Advertisement

உன் வருகை என் வரமாய்…..
9
எது எப்படி இருந்தாலும்… வர்ஷினி எதையும் மறுக்கவில்லை… எல்லா சடங்குகளிலும் அமைதியாகவே இருந்தால்… மதியம் விருந்து.. இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும் என பெரியவர்களின் கட்டளை.. 
அதனால் அவள் அருகில் அமர்ந்து உண்டான்.. இந்த போட்டோகிராபர் வேறு… ஊட்டிவிடுங்கள்… என அபஸ்வரமாய சொல்ல… சுப்பு ஒன்றும் சொல்லவில்லை. வர்ஷினிதான், தன் அத்தையை முறைத்தாள்…… 
இந்த ரெடிமேட் அன்பெல்லாம் அவளுக்கு வராதே… பானுமதியும் “பரவாயில்லப்பா.. அப்புறம் பார்த்துக்கலாம்” என சமாளித்தார். சுப்பு தன்போல் அமர்ந்து உணவு முடித்து எழுந்தான்.. திரும்பியும் பார்க்கவில்லை, ஏதோ பத்து வருடம் வாழ்ந்தவன் போல் ஒரு மிதப்பு அவன் கண்ணில்…
எல்லாம் முடிந்து மணமக்கள் இருவரும் தனித்தனியே அமர்ந்திருந்தனர்.. வர்ஷினி மண்டபத்தில், மணமகள் அறையில் அமர்ந்திருந்தால்.. மாலையில் மண்டபம் விட்டு, வீடு சென்றால் போதும் எனவே ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர் அனைவரும்…
எல்லோரும் அங்கங்கு கூட்ட கூட்டமாக வெளிய அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பானுமதிக்கு சந்தோஷத்தில்.. திக்குமுக்காடி போனார்.. குரலே சற்று உயர்ந்து ஒலித்தது.
வர்ஷினி, மெதுவாக நகைகள் எல்லம் களைந்து கொண்டிருந்தாள்.. கிரி அருகில் இருந்தான்… சரவணன் உள்ளே வந்தான்.. மெல்ல, அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.. 
சிவந்த முகம்… களைப்பான கண்கள்.. யாருரையும் பார்க்க விரும்பாத பாவனை.. என வர்ஷி சர்ருவை கவனிக்காமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த சேரின் கீழே அமர்ந்தான் சர்ரு… “என்ன பாப்பா… ஏன் இன்னமும் இப்படி இருக்க..” என்றான் பொறுமையாக..
வர்ஷினிக்கு அப்பாடா என்றானது… இன்னும் ஏதேனும் சடங்கு செய்யணும் என யாரும் வர கூடாது என அமர்ந்திருந்தால்.. முடியவில்லை அவளால்.. இப்போது சர்ரு இப்படி கேட்டகவும் “போ… உன் கூடெல்லாம் பேச முடியாது போ… வெளிய போ..” என்றாள் அவனை பார்க்காமல்..
“ச்சு… இனி அப்பிடியெல்லாம் சொல்ல முடியாதே… என்னோட ஒரே அண்ணி… இப்படி சொல்லலாமா…” என்றான் மீண்டும் விளையாட்டாய்..
“வேண்டாம் சர்ரு… நான் வீட்டுக்கு போகணும்… அத்தைய கூப்பிடு” என்றாள் ஆழாத குறையாக.. சர்ரு அவளின் கைபற்ற நினைத்து தன் கையை எடுக்க…
இப்போது நிமிர்ந்து பார்த்தால் வர்ஷினி “கோவமா இருக்கேன்… பேச முடியாது… போ… இப்போ எனக்கு வேற டென்ஷன்.. அத்தைய கூப்பிடு ப்ளீஸ்” என்றாள்.
கிரி சென்றான்… தன் அத்தையை அழைக்க… பானுமதி வந்து “என்ன தங்கம்” என்றார் வாஞ்சையாய்… ஏதோ சொன்னாள்… பின் உடனே வேலை நடந்தது.
அப்போதே கிளம்பினர் சுப்பு வீட்டுக்கு மணமக்கள்.. தம்பதியை அத்தைமார்கள் ஆர்த்தி சுற்றி உள்ளே அழைத்தனர்.. வந்து விளக்கேற்றி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி என நேரம் சென்றது..
வர்ஷினிக்கு எப்போதடா அமர்வோம் என்றானது பொறுமையாக எல்லாம் செய்தாள்.. எல்லாம் முடிந்து அத்தை “புடவை மாற்றிக்க” என்றார்…
வர்ஷினி “இல்ல பெரியம்மா… நான் அங்க தோட்டத்து வீட்டுக்கு போகனும்.. ப்ளீஸ்…” என்றாள் இரைஞ்சலான பார்வை, தன் பானு அத்தையை பார்த்தபடி…
யாருக்கும் மறுக்க முடியவில்லை… எல்லோருக்கும் அவளின் நிலை புரியும்தானே… யாரும் கொடுமைக்காரர்கள் இல்லையே.. எனவே அவர்களும்  “சரி..” என்றார்.
சுப்பு எப்போதும் போல ‘எனக்கென்ன’ பார்வை பார்த்து அமர்ந்திருந்தான்.. திரும்பி ‘என்ன என்பதாக‘ ஒரு பார்வை கூட பார்க்கவில்லை அவளை, அவன். 
பானுமதி, வர்ஷினியிடம்  “இரு.. உன் புருஷன் கூட போ” என்றார்.
அவள் வாசலின் அருகில் நின்றாள்.. திரும்பவும் பானுமதி “என்ன டா சொல்லனுமா… உன் பெண்டாடிடா அவ… எங்க போனாலும் கூட நீதான் போகணும்… எப்போதும் நான் சொல்லமாட்டேன்” என்றார், அருகில் வந்து உறுத்தும் பார்வை பார்த்து..
இவன் ஒன்றும் சொல்லவில்லை.. வண்டி சாவி தேடினான்… இந்த கல்யாண கலாட்டாவில் சாவி எங்கையோ இருந்தது போல… நேரத்துக்கு கிடைக்கல.. இரண்டு நிமிஷம் நின்றாள்… கிளம்பிட்டால் வர்ஷினி… இவன்.. சாவியை தேடுறேன்னு, எல்லோரும் தேடினாங்க.. அவள பார்க்கல…
அடுத்த நிமிடம் பார்க்க, அவளை காணம்.. செண்பா பின்னாடியே ஓடினார்.. சுப்பு அமர்ந்து கொண்டான்.. வர்ஷினி வீடு வந்தாள்.. தானே தன் அன்னை தந்தை படத்திற்கு நமஸ்காரம் செய்து உடனே.. குளிக்க சென்றாள்…
எப்போதும் போல ஒரு அழுக்கு நைட்டி அணிந்து, அரைமணி நேரம் கழித்தது வெளியே வந்தாள்.. இப்போது கனமான தாலி தவிர, அந்த வர்ஷினியிடம் வேறு மாற்றமில்லை…
சென்பா, பின்னாடியே வந்தவர்… வர்ஷினி வரும் வரை காத்திருந்து “என்ன ம்மா” என்றார்.. 
வர்ஷி “ஒண்ணுமில்ல ட்டேட்… நான் கொஞ்சம் படுக்கிறேன் செண்பம்மா” என்றவள்… தன்னறையில்.. கீழே.. கைகளை தலைக்கு கொடுத்து கண்மூடிக் கொண்டாள்… உடல் அசதி.. மன அசதி.. எல்லாம் சேர்ந்து, நிமிடத்தில் உறங்கினாள் வர்ஷினி…
செண்பா உள்ளே சென்று… பால் இருக்கா பார்த்து… இல்லையெனவும் கிரீன் டீ போட்டு, எடுத்து வருவதற்குள்… உறங்கியிருந்தாள். தலை ஈரம்.. அப்படியே சொட்டிக் கொண்டிருந்தது… அப்படியே உறங்கினாள்.
கண்ணில் நீர்தான் வந்தது வளர்த்தவருக்கு… மெல்ல ஒரு காய்ந்த துணியால் துடைத்தார், அவளின் தலையை.. ஏனோ கோவம் வந்தது சுப்பு மேல்.. கல்யாணத்தன்னிக்கு, யாராவது இப்படி பொண்டாட்டிய தனியா விடுவாங்களா.. என கோவம் வந்தது.. இன்னும் பத்து நிமிடம் சென்று… சுப்புவுடன்.. வண்டியில்.. பானுமதி வந்தார்.
என்னாச்சு “வயறு வலிக்குதுன்னு சொன்னா… என்ன செண்பா “ என புலம்பியபடி உள்ளே வர… அவளின் அறையிலிருந்து செண்பா வெளியே வந்து “தூங்கறா அண்ணி” என்றார்.
பானு “அதுக்குள்ளயா… என்ன சாபிட்டாலோன்னு… தோசை எடுத்து வந்தேன்… அதுக்குள்ள லேட் ஆகிடிச்சி..” என்றவர்.. உள்ளே சென்றார்.. அனாதரவாக… முகமெல்லாம் இளகி… உடலை குறுக்கி படுத்திருந்தாள். பானுமதிக்கு தாங்கவில்லை.. “சுப்பு வா… பாருவ, தூக்கி கட்டிலில் விடு…” என்றார்..
செண்பா “இல்ல மாசா மாசம் இப்படிதான்…” என எதோ சொல்ல…
பானு “என்ன இப்போ… அலசிக்கலாம்.. தூக்குடா.. மேலேவிடு அவள” என்றவர், கண்களை துடைத்துக் கொண்டு வெளிவந்தார்..
சுப்பு, இன்னும் பட்டுவேட்டியில்தான் இருந்தான்.. அதனை மடித்து கட்டுக் கொண்டு அவளை தூக்க.. “டேய்… “ என்றாள்… கண்ணை திறக்காமல், தம்பிதான் என நினைத்து வர்ஷினி… 
சுப்புக்கு ஏனோ சின்ன சிரிப்பு வந்தது.. அதில், அந்த சத்தில்.. லேசாக தொலைந்தான்.. சின்னதாக அவளை ஒரு குலுக்கு குலுக்கினான்.. ம்கூம்.. கண் திறக்கவில்லை அவள்… இன்னும் வாகாக தூங்கினாள்…
அப்படியே அவளை கட்டிலில் கிடத்தி, பார்த்தான்.. அவன், கட்டிய தாலி மஞ்சள் கயிரில் மின்னியது… ஆனால், எங்கோ காணம்… அவளின், கழுத்தில் அழுந்திக் கொண்டிருந்தது… அதனை தேடி, விரலால்.. பட்டும்படாமல் எடுத்து முன்னே போட்டு.. வெளியே சென்றான்.. விழிப்பாலோ என எண்ணமே இல்லை போலும்…
அதற்குள் வர்ஷி “கிரி… டேபிள் பேன்.. போட்டு போடா” என்றாள் தூக்கத்தில். தெரிஞ்சி சொன்னாளா.. தெரியாமல் சொன்னாளா அவளுக்கே வெளிச்சம்… சிரித்தபடியே அதனையும் செய்து வெளியே வந்தான் கணவன்.
பானு, உள்ளே வந்து தலையை நன்றாக விரியவிட்டு… அந்த பேன்னை அருகில் வைத்து, கதவை லேசாக சாற்றி வெளியே வந்தார்.
பானு “நீ இருடா… நான் போறேன்.. பார்த்துக்க..” என தன் மகனிடம் பொறுப்பாய் சொல்லி கிளம்ப… கேட்ப்பானா, மகன்…
சுப்பு “வா…” என ஏதும் பேசாமல் முன்னே சென்றான்.
சென்பாவிடம் சொல்லி சென்றார் பானு.. “எழுந்துடன் சொல்லுங்க… நான் சாப்பாடு கொடுத்துவிடுறேன்… பார்த்துக்க… செண்பா“ என கிளம்பினார்.
வீட்டுக்கு வந்து பானுமதி, விஷயத்தை சொல்லவும்.. எல்லா உறவுகளும் ஆளாளுக்கு எதோ முனுமுனுத்து, சிலர் சிரித்தபடியே, பேசி.. உணவு உண்டு கிளம்பினர், ஒவ்வருவராக.. அன்றே எல்லோரும் கிளம்பினர்.
ஆயிற்று ஒருவாரம்… சரவணன் கிரி ஊருக்கு சென்றனர்.. கிரி பொறுப்பாய் சொன்னான் “க்கா… அங்க சுப்பு மாமா வீட்டுக்கு போகும் போது சொல்லு ரெண்டுநாள் லீவ் போட்டு வரேன்… “ என சொல்லி சென்றான்.
அத்தைகள் ஊருக்கு சென்றவர்கள்தான்.. இன்னும் தன் அண்ணனிடம் பேசவில்லை… எல்லோருக்கும் கல்யாணம் நடந்தால் போதும் என்ற நிலையில் இருந்தனர்.. யாரும் அதன் பிறகு ஏதும் பேசவில்லை.
திருமணமானவர்கள் இருவரும், இயல்பாய் வேலைகளை பார்க்க தொடங்கினர்.. வர்ஷினி எப்போதும் போல ஸ்கூல்லுக்கு சென்றாள். ஆனால் பள்ளியில் கேட்பவர்க்ளுக்குதான் பதில் சொல்ல முடியவில்லை அவளால்… 

Advertisement