Advertisement

உன் வருகை என் வரமாய்…
8
அதன்பின் வர்ஷியை நிற்கவிடவில்லை அனைவரும். மீண்டும் ஒரு தரம்… தலைக்கு குளிக்க செய்து, அவர்களின் குலதெய்வம் மற்றும் பெற்றோரை வணங்க செய்து, கல்யாண வேலையை ஆரம்பித்தனர்..
செண்பா ம்மா… சொல்லுவதை செய்யும் இயந்திரமானார்.. கிரி.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான்.. அவனுக்கு தெரியவில்லை.. இது சரியா தவறா என. ஆனால்… சுப்புவை பற்றி நல்ல எண்ணமே அவனுக்கு.. எனவே தன் அக்காவை விட்டு பிரியாமல் நின்றான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் ப்ளௌஸ் தைப்பதற்கு அளவெடுக்க ஒரு லேடி வந்தார்… அளவெடுத்து.. எந்த டிசைன் என குறித்து சென்றார்.. அடுத்து மேக்கப்க்கு ஒருவர் வந்தார்… அவளின் முகத்தை பொலிவு பெற செய்தார்… 
இப்போது வர்ஷியினின் கூடவே, சுப்புவின் முதல் அத்தை இருந்தார்.. எதையும் மறுக்க விடவில்லை.. “கண்ணு.. தங்கம் “ என்றார்.. அவரின் கைகளில் வீடும், வர்ஷினியும் சுழன்றது.
அடுத்து… அவளுக்கு… பார்த்திருந்த மாப்பிளையை அடையாளம் காட்டிய  பானுமதியின், தூரத்து அண்ணனிடம் பேசினார் ஆத்மநாதன். 
அவர்கள், நாளை மாப்பிளையை அழைத்து வருவதாக இருந்ததே… ‘இங்கு இப்படி’ என நடந்ததை விளக்கினார்… பொறுப்பாக.. (அவசர) மாப்பிள்ளையை பெற்றவராக.
அந்தபக்கம் பேசிய நபருக்கும் ஏதும் சொல்லமுடியவில்லை.. ஆனாலும் அவர் கேட்டார் “வர்ஷினிக்கு இதில் விருப்பமா “ என… 
ஆத்மநாதனும் “சின்ன பெண்ணுக்கு என்ன தெரியும்… பெரியவங்கதான் நல்லது கேட்டது சொல்லணும்… எல்லாம் சரியாகிடும்” என்றார் சமாதனாமாக.. மேலும் சமாதானங்கள் பேசி.. ”நீங்கள் நாளை திருமணத்திற்கு வரவேண்டும் “ என நல்ல முறையில் வேண்டுகோள், வைத்தே அழைப்பை துண்டித்தார்… இப்போது அவருக்கு நிம்மதியாக இருந்தது.. மண்டபத்துக்கு சென்று வேலைகளை பார்க்க தொடங்கினார்.
இப்போது, சுப்பு இருந்த அறையின் கதவை தட்டினார் அவனின் இரண்டாவது அத்தை “டேய்… தம்பி… இதென்ன… பெண் பிள்ளை மாதிரி… வா, வெளியே… நாங்க இருக்கும் போது அப்படியே விட்டுடுவோமா…” என அண்ணனின், கௌரவம் காப்பாற்றி கொடுத்தது பற்றி, மார்த்தட்டியது அத்தையின் குரல். 
சுப்பு மெல்ல கதவை திறந்தான்… வெளியே வந்தவன் நேரே மாடியேற தொடங்கினான், எதையும் காதிலே வாங்காது.. இன்னமும் யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை அவனுக்கு.
ஓட்டமும் நடையுமாக சென்று அவனின் கையை பிடித்தார்… அத்தை, திமிரியது அந்த காளை “நில்லு ப்பா… என்ன இப்போ… உனக்காக ஒருத்திய அங்க சாமாளிச்சு… கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சி, பேசி முடிச்சிட்டு வந்திருக்கோம்… நீ என்ன இப்படி கோவபடுற” என்றவர்.. பேசியபடியே அவனை அழைத்து வந்து, அமர வைத்தார்.. எல்லாவற்றையும் சொன்னார்.. சத்தமாக.
யாரையும் பார்க்க பிடிக்காதவனாக… கண்மூடி அமர்ந்து கொண்டான். இந்த சத்தம்… பேச்சு… இன்னும் வலித்தது அவனுக்கு… என்னதான் இருந்தாலும் அவனின் மனம் காயப்பட்டதை யாரும் அறியார்.. 
நடந்த ஒன்றை மாற்றுகிறேன் என எண்ணி.. இப்போது வர்ஷினியை சம்மதிக்க வைத்திருந்தனர்… மேலும், செய்த காரியத்தை… பேசியதை.. அவர்கள், அவனிடம் சொல்லுவதும் அவனை சங்கடபடுத்தியது.. அது மீண்டும் மீண்டும் அவனை.. காயபடுத்தியது… விட்டு சென்றாள் ஒருத்தி என தோன்ற தொடங்கியது..
சுப்புக்கு, அமைதியான வாழ்க்கைமுறை என்பது பிடித்த விஷயமே… அதில் திருமணம் என்ற ஒன்று தவிர்க்க முடியாதது. அதற்காகவேதான், நேசித்த வேலையை விட்டு வந்தான். மேலும் பல ஆண்கள் சொல்லுவது போல.. லிவிங் டு கேதேர், லவ்.. சைட்.. இதிலெல்லாம் பெரிதாக கருத்து கிடையாது அவனுக்கு.
அவனின் உலகம் ஒரு கட்டன் ரைட்டானது.. அசட்டுத்தனமான ஆசைகள் எதுவும் இல்லாது.. இந்த வயதில் படிப்பு.. அதன்பின் சரியான வேலை.. அதில் நிறைய பெயர், புகழ்.. 
அதற்கடுத்து.. என்ன, என.. எனும்போது ‘திருமணம்..’ சமூகத்தில் ஒரு நல்ல, நிறைந்த மனிதாக, தன் பெயர் இருக்க ஒரு சிறந்த குடும்பம்.. அமைதியான வாழ்க்கை இதைதான் எதிர்பார்த்தான் அவன்.. 
இயல்பாய் எல்லோருக்கும் நடப்பதைத்தான் விரும்பினான் அவன்.. அவனின் நியாமான ஆசையும் நடக்கவில்லை. ஆனால், இதில் அவனுக்கு காதல், பாசம் போன்றவை.. எங்கும் வரவில்லை.. அது வேறு விஷயம்.
இப்போது எல்லோரும்… உனக்காகத்தான் செய்தோம் எனும்போது… அந்த வார்த்தை அவனை எதோ செய்தது.. ’இல்ல..இல்ல… நம்ம கெளரவத்துக்காக செய்தோம்’ எனதான் சொல்ல தோன்றியது. கூடவே பெரிய வெற்றிடம் அவன் மனதில்.. இத்தனை நாள் இல்லாமல் இந்த ஷணம் அவர்களின், பேச்சில் வந்து அமர்ந்தது..
ஆக வர்ஷினி என்ற பிம்பத்தை அவன், மனதில் பதியவைக்க சொந்தங்கள் முயலவில்லை… ‘என்னால்தான்… நான்தான், உனக்காக, அவளிடம் பேசினேன் நான்தான்…. பேசினேன்…. அதனால்தான் இப்போது திருமணம் நடக்கிறது…’ என்பதைதான் உறவுகள் சொல்லியது.
ஆக, சுப்புக்கு… யாருக்கும் என்னை பிடிக்கவில்லை.. இப்போதும் கட்டாயாத்தால்தான் ஒருத்தி, எனக்கு கழுத்தை நீட்டுகிறாள்… எப்போதும் என்நிலை தனிதான்… மாறாது.. என அவன் மனம், உள்ளுக்குள் கத்திக் கொண்டிருந்தது.. அவன் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும்படி.
இதெல்லாம் ஹாலில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் சுப்பு… அந்த சிந்தனையை கலைத்தார்… அத்தை “தம்பி… போ.. குளிச்சிட்டு வா… சீக்கிரம்” என அவனிடம் பொறுமையாக சொன்னார், அவனின் முகம் அப்படியொரு இறுக்கத்தை காட்டியது.. எனவே பொறுமையாக பேசினார் அத்தை.
அப்போது சரவணன் உள்ளே வந்தான்…
சுப்பு மேலே ஏறினான், ஏதும் பேசாமல்… தன்போக்கில்… யோசனையுடன். மனமெல்லாம் மீண்டும் மீண்டும் அந்த புறக்கணிப்பில்.. இன்றைய கட்டாயத்திலும் நின்று, சுழன்று… அவனை சுழற்றியது..
ஓய்ந்து போனான்.. வெளிவர முடியவில்லை.. எப்போதும் போலான ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்… அமைதி. எது நடந்தாலும் அவன் காட்டும் ‘எனக்கென்ன…’ என்ற அமைதியை எடுத்துக் கொண்டான்.. அது இவனுக்கு பழக்கம்தானே.. இப்போதுதான் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.
குளித்து.. கிளீன் ஷேவ்வில்… அழகான வெள்ளை வேட்டியும்… தோதான… பொடி கட்டம் போட்ட, இளமஞ்சள் நிற ஷர்ட் அணிந்து கீழே இறங்கி வந்தான்..
தன் அத்தையிடம் “த்த… காபி…” என்றான் திடமான குரலில்… 
கிழவிகலெல்லாம் “ஆத்தி, ராசா… இதுதானே… என் பேரனுக்கு அழகு… உட்கார்ந்த இடத்திலிருந்து… சாதிசிட்டியேய்யா… 
யார்க்கு, எங்கன்னு இருக்கோ அதானே நடக்கும்… உனக்கு நம்ம வர்ஷினிதான்.. அமைதியா எல்லோரையும் அனுசரிச்சு போகுமையா.. உன்னை நல்ல பார்த்துக்கும்மையா…” என எதோ அருள்வாக்கு சொல்லியபடி தன் பேரனை திருஷ்ட்டி எடுத்து… அழகு பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
சுப்பு மனதில் ஓடியது ‘அவ.. என்னை நிமிர்ந்து பார்க்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்’ எனதான் தோன்றியது..
காபியோடு வந்த அத்தை, அசந்துதான் போனார் அவனின் தோற்றத்தில்… இதென்ன… அரைமணி நேரம் முன்பு வரை.. எப்படியோ இருந்தான்.. இப்போது மாப்பிளை கலையில் வந்து, தோரனையாக அமர்ந்திருப்பவனை பார்க்கவும் வாய் மூடிக் கொண்டார்… ஏதும் பேசாமல்.
சரவணன், ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான் தன் அண்ணனை எப்படி, எதில் சேர்ப்பது… என புரியாத… ஆராய்ச்சி பார்வை பார்த்து. இப்போது சுப்புவே “என்ன டா… இப்போ பொண்ணு புடிக்குதான்னு… கேட்கமாட்டியா…” என்றான் ஆழ்ந்த குரலில்.
சரவணனுக்கு ‘ஆ….’ என்றானது… என்ன.. பீலிங்க்ஸ்சே இருக்காதா.. இவனுக்கு, எனதான் தோன்றியது. சுப்பு “போ.. வேலைய பாரு… அந்து பழனி மாமா சொன்னாரே… நைட் மெனுல… கம்பங்கூழ் வேண்டாம்… காலையில் போட்டுக்கலாம்னு.. அத, மாத்திட்டியா.. செக் பண்ணிக்க..” என்றவன் எழபோக… அவனருகில் வந்தார் பானுமதி..
அவனை தன் கையேடு சேர்த்து… தங்கள் அறைக்கு கூட்டி சென்றார்.. பின்னாடியே சரவணனும் வந்தான், யாரும் கவனிக்கத வகையில்.. பானுமதி “என்ன டா… ஒன்னும் கேட்கமாட்டேன்கிற… ஏதாவது கேளுடா… சொல்லு டா” என்றார் பதட்டமாக.. ஆசையாக.. 
சுப்பு “என்ன கேட்கனும்…” என்றான்.. பொறுமையாக அந்த கட்டிலில் அமர்ந்த படி…
பானுமதிக்கு கண்ணீர்தான் வந்தது.. அதிகம் பேசமாட்டான் சுப்பு.. கண் பார்த்து பரிமாறுவார் பானுமதியும்.. சத்தமே இருக்காது இருவரிடமும்.. இப்போது, அவன் வாய்மொழியாக ஏதாவது.. கேட்டு, சண்டை போட்டால் பரவாயில்லை.. என தோன்றியது அவருக்கு… அவனின் மனம் அறியலாம்தானே என.. மேலும் வர்ஷிணியும் அப்படியே.. எதுவும் கேள்வியே கேட்டகவில்லையே  என தோன்றியது.. 
அதனால், இவனாவது ஏதாவது கேட்ப்பானா.. என்ன இருந்தாலும் தாயில்லா பெண்.. இவன் என்ன நினைக்கிறான்.. இன்னும் அந்த பழைய பெண்ணையேதான் நினைக்கிறானா.. புரியவில்லையே.. அவசரமாகத்தான் நடக்கிறது.. ஆனாலும், இன்னும் அவகாசமிருக்கிறதே.. என துணிந்து கேட்டார் “நம்ம பாருவ… பிடிச்சிருக்கா டா” என..

Advertisement