Advertisement

இவர்கள் வரவும் “வாங்க சித்தப்பா… வாங்க சித்தி… வா…ங்க மாமா” என பொதுவாக, கூடவே தயக்கமாக வரவேற்று, தன் அத்தையிடம் கண்ணால் என்ன என வினவினால் வர்ஷினி.
இப்போது  சுப்புவின் அத்தை “கிரி… ப்பா, கிரி…” என்றார் வாஞ்சையான குரலில்..
யாரோ செய்யும் பிழையால்… பாதிக்கபடபோவது… எல்லோருமாக. இந்த நேரம், அவஸ்த்தைதான் பானுமதிக்கு. என்ன சொல்லுவது தன் மருமகளிடம்.. எப்படி கேட்பது.. எங்கே தொடங்குவது… என இறைஞ்சலான பார்வை பார்த்து அமர்ந்து கொண்டார் தன் கணவனின் அருகில்.
கிரி, இப்போது வெளியே வர, அவனை முன்னிறுத்திக் கொண்டு… அந்த மூத்த தம்பதிகளிடம் விவர்த்தனர் சுப்புவின் நிலையை… கண்களில் நீருடன் பேசவே முடியாமல் அமர்ந்திருந்தார் பானுமதி.. பார்க்கவே வர்ஷினிக்கு பொறுக்கவில்லைதான்.
ஆனால், பெரியவர்களின் நிலை இன்னும் இவர்களுக்கு புரியவில்லை.. இங்கு எதற்கு வந்தார்கள் என புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த அக்கா தம்பி இருவரும், தங்கள் இருவரின் முகம்பார்த்துக் கொண்டனர்.
மெதுவாக விஷயம் சொல்லப்பட்டது. இப்போது அத்தை.. பானுமதியை, பார்த்து “சொல்லுங்க அண்ணி, நம்ம வீட்டு புள்ளைக்கு நம்ம குடும்ப கௌரவத்த காப்பாத்த வேண்டிய பொறுப்பு இருக்குன்னு, சொல்லுங்க அண்ணி..” என பானுமதியையும் பேச சொல்ல.. சற்று இப்போதுதான் விஷயம் உள்ளே இறங்கியது வர்ஷினிக்கு..
பானுமதி தன் நாத்தனாரிடம் “அண்ணி, சும்மா இருங்க அண்ணி” என்றவர். 
தன் மருமகளிடம்… “கண்ணம்மா… நா… நான் இப்படியெல்லாம் நினைக்கல டா… எ… என் பையன… அவனுக்காக கேட்கிறேன் டா… எனக்கு வழி தெரியாமதான் வந்திருக்கேன்… 
என் பையன கல்யாணம் செய்துக்க டா… மனசுல எதையும் வைக்காதே… கிரி… நீ ஏன் முன்னாடியே எங்க அக்காவ, கேட்கலைன்னு நினைக்காத… எங்களுக்கு அப்போ தெரியல…
ஆனா, இப்போ… இ… எனக்கு, அந்த சென்னியப்பன் புரியவிச்சிட்டான்…
இந்த அத்தைய நம்பி வா.. என் வீட்டுக்கு… எனக்கு வேற சொல்ல தெரியலை தங்கம்… 
உன்னை இனி சுப்பு, நல்லா பார்த்துப்பான்… அதுக்கு நான் உறுதி… நீ வேற எதையும் கேட்க வேண்டாம்… நினைக்க வேண்டாம்.. இந்த அத்தைய நம்பு… அப்புறம் உனக்கு வரப்போறவன நம்பு… 
உன் வார்த்தையில்தான் அவன்.. வாழ்க்கையே இருக்கு கண்ணம்மா…
சித்தப்பா, நீங்க சொல்லுங்க…” என அழ தொடங்கினார். ஆத்மநாதன் இன்னமும் வர்ஷினியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.. எப்போதும் போல ஒரு பார்வை பார்த்து அமர்ந்திருந்தார்.
அழுகையோ ஆர்ப்பாட்டமோ இல்லை வர்ஷினிக்கு. அவர்கள் அதை கேட்டவிதம் அவளை அசைத்தது… ‘என்னை இவர்களுக்கு நேர்ந்தது விட்டது போல் ஒரு பேச்சு… கூடவே ஆத்மநாதனின் அமர்த்தலான பார்வை..’ உள்ளே சென்றுவிட்டாள் வர்ஷினி.
செம்பாவை அழைத்து பேசினர் பானுமதி, “என் அண்ணன் இருந்திருந்தா என் மருமகளுக்கு.. வேறு இடம் பார்த்திருப்பேனா… என் பசங்களுக்கே கேட்டிருப்பேன்… அதனால, தப்பா நினைக்காம… பாருக்கு எடுத்து சொல்லுங்க” என்றார்.
சரவணன் வந்தான் சரியாக அந்த நேரம்.. “ம்மா… உனக்கு, அவகிட்ட என்ன கேட்கனமோ… பேசனமோ.. நீ செய்… சும்மா, இங்க எதுவும் சொல்லாதா… அவ சம்மதிச்சா மட்டும்தான் நடக்கும்… நீ வேற யார்கிட்டயும் பேச கூடாது” என தன் தந்தையை ஓரகண்ணால் பார்த்தபடி சொன்னான்.
வர்ஷினி.. தன்னறையில் ஒடுங்கிக் கொண்டாள்.. உரிமையாய் கேட்கிறார்கள்.. இத்தனைநாள்… தங்களை காவந்து செய்தவர்கள் கேட்கிறார்கள்… எனக்கு உன் உதவி வேண்டும் என… 
மறுப்பதற்கு கூட உனக்கு தகுதியில்லை என சொல்லாமல் சொல்லி கேட்கிறார்கள்.. கழுத்தில் கத்திக்கு பதில்… வளர்த்தேன் என்ற… பொறுப்பை வைக்கிறார்கள்… அதை இப்போது நான் மறுத்தால்… அதைவிட ஒரு துரோகம் ஏதாவது இருக்குமா இந்த உலகில்… உடபெல்லாம் நடுங்கியது… கண்ணீர் கொட்டவில்லை… தலை வலிக்க தொடங்கியது…
இப்போது சரவணின் குரலில் கேட்டது… தன் தாயை அதட்டிய குரல் கேட்டது… அழும் குழந்தைக்கு… தாயின் குரலாக. ஆனால், அருகில் வரவில்லை… தூரமே நின்றான் உள்ளே வரவில்லை அவளின் தோழன்..
வர்ஷினிக்கு இப்போதுதான் வலித்தது… யாரிடம் சொல்லுவேன்… சத்தமாக அழ கூட முடியவில்லை அவளால்.. உறவுகள் எல்லாம் வெளியே கூடத்தில்… சுப்புவின் பெருமைகளையும், ஆத்மநாதனின் ஆதரிப்பையும் சிலாகித்து பேசியது.. ‘அப்படிப்பட்டவர்களுக்கு… ஒரு கஷ்ட்டம்… நாமதானே காக்க வேண்டும்’ என புத்தியும் கூறியது.
மெல்ல சரவணன், கிரியை உள்ளே அனுப்பினான். உள்ளே வந்தான் தம்பி  வர்ஷினியிடம்.. “க்கா, உனக்கு மாமாவ பிடிக்கலைனா… வேண்டாமக்கா… 
உனக்கு படிப்பிருக்கு… நமக்கு எல்லாம் இருக்கு… நாம… கோவை போலாம் க்கா, சரவணன் மாமா எல்லா உதவியும் நமக்கு செயவார்க்கா… வழியில்லைன்னு… நீ கட்டிக்காதக்கா…” என்றான் ஒப்பிவிக்கும் குரலில். 
தன் தம்பியை நிமிர்ந்து பார்த்தால்… “என்ன சர்ரு சொன்னனா…” என்றாள்.
கிரி மெல்ல தலையசைத்தான்.. “என்னோட அப்பா மாதிரி டா அவன். அவனால மட்டும்தான் அப்படி யோசிக்க முடியும்… பாத்தியா… மாமாவ புடிச்சா மட்டும் கல்யாணம் செய்துக்கன்னு சொல்றான்..” என்றாள்.
அதற்குள் பானுமதி, உள்ளே வந்தார்… “தங்கம்…” என்றார் அவளின் தலையை தடவி… இந்த வார்த்தைதான் அழுகையை தந்தது அவளுக்கு… அவரின் மடிமீதே படுத்துக் கொண்டாள்.. 
அவளுக்கு ஆறுதல் சொல்லவோ… தேற்றவோ இப்போது நேரமில்லையே.. இன்னும் மூன்றுமணி நேரத்தில் மண்டபம் செல்ல வேண்டும்… எங்கும்… நாங்கள் பாதிக்கவில்லை என காட்டவேண்டுமே… பானுமதி அவளின் தலையை ஆறுதலாக தடவியபடியே “சுப்பு நல்லவன்டா தங்கம் “ என்றார்..
தெரியாதே, அவளுக்கு சுப்புவை, பற்றி தெரியாதே… அதுவும் இந்த அத்தை மகனாக, சுப்புவை பார்த்ததேயில்லையே… ஹோஸ்டல் வார்டன்… கொஞ்சமும் கோவம் வராத… பொறுப்பான வார்டன்… எல்லோரிடமும் ஒரேமாதிரி பேசும்… உணர்ச்சியே இல்லாத கரண்ட் அவன்.. எனதான் எதிரியும் அவளுக்கு…
ஆக, ஆத்மநாதனை நினைத்து பயந்தால்… அவர்களின் உறவுகளை நினைத்து பயந்தால்… அதனால் வர்ஷினிக்கு இந்த திருமணம் என்ற ப்ரேமில்… சுப்பு என்றவன் லேசான நடுக்கத்தை தந்தான்.. மற்றபடி பயம் எல்லாம் இந்த சொந்தங்களிடம்தான்.
இப்போது கைகள் நடுங்கியது அவளுக்கு… எப்படி தன் அத்தையிடமே சொல்லுவது.. விம்மளாக வெளி வந்தது அவளின் அழுகை.. சத்தமில்லை.. கதறவில்லை.. ஊமையாக அழுதாள்…
பானுமதி “உங்க மாமாவ பார்த்து பயப்படுறீயா…” என்றார் தன் கணவனை நினைத்து… வர்ஷினி, எதுவும் சொல்லவில்லை கேவிக் கொண்டே படுத்திருந்தாள்… பானுமதி “அவர் ரொம்ப உடைஞ்சி போயிட்டாருடா… உன்னை ஒன்னும் சொல்லமாட்டார் டா… இனி, நீதான் எல்லாம்… நம்ம வீட்டில், பயப்படாத டா… தங்கம்…” என இன்னும் இன்னும் கரைத்தார், அந்த தங்கத்தை…
இப்படியே ஒருமணி நேரம் சென்றது… உள்ளே வந்தார் சுப்புவின் அத்தை… “என்ன அண்ணி… கல்யாண புள்ளைய போய் அழ வைச்சிகிட்டு… 
நம்ம சுப்பு கிடைக்க… கொடுத்து வைச்சிருக்கணும்.. 
எனக்கொரு.. பொண்ணு இல்லாம போச்சு… இனி நீதான் அது… எல்லாம் நல்லதா நடக்கும்… 
எழுந்திருங்க… வெளிய வாங்க ரெண்டுபேரும்… நல்ல நேரம் வரபோது… வர்ஷினிய, கல்யாண பென்னாக்கணும்… 
வேலை நிறைய இருக்கு… அங்க சுப்புகிட்ட சொல்லணும்… 
ம்.. வாங்க அண்ணி… “ என பானுமதியை கைபிடித்து எழுப்பினார். 
இங்கே யாரும் விருப்பமோ, அனுமதியோ கேட்கவில்லை… மென்மையாக கட்டளையிட்டனர்.. அனுதாபமாக.. தாங்கள் செய்ததை சொல்லி… வர்ஷினி செய்தே ஆகவேண்டும் என கடமையாக்கினர்…  அவ்வளவுதான்.
விருப்பம் அன்பு எல்லாம்… அவர்களின் பேச்சில் எங்கோ ஓடி ஒழிந்தது… சூழ்நிலை, யாரையும் எதையும் மாற்றும்..
உறவுகளை சமாதனபடுத்தவதும்…. தக்க வைத்துக் கொள்ளவதும்.. அவ்வளவு எளிதல்ல.. அதற்கு பல தியாகங்களும்… நிறைய சகிப்புதன்மையும், கல்லான மனமும் வேண்டும்… அப்படித்தான் தோன்றியது சரவணுக்கு.
ஆனால், இப்போது சுப்புவின் அத்தைகள் வர்ஷினியை, தாங்க தொடங்கினர்.. வெளியே வந்த வர்ஷியின் கண்கள் வீங்கி இருக்க… இன்னும் கேவிக் கொண்டிருந்தாள்… 
சரவணன், அவளை ஆழ்ந்து பார்க்க… அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.. எல்லா கோவமும் அவன்மேல் திரும்பியது… தனக்கு சார்பாக அவன் ஏதும் பேசவில்லையே என… அவனுக்குதானே தெரியும் தன் நிலை.. அதுவும் ஆத்மநாதன் குறித்தும், அவர்களின் தங்கைகள் குறித்தும் எல்லாம் அவனுக்கு தெரியுமே… இப்படி ஏதும் பேசாமல் நிற்கிறானே என கோவம்… அவன் மீது. வேறு யாரிடம் செல்லுபடியாகும்.. இவளின் கோவமெல்லாம், அதனால் அமைதியாக நின்றிருந்தாள். 
இனி எதையும் மறுக்கும் திராணி இல்லை என்பதாய்…  விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் நன்றிகடன் என்பதற்கு அப்பாற்பட்டது… என்பதாக  நின்றிருந்தாள்…
வர்ஷ்னி இப்போதும் வாழ்க்கையின் வழி.. வளைகிறாள்.. தோற்பாளோ, ஜெயிப்பாலோ.. யாரறிவார். இனியும் ஓடவேண்டும்… திரும்பவும் ஆதரவில்லாமல் ஓடவேண்டும் என அவளின் சிந்தனை எண்ணியது..
சுப்புக்கு.. இவர்கள்.. சத்தமாக சரவணனுடன் பேசியது, வர்ஷினி வீட்டுக்கு  கிளம்பி சென்றது தெரிந்தது… இன்னும் அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை… மனமுழுவதும்… தோற்பின் வலி.. ஆனால் வரபோகும்… சொர்க்கத்தின் நிழலும் தெரிய தொடங்கியது…
“முன்னம் பல ஜென்மம் வழியே..
உண்டானது உன்னுறவே…
இன்னும் என்னை தொட்டு தொடர்ந்தே…
பந்தாடுது உன்னினைவே…”

Advertisement