதற்கு முன் அவன் கையை பிடித்தவள் தான் இறங்கும் வரை விடவே இல்லை. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண் விழிகளுக்குள் நிறுத்தி கொண்டவன்.
சிறுபிள்ளை போல் ராட்டிணங்களில் சுற்றும் போது கத்தியது அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டது என எல்லாவற்றையும் நினைத்து சிரித்து கொண்டான்.
“அவ்ளோ தான் மணி ஆகிடுச்சு போலாமா?” என்றான்.
“அதுக்குள்ளையா?” என்றாள் முகம் சுருக்கி.
“என்னது அதுக்குள்ளையயேவா?” என்றாள் மீரா.
“ நாம வந்து மூணு மணி நேரம் ஆச்சு இன்னும் அரைமணி நேரத்துல அவுங்களே மூடிடுவாங்க” என்றான்.
லேசாக முகம் சுருகியவள் “சரி” என்று அவனுடன் நடந்தாள்.
“சரி வா இந்த கடடைகலெல்லாம் பார்த்துட்டே நடக்கலாம்” என்றான்.
“சரி” என்றாள் உடனே முகம் ஜொலிக்க.
‘ஆள் தான் வளர்ந்துருக்கா. ஆனா, அப்படியே சின்ன பிள்ளை போல நடந்துகுறா. இதெல்லாம் இத்தனை நாள் எங்க இருந்ததோ?’ என்று நினைத்தவன் ‘நிச்சியமா வினோத்துக்கு தான் நன்றி சொல்லணும். அவன் சொல்லலைனா எனக்கு தெரிஞ்சிருக்காது.’ என்று நடந்தான்.
“எனக்கு வளையல் வேணும்” என்றாள்.
“இந்த நேரத்துல எந்த கடை திறந்திருக்கும்? காலைல முதல் வேலையாய் ஜிவல்லர்ஸ் திறந்தவுடன் வாங்கி தரேன்” என்றான்.
“எனக்கு தங்கம் வேண்டாம். இதோ இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
  
     
 .        
 

Advertisement