Advertisement

அவளின் நட்பு வட்டம் முழுவதும் பிடித்துக் கொண்டது… அவள் பள்ளிக்கு வரவும்.. கேள்விகளால் அவளை குடைந்து எடுத்துவிட்டது. பதில் சொல்லி மாளவில்லை அவளிற்கு. இப்படி.. இது.. என எதோ சொல்லி பூசி மொழுகி வைத்தாள்.
சில தோழிகள், அறிமுகம் செய்து வை.. எப்போ உன் வீட்டுகாரர கண்ணுல காட்டுவ.. என குறும்பாக கேட்ட போதும்.. மழுப்பலாக சிரிக்கத்தான் முடிந்தது அவளால்.. அந்த நேரங்களில்தான் வர்ஷினி, உணர்ந்தால்… திருமணம் என்பது… எவ்வளவு… அழகானது என… என்னவன், என் அன்பன் என பெருமையாக சொல்லும் சுகமே தனிதான் என மனம் உள்ளே பிதற்ற தொடங்கியது.
ஆனால்.. கணவன் என்ற வடிவில் ‘சுப்பு’ எனும் போது.. சின்ன சுணக்கம் வந்தது… பயம்.. இன்னும் வந்தது… முன்போல் கைகால் நடுங்கவில்லை.. ஆனால், அவனுடன் மற்றெதெல்லாம் எனும் போது கைகால் நடுங்கியது.. எனவே தன்னிடத்திலேயே இருந்து கொண்டாள் வர்ஷினி.. மேலும் யாரும் வந்து அழைக்கவில்லை.. செண்பாவும் போ என சொல்லவில்லை.. பின் என்ன… என ஒரு அலட்சியம் வந்தது அவளுக்கு.
அத்தோடு.. ‘தாலி கட்டினால்ல… வரவேயில்ல… அதன்பிறகு’ என பெண் மனம் இயல்பாய் முறுக்கியது.. ஆனால், நீயேதான் திருமண நாளன்று வந்தாய் என்பதை அவள் மனசாட்சி சொன்ன போதும், ஒத்துக் கொள்ள முடியவில்லை அவளால்.. 
அதனால், அதன் குரல் எளிதில் அடங்கியது.. ஆக, வர்ஷினிக்கு ஒரு காரணம்.. என்னை யாரும் அழைக்கவில்லை என… அதனை கொண்டே மனதை செலுத்தி, நிற்கிறாள் இத்தனை நாளாய்.
சுப்பு அன்று வந்ததுடன் சரி… அதன் பிறகு… அந்த தோட்டத்து வீட்டுக்கு வர முடியவில்லை… ஏதோ வேலை. பைரவனை, கொண்டு வந்து விடவே.. இரவு நேரமானது.. அதையும் கேட்டிலேயே விட்டு சென்றான்.. 
உண்மையில், அவளை பார்க்க தயக்கம்… ஏதோ தடுத்தது… சொல்ல போனால்.. சின்ன குற்ற உணர்ச்சி கூட… எனவே சுப்பு, வேலை என்பதில் தன்னை மறைந்து கொண்டான். எப்படியும் வருவாள்.. வீட்டிற்கு, அப்போது சொல்லி.. புரியவைத்துக் கொள்ளலாம் என எண்ணம் அவனுக்கு.
பானுமதி… தன் கணவனிடம் சொல்லியாகிவிட்டது .. மருமகளை வீட்டுக்கு அழைத்துகொள்ளலாம்… மற்ற சடங்குகள்.. எப்போது நாள் நன்றாக இருக்கிறதோ அப்போது வைத்துக் கொள்ளாம் என… 
ஆத்மநாதணும் “சரி ம்மா… நாள் பார்த்திடலாம்” என்றபார் அவ்வளவுதான். அதன்பிறகு சத்தமே இராது.. ஆயிற்று இரண்டுமாதம்… எந்த முன்னேற்றமும் இல்லை வர்ஷினி சுப்புக்கு இடையே…
ஆனால், பானுமதி தினமும் வருவார்… மாலை. அவள் பள்ளியிலிருந்து வரும் நேரம்… “எப்போ வரதங்கம் வீட்டுக்கு” என்பார் ஆற்றாமையாக..
அவளும், விளையாட்டாய்.. “போ.. உன் புருஷன வந்து கூப்பிட சொல்லு… இல்ல என் புருஷன கூப்பிட சொல்லு” என ஏதாவது பேசுவாள்..
அவரும் சிரித்தபடியே… “நாள் பார்த்து கூப்பிட்டு போறேன்…” என்பார். சுப்பு வஜ்ரனை கொண்டு விடும்போது… தன் மனையாளை பார்த்து வருகிறான் என நினைத்து அமைதியாக இருந்தார் பானுமதி.. அப்படியே விளையாட்டாய் சென்றது காலம். 
ஆனால், ஆத்மநாதன்… இன்னமும் ஏனோ… தன் மருமகளை ஒதுக்கிறார்.. இப்போது இதில் மகனும் அடிபடுகிறான் என புரியாமலே.. ஆம், வர்ஷினி, தானே வீடு தேடி வரவேண்டும் என எண்ணினார்..
திருமணம் ஆனவளுக்கு… சேர்ந்து வாழ தெரியாதா… இன்னும் ஒருமாசம் இப்படியே இருந்தால்.. அவளே வருவாள்.. நாம் போய் எதற்கு அழைக்கணும், என எப்போதும் போல ஒரு திமிருடன் இருந்தார்.. அப்படியிருந்துதான்… நாட்களை கடத்தினார்..
மேலும் அவருக்கு இப்போது ஒரு பயம்… தன்னை உதாசினபடுத்துவாளோ என நடுக்கம் போலும், அதனால் ஜோசியத்தை காரணம் சொல்லி தப்பினார். ஆக இன்னமும் வர்ஷினியின் வாழ்வில்.. ஒவ்வருவரும் விளையாடினர்.
சரவணன், அதன்பிறகு பேச முயற்சி செய்தான், அவள் இடம்தரவில்லை.. போனில் அழைத்தால்.. போனை எடுப்பதில்லை வர்ஷினி.. அவளுக்கு இப்போது ஒன்றிக்கு, இரண்டு கோவம்… இவன் அப்போதும் ஏதும் பேசவில்லை.. இப்போது.. திருமணம் முடித்தும் நான், இங்கே இருக்கிறேன்.. இப்போதும் ஏதும் பேசவில்லை.. என சரவணன்தான் இப்போதும் அவளின் கோவம் செல்லுபடியாகும் ஒரே இடமானான்.
கிரி கூப்பிட்டு கேட்டான்.. சர்ருவுடன் ஏன் பேசவில்லை என.. ஆனால், கிரியுடன் பேசும் போனையும் கட்செய்தால்.. நட்பு போர்க்களமானது… தம்பியுடனும் பேசவில்லை.. வர்ஷினி இப்போது தனியானாள். யாரிடமும் பேசவில்லை.. அமைதியானாள்.
நாட்கள் கரைய, கரைய… வேண்டுமென்றே சுப்பு தன்னை, தவிர்ப்பதாக எண்ணம் வந்தது அவளுக்கு.. அதிலும், ஆத்மநாதனும் இதுவரையில் ஏதும் கேட்க்காமல் இருப்பதும் ஏனோ.. மனம் விட்டுப்போனது அவளுக்கு…
‘யாருக்கும் இப்போது என் தேவை இல்லை… எல்லாம் கௌரவம் பார்த்து நடந்த திருமணம்’ என மனம் முழுவதும் ஒரு எண்ணம்.. எனவே, கோவம், ஆற்றாமை.. எல்லாம் சேர்ந்து… வரட்டும் ‘நீ வேண்டுமென’ எப்போது வருகிறானோ அப்போது பார்த்துக்கலாம் என எண்ணி.. அமைதியாக இருந்தாள். சிலசமயம் பானுமதியிடம் வார்த்தைகளால் அழுத்தமாக பேசியும் விடுகிறாள்.. மொத்தத்தில்.. இறுகிவிட்டாள்.
எங்கும் எப்போது விலகி நடந்தாள்… ஏதாவது விசேஷ நாட்கள் என்றாலும் வர்ஷினி அங்கு செல்வதில்லை… பானுமதி மட்டும் இருவீட்டுக்கும் அலைய தொடங்கினார்.
அன்று… எதோ ஒரு விழாவிற்கு ஆத்மநாதணும், பானுமதியும் சென்று வந்திருந்தனர்.. உறவுகள் எல்லாம் ‘என்ன நீ வர.. உன் மறுமகள கண்ணுலையே காட்டமாட்டேன்கிற… 
புதுசா கல்யாணம் ஆனவங்க.. இப்படி வந்து, போக இருந்தாதானே… உறவு ஒட்டும்’ என ஏகத்துக்கு பானுமதிக்கு அறிவுரை… எப்போதும் போல பானு எல்லாவற்றியும் கேட்டுக் கொண்டார் பதில் பேசாமல்..
அப்போதுதான் விழா முடித்து வீட்டுக்கு வந்தனர்.. இருவரும். தன் கணவனிடமும் பானுமதி கேட்டாகிவிட்டது “என்னங்க… நம்ம மறுமகள.. கூப்பிடுங்க… உங்க பையனும் அப்படியே இருக்கான்” என..
ஆத்மநாதன்.. “எல்லாம் நாள் பார்த்திட்டு பேசலாம்.. வரட்டும் எங்க போயிட போறா” என்றார் அன்று எதார்த்தமாய்.
சுப்பு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகிறான்… தன் மனைவியை பற்றியும் தன்னை பற்றியும் பேச்சு எழ… இயல்பாய் மெல்ல சத்தம் செய்யாமல் நடந்து வந்தான்… அப்போதுதான் தன் தந்தையின் வார்த்தை காதில் விழுகிறது.
சுப்புக்கு இந்த பதில் அதிர்ச்சியை தந்தது… என் இப்படி ஒரு பதில் எனதான் தோன்றியது. இன்னும் என்ன தடுக்கிறது அவரை, என யோசனை ஓடியது அவனுள்.
அவனுக்கு எல்லாம் கைகளில் வந்த பழக்கம்… எதுக்கும் அவன், பெரிதாக அலட்டியது கிடையாது.
எதோ திருமண விஷயத்தில் நாட்கள் சென்றது, மற்றபடி… அவன் நினைப்பதற்கு முன் நடக்கும்.. அப்படி ஒரு அமைப்பு அவனுக்கு.. எனவே, வர்ஷினியின் செயலும் அப்படியே என எண்ணி.. அமைதிகாத்தான்.
மேலும் வீட்டின் நிலவரமும்… ஏதோ நாள் பார்க்கிறார்கள்.. அவளை அழைத்து வருவார்கள்… நாம் அசட்டுத்தனமாக ஏதும் செய்ய கூடாது என இவன் அமைதியாக இருக்க… 
இன்று தன் தந்தையின் பேச்சு… ஏதோ போலானது..  இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை அவன்.. தன் அப்பாவை பின்பற்றியே இத்தனையும் செய்தான்.. வர்ஷினியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… திருமணம் முடிந்தும் கூட.
இப்போது.. தன் தந்தையின் வாயிலிருந்து ‘எங்கே போக போறா’.. என்ற வார்த்தை… அமிலமாகவே உள்ளே இரங்கியது.
இதுவரை எப்படியோ, இப்போதும் இப்படியொரு வார்த்தை அவர் வாயிலிருந்து… சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவன். அப்போ அவளை இன்னமும் பிடிக்காதா.. என தோன்றியது. ஆக.. அப்போ எதுக்கு அன்று அவசரமாக போய் பேசுனாங்க… அப்போ நான் நினைத்தது சரி, கெளரவத்துக்காக திருமணம். அவர் முழு மனதுடன் இதை ஏற்கவில்லை. ஒருமனம் சண்டையிட்டாலும்… சட்டென அப்பாவை தப்பாக பார்க்க முடியவில்லை அவனால்.. அது அபத்தமாக தெரிந்தது. ஆனால், நடப்பதும் புரியவில்லை.. மெல்ல நடந்து மேலேறினான் தனதறைக்கு.
பானுமதி “சுப்பு, இந்தா” என டீ தந்தார்.. அதனை பார்த்தவனுக்கு.. திருமணத்திற்கு முன் அவள் தரும்.. ம்கூம்.. தன் கையில் கொடுக்காமல் கீழே வைக்கும் அவளின் டீ நினைவு வந்தது. டீ கோப்பையும், அவள் நினைவுகளுமாக படியேறினான்..
மேலே சென்றான்.. முதல்முதலாக வர்ஷினி வந்து போனால்… மனகண்ணில்… அன்று அவளை வாரிஎடுத்தது நினைவு வந்தது. அவளின் நினைவில் டீ.. அவனின் உதட்டை சுட்டது…
பட்டென நினைவு வலை அறுந்தது… மனத்தால் கூட அவளிடம் நெருங்கமுடியவில்லை அவனால். மனம் இப்போது இடித்துரைத்தது… ‘இத்தனை நாள்… எங்கு போனா… இப்போதான் தெரியுதா  உனக்கு’ என அவள் சார்பாக டீயும், மனமும்.. உண்மையை சொன்னது.
உண்மையை ஏற்பவன் போல்… அந்த சூடான டீயை மெல்ல மெல்ல அவளின் நினைவோடு பருக தொடங்கினான்…
“இதயத்தை எதோ ஒன்று….
இழுக்குது கொஞ்சம் நின்று…
இதுவரை… இதுபோலே நானுமில்லையே…
கடலலை போலே வந்து…
கரைகளை அல்லும் ஒன்று…
முழுகிடமனதும் பின்வாங்கவில்லையே…
இருப்பது ஒருமனது இதுவரை அது எனது…
எனவிட்டு மெதுவாய் அது போககண்டேனே..
எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வார்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என தோன்றும் நாளும் என்று…”

Advertisement