Advertisement

23
‘பத்ரகாளியாய் மாறுவான்னு பார்த்தா எதுவும் பேசாம அமைதியா இருக்கா. என்ன சைலென்ட்டா இருக்கா பாம் பெருசா இருக்குமோ?’ என்று க்ருஷ்வந்த் உள்ளுக்குள் யோசிக்க.
எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ஸ்ருஷ்டிமீரா திடிரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். தான் அடித்ததால் தான் அவள் அழுவதாக நினைத்து பதறி அவள் அருகில் போனான் க்ருஷ்வந்த்.
“ப்ளீஸ்!! சாரி! மீரா ஏதோ கோபத்துல அடிச்சிட்டேன் தப்பு தான். ப்ளீஸ் அழாத…” என்று தவித்தபடி சமாதனப்படுத்தினான்.
அவள் தலையை கோத கையை அவளருகே எடுத்து செல்வதும் பின் தயங்கி அப்படியே நிறுத்துவதுமாக தவித்து போனான்.
சிறிது நேரம் அழுதவள் பின் கண்களை துடைத்துக்கொண்டு “எனக்கு ஒரு உதவி செய்றிங்களா?” என்றாள் சுரத்தே இல்லாமல் எங்கோ பார்த்தபடி.
“சொல்லு என்ன வேணும்?” என்றான் ஆவலாய்.
“முதல்ல குழந்தைய கண்டுபிடிங்க. ஒரு தடவையாவது நான் அவளை தூக்கி முத்தம் கொடுக்கணும் ப்ளீஸ்… அதுக்கப்புறம் அவங்களுக்கு கொடுக்கணும். அப்புறமா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று அவன் விழிகளை நேருக்கு நேர் உற்று பார்த்தாள்.
அவள் விழிகளை சில நிமிடம் உற்று பார்த்தவன் அவள் உள்ளத்தின் ஆழத்தை அறிய முடியாமல் துவண்டு, நடப்பது நடக்கட்டும் என்று அவள் கேட்டதை செய்ய முடிவு செய்தான்.
“சரி மீரா. உனக்காக நீ சொல்றதை என்ன ஏதுன்னு கேக்காம செய்யறேன். அதோட இப்ப நான் ஹான்ட்ல் பண்ணிட்டிருக்க முக்கியமான கேஸ் இது தான். குழந்தை கடத்தல்… மிக பெரிய நெட்வொர்க் இதுக்காக வேலை செய்யுது. கடந்த மூணு மாசமா ரொம்ப கஷ்டப்பட்டு எல்லா டிடைல்சும் கலெக்ட் பண்ணி ரெடியா இருக்கு. ஆல்மோஸ்ட் கேஸ் முடியபோகுது. இன்னைக்கு தான் முக்கியமா எல்லோரையும் ரவுண்ட அப் பண்ண எல்லா பிளானும் ரெடி பண்ணி அலெர்ட் பண்ணியாச்சு. நிச்சயமா பாப்பா இருக்க இடம் இன்னும் பைவ் டு சிக்ஸ் ஹுர்ஸ்ல கண்டுபிடிச்சி மீட்டுடலாம். நீ பயப்படாத.” என்றவன் எதையோ தீவிரமாக யோசித்தான்.
அவன் யோசனையை கண்டுகொண்டவள் “என்ன ஏதோ ரொம்ப யோசிகிறிங்க?” என்றாள்.
“இல்ல ஒண்ணுமில்லை.. இதுக்கு நான் கண்டிப்பா போகணும். உன்னை எப்படி இந்த நிலைமைல விட்டுட்டு போறதுன்னு யோசிக்கிறேன்’ என்றான் அவள் முகத்தை பார்த்தபடி.
“எத்தனை குழந்தைய காப்பாத்த போறீங்க? அந்த புண்ணியம் உங்களோட மட்டும் நிக்காமல் என்னையும் வந்து சேரட்டும். முதல்ல அந்த குழந்தைகளோட உயிர் தான் முக்கியம். என்னை பார்த்துக்க இங்க நிறைய பேர் இருக்காங்க. நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் கண்களை இறுக மூடி.
முதலில் ஒன்றும் புரியாமல் க்ருஷ்வந்த் முழிக்க, ‘நீயெல்லாம் ஒரு டி.சி.பி அவள் உன் லவ்வ  மறைமுகமா அக்செப்ட் பண்ணிட்டா… அதுகூட தெரியல முட்டாள்.’ என்றது மனசு. ‘ஹய்’ என்று குதித்தது அவனது உள்ளம்.
கதவு தட்டப்பட “எஸ் கம் இன்” என்றான் கருஷ்வந்த்.
உள்ளே நுழைந்த கான்ஸ்டபல் அவனுக்கு சல்யூட் அடிக்க தலையசைத்தவன்.
“சார்! எல்லாரும் அசம்ப்ல் ஆகிட்டாங்க சார். உங்களுக்காக தான் வெய்டிங்” என்றார்.
“ஹ்ம்ம் இதோ வரேன்” என்றவன்  மீராவை பார்த்து “பத்து நிமிஷத்துல வந்துடறேன்”” என்று அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியே சென்றான்.
எல்லோரும் அவனுக்கு சல்யூட் அடிக்க தலையசைத்து,  “இங்க பாருங்க நம்மளோட அசைன்மென்ட் இன்னைக்கு கண்டிப்பா எந்த காரணத்துக்காகவும் பெய்லியர் ஆகக்கூடாது. ஏற்கனவே ப்ளான் பண்ணபடி இன்னைக்கு எக்சிகியுட் பண்ணனும். அதுக்காக எல்லாம் ரெடியா?” என்றான் க்ருஷ்வந்த்.
“எல்லாமே பக்காவா ரெடி சார். நீங்க ஓகே சொன்னிங்கன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்.” என்றார் மூத்த அதிகாரி.
“ஓகே! அப்போ ஸ்டார்ட் பண்ணிடலாம். எல்லாரும் அவங்க அவங்க இடத்துக்கு போய்டுங்க எல்லாரும் காண்டாக்ட்லயே இருக்கனும்.. அதுக்கு முன்னாடி நீங்க மட்டும் என் கூட இருங்க. இங்க குழந்தை கண்டுபிடிக்க எல்லோரையும் விசாரிங்க இந்த கேசுக்கும் இதுக்கும்கூட சம்பந்தம் இருக்க சான்ஸ் இருக்கு.” என்றான்.
“ஓகே சார். இப்பயே ஸ்டார்ட் பணிட்றேன்.” என்று அங்கு விசாரிக்க கிளம்பிவிட்டார்.
மற்ற எல்லோரும் தங்களின் ப்ளான் படி செயல்படுத்த கிளம்பினர்.
ஆஸ்பிட்டல் சிசிடிவியில் இருந்து ஒரு நர்ஸ் குழந்தையை எடுத்து செல்வது போல் தெரிய, விசாரித்ததில் கடத்தியவள் நர்ஸ் உடையில் இருந்த அந்த பெண் பற்றி விவரம் தெரியவில்லை.
அந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்ததில் அந்த பெண் அணிந்திருத உடையில் ஒரு ஓரத்தில் இருந்த ஏதோ ஒரு பெயரின் அடையாளத்தை எங்கோ பார்த்தது போல் தோன்ற, “மறுபடியும் எல்லா நர்சையும் இங்க வர சொல்லுங்க” என்றான் க்ருஷ்வந்த்.
எல்லோரும் வந்தவுடன் எல்லோரையும் ஒரு முறை கூர்ந்து கவனித்தவன் காலையில் வந்த அந்த நர்சை பற்றி கேட்க.
“சார் அவங்க டியூட்டி முடிந்ததால முன்னாடியே போய்ட்டாங்க சார்” என்றவுடன் அந்த வீடியோவில் அந்த நர்ஸ் அணிந்திருந்த உடையை மறுபடி பார்க்க அதே உடையை தான் கடத்திய பெண்ணும் அணிந்திருப்பது என்று உறுதி செய்துகொண்டான்.
“அந்த நர்ஸ் பத்தின எல்லா டிடைல்சும் எனக்கு இன்னும் ரெண்டு நிமிஷத்துல வேணும்.” என்று கூறிக்கொண்டே உடனிருந்த அதிகாரியை பார்த்து “உடனே அந்த பொம்பளையை ட்ராக் பண்ணுங்க ஷி இஸ் த கல்ப்ரிட். அவள் குழந்தைய எங்க கொண்டு போயிருக்கான்னு பாலோ பண்ணுங்க. அவளோட போன் நம்பர் வச்சு கால் டிடைல்ஸ் முதற்கொண்டு அவளோட மொத்த ஹிஸ்ட்ரியும் எனக்கு வேணும் இன்னும் அரை மணி நேரத்துல. அதுக்கு நீங்க பொறுப்பெடுத்துக்கோங்க. நான் அங்க ஸ்பாட்கு போறேன்” என்று மீரா இருந்த அறையை நோக்கி நடந்தான்.
“குழந்தையை பற்றி டிடைல்ஸ் கிடைச்சாச்சு சீக்கிரம் குழந்தையோட வரேன். நான் போயிட்டு வரேன். நீ பத்திரமா இரு. அம்மாவை உன் கூட இருக்க சொல்றேன்.” என்று கதவை திறக்க போனவன் பட்டென்று திரும்பி அவளிடம் வந்தான்.
சாய்ந்து படுத்திருந்தவளை அவளும் எதிர்பாராமல் மெதுவாய் தன்னோடு அணைத்துகொண்டான். ‘நான் இருக்கிறேன் உனக்கு எதற்காகவும் பயப்படாதே’ என்பதை உணர்த்த அவள் நெற்றியில் இதழை பதித்தவன். அவள் விழியினை நோக்க அதில் ஒரு ஆனந்தம் நிறைந்து விழி நீர்  நின்றிருந்தது. அவள் கண்ணீரை துடைத்தவன் “போதும் வேணும்றதைவிட நிறைய அழுதுட்ட. இனி, உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அது நான் உயிரோட இல்லாததுக்கு சமம்” என்றவன் “அப்படி இல்லன்னா அது ஆனந்த கண்ணீரா கூட இருக்கலாம் அதுவும் என்னோட மட்டும் தான் இருக்கனும்” என்று அவள் நெற்றியோடு நெற்றி மோதி விழி மூடி இருக்க அந்த பாதுகாப்பு கவசம் அவளுக்கு தேவைபட்டது.
“ஐ லவ் யு மீரா குட்டி” என்றான் அப்படியே.
அவளும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க “என்ன அமைதியா இருக்க உனக்கு என்னை பிடிக்கலையா?” என்றான் தவிப்பாய்.
“முதல் முறையாய் உண்மையான அன்போடு கேட்கும் வார்த்தைகள் இந்த நொடி அப்படியே நிக்க கூடாதான்னு நினைக்கிறேன்” என்று அவனுக்கு பேரின்பத்தை கொடுத்தாள்.
“இல்லை மீரா! இனிதான் உன் வாழ்க்கையே ஆரம்பிக்க போகுது. நான் வரேன். சந்தோசமா இரு. எதுக்கும் கலங்காதே. இனி நீ தான் நான். நான் தான் நீ. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அது எனக்கும் தான்.” என்று பிரியா விடைபெற்றான். ஸ்ருஷ்டிமீரா ஆனந்தத்தின் எல்லையில் இருந்தாள்.
        .
    .  .      

Advertisement