Advertisement

  1. தெரியாத உண்மை
சுந்தரியும்  மருத்துவர் என்பதால்  பிரசவ அறையினுள் அவரை அனுமதித்தனர். நிமிடத்திற்க்கு  நிமிடம்  அவளின் குரல் வலியின் உச்சத்திற்கு  கொண்டு  செல்ல, இங்கே க்ரிஷவந்தின்  நெஞ்சை பிசைந்தது  அவளின் அழுகுரல்.
அவன் செவியினுள்  வரும் வழியில் அவள் பேசிய வார்த்தைகளே  மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது.
‘எதுக்காக மீரா அப்படி சொன்னா?’  என்று தனக்குள்ளேயே  திரும்பத்திரும்ப குடைந்து கொண்டிருந்ததுஅந்தகேள்வி.  
பெரும் குழப்பத்தில்  அமர்ந்திருந்தவனிடம் வந்த நர்ஸ் “சார்!  இந்த ப்பாரத்தை  பில் பண்ணி கொடுங்க” என்று  அட்மிஷன்  பார்ம் கொடுத்துவிட்டு செல்ல தன் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு,  அதை நிரப்ப ஆரம்பித்தான். எல்லாவற்றையும் நிரப்பியவன்  கணவன் என்ற இடத்தில எதுவும் நிரப்பாமல கார்டியன் என்று கையெழுத்திட்டான்.
“அம்மா!”  என்றான் உடையும்  குரலில்…
மீராவின்  நலனை பற்றிய கவலை அவனிடம் தவிப்பாய் வெளி வர, அதை உணர்ந்தவர் போல். “நான் இருக்கேன்டா  கண்ணா!  நீ  கவலை படாதே.  இது ஹாஸ்பிடலோட ப்ரோசிஜர்.”  என்று வார்த்தைகளை  உதிர்த்துவிட்டு  வேகமாக உள்ளே நுழைந்து கொண்டார்.
பிரசவ அறையினுள்…  சுந்தரியின் அக்கறையான வார்த்தைகள் மனதைரியமூட்ட  மீரா அழகான பெண் பிள்ளையை சுகப்ரஸவத்திலேயே  பெற்றெடுத்தாள
மணி எட்டை  தாண்டி இருந்தது. தனி அறையில் மாற்றப்பட்டிருக்க,  நிறைய உதிரப்போக்கு  ஏற்பட்டிருந்ததால் மீரா கிழிந்த வாழைநாராய்  சுருண்டு மயக்கத்தில் இருந்தாள்.
எப்பொழுதும் அவள் அருகிலேயே இருந்த கிருஷ்வந்த் மீரா கண் விழிப்பதற்காக  காத்திருந்தான். தாகத்தால்  நா வறட்சி  ஏற்பட அருகில் இருந்த பாட்டிலில் நீர் இல்லாததால் வெளியில் சென்று பிடித்து வரலாம் என்று வெளியேறினான்.
அவனின் முக்கிய  கேஸ் விஷயமாக அந்த நேரம் பார்த்து போன் வர, மீராவுக்கு  தொந்தரவாக  இருக்கும் என வெளியில் சென்று பேசிவிட்டு உள்ளே நுழைந்தவன். மீராவின் அருகில் குழந்தை இல்லாததை கண்டு மிகவும் அதிர்ச்சி  அடைந்தான். அறையினுள்ளேயே  தேட குழந்தை  இல்லாது கண்டு, “நர்ஸ் ”  என்று மருத்துவமனையே  அதிரும்படி கத்தினான்.
“என்ன சார்? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்தினிங்க?”  என்றாள் நர்ஸ். 
“வெளிய போய் போன் பேசிட்டு வரதுக்குள்ள குழந்தையை காணோம்…!!!!  நான் போனவுடனே  யார் வந்தது?”  என்றான் அதட்டலாய்.  
“எனக்கு தெயலை சார்.என் டியூட்டி டைம் முடிஞ்சதால கிளம்ப போய்ட்டேன் சார்.”  என்று பதறி எல்லா ஸ்டாப் நர்சையும் கூப்பிட்டு விசாரிக்க யாருக்கும் குழந்தை பற்றி தெரியவில்லை.
“இன்னும் பத்து நிமிஷத்துல உங்க ஹையர் அபிஷியல் இங்க இருக்கனும் வரல அப்புறம் உங்க ஹாஸ்பிடல் பேர்ல கேஸ் பைல்  பண்ணா…. ??? அவ்ளோதான் உங்க ஹாஸ்பிடலை  இழுத்து மூடவச்சிடுவேன்..!!!!
கம் ஆன் குயிக்.”  என்று தன் மொபைலை எடுத்து, “சீக்கி்ரம் அடுத்த பத்து நிமிஷத்துல எல்லாரும் இங்க இருக்கனும்”  என்று வைத்தான.
மெதுவாக கண்விழித்த ஸ்ருஷ்டீரா  தொட்டிலை  பார்க்க அது வெறுமையாக  இருந்தது. 
‘அதுக்குள்ளேயேவா  குழந்தையை கொண்டு போய்ட்டாங்க?’  என்று குழப்பமடைந்தவள். “குழந்தை எங்கே? ” என்றாள் எல்லோரையும் நோக்கி நடுங்கும் குரலில்.
நடந்ததை தயங்கியபடி மெதுவாக கூறினான் கிருஷ்வந்த். “குழந்தை கண்டுபிடிக்க  எல்லா ஏற்பாடும்  பண்ணிட்டேன். கண்டிப்பா சீக்கிரமா கிடைச்சுடும். நீ ஸ்ட்ரேய்ன்  பண்ணாத ப்ளீஸ்..”  என்றான் கெஞ்சும் குரலில்.
அதேநேரம் அறிமுகம் இல்லா  இருவர்  உள்ளே நுழைந்தனர்.
“என்ன குழந்தையை பார்த்தவுடனே மனசு மாறிடுச்சோ?? ஒழுங்கு மரியாதையா குழந்தையை கொடுத்துடு? குழந்தையை எங்க மறைச்சி  வச்சிருக்க? ஒழுங்கா சொல்லிடு. இல்ல போலீஸ்  கம்பளைண்ட் கொடுத்து உள்ள தூக்கி வச்சிருவேன்…!!”  என்று தம்பதிகள்  வாய்க்கு வந்ததை  பேசினர்.
‘இங்க நிக்கற நம்பளே போலீஸ்னு இந்த லூசுங்களுக்கு தெரில போல ‘  என்று நினைத்தவன்.
“ஹலோ!  என்ன விட்டா பேசிட்டே போறீங்க? இங்க போலீஸ்க்கு நான் தான் ஹெட் அதாவது டி.சி.பி.  இப்போ குழந்தைங்க கடத்தல் கேஸ்ல நியமிக்கப்பட்டிருக்க  உயர்அதிகாரியும்  கூட. இவங்க குழந்தை காணாம போயிருக்கு. அதை கண்டுபிடிக்க  எல்லா ஏற்பாடுகளும் நடந்துட்டு  இருக்கு. அதெல்லாம் இருக்கட்டும்.  முதல்ல நீ யாரு? ” என்று கேட்க, அவர்கள் எதுவும் பேசாமல்  மீராவை முறைத்தனர்.
எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்த  ஸ்ருஷ்டிமீரா.         
“நீ என்னவா வேணா இரு? நான் உன்னை விட பெரிய இடம். எங்களுக்கு  குழந்தை வேணும். அவ்ளோ தான் ”  என்றார் அந்த மனிதர்.
பேச்சு பெரிதாவதை உணர்ந்த ஸ்ருஷ்டிமீரா கஷ்வந்த்தை பார்த்து “நீங்க கொஞ்சம் வெளிய இருங்க”  என்றாள் சோர்வு  நிறைந்த மெல்லிய குரலில்.
“முடியாது நான் ஏன் போகணும்?”  என்றான் விடா பிடியாக.
“ப்ளீஸ் கொஞ்சம் வெளில இருங்க” என்றாள்.
“என்னனு சொல்றாளா பாரு பச்சைமிளகாய்? அழுத்தக்காரி டி நீ? ஒரு வேளை இவ நேத்து சொன்னதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம்  இருக்குமா?” என்று யோசித்தபடி அவளை பார்த்துக்கொண்டே வெளியேறினான்.
கிருஷ்வந்த் வெளியேறும்வரை அமைதியாக இருந்தவள், அவர்களை நோக்கி, “என்ன அமைதியா இருந்தா ரொம்ப ஓவரா  பேசிட்டு இருக்கீங்க? நீங்க குழந்தை வேணும்னு என்கிட்டயா  டீல் பேசுனீங்க? எவன்கிட்ட  இது சம்பந்தமா பேசுனீங்களோ? காசு கொடுத்தீங்களோ? அவன்கிட்டயே  போய் கேளுங்க!!!  அதோட குழந்தை பிறந்து இப்ப வரைக்கும் என் கண்ணுல கூட பார்க்கல. அதுக்குள்ள நீங்களா  வந்திங்க. என்னன்னவோ  பேசுறீங்க? குழந்தையை என் கூடயே வெச்சிக்கணும்னு  நினைச்சிருந்தா இந்நேரத்துக்கு இந்த ஊர்லயே இருந்துருக்க  மாட்டேன். குழந்தை திருடு போயிருக்கு. கண்டுபிடிச்ச உடனே உங்களை தேடி தானா வந்து சேரும். இது தான் உண்மை. இதை நம்பலைன்னா  உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க!!  எல்லாத்தையும் எதிர்கொள்ள  நான் ரெடி”  என்று நிறுத்தி நிதானமாக  பேசிமுடித்தாள்.
பொறுமை இழந்து கிருஷ்வந்த் கதவை தட்ட, “உள்ள வாங்க” என்றாள்.
மீரா பேசியதை கேட்டபின்னரும்  கோபமாகவே  இருந்த இருவரும் “நீ பேசறதுல  எங்களுக்கு நம்பிக்கை இல்ல.  இன்னும் இருபத்திநாலு  மணி நேரத்துல எங்க குழந்தை எங்களுக்கு வேணும் இல்ல கோர்ட்ல எங்களை சந்திக்க ரெடியா  இரு”  என்று மிரட்டிவிட்டு  சென்றனர்.
பாவம் இதற்கும்  சுதன் தான் காரணம் என அவள் அறியவில்லை. அந்த தம்பதியிடம்  இல்லாததும்  பொல்லாததும்  கூறி குழப்பிவிட்டு  அனுப்பி இருந்தான்.
உள்ளே நுழைந்த க்ருஷுவந்தோ  குழப்பமாக  அவளை பார்க்க, அவள் வேறு எங்கோ தன் பார்வையை செலுத்தினாள்.
“யாரு இவங்க? எதுக்கு உன் குழந்தையை அவங்க குழந்தைன்னு சொல்லிட்டு போறாங்க???”  என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக.
(நம்மாளு தான் பச்சைமிளகாவாச்சே!!  காரம் ரொம்ப அதிகமாயிருச்சு…!!!”)
“ரொம்ப பேசாதிங்க… விட்டா ஓவரா பேசிட்டே போறீங்க? நீங்க யாரு என்னை கேள்வி கேட்க? உங்க வேலைய  மட்டும் பாருங்க ”  என்றதும் அவ்வளவு நேரம் அமைதியா இருந்தவனுக்கு  எப்படித்தான்  அம்புட்டு  கோபம் வந்துச்சோ தெரியல? வேகமா போய் அவள் கன்னத்தில  பளார்னு  விட்டான் பாரு தலையே  சுத்திருச்சி  மீராக்கு…. ஆனாலும் கோபம் குறையாம எகிற ஆரம்பிச்சிட்டான்.
“என்னடி சொன்ன? நான்  யாரா? உனக்கு நான் யாருன்னு தெரியவே தெரியாதா?”  ‘எப்படி நடிக்கிறா பாரு?’  என்று உள்ளம் பொருமினாலும் சிறிதும் முகம் தளராமல் “இங்க பாரு உனக்கு குழந்தை பிறக்கட்டும்னு தான் வெயிட் பண்ணேன்…. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… இந்த செகண்ட்லர்ந்து நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உனக்கு இனி அப்பா, அம்மா, பிரென்ட், புருஷன் எல்லாமே நான் மட்டும் தான். முதல்ல உடம்பு சரியாகி  ஹாஸ்பிடல விட்டு வெளிய வா. உனக்கு வச்சிருக்கேன்”  என்று கோபத்தின்  உச்சியில் நரம்புகள் புடைக்க கூறினான்.
சொன்னப்புறம் தான் யோசிக்குறான்…!!!
‘அய்யய்யோ கோபத்துல உளறிட்டமோ பச்சைமிளகாய்  ஏற்கனவே எகிறுவா….  இப்போ என்ன சொல்லுவாளோ? உனக்கு ரொம்ப தாண்டா பொசசிவ்  அவ மேல!! அதுக்குன்னு இப்படியா?  போச்சு….!!!  இப்போ உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்…  இதோட என் முகத்துலயே  முழிக்காதான்னு  சொல்ல போறா…’ என்று மனது அவனை கரித்து  கொட்ட.
‘நீ சும்மா இரு இத்தனை நாள் பொறுமையா இருந்துட்டேன்  ஆனா இப்போ இங்க எல்லாமே கைய மீறி போயிட்ற்றுக்கு…!!!  என்னதான்  நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு  கேட்டா என்னையே கேள்வி கேக்கறா…??? சரியான அழுத்தக்காரி . இவளை இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்.’  என்று அறிவு சொன்னது.
‘ரெண்டு பேரும் அமைதியா இருங்க… நானே மனசுல இவளை பொண்டாட்டியா நினைச்சிட்டு  இருந்ததுல  நான் வேற கோபப்பட்டு  கையை நீட்டிட்டேன். முதல்ல இந்த பச்சைமிளகாய்   ரியாக்க்ஷன் எப்படி இருக்குன்னு பார்ப்போம்’  என்று இருவரையும் அடக்கினான்.

Advertisement