Advertisement

உன் வருகை என் வரமாய்…
7
ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர்.
யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல, அதுவே பெண் வீட்டிற்கு நிம்மதியை தந்தது போல.. உள்ளே இன்னும் பானுமதியின் குரல்.. மறுநாள் உணவிற்கோ.. எதற்கோ.. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.
யாருக்கு ஆரம்பிப்பது என தெரியவில்லை ஏழுமலைதான் பொதுவாக “அதுங்க… நம்ம பொண்ணுக்கு” என தொடங்கினார்.. பின்னர் அவர்களின் சித்தப்பா பேசினார்.. ‘எதோ வேற்று பிரிவு பையனை தன் மகள் விரும்பினாள், எங்களிடம் சொன்னாள்… நாங்கள் அவசரமாக இந்த திருமண ஏற்பாடை செய்தோம்… 
மேலும் அந்த பையன் வெளிநாட்டில் இருப்பதால்.. ஒன்றும் நடக்காது என எண்ணி செய்தோம்… ஆனால், இன்று மதியம் அந்த பையன் தங்கள் பெற்றோடு வந்து எங்கள் பெண்ணை கேட்டான்.. 
கோவத்தில் பேச்சு முற்றி சண்டை, நாங்கள் பையனை அடித்துவிட்டோம்.. பையன் மருத்துவமனையில்… எங்கள் பெண்.. கையை கிழித்துக் கொண்டு அவளும் மருத்துவமனையில்…
என் அண்ணனுக்கு வேறு வழி இருக்கவில்லை… ஊருக்கே விஷயம் தெரிந்து விட்டது.. போலிஸ்… வழக்கு என பெரிய பிரச்சனை.. எங்களுக்கு வேறு வழியில்லை அந்த பையனுக்குதான் பெண்ணை திருமணம் செய்து தரவேண்டும்… 
எங்களை மன்னித்திடுங்க…. மன்னித்திடுங்க…” என்றனர். எல்லோரும் தர்மசங்கடமாக தலை குனிய… 
சுப்பு, தோட்டத்து வீட்டில் அந்த இரு ஜீவ்னகளையும் விட்டு வந்தவன்.. எல்லாவற்றையும் வாசலிலேயே நின்று அட்சர சுத்தமாக கேட்டுக் கொண்டிருந்தான்… ஒன்று விடாமல்…
அடுத்த ஷனம் அந்த அறையின் வாசலில் நின்றான்… எங்கையோ படித்திருத்திருப்போம்… நரசிம்மரை பற்றி… சொல்லும்போது… “வஜ்ராய…  வஜ்ர தேகமாக… சிம்மம்.. ரௌத்ர சிம்மமாக…” என.. அப்படியொரு ஆக்ரோஷமாக… உறுமியபடியே உள்ளே வந்தவன் “வேற ஒருத்தன மனசுல நினைச்சவளையா… எனக்கு கட்டி வைக்க நினைச்சிங்க… என்ன பார்த்தா எப்படி..” என சொல்லி அந்த சித்தப்பாவின் ஷர்ட்டை பிடித்தான்.. 
முதலில் சரவணுக்கு ஸ்மரணை வந்தது… அதன்பின் எல்லோரும் சேர்ந்து அவனை பிடித்து அமரவைத்து… அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் அனுப்பி வைப்பதற்குள்.. விடிந்து விட்டது, விடிந்துதான் விட்டது.
யாராலும்… எத்தனை சொந்தமிருந்தும்… எவ்வளுவு செல்வாக்கு இருந்தும்… இந்த விடியலை தடுக்க முடியவில்லை யாராலும்… ம்.. ஆத்மநாதனுக்கு அப்படிதான் தோன்றியது. விடியாமேலே இருக்காதா… என.
யார் வந்து எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும்.. எத்தனை ஆறுதல் வார்த்தை சொன்னாலும்… மணநாள் நெருங்கும் வேளையில்.. நீ வேண்டாம் என, தனக்கு நிச்சையபட்டவர்கள் சொல்லும் போது… யார் சொன்னது இருதையம் உடையாது என.. இது அழகான தன்மான அடி… நெடுநாள் கனவில், இடி விழுந்த அடி… யாருக்கும் வலிக்கும்… அதில் சுப்பு மட்டும் என்ன விதிவிளக்கா.. இத்தனை நாளில் இன்று ரௌத்ர சிம்மமாக நின்றான். 
அவனின் அருகில் நெருங்க முடியவில்லை.. எதோ இந்த நான்கு நாட்களாக, கொஞ்சமாக.. தன்னிலிருந்து வெளி வரலாமா என எட்டி பார்த்த அவனின் மன பறவை.. இந்த புறக்கணிப்பில்.. சிம்மமாக நின்றது. 
அவர்கள் சென்ற பின்னும் வெளிவரவில்லை.. அங்கேயே அந்த அறையிலேயே.. கூண்டுகுள் சிம்மமாக நடக்க தொடங்கினான் சுப்பு. யார் தேற்ற முடியும்… சரவணனையும் நெருங்கவிடவில்லை அவன்.
மற்றவர் எல்லோரும் அந்த ஹாலிலேயே வந்து அமர்ந்திருந்தனர்.. என்ன செய்வது என தெரியவில்லை.. யாருக்கும் யோசனை சொல்லும் திடமோ குரலோ இல்லை… இதோ இன்னும் பத்து நிமிடத்தில்.. பெண்கள் விழித்துவிடுவர்..
மணி, காலை நாலை நெருங்கிக் கொண்டிருந்தது… மெல்ல ஆண்கள் தங்களின் உடலை தளர்த்த நினைக்க.. ஆத்மநாதன் கூனி குறுகி அமர்ந்து கொண்டார் அந்த ஹால் ஷோபாவில்..
பானுமதியும், விஜயா அத்தையும் எழுந்து வந்தனர் முதல் கட்டமாக… அப்படியே ஒவ்வருவராக. அடுத்த அரைமணி நேரத்தில், கல்யாண வீட்டுக்கு பால் எடுத்து வருபவர்.. வந்து ஹாரன் அடிக்க.. ஆண்கள் தெளிந்து கொண்டனர் அதில்.
மெல்ல காபி எடுத்து அப்போதுதான் பானுமதி இங்கு ஆண்கள் இருக்கும் பக்கம் வந்தார்… அத்தனைபேரின் முகமும் சோர்ந்து தெரிந்தது. அவருக்கு அபாயமணிடித்தது… “அண்ணி… விஜி… அண்ணி” என அழைத்தார்.. தனது நாத்தனாரை.
அவரும் வரவும் அங்கிருந்த பெரிய கிழவிகலெல்லாம் விழித்து கொண்டது.. இனி என்ன, எல்லாம் சத்தமில்லா ரகசியமாக, எல்லோருக்கும் தெரிந்தது.
அத்தைகள் சுப்புவை பார்க்க அந்த அறைக்கு செல்ல.. அங்கு டேபிளின் மேல் தனது கால்களை தூக்கி வைத்து அமர்ந்து.. அந்த நாற்காலியை பின்புறம் உந்தி, உந்தி ஆடியபடியே அமர்ந்திருந்தான்..
உள்ளே அவர்கள் வரவும்.. ‘பட்’ என்ற சத்தத்துடன் அந்த நாற்காலி கீழே நின்றது.. “தம்பி… சுப்பு…” அவ்வளவுதான்.. அவன் “என்ன நீங்கெல்லாம் இன்னும் வீட்டுக்கு போகலையா…” என்றான்.
இரண்டாம்  அத்தை “என்ன டா… இப்போ” என எதோ சொல்ல வர… விருட்டென எழுந்தவன், அவர்களின் கையை பிடித்து தர தரவென இழுத்து வெளியே வந்து விட்டவன்.. சத்தமாக கதவை மூடி, தாள் போட்டு அமர்ந்து கொண்டான். 
வெட்கமாக இருந்தது.. அவமானமாக இருந்தது.. யாரின் முகத்தையும் பார்க்க முடியவில்லை… அதைவிட சமாதனம் என்ற பெயரில் அவர்களின் வார்த்தைகள்… இன்னும் காயம்தான் தரும் போல… என அமர்ந்து கொண்டான்.
எல்லோருக்கும் என்ன செய்வது என தெரியவில்லை… அப்போதே குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பினார் பங்காளி ஒருவர். மற்றொருவர்.. ஜோசியம் பார்க்க கிளபினார். கிழவிகள் அழுது ஆர்பாட்டம் செய்தது.. பானுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. தன் கணவனின் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.
குழந்தைகள்.. அத்தைகளின் மருமகள்கள், அவர்களின் பிள்ளைகள் என யாரும் வெளியே வரவில்லை.. வீடு அன்னாதரவானாது.. இப்போது யாராவது நல்வார்த்தை சொன்னால்,\… அவர்கள்தான் கடவுள்.. இந்த குடும்பத்துக்கு… அப்படியொரு நிலை…
மௌனம்… அமைதி… இயலாமை… தோற்றுவிட்டேன்… இப்படி எந்த எதிர்மறை வார்த்தைகளின் மொத்த இலக்கணமாக அந்த வீடு… நொடியான நேரமும்… மணியாக நகர…
மணி எட்டிருக்கும் சரவணனின் போன் ஒலித்தது.. வர்ஷினிதான் “குட் மோர்னிங்.. கிரி.. ரெடி யாகிட்டான்… சர்ரு” என்றாள்.
சரவணன் “ம்.. வை அப்புறம் கூப்பிடுறேன் “ என சொல்லி போனை வைக்க.. அவனின் அத்தை “யாருடா” என்றார்.
இவனும் இயல்பாய் “பாரு..” என்றான்.
பட்டென அவர் முகம் ஒளிர்ந்தது.. அந்த இடத்திலேயே, ஒரு பெரிய கிழவி காதில், தனது வைர கம்மலை திருகியபடியே.. “நாதா… நீ ஏன் கவலைப்படற… போ.. நம்ம புள்ள பர்வதம் இருக்குள்ளப்பா.. போய் பேசு…
அவதான் இப்போ உன் குலதெய்வம்… போ..பேசி பாரு… உன் வருத்தம் பார்த்து அந்த சென்னியப்பன், இரக்கம் காட்டுரானா பார்க்கலாம்” என்றனர்.
எல்லோருக்கும் புது நம்பிக்கை.. அதுவும் அந்த இரண்டாவது அத்தையின் கணவர் சற்று மகிழ்ந்தார் போல… “நம்ம கேட்டு பார்க்கலாம் மச்சான்..” என்றார்.
ஆத்மநாதன் இன்னும் தனது நிலையை உணராமல் “வேற… யாரும்.. சொந்தத்தில்… அந்த சக்தி பினான்ஸ் பொண்ணு ஒன்னு இருந்ததே…” என்றார்.
ஆத்மநாதன் தங்கைகளுக்கே முகம் சிறுத்து போனது “என்ன அண்ணா, உனக்கு ஒன்னும் புரியலையா… இப்போ இரண்டு மணிக்கு மண்டபத்துக்கு போகணும்… 
பத்திரிகை மட்டும் 2௦௦௦ கொடுத்திருக்கு… கவுன்சிலர் தொடங்கி MLA வரைக்கும் இன்னிக்கு ரிஷப்பஷனுக்கு வராங்க… புரியுதா..
அண்ணி, போங்க… போய் குளிங்க.. இன்னும் ஒருமணி நேரத்தில் வீடு மறுபடியும் மாறணனும்… அண்ணா ரெடியாகு… 
டேய்… சரவணா… போடா குளிச்சிட்டு… ரெடியாகு… நம்ம… பார்வதம்கிட்ட நீதான் பக்குவமா பேசணும்” என்றார்.
சரவணன் இரண்டடி பின்னால் சென்றான்.. தன் தலையை கோதியபடியே… “என்னை விட்டுடுங்க… நா…நானெல்லாம் பேசமாட்டேன்… அவ.. எப்படி இங்க வருவா…
நீங்க, மனுஷியா கூட பார்க்காதவ… அவ, இப்போ உங்களுக்கு வேணும்னா வருவாளா… அதுவும்.. இங்க..
நீங்கதானே சொன்னீங்க… எங்கம்மா வளர்த்தா… எங்களில் யாரையாவது பிடிச்சிடுவா அவன்னு… இப்போ எதுக்கு அவ..” என்றான் மெல்லிய குரலில் தன் அப்பாக்கும் அத்தைக்கும் கேட்கும் வண்ணம்..
விஜயா “என்ன டா… என்ன டா, சொல்லிட்டோம்… உனக்கு இப்போ உன் அண்ணன் பெருசில்லையா “ என்றார் கதையை மாற்றி…
அவனும் “யார் இல்லைன்னா… பத்து வருஷமா ஒருத்திய அண்டவே விடமாட்டீங்க… இப்போ உங்களுக்கு வேணும்னா.. உடனே அவ, வந்து மணவறையில் உட்காரனும்… அவளுக்கு கேட்க யாருமில்லைன்னு நினைச்சிங்களா” என்றான் உறுமலாய்.. சிங்கத்தின் தம்பியாய்..
உடனே சுதாரித்து அந்த அத்தை மாமா குழு… இறங்கிய, சமாதன குரலில்… “டேய்… நீயே இப்படி சொன்னா எப்படி டா… அவ அப்பா அம்மா இருந்திருந்தால்.. உங்க அம்மா நிலையை பார்த்து சும்மா இருப்பாங்களா…” என வீரியத்தை விடுத்து, காரியம் பெருசாக எண்ணி தழைந்து பேசியது.
சரவணனின், பொங்கிய கோவத்தில் அண்ணன் எனும் நீர் தெளித்து மெதுவாக அமிழ்த்த தொடங்கியது அந்த படை.. அதற்குள் விஜயா தன் அண்ணன் அண்ணியை கிளப்பினார். காலை உணவு உண்டனர் ஏனோ தானோவென.
மணி ஒன்பது… நேரே தோட்டத்து வீட்டுக்கு இரண்டாவது அத்தை.. மாமா.. ஆத்மநாதன் தம்பதி என நால்வர் படை கிளம்பியது.. சரவணன் இன்னமும் தன் முதல் அத்தையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான். பெரியவர் படை சுறு சுறுப்பாக வேலை பார்த்தது.
விஜயா… நம்பிக்கையாய் சுழல தொடங்கினார்.. சரவணன் அடுத்த பத்து நிமிடத்தில்தான் உணர்ந்தான்.. வீட்டில் சத்தமில்லை என… அவனும் சற்று “என்ன… பாருவ, மிரட்ட கிளம்பிட்டாங்களா” என்றவன்… தானும் குளித்து கிளம்பினான்… ‘ஒருத்தியா இந்த நரி கூட்டத்துக்குள் என்ன செய்வாள்’ என எண்ணம் முழுவதும் அவளிடம்தான்.
அதற்குள் அங்கு… எல்லோரும் சென்றனர்.. அப்போதுதான் அந்த வயாதான பானுமதியின் சித்தி சித்தப்பா… குளித்து  முடித்து, பெரிய வீட்டுக்கு செல்லுவதற்காக அமர்ந்திருந்தனர். வர்ஷிணியும், கிரியும் எப்போதும் போல் ரெடியாகிதான் இருந்தனர்… 

Advertisement