உன் வருகை என் வரமாய்…
22(3)
அன்று… வைகாசிபட்டம் (விதைக்கும் நாள்…)
மஞ்சள் விதைக்கும் நாள்…. சரியான பதத்தில்…. பாத்திகள் தயாராக இருக்க… சுப்பு… வேட்டியை கட்டிக்கொண்டு… தலையில் துண்டால்… உருமாலை கட்டிக் கொண்டு… ஒருகையில்… தீபாராதனை தட்டுடனும்… மறு கையில் பூஜை மணியுடனும் நின்றான்…
அமர்களமாக வயலுக்கும்… விதைக்கும்… பூஜைகள் செய்து… எல்லோருக்கும் கற்பூர ஆரத்தி கொடுத்து… சுப்பு “பர்வதம் “ என்றான் மெல்லிய குரலில்..
சர்ரு வந்திருந்தான்…. இன்று… அவனும் “ம்…. ரெடியா” என்றான் வர்ஷினியை பார்த்து…
ஆத்மநாதன்… அங்குதான் நின்றார்… இப்போதெல்லாம் மகன் முக்கியம் என உணர்ந்திருந்தார்… இந்த இரண்டு மாதத்தில். மாற்றம் வரவேண்டும்… இல்லை வரவைப்பார்கள் போல… இளையவர்கள்…
தோட்டத்து வீட்டுக்கு அவ்வபோது வருவார்… பேசுவார்… உண்பார்… இயல்பாக்கி கொள்ள முனைந்து கொண்டிருந்தார்… இன்னமும் முயண்று கொண்டுதான் இருந்தார்…
வர்ஷினி… ஐந்துமாத கருவை சுமந்து கொண்டிருந்தாள்… அழகான மெல்லிய ஜரிகையிலான, அரக்கு நிற புடவை… லேசான மேடிட்ட வயிறு… அதையெல்லாம் விட… கணவனின் மேல்… கொண்ட நம்பிக்கை எனும் ஒலி கண்ணில் தெரிய, தாய்மையிலும், காதலிலும் சரிவிதம் பூரித்து, தன்னவன் முன்… “போலங்க” என்று சொல்லி, கண்ணில் ஒளியுடன்… நின்றாள்.
பெண்கள் அழகுதான்… அதிலும்… கணவமேல் பித்தாகி நிற்கும் பெண்கள் பேரழகு… என தோன்றியது வர்ஷினியை பார்க்கும் போது… நம்பிக்கை என்பதும் காதல் என்பதும்… ஏதோ பேச்சில் வருவதில்லை… செய்கையில்தான் வரும் என அவளின் சிவாஜி நிருபித்திருந்தான். அதன் வெளிபாடே இந்த பூரிப்பு.. அவளிடம்.
தன் மனையாளை, முதல் விதைப்புக்காக அழைத்திருந்தான் சுப்பு. ‘வரப்பு வழுக்கும் டா… அடுத்த வருஷம்… உன் பொண்டாட்டிய விதைக்க சொல்லாம்’ என பானுமதி… செண்பா… விஜி அத்தை இன்னும் வந்து செல்லும் பெருசுகள் எல்லாம் சொல்லியாகிற்று…
ஒரே பதில் “எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…” என்றான் சிரிப்பு மாறாமல்…
பானுமதி “சென்னியப்பா….” என ஒருரூபாய் நாணயத்தை அப்போதே முடிந்து வைத்தார்… ‘இவள் நல்லபடியாக விதைத்து மேலேற’ வேண்டுமென… 
ஆம்… வரப்பு அப்படிதானே இருக்கும்… நீர்பாய்ச்சி… உழுது சமன் செய்யப்பட்ட நிலம்… கால்களை பார்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் வழுக்கிவிடும் தானே… இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் எனவே பெரியவர்களுக்கு பயம் பிடித்துக் கொண்டது..
இன்று, சர்ருவும்… கணவனும் இரு பக்கமும் பிடித்துக் கொள்ள… தனது மேடிட்ட வயிற்றை கருத்தில் கொண்டு கவனமாக… வரப்பில் இறங்கி… அழகாக விதைத்தாள்…. பர்வதம்…
பொறுமையாக காலுன்றி… குனிந்து தன் கணவன் கையில் விதை மஞ்சளை தர… பொறுப்பாக கடவுகளை வேண்டி… அந்த நீண்ட வரிசையையும் வித்தைத்தாள்…
சர்ரு “ஆத்தா… போதும் எந்திரி… இடுப்பு புடிச்சிக்க போகுது…. அங்க பாரு எல்லா பெருசுகளும்… எங்களையே முறைக்குது… நிமிரு…. “ என்றான்.. வர்ஷினி ஒருவழியாக நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தாள்…
அப்படியே.. அவளின் இருபக்க இடையை பிடித்து, ஏதோ குழந்தையை தூக்குவது போல… தோழனும்… கணவனும்.. இருபக்கமும் பிடித்து… வரப்பிலிருந்து மேலேற்றினார்… தங்கள் மீது நம்பிக்கை கொண்டவளை…
பெரியவர்கள் அப்பாடா என பெருமூச்சு விட்டனர்…. 
#$#$#$#$$#$$##$#$#$#$#$#$#$$#$$#
எட்டு வருடம் சென்று…
சுப்பு “பூரணி..ம்மா…” என்றான் அவளை காணாது… சத்தமே வரவில்லை… எப்போதும் இப்படிதான் தன் தந்தை வரும் நேரம்… அவனின் வண்டி சத்தம் கேட்டவுடன்… அந்த கதவுக்கு பின்னால் சென்று ஒளிந்துகொள்வாள்…
இதுதான் பூரணியின் சமீபத்திய விளையாட்டு… தன் அக்காவை பார்த்து… மூன்று வயதேயான தரனீஷ்… குடுகுடுவென அவளை வால்பிடித்த படியே தானும் ஓடுவான்…
அந்த வாண்டுகளால் சிரிப்பை அடக்கவே முடியாது… இரண்டும் கெக்கபிக்கவென சிரிக்க… அப்போதே கண்டுகொள்வான் தன் மழலைகளின் இருப்பிடத்தைசுப்பு. ஆனாலும், தந்தையாக எல்லா இடமும் தேடுவான்…
கூடவே “பாரு… எங்கடி… குழந்தைங்க…” என கண்ணடித்து ஓரு மிரட்டல் வேறு போட… இன்னும் சிரிக்கும் அந்த குட்டி தேன்சிட்டுகள்…
சுப்பு “தரணி.. அப்பாக்கு தேட முடியல…. கால் வலிக்குது…” என சொல்ல… இரண்டும் அவனருகில் வந்து “பேவென…” கத்தி ஆரபாட்டமாக சிரித்தது..
அழகான பாவாடை சட்டையில், மகன்.. ஜிப்பாவில் என சர்வலங்காரத்துடன் பிள்ளைகள் நிற்க… பொற்றோரின் கண்ணே பட்டது.. 
நெடு நெடு உயரம்தான் பூரணி… அருமை மகள்… அப்படியே பானுமதி சாயல்… கண்கள் மட்டும் வர்ஷினியை கொண்டு பிறந்திருந்தது… சுபாவத்தில் அப்படியே அமைதியான அப்பாவை கொண்டு இருந்தாள்..
மகன்… இப்போதுதான் பேச தொடங்குகிறான்… அக்கா எது சொன்னாலும் செய்வான்… அப்படிதான் இருந்தான் இப்போதே… சுப்பு, சர்ருக்கு தப்பாத பிள்ளையாய்.
வர்ஷினி, தன் கணவனின் பெருமையை கலைத்தால்… “மணியாச்சுங்க… அத்த போன் செய்துடாங்க… வாங்க சீக்கிரம்” என சொல்லி டவலை கையில் கொடுத்து… குளியலறைக்கு அனுப்பி வைத்தாள்… சுப்புவும் பிள்ளைகளிடம் சைகையாக ஏதோ சொல்லி உள்ளே சென்றான்…
இன்று மாத கிருத்திகை… இன்று சென்னிமலையில் இவர்களின் கட்டளைக்கு சொல்லியிருக்கிறார்கள்… எனவே குடும்பமாக கிளம்பினர்… அதற்குதான் வர்ஷினி விரட்டினாள் தன் கணவனை…
பூரணி “ம்மா… எனக்கு அந்த வளையல் குத்துது… ப்ளீஸ்… வேண்டாம்மா” என்றாள்..
அதனை கண்னேடுக்காமல் பார்த்திருந்த தரணி “ம்மா… என்கு… செயின்… குத்து….. ம்மா…. வேணா ம்மா” என்றான், தன் அக்கா சொல்லிய அதே ஏற்ற இறக்கத்துடன்…
அழகான நீலவண்ண பட்டுபாவடையில்… மேலே… பச்சை வண்ண… சட்டையும் அணிந்து… பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் தன் மகளை பார்க்கையில் கோவமே வரவில்லை வர்ஷினிக்கு…
அத்தோடு… அவளை போலவே.. ஒன்றுமே தெரியாமல்… அக்காவின் பின்னால் செல்லும் தன் மகனை பார்க்கையில் சிரிப்பு கூட வந்தது… 
மெல்லிய குரலில் “ஆனா, இத போட்ட உடனே… நீ அழகா இருக்கியே…” என்றாள் அன்னை கண்சிமிட்டி… 
சமாதானம் ஆகவில்லை பூரணி… மீண்டும் அன்னை“பானு பாட்டியும் நீயும் இன்னிக்கு மேச்சுக்கு மேட்ச்… “ என அவர்களை குஷிபடுத்த… ஏதோ வார்த்தைகள் சொல்லி… 
“வெளிய ரெடியா நில்லுங்க… அப்பா வந்தவுடனே… கிளம்பறோம்” என கோவிலுக்கு செல்ல வேண்டிய சாமான்கள் எடுத்து வர உள்ளே சென்றாள் வர்ஷினி…
சுப்புவும் தயாராகி வந்தான்… பிள்ளைகள் இருவரையும் தன் டூ விலரில்.. அழைத்துக் கொண்டு பெரிய வீட்டுக்கு சென்று.. அங்கிருந்து, பெரிய கார் எடுத்துக் கொண்டு… தந்தை, தாய், அத்தை எல்லோரையும் ஏற்றிக் கொண்டு… தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான்… 
வர்ஷினியும் செண்பாவும்  எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு… ஏறினர்..
ஆத்மநாதன்… தன் மனைவியுடன் தன் பேத்தியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டார்… விஜி அத்தையும் செண்பா அம்மாவும் பின்னால் அமர்ந்திருந்தனர்.. 
வர்ஷினி சாமான்களை பின்னால் வைத்து… முன்னால் தன் கணவனோடு… மகனை மடிதாங்கி அமர்ந்து கொண்டாள்.
தரணி… தன் அம்மாவைவிட்டு நகரமாட்டான்… அக்காவும் அம்மாவும் அவனின் காவல் தெய்வங்கள் போல… தன் பாட்டி வீட்டுக்கு கூட, தனியே செல்ல மாட்டான்… அக்கா வந்தால்தான் செல்வான்.
பானுமதி “ஏன் தங்கம்… இன்னும் கொஞ்சம் சீக்கரம் வர சொல்ல வேண்டியதுதான… உன் புருஷன… பாரு… இப்போ இவ்வளோ அவசரமா போக வேண்டியது இல்லளையில….” என தன் மகனை முறைத்தபடியே சொன்னார்.
நாதன் “எல்லாம் சரியான நேரம்தான்…. நீ விடு… அவன… வண்டியோட்டடும்” என்றார்.
பூரணி தன் பாட்டியிடம் “பாட்டி.. இந்த வளையல் நல்லா இருக்கா” என நீல வண்ணத்தில் மின்னிய வளையலை… தன் பிஞ்சி விரல்களால்… அசைத்து விளையாடியபடியே கேட்க….
பானுமதி “அடேய்…. தங்கம்… என் பேத்திக்குதான் எல்லாம் அழகு, எது நல்லா இல்லாம போகும்… கண்ணா பரிக்குதுடா….” என்றவர்…
வர்ஷினியிடம் ”ஏன் தங்கம்… அந்த தங்க வளையல… ரெண்டு போட்டு விட்டிருக்க்லாம்ல…” என்றார் வாஞ்சையாக. ஏனோ மகனை அதட்டும் அவரால, தன் மருமகளிடம்… குரலை உயர்த்த முடியாது. 
இப்போதெல்லாம் பானுமதியின் பேச்சு வீட்டில் கொஞ்சம் சத்தமாகவே கேட்க தொடங்கியிருந்தது… சுப்பு தன் அத்தைகள் விஷயத்தில்… வரைமுறை கொண்டு வந்ததால்.. இந்த எதிரொலி.
இது என் குடும்பம்… நல்லது கெட்டதுக்கு வா… ஆனால் சண்டை வர கூடாது எனும்படி நடந்து கொண்டான். 
சர்ருவின் திருமணத்தில் அப்படிதான் ஏதோ முறைகளில் வர்ஷினி சற்று கவனம் தப்பி இருந்துவிட்டாள்… உடனே… சத்தமான குரலில்… “இதெல்லாம் முன்னபின்ன” என ஆரம்பிக்க…
சுப்பு அங்குதான் இருந்தான்… தன் மாமாக்களை சத்தமாக அழைத்தான் “மாம்மா….” என்றான் அவ்வளவு அழுத்தமாக…
இருவரும் அங்குதான் அமர்ந்திருந்தனர்… ஏதோ தங்கள் பெண்டாட்டிகளின் தவறு என நொடியில் புரிந்து… அவர்களும் முறைக்க… சுப்பு “பர்வதம்… இந்தா இத… அத்தைகிட்ட கொடு..” என சொல்லி தன் மனைவியை… தானே இயல்பாக்கி… தன் அத்தைகளை… கொஞ்சம் தள்ளி வைத்தான்.. அங்கேயே… அப்போதே..
அன்று… அந்த அறுவடை நாளில் அவளை முன்னிருத்தி… தன் அத்தைகளை கொஞ்சம் பின்னுக்கு தள்ளினானோ… அதே வடிவமே… இப்போது வரை தொடர்கிறது.
எதற்கும் எங்கும் “பர்வதம்..” என்ற சொல்லே அவனின் மந்திரமானது.. தொடக்கத்தில் வர்ஷிணியும் பயந்தால்… மாமா என்ன சொல்லுவார் என… ஆனால், அவரும் தன்னை.. முகம் பார்த்து பேசவும்… எதையோ உணர்ந்தாள்.. ஆக, கணவன் கொடுக்கும் மதிப்பில்தான் தங்களின் மதிப்பு இருக்கிறது என.. ஆக எல்லாம் பழகிக் கொண்டாள்.
தன் மாமனாரின் விருப்பம் அறிந்து சரவணுக்கு… பெரிய இடத்தில் பெண் பார்த்தாள்… எல்லாவற்றையும் தன் கணவனை முன்னிருந்த்தினால்… சுப்பு ஒன்றுக்கு நூறு முறை எல்லாவற்றையும் ஆராய்ந்து…. அந்த சம்பந்தத்தை தன் தம்பிக்கு உறுதிபடுத்தினான்.
நல்ல பெண்ணாக அமைந்தது… சரவணுக்கு. சரவணனை விட அதிகம் பேசினாள்… மனதில் கள்ளமில்லை… “தீபா” அவள் பெயர்… இப்போது சரவணனும் அவன் மனைவியும் usல் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்றரை வயதில் ரக்ஷ்னா என்ற பெண் குழந்தை உள்ளது… முடிந்தவரை வீடியோ காலில் உறவு வளர்த்து கொண்டனர்.
வர்ஷினி இப்போது வேலைக்கு செல்வதில்லை… எங்கே நேரம்… இரண்டு பிள்ளைகள்… அத்தோடு தோட்டம்… காடு அவ்வபோது கணவனுடன் பினான்ஸ் என பொறுப்பாக மாறியிருந்தாள்… 
புதிதாக அவளின் தேவைக்காக சின்ன கார் ஒன்று வாங்கியிருந்தான் கணவன்.. அதில்தான் இப்போதெல்லாம் பவனி வருகிறாள் வர்ஷினி. தன் இரு பிள்ளைகளுடன்.. வெளியில் செல்வது… முக்கியமாக பெரியவர்கள் மூரவையும் மருத்துமனைக்கு அழைத்து செல்வது என… எல்லாவற்றிக்கும்… அவளும்.. அவளுக்கு அந்த சிறிய காரும்தான் துணை. 
கிரிதரன்… அமைதியான, யாரையும் கருத்தையும் கவராதவன், தன் மாமனின் பேச்சை கேட்டு… IAS எழுதினான். இப்போது கலெக்டர்… வடமாநிலத்தில் பணியில் இருக்கிறான்… கூடிய சீக்கிரம் தமிழ்நாடு வந்துவிடுவான்… அவனிற்குதான் பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கோவில் வர எல்லோரும் இறங்கினர்… பெரியவர்கள் எல்லோரும் பொறுமையாக நடந்தனர்… வயதாகிறதே… விஜி அத்தையால் முடிவதேயில்லை, “நான் வரலை” என்று விடுவார்…  
வர்ஷினிதான் கம்பல் செய்து கூட்டி வருவாள்… வீட்டில் இருந்தால் தன்னுலேயே ஒடுங்கிக் கொள்வார் என எண்ணியிருந்தாள்..
இப்படியாக தன் குலதெய்வம் சென்னியப்பனை வணங்கி… எல்லோரும் வீடு வந்தனர். வரும் போதே… ஹோட்டலில் உண்டு வந்தனர்… எனவே எல்லோரையும் பெரிய வீட்டில் இறக்கிவிட்டு… இங்கு வந்தான் சுப்பு.
பிள்ளைகள் இரண்டும் பாதி தூக்கத்தில் அழ தொடங்க… அடுத்த ஒருமணி நேரத்திற்கு வேலை சரியாக இருந்தது… பெற்றோருக்கு.
சுப்பு கட்டிய வீட்டில்… பெரிய தேக்கு கட்டிலில் பிள்ளைகளை படுக்க வைத்து… அதற்கு தக்க அரண்கள் வைத்து இருவரும்… வான்வெளி காண… வெளியே வந்தனர்…
ஏதோ அவர்களின் ராஜாங்கம் இங்குதான்… அந்த வீடு.. மஞ்சள் காடு… எங்கும் மின்னும் நட்ஷத்திரம்… அதில்… குளிர் தரும் நிலவு… சுற்றிலும் காற்றில் அசையும் தென்னையின் ஓசை… என அழகான பழைய சொர்க்கம் தான்… ஆனால் பார்க்க அனுபவிக்க திகட்டா சொர்க்கம்…
வர்ஷினி… தன் கணவனுடம் கயிற்று கட்டிலில்… அவன் தோளில் சாய்ந்தபடியே… “இந்த பூந்தோட்டத்துக்கு வேற ஆள் போடலாங்க… செண்பா அம்மாவால முடியல…” என்றாள்.
“ம்…. பார்த்திரலாம்… “ என்றான்.. அவளின் தலை கோதி.
“விஜி சித்திக்கு… மூட்டு சவ்வு.. ஏதோ… தேய்ந்து போச்சாம்… கேரளா ஆயுர்வேத வைத்தியம் பார்க்கணும்ங்க…
இங்க பக்கத்தில், கோவையில்… ஏதோ இடத்தில் இருக்காம்… ஒருதரம் கூட்டி போகணும்ங்க…. இந்த மாசத்தில்…” என்றாள்.
“ம்… லீவ்ல போகலாம்…. பாப்பாபாக்கு எக்ஸாம் முடியட்டும் போகலாம்…” என்றான்.. அமைதியான குரலில்…
“இந்த வருஷம்… பையன… ப்ளே கிளாஸ் போடணும்ங்க…” என்றாள்
“ஏன்… அதுக்குள்ள… இன்னொரு வருஷம் போகட்டும்” என்றான்…
“ச்சு…. அதெல்லாம் சரியான நேரம்தான்.. ப்ளே கிளாஸ் தானே…” என்றாள் முறைத்தபடியே…
“ம்… சரி… பக்கத்தில் பார்க்கலாம்” என்றான்.
“இந்த வர்ஷம் கிரி கல்யாணத்த முடிச்சிடனும்ங்க” என்றாள்..
“ம்… பார்த்துட்டே இருக்கோமில்ல… அவனின் அமைதிக்கு தகுந்த மாதிரி பார்க்கனும்டி…” என்றான் பொறுமை பொறுமை… பொறுமைதான்… சின்ன சலிப்பே இல்லாத குரல்… 
ப்பா… இவ்வளவுக்கு பிறகும் சுப்புவிடம் பொறுமை மட்டுமே… ஆனால் வர்ஷினியுடன் சேர்ந்தால் கொஞ்சம் அவ்வபோது தலைகாட்டும் கணவன் குறும்புடன்… “ஏண்டி… அந்த நிலா தனியா நிக்குது பாரு… அத மட்டும் ஏன் விட்டுட்ட… சொல்லு ஏதாவது பார்த்து செய்யறேன்…” என்றான் சிரிக்காமல்…
ஒரு ஷணம்… ஆனது தன் கணவன் வார்த்தை புரிய, சட்டென “சிவாஜி……” என்றாள்…
அவள் மீதேறி அப்படியே விழுந்தவன் “இப்போதான் தெரியரனா… சிவாஜின்னு…” என்றபடி… அவளின் பேச்சு நிற்கும் வேலையை செய்தான்…
இரண்டு நிமிடத்தில்… சின்னவன் அழும் சத்தம் கேட்க… இருவரும் உள்ளே சென்றனர்… வர்ஷினி அவனுக்கு… பால் எடுக்க உள்ளே சென்றாள்.. 
அதற்குள்… அவனுக்கு டைபர் போட்டு… அவனை சமாதனம் செய்திருந்தான் சுப்பு… தன் கணவனை காதலாக பார்த்தாள் மனையாள்… அவனும் ரகசியமாக கண்ணடித்து.. பிள்ளைக்கு பால் புகட்ட தொடங்கினான்…
இங்குதான் புரிதல் தொடக்கம்.. தன் குடும்பம்… அது சார்ந்த தேவைகள்.. அதை அழகாக கையாளும் தம்பதிகள்… 
இந்த வாழ்க்கையில் யார் யாருக்கு வரமென இன்னும் அவர்களால கண்டுகொள்ள முடியவில்லை… 
பட்டாம்பூச்சி போல 
வண்ணம் அள்ளிதார…
கண்ணில் இன்னும் வேற
ஏதோ… சொல்லி தர….
நான் நினைச்சதும்…
நீ நினைச்சதும்…
நூலிழையிலதான் வாழிக்கிட…
பேசி பேசி… இன்னும் பேசி…
பேசாநிலை வருமோ…..
 (சுபம்)