Advertisement

உன் வருகை என் வரமாய்…
5
மறுநாள் அழாகான விடியல்… சத்தமாகவும் விடிந்தது… எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான் இருப்பார், உணவு இவர்களுக்கு அங்குதான்.. எனவே இன்று முழுவதும் அங்குதான் இருப்பார்.
கிரியும், சர்ருவும் ஏதோ இரண்டு வெடி வைத்தனர்… அவ்வளவுதான்.. எல்லோரும் பெரியவராகிவிட்டதால் வெடிக்கும் ஆர்வம் குறைந்தது போல, ஆனால் டிவி, போன்.. அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டது.. பண்டிகை நாட்களில்.. திறந்த வாய் முடாமல் டிவி பார்க்க தொடங்கினர் மூவரும்..
பானுமதி வந்து டிவியை ஆப் செய்தார்… “போங்க எல்லோரும்… எங்கையாவது கோவிலுக்கு போங்க… இல்ல, பிரிண்ட்ஸ் பார்த்துட்டு வாங்க… சும்மா காலையிலேயே டிவி…” என சுப்ரபாதம் பாட தொடங்கினார்.
சர்ரு “ம்மா…. அராஜகம் பண்ற…” என்றான். 
அங்கிருந்து இன்னொரு குரல் வந்தது… அது சுப்புவின் சின்ன அத்தை… திருமணம் செய்யாமல் இவர்களுடன் தான் இருக்கிறார்… இப்போது சரவணனை பார்த்து “போடா உன் அண்ணன, கூப்பிடு…” என்றார் மேலே பார்த்தபடியே..
சுப்பு, இன்னும் இறங்கி வரவில்லை… இன்னும் சற்று நேரத்தில் அவனுக்கு அவர்களின் இரண்டாவது அக்கா வருவார்கள்… அதனால் விரட்ட தொடங்கினார்.. அவர்.
இந்த பண்டிகையெல்லாம்.. பெரிதான மாற்றத்தை தருவதில்லை அவனுக்கு, அதை அவன் அனுமதிப்பதும் இல்லை.. இன்று விடுமுறை.. எங்கும் செல்ல வேண்டாம் என்ற எண்ணம் எனவே பொறுமையாகத்தான் வருவான்.
பானுமதி தன் பசங்களுக்காக ஷர்ட் எடுத்திருந்தார்.. சர்ருவும் ஆண்கள் நால்வருக்கும் அங்கேயே ஷர்ட் எடுத்து வந்திருந்தான்..
இப்போது தன் அண்ணன் அறைக்கு சென்றான்.. சர்ரு, கதவை தட்டி நிற்க… இப்போதுதான் பொறுமையாக வந்து கதவை திறந்தான் சுப்பு.. காலையிலேயே வாக்கிங் சென்றுவிட்டு வந்தான்தான்… இன்னும் குளிக்கவில்லை… சர்ரு “என்ன அண்ணா… இன்னும் ரெடி ஆகலையா…” என்றான்.
“ப்ச்……. ம்… குளிக்கணும்” என்றான் சோம்பேறியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து தலைசாய்த்தபடி.. 
“அண்ணா… அவங்ககிட்ட பேசினியா…” என்றான். ஏனோ சுப்புவின் மனம் அதற்கு விழையவில்லை.. இன்னும் இறுக்கமாக “பேசணும்…அன்னிக்கு நான் கூப்பிட்டுட்டேன்… அவங்க சைடிலிருந்து இன்னும் ஏதும் வரல டா… பார்க்கலாம்” என்றான் சலிப்பான குரல்.
இருவருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை… பத்து வயதானால் பசங்க பங்காளியாகிடுறாங்க… தங்களுக்குள் வட்டம் தாங்களே, போட்டுக்கிறாங்க போல.. இருவரும் வெறுமையாகவே அமர்ந்திருந்தனர்.. நிறைய கேள்வி சரவணனிடம் ஆனால், அண்ணன் என்ற மரியாதையில் அவனால் எதுவும் கேட்க முடியவில்லை…
மெல்ல வரவழைத்துக் கொண்ட தைரியத்தில் “பொண்ண… அவங்கள, உனக்கு ப்.பிடிச்சிருக்கா” என்றான்..
சுப்பு, அவனை கேள்வியாய் பார்க்க… “இல்ல, எந்த சந்தோஷமும் உன் முகத்தில் தெரியவேயில்லையே… அதான்..” என்றான்.
சுப்புக்கே இப்போதுதான் தோன்றியது…’ஆமாமில்ல.. நான் எதிர்பார்த்ததுதானே நடக்கிறது, பின் ஏன் எனக்கு சந்தோஷம் இல்ல…’ என மெல்ல தாடையை தடவிக் கொண்டான்..
“என்ன ண்ணா…” என்றான். சுப்புக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை தனக்கே தெரியாத பதிலை அவனிடம் எப்படி சொல்லுவது.. “டேய்… இதெல்லாம் என்ன கேள்வி… கல்யாணம்தானே ஆக போகுதோ.. இயல்பான ஒன்னுக்கு எதுக்கு இப்படி கேள்வி கேக்குற..” என்றான். 
“அ…து… உன் முகத்தில் எந்த சந்தோஷமும் தெரியலையே… எப்போதும் போலவேதானே இருக்க…” என்றான்
“ம்… என்ன செய்ய.. அது அப்படியே பழகிடுச்சு.. இந்த பேச்சும்தான் வரமாட்டேங்கிது… எனக்கு ஒண்ணுமில்ல… நீ வேலைய பாரு..” என்றவன் எழுந்து குளிக்க சென்றான்.. விட்டால் இவன் கேள்வியா கேட்ப்பான் போல என எண்ணி.
கருப்பும் சிவப்பும் கட்டம் போட்ட ஒரு பிராண்டட் ஷர்ட் தன் அண்ணனுக்காக வாங்கியிருந்தான் சர்ரு, அதை வைத்துவிட்டு கீழே வந்தான்.
சுப்பு, தயாராகி.. வேட்டியுடன்.. தன் தம்பி வைத்திருந்த ஷர்ட் அணிந்து.. போனில் யாருடனோ பேசியபடியே கீழே வந்தான். ஆத்மநாதன் அமர்ந்திருந்தார்.. தன் இரண்டாவது அத்தை மாமா வந்திருந்தனர்.. அவர்களின் மகன்கள் இருவரும்.. அங்கு மாமியார் வீடு சென்றிட.. இவர்கள் இங்கு வந்திருந்தனர்.. அவர்களை பார்த்து தலையசைத்து வரவேற்றவன்… நேரே போன் பேசியபடியே வெளியே சென்றான்.
கிரியை காணம் வீட்டிற்கு சென்றுவிட்டான்.. அவன் இவர்களுடன் ஓட்டமாட்டான்.., சரவணன் அங்கு டிவியில் ஐக்கியமாகிவிட.. வர்ஷினி.. அங்கு உணவு அறையில் அனைத்தையும் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.. பானுமதியும், செண்பாவும் கிட்செனில் நின்றிருந்தார்..
உணவு உண்ண ஆத்மநாதன் மற்றும் சுப்புவின் அத்தை, மாமா வரவும்.. தட்டெடுத்து வைத்து நகர்ந்து கொண்டாள் வர்ஷினி… சரவணன் “ஹேய்… எங்க போற… அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு போ..” என்றான் வேண்டுமேன்றே…
அவனுக்கு தெரியும் தன் தந்தைக்கு… வர்ஷினி இருந்தாள் பிடிக்காது என, ஆனாலும், இவன் எப்போதும் இப்படிதான் வம்பிழுப்பான்.. சுப்பு எப்போதும் எதையும் காதில் வாங்காமல் நழுவிவிடுவான்.. இப்போது அவனும் வந்து அமரந்து.. சரவணனை பார்த்து, தன் அப்பாவிடம் பேசினான் “அங்கிருந்து கூப்பிட்டாங்க ப்பா” என்றான் எல்லோருக்கும் பொதுவாய்.. 
“தீபாவளி வாழ்த்து சொன்னாங்க…” என்றான் சின்ன சிரிப்புடன்.. கண்களும் சிரித்ததோ… எல்லோருக்குமே சந்தோஷம்.. பானுமதி எதையும் காட்டாமல் உள்ளே சென்றார்.
சுப்பு, அங்கிருந்த சூழலை மாற்றி வர்ஷினியிடம் “ஏன், பார்க்குற… எல்லோருக்கும் பரிமாறு… நீதானே போன் நம்பர் வாங்கின… அவங்க பேசினாங்க.. அவங்க பேரு… சந்தோஷி… நானும் பேசிட்டேன்… ஓகே வா, திருப்தியா…. உங்க அத்தைகிட்ட சொல்லிடு…” என்றான் பொறுமையான.. அமர்த்தலான குரலில்… சேர்ந்தார் போல் பேசினான்.
‘என்ன நடக்குது இங்க’ என அவனின் அத்தை மாமா அப்பா, எல்லோரும்  அவன் முகத்தைத்தான் பார்த்தனர்.. யாரையும் பார்க்கவில்லை அவன் வர்ஷினியிடம் “ம்… வை” என்றான் மீண்டும்.
“ப்பா… கல்யாணம் எவ்வளோ காம்ப்பிளிக்கேட்டடா இருக்கு… யார் முதல்ல பேசறதுன்னு… எல்லோரும் என் முகத்தையே பார்த்து பார்த்து… இப்போ ஒகே தானே எல்லோருக்கும்” என்றான் கடமையாக.. சரவணுக்கு எதோ புரிந்தது.. பெரியவர்களுக்கு இவனின் இந்த நீண்ட உரையாடலே போதுமானதாக இருந்தது “சரி ப்பா, சரிப்பா நீ சந்தோஷமா இருந்தா சரிதான்..” என்றனர்.
ஆனால் எதோ போல் அதன்பிறகு பேசவில்லை அவன்.. உண்டான் யோசனையாக. எழுந்து சென்றுவிட்டான். திரும்பவும் போன் செய்தான்.. ஏனோ எடுக்கவில்லை போல, அமைதியாக மேலே சென்றுவிட்டான்.
அன்றுதான் முதல்முறையாக வர்ஷினி பரிமாறி அந்த வீட்டு மனிதர்கள் உண்டனர். ஆத்மநாதன் அவளை நிமிர்ந்து கூட பார்க்கமதான் உண்டார்.. அவளுக்கு இது தெரியும்தான் எனவே அமைதியாக தன் வேலையை செய்தாள்.
அந்த வீடு எப்போதும் இப்படிதான்… ‘இல்லாத பிரச்சனை’ எல்லாம் சூழ்ந்த படியேதான் இருக்கும்.. அனைவரும் தனித்த்தனியே தான் தெரிவர்.. 
ஆத்மநாதனுக்கு, இவர்கள் வந்தாலே பிடிக்காது.. மேலும் தங்கள் குடுபமாக இருக்கும் போது ஏன் பிள்ளைகள் வரவேண்டும் என நினைப்பார்.. ஆனால் அதற்காக தன் தங்கையுடன் கலகலப்பாக பேசுவார் எனவும் சொல் முடியாது. 
சரவணன் இருந்தால், சற்று பேச்சு சத்தம் வரும் அவ்வளவுதான்… சுப்பு பேசினால் கணக்குவழக்கு பற்றிதான் வேறு பேச அவனுக்கு வராது.. ஒரு சின்ன சிரிப்பு, கலாட்டா.. என எதுவும் இருக்காது எப்போதும் எதோ.. ஒரு இறுக்கத்துடனேயே அந்த வீடு இருக்கும்..
எப்போதும் அந்த சகோதர சகோதரிகள் கூடி பேசுவர், அதன் படி காரியம் நடக்கும்… அதற்கு சுப்பு வழி செய்வான்.. சரவணன் பேசினால் ‘பெரியவங்க பேசும்போது… சின்ன பசங்களுக்கு என்ன பேச்சு’ என சொல்லி அவனை கடப்பர் அனைவரும். 
ஆக, பானுமதிக்கு அந்த வீட்டில் வாய்ஸ் இல்லை.. பானுமதி இன்னமும் எதையும் பேசும் போது பார்த்துதான் பேச வேண்டும்.. அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.. அதனால் வர்ஷினியின் பேச்சு அவருக்கு.. ஸ்ட்ரஸ் பஸ்ட்டர்… கோவமே வராது.
ப்பா…. நேரம் காலம் கூடி வருகிறது என பானுமதி நிறைந்து போனார்.. இவர்கள் உண்டு முடித்ததும், பானு, வர்ஷினியிடம்  “சாப்பிட்டு போடா… நீதான் பேச சொன்னேன்னு சொல்லிட்டான் பாரு சுப்பு, அதுக்கு வேற என்ன பேச்சு வர போகுதோ… நீ சீக்கிரம் சாப்பிடு” என்றார்.
“இல்ல த்த… நாங்க கிளம்பறோம்… அங்க எடுத்து போய் சாப்பிடறோம்…” என்றவள் சென்பாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள். 
அன்றைய நாள் வேகமாக சென்றது அந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருந்தது… சுப்பு வீட்டினருக்கு. 
சரவணனும் கிரியும் தங்கள் வேலையை பார்க்க கிளம்பினர்.. வீடு பழைய நிலை கொண்டது. லேசான சந்தோஷ கலை வந்தது போல… தினமும் வர்ஷிணியும் பானுமதியும் பேசிக் கொண்டனர்.
சுப்புவின் திருமண வேலைகள் தொடங்கியது… பானுமதி ஆசையாக திட்டமிட… ஆத்மநாதன் எல்லாவற்றையும் ஒதுக்க தொடங்கினார். 
எப்போதும் போல, அந்த வீட்டில் பானுவின் பேச்சு எடுபடவில்லை… எல்லாம் சுப்புவின் அத்தை விஜயாதேவி பார்த்துக் கொண்டார். பானுமதிக்கு முறைகள்.. கணக்கு வழக்கு தெரியாதாம்.. அண்ணனும் தங்கையுமே எங்கும் சென்றனர்… மண்டபம் பார்க்க… சாப்பாடு சொல்ல.. என எல்லாம் அவர்கள் பொறுப்பாயிற்று.. தினமும் சரவனனுக்குதான் போன் செய்வார் பானுமதி… ஆனால்,அவனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.. ‘விடு ம்மா… என் கல்யாணத்துல… நீதான் எல்லாம்’ என சமாதனபடுத்துவான்.
பானுமதிக்கு ஒரே ஆறுதல் வர்ஷினிக்கு வரன் வந்ததுதான்.. இந்த வாரத்தில் ஜாதகம் வந்து வாங்கி சென்றனர்.. பானுமதி, ஆத்மநாதனிடம் சொன்னார்தான்… அவர் ‘நீ பார்த்துக்க’ என ஒதுங்கிக் கொண்டார்.
வர்ஷினியின் ஜாதகம் பொருந்தியிருப்பதாக சொல்லினர். வர்ஷினிக்கு அந்த பையனின் போட்டோ அனுப்ப கேட்டனர், வர்ஷினியின் போட்டவும் கேட்டனர் பானுமதியிடம். அவரும், சுப்புவின் எண்ணை தந்து அனுப்ப செய்தார்.
மாலையில் சுப்புக்கு போன் செய்து, அதை அவளிடம் காட்டிவிட்டு, அவளின் போட்டோ ஒன்றை அனுப்ப சொல்லியிருந்தார்.. இவன் எப்போதும் போல அங்கு செல்ல… வர்ஷினி மும்முரமாக ஏதோ ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தாள் போல… எதையோ வெட்டிக் கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்தாள்…
சுப்பு வந்த வண்டி சத்தம் கூட அவள், காதில் விழவில்லை. இவனும் சத்தமில்லாமல் உள்ளே சென்று “பர்வதம்..” என்றான் திடமான குரலில். தூக்கிவாரி போடா… அனிச்சையாய் கைகளை உதறியபடியே நிமிர… அதில் அவள் கையிலிருந்த கம்… அவளின் கண்ணில் பட்டது… 
எரிய தொடங்கியது… இவளும் எதோ என நினைத்து… கண்களை அதே கம் விரல்காளால் தேய்க்க… வலது கண்ணில் பட்ட கம் இப்போது கண்களை திறக்கவிடவில்லை…
இதெல்லாம் தெரியாமல் சுப்பு “ஏன் இவ்வளோ பயப்படற… யார் வருவா இங்க…” என பேச தொடங்கினான்.
வர்ஷினி “ஸ்…ஸ்…ஐய்யோ, இருங்க… கண் எரியுது.. நான் கழுவிட்டு வரேன்” என அந்த ஒற்றை கண்ணை மூடிக் கொண்டு சென்றாள்.. கிட்சேன்னுள்..
சுப்புக்கு, சகுனமே சரியில்லை என அப்பட்டமாய் தோன்றியது.. அதற்கு தன்னையே நொந்து கொண்டு அவளுக்காக காத்திருக்க.. போனவள் வரவேயில்லை.. சுப்பு “பர்வதம்…. என்னாச்சு…” என்றான் அமர்ந்த இடத்திலிருந்து.
அவளும் “கண்ணே திறக்க முடியல…” என்றாள்… கரகரப்பான குரலில்..
“ஏன்…. ரொம்ப கசக்கிட்டியா” என்றான் உள்ளே வந்தபடி..
அவளை பார்க்க.. அதற்குள் கண்களை சுற்றியுள்ள பகுதி… சிவந்து வீங்கியிருந்தது… “ஏ… என்ன பண்ண… ஏன் இப்படி வீங்கியிருக்கு… என்ன பண்ண” என்றான் சத்தமான குரலில்.
“சோப்பு போட்டேன்… வேற ஒன்னும் பண்ணல” என்றாள் எரிச்சலான குரலில்.
“யாராவது சோப்பு போடுவாங்களா… என்னதான் டீச்சரோ…” என சொல்லியவன், தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு.. அடுப்பில் வெந்நீர் வைக்க தொடங்கினான்..
இவளுக்கு, எரிச்சல் தாங்காமல்.. மறுகண்ணிலிருந்து நிற்காமல் நீர் வர.. எதிரில் இருப்பவனது பேச்சு கோவத்தை தர… “வேற என்ன பண்றது… தெரியலையே… நீங்க சொல் வேண்டியதுதானே…
இதே சரவணனா இருந்தா… கிண்டல் பண்ணிகிட்டே… ஏதாவது செய்திருப்பான்” என்றாள் கோவமும் அழுகையுமாக..
ஒன்றும் சொல்லாமல், வென்னீரை ஒரு பெரிய பாத்திரத்தில்… ஊற்றி… “இந்தா இதுல கண்ண, நல்லா டிப் பண்ணு… ம்..” என்றான். 
அவளும் தன் கைகளால் நீரை எடுத்து கண்களில் விட… கண்கள் எரிய தொடங்கியது, மீண்டும்… அவள் இன்னும் அழ தொடங்கினாள்.. ”ஐயோ இது சுடுது… எனக்கு எரியுது…” என அழுதாளே தவிர.. காரியம் ஆகவில்லை..
சுப்பு “எங்க செண்பாக்கா “ என்றான பல்லை கடித்தபடி.
“ச்சு…” என அழுகைதான் பேச்சே இல்லை அவளிடம்.. 
அருகில் வந்தவன் “கையெடு.. அப்படிதான் எரியும்.. கொஞ்ச நேரம் வைச்சிருந்தா, கம் கரைஞ்சிடும்… லேட் ஆனா… இன்னும் இறுகிக்கும்… கையெடு..” என்றான்.. அதட்டலாக..
ம்.. கூம்… அவளிடம் எந்த பேச்சும் வேலையாகவில்லை… அவசரமாக ஹாலுக்கு வந்தவன்.. கீழே அவளின் ஷால் இருக்க, அதை எடுத்து கொண்டு அவளருகே சென்றவன்.. “ம்… கையை எடு” என்றான் உறுமலாக… 
சங்கடமாக அவளை இன்னும் நெருங்கினான்.. அவள் கண்களை கசக்க.. “ச்சு…” என்றபடி அவளின் இரு கைகளையும்.. இறுக்கமாக தன் ஒரே கையால் பற்றி கீழிறக்கியவன், தன் மற்றொரு கையில் உள்ள ஷாலால்.. அந்த வென்னீரை அவளின் கண்களில் வைக்க.. சூடு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.. இன்னும் எரிந்தது அவளுக்கு.. ”எரியுது… ஸ்… ஸ்…” என்றாள்… 
“அப்படிதான் இருக்கும், இரு….” என்றான் கட்ட குரலில். ஒரு ஐந்து நிமிடத்தில் அவளின் கண்கள் திறந்து கொண்டது… என்ன இன்னும் சிவந்து எரிந்தது… அப்படியே அவளின் கண்களை அதே துணியால் நன்றாக அழுந்த துடைத்து விட்டான்.. இமைகளையும் நன்றாக துடைக்க.. இப்போதுதான் அவளின் கண் நன்றாக தெரிந்தது..
அழகாக சிவந்து வீங்கிய கண்களுடன் அவனை முறைத்து பார்த்து நின்றிருந்தாள்.. சின்ன தீ ஜுவாலையாய். அவனும் கேலியான சிரிப்புடன் பார்த்திருந்தான்.. இன்று சிறு பெண் போல லாங் ஸ்கர்ட் அணிந்து சுடி டாப் போட்டிருந்தாள்.. அவளின் சிவந்த முகம் மென்மையாக இருக்க… மெல்லிய துணியின் ஊடே அவளின் கன்னம் தீண்டிய விரல்கள் இப்போது சுட்டது… இப்போதுதான் அவளுக்கு கொஞ்சம் நிலைமை புரிய.. அவனின் பிடியை பார்த்தாள்… இப்போதுதான் அவளின் கைகளை விட்டான் சுப்பு.. 
ஆனால், கைகளும் வலிக்க தொடங்கியது.. அங்கு பார்த்தால்… அவனின் கோடரி கைகள்… பூ என தெரியாமல் பற்றிய தடம் தெரிய… வர்ஷினி “இது கையா… இடுக்கியான்னு தெரியல…” என முனகியபடியே வெளியே வந்தாள்.
அவனுக்கும் ஏதோ காதில் கேட்டது போல… அளவான தூரத்தில் அவளை தொடர்ந்து “சாரி… “ என்றான்.
தானே தொடர்ந்து “ ’ஐ’ ட்ராப்ஸ் வாங்கி தரேன்.. நைட் சரியாகிடும்” என்றான். அவனை ஆச்சிரியமாக பார்த்தாள்.. “ஏன்..” என்றான். “ம்… கூம்” என்றவள் ஹாலுக்கு செல்ல அவனும் வந்தான்..
“உனக்கு மாப்பிள்ளை போட்டோ வந்திருக்கு… காட்டலாம்ம்னு வந்தேன்..” என்றான் எப்போதுபோலான குரலில்.. இவளுக்குதான் இன்னும் எதுவும் சரியாவில்லை.. இவனின் இந்த செய்கை.. பேச்சு.. இதெல்லாம் புதிதாக இருந்தது.
ஆனாலும் “சர்ருக்கு, அனுப்புங்க” என்றாள்.
“ஹேய்… ஆசையா கேட்பேன்னு பார்த்தா… இதென்ன, நீ பார்த்துட்டு சொல்லு, அவனா, கல்யாணம் பண்ண போறான்” என்றான்.
“நீங்க அனுப்புங்க…” என்றாள் கறாராக..
“ஏன்னு சொல்லு, அனுப்பறேன்” என்றான் அவனும் கறாராக..
ஏனோ பாவையவள் முகம்.. இரும்பாக மாற.. சின்ன தீ ஜிவாலை மின்ன.. “அத எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்” என்றாள் எப்போதுமான துடுக்கு பேச்சில்..
“சொல்லு அனுப்பறேன்…”என்றான். அவள் அமைதியாகவே நின்றாள்..
“எப்போ சொல்லுவியோ, அப்போ அனுப்பறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
வர்ஷினி “எனக்கு தேவையே இல்ல… அத்த கேட்ப்பாங்க… என்ன பதில் சொல்றீங்கன்னு பார்க்கிறேன்…” என்றாள் சத்தமாக,
வெளியே செல்லும் அவன் காதிலும் விழத்தான் செய்தது.. “உனக்கு பிடிக்கலைன்னு சொல்லுவேன்…” என்றான் அவனும்…
“போங்க எனக்கென்ன “ என்றாள் விட்டேத்தியாய்…
அங்கேயே நின்று அவளை திரும்பி பார்த்தான்.. அவளின் முகம் பார்த்து.. “சொல்லு அவன்கிட்ட எதுக்கு அனுப்பனும்” என்றான் விடாமல், அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டுஆசுவாசமாக கேட்டான்…
மெல்லிய குரலில் “அவனுக்கு தெரியும்… என் டேஸ்ட் என்னான்னு தெரியும்… அதான்” என்றாள்.
“ச்சு… இது இப்போ இங்கதான் இருக்கு… நீயே பார்த்திடேன்… உனக்கு பிடிக்குதா, இல்லையான்னு சொல்லு” என்றான் பொறுமையாக அவளின் பதிலை எதிர்பார்த்தபடி..
“ஏன்… இப்படி இன்னிக்கு…” என்றாள் தன் தயக்கத்தை தாண்டிய குரலில்..
என்ன சொல்லுவான் அவனுக்கே தெரியாத போது… திடமான குரலில் “நீ பாருன்னு சொல்றேன்” என்றான் அவனும் விடாமல்…
“எனக்கு பிடிச்சு.. எது நடக்குது… “ என ஒரு பெருமூச்சு விட்டாள்.
“நான் எதையும் மனசுல ஏத்திக்க மாட்டேன்… எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல, வைச்சிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்… எதுவும் எனக்குன்னு சொந்தமா இருக்காதுன்னு தோணுது..
நா.. எ..என்னால யார் மேலையும் நம்பிக்கை வைக்க முடியல, அதான், அவனுக்கு சரின்னு பட்டா போதும்.. நான் கல்யாணம் செய்துக்குவேன்..
இது இப்போ எடுத்த முடிவில்ல… ரொம்ப முன்னாடியே எடுத்தது.. போதுமா காரணம்” என்றாள் ஒப்பிக்கும் குரலில் வேறு பாவனையே இல்லை அவளிடம்.. உள்ளே சென்றுவிட்டாள்..
சுப்புக்கு அந்த குரல்.. கேள்வியை தந்தது…. என்ன வார்த்தையிது… தன்னையே நம்பாமல்… யாரோ கைகாட்டி இவள் வாழ்வாளா..  ஒரு டிரஸ் வேண்டுமென.. போர்க்கொடி.., தூக்குபவள்.. எப்படி திருமண விழயத்தில்…
எனக்கு, திருமணம் தள்ளி போகிறது எனும் போதே.. எத்தனை எதிர்பார்ப்பு, கோவம், ஆற்றாமை என எத்தனை உணர்வுகள் என்னிடம். ஆனால் இவளுக்கு.. ஏதும் இல்லை என்கிறாள்…
அழகாதானே இருக்கா… என்ன இப்போ, அம்மா அப்பா இல்ல அவ்வளவுதானே.. எப்போதும் சிரித்த முகமாய் தானே இருப்பா.. அப்போ இதெல்லாம் அவ மனசுல இருக்கா…’ என சுப்பு சற்று சிந்திக்க தொடங்கினான்.. 
காரணமே இல்லாமல் இந்த கோவத்தையும், எண்ணத்தையும் மாற்ற வேண்டும் என தோன்றியது அவனுக்கு.. சரியா தவறா ஆராய எண்ணவில்லை அவன்.. 
நேற்று இரண்டு வார்த்தை பேசிய பெண்ணின் முகம் நினைவு வரவில்லை.. எப்போதும் கூடவே இருப்பவள் புதிதாக தெரிந்தாள் இன்று.. உள்ளே எட்டி பார்த்தான்..இன்னும் எதோ செய்து கொண்டிருந்தாள்.. பேச வேண்டுமென தோன்றியது.. ‘இல்ல, எப்போதும் தப்பு நடக்காது…’ என சொல்ல வேண்டும் அவளுக்கு, புரியவைக்க வேண்டுமே என தோன்றியது.. 
“ஏனோ… இருளோடு… ஒளியாய் கூடும் 
வரம்மொன்று கேட்கிறேன்…
வரைமீரும் இவனின் ஆசை…
நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது…  
மழை நீராய் சேர்கிறேன்…
அமுதே.. பேரமுதே…
பெண் மனதின்… கனவின்…
ஏக்கம் தீர்க்குமா… ஏற்குமா…”
  

Advertisement