Advertisement

உன் வருகை என் வரமாய்…
3
தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளுக்கு… “வா.. நான் ட்ரோப் பண்றேன்” என சொன்னவன் மேல் வந்ததே கோவம் “என்ன, இப்போ எதுக்கு வந்தீங்க… கிளம்புங்க முதல்ல…” என்றாள் வரவழைத்துக் கொண்ட அமைதியான குரலில். 
அவனுடன் வண்டியில் சென்றதே இல்லை இவள், அதற்கான அவசியம் வந்ததேயில்லை எனலாம். இவள் பெற்றோரை இழந்து அவர்களின் வீட்டுக்கு வரும்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருத்தாள். சுப்பு கல்லூரி, திருச்செங்கோட்டில் படித்துக் கொண்டிருந்தான்.. லீவ்வுக்குதான் வருவான். சரவணன்தான் அருகில் இருந்தான். எனவே சரவனனுக்குதான் பழக்கம் இவர்களை.
ஆனால், இப்போது அவளின் பெரிய கவலை… ‘மணியாகிறது இவன் வேறு… வந்து நின்று, வா என்றால்… வரும்போது எப்படி வருவேனாம்…’ என்ற எண்ணம்தான்.
சுப்புவே அவளின் பார்வை பார்த்து “ச்சு…. ஒருநாள் தானே, வா… 
நான் வந்து கூட்டி வரேன்… 
இன்னும் சாப்பிட வேற இல்ல.. 
இப்போ நீ இருக்கிற டென்ஷன்ல.. வண்டியில போயி எங்கயாவாது… விழுந்தா என்ன பன்றது… வா பர்வதம்” என்றான் சலித்த குரலில்.
ஏதோ இன்று நல்ல மூடில் இருந்தான் போல சுப்பு… அதனால் அவளை அழைத்து போக வந்திருக்கிறான்.. இல்லையேல்… அவனின் அம்மா சொன்னால் கூட வர்ஷினியை எங்கும் அழைத்து செல்ல மாட்டான்.. ஏதாவது வேண்டுமென வர்ஷினி கேட்டாலும்… ‘அதோ அங்க இருக்கு பார்… வாங்கிக்கோ’ என கைகாட்டுவான்.. கூட வரமாட்டன்.
ஆனால் சரவணன் அப்படியல்ல… வர்ஷினிக்கு எல்லாம் வாங்கி வருவான்… அவளின் கல்லூரிக்கு தேவையானத்தை ஏற்பாடு செய்து தருவான்.. தங்கள் வீட்டு பெண் என அவளை பாதுகாப்பான். சரவணன் அப்படியே அம்மாவின் வாரிசு… ஆத்மநாதனின் பேச்சை காதிலே வாங்கமாட்டான்.
சுப்பு அப்படி சொல்லவும் வர்ஷினிக்கு அவனிடம் வார்த்தையாட நேரமில்லாமல் வண்டியெடுத்து கிளம்பிவிட்டாள்.. ‘நீ சொன்னா.. நான் வரணுமா…’ என்ற கேள்வியை பார்வையில் தாங்கி, பதிலே பேசாமல் கிளம்பினாள்… சுப்பு அவளை நின்று முறைத்துக் கொண்டிருந்தான்… எப்போதும் போல ஏதும் சொல்லவில்லை, அமைதியாக நின்றான்.
ஆறுமுகம் சுமித்ரா தம்பதிக்கு… திருமணம் முடிந்து.. குழந்தையில்லை.. எட்டு வருடமாக.  ஏதேதோ பரிகாரம்… கோவில்… பூஜை என செய்தும்… பலனில்லை. 
கடைசியாக பித்ரு தோஷம் என சொல்ல ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தனர்… பிறக்கும் குழந்தைக்கு சுவாமி பெயரை வைக்கிறேன் என வேண்டினர். அப்படி பிறந்தவள்தான் பர்வதவர்தினி… பெண் பிள்ளையாக பிறந்ததால்… அந்த அம்மனின் பெயரை வைத்தனர்.
அதன் பின் கிரிதரன் பிறந்தான்… அந்த பெற்றோருக்கு கோவில் கோவிலாக சென்று நன்றி செலுத்தவே நேரம் சரியாக இருந்தது… அந்த மாதிரி ஒரு நாளில்தான்.. எதோ கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போது… அந்த ac பஸ் விபத்தாகி இறந்தனர்.
வர்ஷினி எட்டாம் வகுப்பு, கிரிதரன் நான்காம் வகுப்பு… அப்போது சுமித்ரா… தங்களிடம் வேலைக்கு என வந்த, தங்கள் ஊர் பெண் செம்பாவை, விட்டு சென்றிருந்தனர்.. எனவே… இப்போது இந்த செம்பாதான் அவர்களின் உறவு.
இயல்பாய் பானுமதி எல்லா பொறுப்பையும் ஏற்றாலும்… அத்மநாதனின் புறக்கணிப்பு… முகசுழிப்பு அந்த பிஞ்சுகளுக்கு… புரிந்தது போல.. அவர் சாப்பிட்ட பிறகுதான் அந்த பிள்ளைகள் உண்ண வேண்டும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால்.. ப்பான் ஆப் செய்வது.. வீட்டில் அத்தனை வேலையாட்கள் இருக்க.. தன் வண்டியை துடைக்க செய்வது என கொஞ்சம் புறக்கணித்தார். 
இதையெல்லாம் சென்பாவும்.. பானுமதியும் பார்த்தால்… தாங்கள் எடுத்து செய்வார்கள்தான்.. ஆனால் எப்படி.. எல்லா நேரமும் முடியும்.. எனவே இதெல்லாம் வர்ஷினிக்கு உறுத்த தொடங்கியது.. தங்களை வீட்டு மனதர்களாக நடத்துவதற்கும்… ஒதுக்குவதற்கும் வித்தியாசம் தெரியும்தானே.. எனவே அந்த பெண்ணின் மனதில் இதெல்லாம் பதிய தொடங்கியது.. 
அடுத்த மூன்று மாதத்தில்… வர்ஷினி… பரும்மெய்த.. அப்போது தோட்டத்து வீட்டை ஒதுக்கி அங்கே இருக்க வைத்தனர்… அப்போது செம்பா துணைக்கு இருக்க, கிரிதரனும்… அங்கேயே வந்துவிட்டான்.
அப்போது அந்த நிகழ்வை கொண்டாட விருப்பமில்லை யாருக்கும்… முதலில் வர்ஷினி பயந்தால்… தன் அன்னையை இழப்பை முற்றிலும் உணர்ந்தாள். அந்த பருவமாற்றம்… உடலிலும் மனதிலும்.. நிறைய மாற்றத்தை தந்தது. அப்போது செம்பாதான் எல்லாம்… பானுமதியால் கிட்ட கூட நெருங்க முடியவில்லை.
பானுமதிக்கு பாவம்.. இருபக்கமும் அடி.. மருமகள் திரண்டு நிற்கிறாள்.. அதை தொட்டு வீட்டில் நாத்தானார்கள் ஒரே முகத்திருப்பல்.
அந்த பிள்ளைகளை அழைத்து வந்த போதே, அத்தனை அர்ச்சனை தங்கள் அண்ணிக்கு செய்தனர். அவர்கள் வீட்டில் இருக்கும் இந்த மூனுமாதமும் ஏதேதோ… குறை சொல்லியபடியே இருந்தார்… ’தன் அண்ணன் பிள்ளைகள் வந்தவுடன், எங்கள் பிள்ளைகளை கவனிக்கவில்லை’ என்றனர்.
‘இப்போதெல்லாம் நாங்கள் வீட்டுக்கு வந்தால், அந்த பிள்ளைகள் மதிப்பதே இல்லை என்றனர். அந்த பசங்களின் பார்வை சரியில்லை என்றனர் எல்லாம் தங்கள் அண்ணனிடம்தான் பேச்சு. 
அது சுற்றி சுற்றி.. வாரத்தில் ஒரு முறையாவது பானுமதியிடம் வெடிக்கும்.. அப்போது ஆத்மநாதணும்… அந்த பிள்ளைகளின் எதிரில் பேசுவார்.. ஜாடைமாடையாக திட்டுவார்.. எல்லாத்துக்கும் சரவணன்தான் சாட்சி. எனவே சரவணுக்கு.. வீட்டில் இவர்களின் நிலை புரியும்.
அப்படியிருக்கையில்… வர்ஷினி பருவம்மெய்தவும்… தன் அண்ணனிடம் ‘நீங்கள் எதுவும் செய்ய கூடாது’ என்றனர். ‘அதான்… கூடவே வைச்சு செலவு செய்யறோமே… இப்போ அவங்க அப்பா அம்மாவும் இல்லையே… இனி காலம் பூர செய்யணுமே… நீங்க எதுவும் செய்ய கூடாது’ என கங்கணம் கட்டிக் கொண்டு பேசி சண்டை செய்தனர்.
மேலும் பானுமதி எந்த விசேஷமும் செய்வதாக இல்லை. ஆனால் இவர்கள் இப்படி பேசவும்… தன் அண்ணன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
வர்ஷினிக்கு தலைக்கு ஊற்றி, வீட்டுக்கு அழைத்தனர்.. பானுமதி தங்களின் இரு நாத்தனார்க்கும் சொல்லியிருந்தார்… ஆனால் எதோ வேலை, அதனால் வர முடியாது என்றுவிட்டனர். 
வர்ஷினியின் அம்மாவின் சொந்தம்… அவரின் ஒன்றுவிட்ட அண்ணன்.. வயதானவர்… அவரிக்கு வசதி எல்லாம் இருந்தாலும்.. இவர்களை ஏற்க விரும்பவில்லை.. ஆனால் அந்த மாமா மட்டும் வந்து புடவை எடுத்து சீர் செய்தார்… 
வர்ஷினிக்கு என்ன புரிந்ததோ… அன்றே… தன் மாமாவிடம் “மாமா, நாங்க அங்க தோட்டத்து வீட்டில் இருந்துக்கிறோம்…” என்றாள் எந்த தயக்கமும் இல்லாது.
பானுமதி பதறிவிட்டார்.. ஆத்மநாதனுக்கு நிம்மதி… இனி தன் தங்கைகள் எதுவும் சொல்லமாட்டார்கள் என நிம்மதி. அப்போதிலிருந்துதான் வர்ஷினிக்கு இந்த வனவாசம், ஆனால் கொஞ்சம் நிம்மதியான வாசம்.. 
பொறுப்பாக எல்லாமே சென்ம்பாம்மாதான் பார்த்தார்… அதற்கு எல்லா ஏற்பாடுகளையும் பானுமதி செய்து தந்தார். முத்தாக கவனித்தார்.. எந்த குறையும் இல்லைதான். இருவரும் சரவணன் படிக்கும் பள்ளியில் சேர்ந்தனர்… 
வர்ஷினியின், பழைய வீடு ஊரின் மத்தியில்.. போக்குவரத்து உள்ள இடத்தில் இருக்கும் பெரிய வீடு.. எனவே அதனை ஒரு தனியார் வங்கிக்கு லீஸ்சுக்கு விட்டார் ஆத்மநாதன். அதுமட்டும்தான் தெரியும் வர்ஷினிக்கு… மற்றைய சொத்து பற்றி ஏதும் தெரியாது அவளுக்கு.
அதனால், அவள் எப்போதும் சொல்லுவது எங்க குத்தகை பணம் கொடுங்க… எங்க செலவுக்கு என்பதுதான்.. அதுமட்டுமே அவளின் கண்களுக்கு தெரிந்தது.
வர்ஷினி கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் தானே பழகினால்.  வாழ்வின் சுவாரசியமே மனிதர்களை படிப்பதுதான், அது ஆணோ பெண்ணோ.. தாய் தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு வலிக்க வலிக்க வாழ்க்கை, தனது பாடத்தை தொடங்கியது… 
சொந்தத்தை பற்றி அந்த மூன்றுமாதத்தில் வர்ஷினிக்கு சொல்லியது… இப்போது… இன்னும் ஒருபடி மேலே சென்றது..
இரண்டாவது அத்தையின் மகன் சரவணின் தோழன்.. அவனும் இவனும் ஒரே வகுப்பு… எப்போது சரவணன் வர்ஷினியை பார்க்க வரும் போது இவனும் வருவான்.. 
இருவரும் பேசுவர்.. ஏதாவது படிப்பு சம்மந்தமாக சரவணன், சொல்லி தருவான்… அப்போது அவனும் வருவான் பேசுவான் சிரிப்பான்.. அப்படி பழக்கம். 
இவளும் புரியாமல் நன்றாகவே பேசினாள்… ஏனோ கொஞ்ச நாட்களில் அவனின் பார்வை மாறியது. எங்கோ சென்றது பார்வை.. இயல்பான வேறுபாடை அந்த சிறு பெண் உணர்ந்தாள் போல.
அப்போது அவன் பதினொன்றாம் வகுப்பு. பெற்றோர் இருந்திருந்தால்… இது கவனிக்க பட்டிருக்கலாம்… வர்ஷினிக்கு ஏதாவது கவனம் சொல்லியிருப்பார்கள். அல்லது ‘நீ மட்டும் வா சரவணா… பசங்க எல்லாம் வேண்டாம்’ என தன்மையாக சொல்லியிருப்பார்களோ என்னவோ…
ஒருநாள் இருட்டும் நேரம்… பள்ளியிலிருந்து தன் சைக்கிளை தள்ளியபடியே வந்தான் அந்த பையன், சரவணன் வரவில்லை… சைக்கிள் பஞ்சர்… உன் வீடு பக்கத்தில்தானே… விட்டு போகிறேன், காலையில் எடுத்துகொள்கிறேன் என்றான். 
ஆனால் நகராமல் எதோ பேசிக் கொண்டே நின்றான்… இவளும் தெரியாமல் நின்றாள்… பட்டென அவளின் வாய் முடி.. அவளின் மேல் சாய்ந்துவிட்டான்… ஐயோ இருட்டில் கத்த முடியாமல்… வர்ஷினி தடுமாறி போனாள்.. அவன் மோதிய வேகத்தில் கீழே விழாமல் அவன் தாங்கியிருக்க… அது அவளுக்கு அருவெறுப்பை கொடுத்தது… வந்த வேகத்தில் ஒரே தள்ளு… கீழே போய் விழுந்தான்… உடம்பெல்லாம் கூசி நடுங்கியது வர்ஷினிக்கு… அவன் பேசாமல் திரும்பி ஓட… தனது செருப்பை விட்டெறிந்தாள்… சரியாக அவனின் முதுகை தாக்கியது… ஓடிவிட்டான் திரும்பியும் பார்க்காது. வயது பெண்களுக்கு ஆண்களின் பார்வை மாற்றம் புரிய வேண்டும். எப்போதும், எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை.
மறாவது நாள் சரவணனை அழைத்து சொன்னால் வர்ஷினி… என்னை தப்பா பார்க்கிறான்… அவன கூட்டி வராத என்றாள்.. சரவணன் ஏன் என ஒருவார்த்தை கேட்கவில்லை.. அப்படியே வர்ஷினியை நம்பினான்.
இத்தனைக்கும் சரவணனின்.. சொந்த அத்தை மகன் அவன்… ஆனாலும் சரவணன் எதோ விளையாட்டில் அவனை பழித்தீர்த்துக் கொண்டான்… ஆனால் சொன்னான் ‘அவகிட்ட இனிமே வைச்சிகிட்ட… பேத்துருவேன்’ என்றான்… அதற்கு அவனும் பேசினான்.. ‘உனக்கேன் கோவம்… நீ என்ன உடைமைபட்டவனா…’ என கச கசவென பேசி, கோணல் பார்வை பார்க்க… சரவணனுக்கு கோவமே வரவில்லை… அர்த்தமற்ற பேச்சுக்கு அவன் பதில் தரவில்லை… (இதுபோன்ற பேச்சு.. கேட்பவனின் மனதையும் மாற்றும்… நீ அவளிற்கு.. அண்ணனாகவோ தம்பியாகவோ… இல்லை காதலனாகவோ இருந்தால் மட்டுமே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கும்… இது தவறு… பெண் எங்கு அவமானபட்டாலும்… கேள்வி வரவேண்டும்… அதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம்… உரிமையுள்ளவன் மட்டும்தான் கேட்கவேண்டும் என்று இல்லை.) அதற்கெல்லாம் அசராதவனாக, நீ என்னமோ சொல்லிக்கோ.. என திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டான் சரவணன்… 
அதன்பின் அவனின் சகவாசத்தை நிறுத்தினான்.. சில ஆண்களுக்கு பெண்களின் பிரச்சையை புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. அவனிடம்  ‘ஏதாவது பிரச்சனை பண்ண, வீட்டில் சொல்லிடுவேன்’ என பயமுறுத்தி வைத்துருந்தான் சரவணன், அவனை.
இப்படி தன்னை சுற்றி என்ன நடக்கிறது.. மாமா.. அந்த அவன்.. சரவணன்.. செம்பா, பானுத்த.. நட்பு வட்டம் என எல்லாரும் அவளுக்கு நட்பாகவும் எதிராகவும் வழிநடத்த…
அந்த எட்டாம் வகுப்பிலிருந்து அவள் கவனாமாக.. எங்கும், யாரிடமும் சின்ன சந்தேகம்.. சட்டென யாரையும் நம்பும், நல்ல சூழ்நிலையை அவள் உணரவேயில்லை.. எனவே கவனமாக இருந்தாள்.. எப்போதும் ஒரு விழிப்பு தன்மை.. எதிலும் கவனம்.. இளமையில் அது கொடுமை.. 
அப்போதிலிருந்து சரவணன் வர்ஷினியின் பெட்.. இந்த சிக்கலுக்கு பிறகு.. வர்ஷினி நம்பிக்கை வைக்கும் இரண்டாவது ஜீவனாக சரவணன் மாறினான். இப்படியாக இவர்களின் நாட்கள் நகர்ந்தது. 
சுப்பு விடுமுறையில் வந்தால்… ஏதோ வருவான்… மஞ்சள் தோட்டத்தை பார்ப்பான்.. இவர்கள் வீட்டிற்கு கூட வரமாட்டன்.. அப்படியே போய்விடுவான். அதுவும் வேலை கிடைத்தவுடன் இன்னும் மோசம்.. வருடத்திற்கு ஒருமுறைதான் வருவான்… 
பொங்கலுக்கு வருவான்… ஒரு வாரம் நன்றாக உண்டு உறங்கி கிளம்பிவிடுவான். சுப்பு என்பது தன் அத்தையின் மூத்த மகன் அதுமட்டும்தான் தெரியும் வர்ஷினிக்கு.
பள்ளிபடிப்பு முடித்து… கல்லூரிக்கு BA இங்கிலீஷ் எடுக்க வைத்தவனும் சரவணன், அதன்பின் டீச்சர் ட்ரைனிங் முடிக்க சொன்னான்.. இப்போது பெரிய இன்டெர் நேஷனல் ஸ்கூல்லில்… ப்பஸ்ட் ஸ்டான்ட் டீச்சர் வர்ஷினி… எல்லாம் சரவணன் உபயம்.. அவளின் நட்புதந்தையாக அவன்.
“தாகம் என்று சொல்கிறேன்…
மரக்கன்று ஒன்றை தருகிறாய்…
பசிக்குது என்று சொல்கிறேன்…..
நெல்மணி ஒன்றை தருகிறாய்….
உந்தன் கைவிரல் பிடிக்கையில்…
புதிதாய் நம்பிக்கை பிறக்குதே…
உந்தன் கூட நடக்கையில்…
ஒன்பதாம் திசையும் திறக்குதே…
என் பயணத்தில் எல்லாம்… நீ
கைகாட்டி மரமாய் முளைத்தாய்…
என் மனதை உழுது நீ.. 
நல்ல விதைகளை விதைத்தாய்…
மாற்றங்கள் கொண்டதே… வாழ்க்கை..
அதை உன்னால் உணர்ந்தேன்… தோழா…
#$#$#$#$#$#$#$#$#$#$#$
மாலையில் வர்ஷினி வந்ததும் பானுமதி அழைத்தார்.. “ஏன் தங்கம்… மாமா வந்தானாம்… நீ, வேண்டாம்னு சொல்லி கிளம்பிட்டியாம்,” என்றார் அற்றமையாக..
இவள் அதற்கு பதிலே சொல்லாமல்.. “என்ன இந்த நேரத்திற்கு போன்… உன் வூட்டுக்காரர்… இல்லையா” என்றாள்.
“பாரும்மா…” என்றார் அவரும் மிரட்டும் குரலில்.
“சரி சரி… 
ஆமாம், 
எங்கையாவது புதுமாப்பிளைய.. நீங்க தேடி… 
அவரு அப்போ இல்லாம போக,  அத்தோடு.. என்னை கூட்டிட்டு போனாங்கன்னு தெரிஞ்சிது… 
எல்லோரும் உன்னை தாளிச்சிடுவாங்க… 
அதான்… போனா போதுன்னு, நானே போயிட்டேன்” என்றாள்.
பானுமதிக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை… உண்மை… உண்மை முற்றிலும் உண்மை.. வர்ஷினியை நினைத்து பெருமிதமே… மனதுள் சொல்லிக் கொண்டார் ‘போற இடத்தில் நல்லா இருப்படா ம்மா’ என.
எல்லாவற்றையும் மறைத்து “ஏண்டாம்மா… அந்த பொண்ணு போன் நம்பர் வாங்கினியே… சுப்புகிட்ட கொடுத்தியா… “ என்றார்.
“யாரு அந்த கரண்டு கம்பத்துகிட்டயா…” என சொல்லி  “சாரி… சுப்பு மாமாகிட்டயா…
நான் எதுக்கு கொடுக்கணும்… வேணும்னா, அவரே கேட்கட்டும்” என்றாள்.
பானுமதி “பார்த்து பேசு டா, அவன் காதிலே விழுந்திட போகுது… அவன் என்ன நினைப்பானே தெரியாது… சங்கடத்த கூட முகத்தில் காட்டமாட்டன்…
ம்….” என பெரு மூச்சு விட்டவர்.. “அவனெல்லாம் கேட்க மாட்டன்… அவன் அங்க வரும்போது நீ பேச சொல்லு… பேசட்டும்… பழகட்டும்” என்றார் அந்த மாமியார்.
அவளுக்கு கோவம் வந்தது… “விட்டா… என்னை ஏதோவா மாத்திடுவ போல… என்னால முடியாது… நம்பர் தரன் வாங்கிக்க… 
நீயாச்சு உன் பையனாச்சு…
சொல்லவா, எழுதிக்கிரியா” என்றாள்.. அழகான மிரட்டும் குட்டி மானாய்.
“ஏ… தங்கம்… நான் எங்க போக பேனா, பென்சிலுக்கு… 
அவன் வருவான்..
சித்த, பேச சொல்லி.. கொடுடா…” என்றார் கெஞ்சலான குரலில். மருமகளுக்கு சிரிப்புதான் வந்தது என்னத்த சொல்லி.. என்னத்த கொடுக்க.. என நினைத்தவள்.. “ஆமாம்… இப்படியே நீங்க எல்லோரும் பயந்து பயந்துதான்… அவர இப்படி விட்டேத்தியா வைச்சிருக்கீங்க…” என்றாள்.
எப்போதும் போல… அம்மாக்களின் டைலாக்கை தப்பாமல் சொன்னார் பானுமதி.. “எல்லாம், பொண்டாட்டி வந்து பாத்துக்குவா…” என்றார்.
வாயிருக்கமாட்டமல் “அப்போ இந்த பொண்ணுங்களுக்கு கல்யாணமே வேண்டாம்ப்பா… நாங்க பேசாம… அம்மாப்பா வீட்டிலேயே இருந்துக்கிறோம்…
திருத்தி… புத்தி சொல்லி அத அவன் கேட்டு… ம்…. எப்போ எங்களை புரிஞ்சிக்கிறது… எல்லாம் மாயா…தான்” என்றாள் சலிப்பான குரலில்…
“அடியேய் என் நூத்து கிழவி… 
உனக்கு இப்போ யாரும் கல்யாணம் பன்னல… உனக்கு செய்யும் போது… அத்த, நல்லவனா பார்க்கிறேன்…
நீ மாமாகிட்ட நம்பர் மட்டும் கொடு போதும்…” என்றார் சிரித்தபடியே…
“போ..  த்த…………. அப்போ உன் பையன் அப்படிதான்கிற…” என்றாள் மருமகள் இன்னும் துடுக்காக.. பானுமதிக்கு ஏக்கமாக இருந்தது.. ‘இப்படியொரு குறும்பு மருமகளை நான் இழக்கிரேனே என… ‘இங்க என் பசங்களுக்கு பார்த்து கட்டி வைச்சா… இந்த… சொந்தத்தின் வாயில் விழுந்தே இந்த புள்ள… இந்த கலகலப்பை இழந்திடும்… போற இடமாவது… நல்லபடியா அமையனும் சென்னியப்பா… ஏச்சு பேச்சு கேட்க்காம… புள்ள சந்தோஷமா இருக்கணும்.’ என எப்போதும் போல ஒரு வேண்டுதல் வைத்து…
“சரி தங்கம் வைக்கிறேன்… “ என்றவர் போனை வைத்தார்.
 
 

Advertisement