Advertisement

27
ஆயிரம்தான் அவள் பெற்றெடுத்தாலும் அவளின் குழந்தை அல்ல அது என்பதை உணர்ந்தாலும் பிள்ளையை பெற்றபின் தாய் தானே. சில தருணங்களில் சோகமாக இருப்பாள். 
அவளின் உடல் நிலையை காட்டி தங்கள் வீட்டிலேயே ஸ்ருஷ்டிமீராவை தங்க வைக்க முடிவு செய்து கூறினால் முடியாது என்று மறுத்தாள்.
“இல்ல அட்லீஸ்ட் ஒரு வாரமாவது உன் உடம்பு கொஞ்சம் தேறுகின்ற வரை என் கூட தான் இருக்கனும்” என்று சுந்தரியும் க்ருஷ்வந்த்தும் கூறிவிட வேறு வழி இல்லாமல் அவர்களின் வீட்டிலேயே க்ருஸ்வந்த் அறையின் அடுத்த அறையில் அவளை தங்க வைத்தனர்.
பெரிய கேசை அவன் முடித்திருந்ததால் க்ருஸ்வந்திற்கு ஒரு வார விடுமுறை அளித்திருந்தனர்.
ஆகையால் மீராவை விட்டு எங்கும் நகராமல் அருகில் இருந்து கவனித்து கொண்டான்.
மீராவிற்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
என்ன தான் அவர்கள் மனதார அவளை ஏற்று கொண்டாலும் மீராவினால் முழுவதுமாக ஏற்று கொள்ள முடியாமல் தண்ணீரில் விழுந்த மீனாய் துடித்து கொண்டிருந்தாள்.
எப்பொழுது அவள் இருக்கும் வீட்டிற்கு செல்ல போகிறோமோ என்று நினைவாய் இருந்தது.
எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார்கள் மீராவை. அது அவளுக்கும் மகிழ்ச்சியை தந்தாலும் அந்த வீட்டின் உறவாய் உள்ளே சென்று உரிமையாய் இருக்க தான் ஆசை அவளுக்கு.
ஒரு வாரம் கழிந்து தன் வீட்டிற்க்கே வந்துவிட்டாள்.
இந்த ஒரு வாரத்திலும் க்ருஷ்வந்தும் அவளிடம் எதை பற்றியும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவளின் உடல்நிலை தேறினால் போதும் என்றே இருந்தான்.
இப்பொழுது தான் பேறுகாலம் முடிந்தமையால் நாலு மாதம் கழித்தே திருமணம் என்று முடிவாய் கூறிவிட்டார் சுந்தரி.
அதோடு இரண்டு வீட்டினரும் கலந்து பேசி ஸ்ருஷ்டிமீரா க்ருஸ்வந்த் திருமணம் நாலு மாதம் கழித்து ஒரு சுப தினத்தில் குறிக்க பட்டது.
அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வபொழுது மீராவை வந்து பார்த்து பேசி செல்வான் க்ருஷ்வந்த்.
அதே மாதிரி ஒரு மாலை பொழுது அவளை பார்க்க வந்தவன் முடியாமல் அரற்றி கொண்டு கட்டிலில் படுத்திருந்த மீராவின் நிலை கண்டு பதறி போய் அவள் கழுத்தினில் கை வைத்து பார்க்க அது நெருப்பாய் காய்ந்தது.
“மீரா என்னடி ஆச்சு? நேத்து கூட நல்லா தான இருந்த?” என்று தன் அம்மாவுக்கு போன் செய்து கூறினான்.
பிள்ளை உடன் இல்லாவிட்டாலும் பிள்ளையை பெற்றவளாயிற்றே பிஞ்சு அருந்தாத பால் நஞ்சாகி அவள் உடல் அனலாய் தகித்தது. இது எதுவும் அறியாதவன் அனலடிக்கும் அவள் மேனியை கண்டு பதறி தன் அன்னையை அழைத்தான்.
வயதில் முதிர்ந்தவள் அல்லவா அன்னை? அவள் அறியாத சூச்சமம் ஏதும் உண்டோ இந்த பாரில்…
சுந்தரி வந்து மீராவை பார்த்தவர் என்ன காரணம் என்பதை அறிந்து க்ருஸ்வந்திடம் ‘கிருஷ் என் ரூம்ல இன்ஜெக்ஷன் கிட் டேபிள் மேல இருக்கு எடுத்துட்டு வா’ என்று அனுப்பிவிட்டு மீராவிற்கு சிகிச்சையளித்தார்.
“இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படி கஷ்டமா இருக்கும் மீரா. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்.” என்று அவளுக்கு தேவையான மருந்துக்களை கொடுத்துவிட்டு சென்றார்.
“அவகூட கொஞ்ச நேரம் இருந்து பார்த்துக்க. நான் அவளுக்கு கஞ்சி செஞ்சு தரேன்” என்று கிளம்பினார்.
மருந்தின் மயக்கத்தால் மீரா நன்கு உறங்க ஊசி போட்டதால் ஜுரம் குறைந்திருந்தது.
க்ருஷ்வந்த் மீராவின் அருகில் இருந்தபடியே தன் வேலையை செய்துகொண்டிருந்தான்.
விழிப்பு வந்து எழுந்தவள் கண்கொட்டாமல் க்ருஷ்வந்த் தன் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து உறங்குவதை பார்த்துகொண்டிருந்தாள்.
திடும் என்று மீராவை பார்ப்பதற்காக கண் விழித்தவன் அவள் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டுகொண்டான். 
க்ருஷ்வந்த் கண் விழிப்பதை பார்த்தவள் வேகமாக விழிகளை மூடிகொண்டாள்.
‘பச்சைமிளகாய் பார்த்தியா நான் பார்த்தவுடனே கண்ண மூடிகிட்டா? இரு உன்னை வரேன்’ என்று உள்ளுக்குள் சிரித்தவன்.
மெல்ல அவளின் முகத்தருகே மிகவும் நெருக்கத்தில் குனிய அவனின் வெப்ப மூச்சுகாற்று அவள் முகம் முழுவதும் தொட்டு பரவ, ஒரு நொடி வெலவெலத்து போனாள் மீரா.
மிரண்டபடி விழிகளை திறந்தவள் தன் வலது கரத்தால் அவன் முகத்தை தள்ளிவிட்டவள்.
“என்ன பண்றிங்க? “ என்றாள் கோபமாக.
லேசாக தலையை சாய்த்து அவளை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்தான் “நான் என்ன பண்ணேன்? ஒன்னும் பண்ணலையே?” என்று காஷ்வலாக தோளை குலுக்கினான்.
அவளும் மெல்ல சிரிக்க எங்கோ பார்த்தபடி, “நீ எதுக்கு என்னை பார்த்துட்டு இருந்த?” என்றான் மெதுவாக.
அவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காதவள் சற்று தடுமாறி எதுவும் பேசாமல் கன்னங்கள் சிவக்க அமைதியாக இருந்தாள்.
“இப்போ சொல்லபோறியா இல்ல….?” என்று அவளின் முகத்தருகே மீண்டும் குனிய அவளின் மேனியில் நிகழும் புது மாற்றங்களை தாங்க முடியாமல் “ஹலோ இது மாதிரி என் பக்கத்துல வர வேலைல்லாம் வச்சிக்காதிங்க” என்றாள். எச்சரிக்கும தொனியில்…
“என்னது நான் உன் பக்கத்துல வரக்கூடாதா? நானும் பார்த்துட்டே இருக்கேன் நீ ரொம்ப தாண்டி என்  பொறுமையை சோதிக்கிற. இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்” என்றான்.
“எல்லாம் எனக்கு தெரியும் “ என்று உள்ளுக்குள் சிரித்தவள்.
“இரு எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துக்கபுறம் தாலி கட்னப்புறம் இத சொல்ல உனக்கே ரைட்ஸ் கிடையாது.” என்றான்.
“ஹ்ம்ம்..ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்றாள் மேலும் அவனை சீண்டியபடி.
“பார்க்கறேன் டி. உடம்பு முடியலையேன்னு பார்க்கிறேன் இல்லேன்னு வை ..” என்று முகத்தை திருப்பிக்கொள்ள.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“இங்க தானே இருக்கேன் சொல்லு எல்லாம் காதில விழுது“ என்றான் கோபித்து கொண்ட மாதிரி காட்டிக்கொள்ள.
“சரி சரி.. கோவிச்சிகாதிங்க. இப்படி பக்கத்துல வந்து உக்காருங்க” என்று அவனை அருகில் அமர செய்தாள்.
“உங்களுக்கு உண்மையாவே என்னை பிடிக்குமா?” என்றாள். 
“இத கேக்கதான் கூப்டியா?” என்றான் முறைத்து. 
“ஒரு விஷயம் என் மனசுல கேக்கணும்னு தோணிட்டே இருக்கு கேக்கலாமான்னு தெரியல. ஆனா, அதுக்கு பதில் தெரியாம உங்ககிட்ட என்னால ப்ரீயா பேசமுடியாது?” என்றாள்.
விளையாட்டாக பேசிகொண்டிருந்தவன் அவளின் பேச்சு ஏதோ உணர்த்த, “சொல்லுடா? என்ன கேக்கணும்? எதுவா இருந்தாலும் தயங்காம கேளு?” என்றான் அக்கறையாய் அவளின் தலையை கோதியபடி.
அவனின் வலக்கரத்தை தன் வலக்கரத்தோடு பிடித்து கொண்டவள். அவன் விழிகளுள் தன் விழிகளை செலுத்த, அந்த பார்வை  ஒரு சில நொடி அவன் இதயத்தை தொடும் ஆழத்திற்கு ஊடுருவி சென்றது.
அவள் மனதுள் எதையோ மிகவும் யோசிக்கிறாள் என்பதை உணர்ந்தவன். அவள் கைகளை தன் இரு கைகளுக்குள் சேர்த்துகொண்டவன். “சொல்லுடா எதுக்கு தயங்குற?” என்றான்.
“உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அது எனக்கு தெரியும். ஆனா, ஏதோ ஒரு வேகத்துல என்னை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டிங்களா? இல்ல…” என்று இழுக்க.
“இல்லனா… என்ன கேளு?” என்றான்.
“இல்ல…!! நாளைக்கு நம்மளுக்கு கல்யாணம் ஆனப்புறம்… என்னைக்காவது  ஒரு நாள் நம்ம ரெண்டு பேருக்குள்ள சண்டை வரும்போது… ‘நீ இன்னொருத்தன் கூட வாழ்ந்தவ தானேன்னு ஏதாவது ஒரு நொடில சொல்லிடிங்கன்னா அன்னைக்கே உயிரை விட்ருவேன்” என்றாள் கண்ணங்களில் கண்ணிர் வழிந்தபடி திக்கித்திணறி. 
அவன் எதுவும் பேசாமல் எழுந்து சென்று கதவை மூடி தாழிட்டு வந்தவன் அவளை ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே சென்று குங்குமச்சிமிழை எடுத்து வந்து அவள் அருகில் நின்று அவளை பார்க்க எதுவும் புரியாமல் பார்த்தாள் மீரா.
தன் வலக்கரத்தால் குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்து பின் அவள் இமைகளில் தன் இதழை பதித்தான்.                   
“இதுவரைக்கும் என் மனசார மட்டும் வார்த்தையால தான் என்னோட பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனா, இந்த நிமிஷத்துலர்ந்து நீ என்னோட மனைவி தான். இதுவும் உனக்கு திருப்தி இல்லன்னா சொல்லு இப்பயே உன் கழுத்துல தாலி கட்றேன். உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சப்புறம் தான் விரும்ப ஆரம்பிச்சேன். இனி என் மூச்சி இருக்கும் வரைக்கும் இது தான் உனக்கு முதல் கல்யாணம் உனக்கு நான் மட்டும் தான் கணவன். இனியும் இது மாதிரி பேசி என்னை கொல்லாதடி” என்றான் கண்கள் கலங்க.
எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து போய் இருந்தவள்.
“என்னைக்கு உங்கள பார்த்தானோ அன்னைலர்ந்து இன்னைக்கு வரைக்கும் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறத பெருமையா நினைக்கிறேன்.“ என்றாள்.
“அப்போ ஏன் என்னை பார்க்கும் போதெலாம் பச்சைமிளகாய் மாதிரி  எரிஞ்சி விழுந்த?” என்றான்.
“என்னது பச்சமிளகாவா?” என்றாள் முறைத்தபடி.
‘பார்த்தியா நான் எவ்ளோ முக்கியமான கேள்வி கேக்குறேன். ஆனா, பச்சமிளகான்றத கரெக்டா ப்ரூவ் பண்றா?’ என்று நினைத்தவன்.
“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு?” என்றான்.
“ஆமா நீங்க எப்போ என் பக்கத்துல வந்தாலும் எனக்கு பாதுகாப்பா இருக்கமாதிரி தோணும்.  அதைவிட என்னையே நான் உங்ககிட்ட இழந்துகிட்டு இருக்க மாதிரி இருக்கும். என்னை எப்பவுமே பலமிழக்க உங்களால மட்டும் தான் முடியும். அதனால தான் உங்களை திட்டிட்டு போய்டுவேன்” என்றாள்.
“அடிப்பாவி” என்று சிரித்தான்.
‘எனக்கு தெரியும்டி கேடி உன் வாய்ல கேக்கனும்னு தான் கேட்டேன்’ என்று நினைத்துகொண்டான்      
“எனக்கு ரொம்ப பசிக்குது” என்றாள் பாவமாக.
“மாத்திரையே  சாப்பிடல இரு வரேன்” என்று கஞ்சி எடுத்து வந்து கொடுத்தான்.
அதோடு இன்னும் ஒரு மாதம் கடக்க அவனின் காதலை ஏற்று கொண்டவள் அவனுடன் வெளியே செல்லாமல் அவனை வருத்தெடுத்தாள்.
உடல்நிலை தேறி அவள் அலுவலகத்துக்கும் செல்ல ஆரம்பித்து இருந்தாள்.
க்ருஸ்வந்திடம் இருந்து போன் வந்தது. 
‘என்ன இப்ப தான் ஆபீஸ்குள்ளே வந்திருக்கேன். அதுக்குள்ள் போன் பண்றானே’ என்று நினைத்தவள்.
“ஹலோ!” என்றாள்.
“ஹே பொண்டாட்டி இத்தனை நாள் மாதிரி இன்னைக்கு ஏமாத்தலாம்னு நினைக்காதடி கிளம்பி வெளிய நில்லு வெளிய போறோம” என்றான்.
“இல்ல எனக்கு வேலை இருக்கு. முதல் என் கழுத்துல தாலிய கட்டிட்டு அப்புறம் என்னை எங்க வேணா கூட்டிட்டு போ” என்றாள்.
“இதான் உனக்கு பிரச்னைன்னா இப்போவே வந்து உன் கழுத்துல தாலிய கட்டி கூட்டிட்டு போறேன் ஒகேவா” என்றான்.
“ஹ்ம்ம்….” என்றாள் சிரித்தபடி.
“இதோ உடனே வரேன்” என்றவனிடம்.
“டேய் இந்த வேல எல்லாம் இங்க வெச்சுகாத நான் வர மாட்டேன்” என்றாள்.
“நீ கண்டிப்பா வர. இல்லனா நானே வந்து தூக்கிட்டு போய்டுவேன்” என்றான்.
‘செஞ்சாலும் செஞ்சுடுவான்’ என்று நினைத்தவள்.
”சரி சரி வரேன்” என்றாள் சிரித்தபடி.
‘ஹப்பா… இன்னைக்காவது ஓகே சொல்லிட்டா. பச்சைமிளாக இருடி வரேன்” என்று அவள் அலுவலகத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்.
         
  
          
   

Advertisement