Advertisement

உன் வருகை என் வரமாய்…
22(2)
மறுநாள்… பெரியவர்கள் தவிர்த்து.. சிறியவர்கள் நால்வரும் விருந்துக்கு சென்றனர்… விருந்து என்று இல்லாமல்… இயல்பாய் மாட்டுப்பொங்கல்லுக்கு சென்றனர்…
அவர்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருப்பதால்… விழாவாக இருந்தது… அங்கு… மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி… வண்டிகளுக்கு வர்ணம் பூசி.. பொங்கல் வைத்து என விழா களைகட்டியது…
மதியம் விருந்து நன்றாகவே இருந்தது, அத்தைகள் எல்லாம்… சமையல்.. பொங்கல் என பிசியாக இருக்க… அவர்களின் மகன், மருமகள் எல்லாம் நன்றாக பேசினர்.. வர்ஷினியிடம்.
ஆண்கள் அனைவரும்… மாடு, வண்டி.. தோட்டம் என  நிற்க… உள்ளுக்குள்.. மருமகள்கள் எல்லாம்.. வேலையோடு.. சேர்த்து.. வாயும் சரிக்கு சரியாக வேலை செய்ய… பொழுது நன்றாக சென்றது… வர்ஷினியிடம் எல்லோரும் நன்றாகவே பேசினர்.
மாலை எல்லோரும் டீ-சிற்றுண்டி என அருந்த… சுப்பு, தன் மாமாவிடம் தனியே அழைத்து… பொதுவாக பேசினான்… என்ன ஏது என யாருக்கும் தெரியவில்லை… ஆனால் நீண்ட நேரம் சென்றது பேச்சு… கடைசியாக “அத்தைகளிடம் சொல்லிடுங்க மாமா” என்றுவிட்டான்…
அவர்களும் “நீ கவல படாத மாப்ள.. நாங்க பார்த்துக்கிறோம்… எங்க கையெழுத்து போடணும்னு சொல்லு… நாங்க வரோம்… இனி உன் பொறுப்புதான் எல்லாம்” என்றார்கள்…
அனைவரும் எல்லோரிடமும் விடைபெற்று… வீடு வந்தனர்… காரில் வர.. வர… சர்ருதான் வண்டி ஓட்டினான்.. எனவே “என்ன ண்ணா, எல்லாம் சொல்லிட்டியா… கவனிப்பு பயங்கரமா இருந்தது..” என்றான் சிரித்தபடியே…
இன்னும் கிரிக்கு விஷயம் தெரியாததால்… மர்மமாக கேட்டான்.. சுப்புவும் தன் தோளில் சாய்ந்து உறங்கிய பர்வதத்தின் தூக்கம் கெடாமல் “ம்… நீ வா… அப்பாகிட்ட இன்னிக்கு, பேசிடலாம்” என்றான்…
ஆக ஒவ்வரு வேலையாக பொறுமையாகத்தான் செய்தனர்… வெற்றிகரமாக செய்தனர்… அண்ணன் தம்பி இருவரும். எதையும் மறைத்தோ.. ஒளித்தோ செய்வில்லை…
அங்கு பெரியவீட்டில்.. ஆத்மநாதன் மட்டும் இருந்தார்… இங்குதான் எல்லோரும் இருந்தனர்.. அதுவும் இன்று பிள்ளைகளும் இல்லை… மூணு பெண்களும் மாய்ந்து மாய்ந்து பேசியே சலித்தன்ர்… வேலையில்லாமல்.. 
எல்லோரும் வந்து இரவு உணவு முடித்து… வர்ஷினி பெண்களுடன் அமர்ந்து கதை பேச… ஆண்கள் அப்படியே பேசிக் கொண்டிருந்தனர்… அப்படியே அண்ணன் தம்பி இருவரும்… நகர்ந்து தன் தந்தையை நோக்கி சென்றனர்… யார் கவனத்தையும் கவராது…
சரவணன் எதுவுமே பேசவில்லை… அண்ணின் அறிவுரையிலோ… இல்லை அவரிடம் பிடித்தமின்மையோ ஏதோ ஒன்று… அவன் அமர்ந்து கொண்டான்…
சுப்பு, எல்லாம் சொன்னான்.. ஆனால் முகம் மாறியது ஆத்மநாதனுக்கு… உடனே சத்தம் போட்டார் “என்ன டா.. யாரோட சொத்த, யாருக்கு கொடுக்கிறது” என  
“என்ன எல்லாம் சேர்ந்து… என்னை தெருவில் நிறுத்த பார்க்கிறீங்களா… உன் பேரில் அந்த சொத்த வாங்கிட்டேன்… அதான் நான் செய்த தப்பு… அதுக்கு எவ்வளோ செலவு செய்திருப்பேன்…
என்ன மஞ்சள் காடு விளைச்சல் பத்தி ஏதாவது கேட்டுயிருப்பேனா… என்ன நான் ஏதும் கண்டுக்கமாட்டேன்னு நினைக்கிரியா…” என்றவர்.. 
அமைதியாக இருந்த சரவணன் மேல் பாய்ந்தார் “என்ன டா உங்க அண்ணனுக்கு எல்லாம் சொல்லி கொடுக்குறியா… உனக்கு ஒண்ணுமில்லாம செய்திடுவான் பாரு” என்றார்.
சும்மா இருப்பானா சரவணன் “ஆமாம்…. அப்படிதான் எனக்கு, அடுத்தவங்க சொத்து வரணும்ன்னு இருந்தா… அது தேவையே இல்லை… 
எனக்கு… என் அண்ணனா.. பார்த்து என்ன கொடுக்கிறானோ அது போதும் எனக்கு… யாருமில்லாதவங்கள ஏமாத்தி வர சொத்து எனக்கு வேண்டாம்…
அண்ணா… நீ வாண்ணா.. இவர்கிட்ட எல்லாம் பேசமுடியாது” என்றவன் தன் அண்ணனை கூட எதிர்பார்க்காது… கிளம்பி சென்றுவிட்டான்… சர்ருக்கு பொறுமை கம்மி.
ஆனால் சுப்பு இன்னும் பேசினான்… நான் சம்பாதிப்பேன், இன்னும் பல சொத்து நமக்கிருக்கு… நாளை கிரியின் சொந்தம் கேட்காதா…  என எல்லாம் சொல்லியாகிற்று… இம்மியளவு மாறவில்லை அவர்…
நின்ற இடத்திலேயே நின்றார்… கூடாது, விடமாட்டேன் என்றார்… கோவம்.. சொல்ல முடியாத தோல்வியாக உணர்ந்தார் ஆத்மநாதன்… சுப்புவும், ஒன்றும் செய்ய இயலாதவனாக அங்கிருந்து வெளியேறினான்.
சர்ருவும் அதே பிடிவாதத்துடன் நின்றான்… எனக்கு அடுத்தவரின் சொத்து வேண்டாம்மென.. இப்படியே அடுத்த இரண்டுநாளும் செல்ல… கிரி ஊருக்கு கிளம்ப, சகோதரர்கள் இருவரும் தடுத்தனர்… 
பானுமதியும் ஏதும் சொல்லவில்லை.. விஜி அத்தையும் இப்போது… தன் அண்ணிடம் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்… ஆக குடும்பமே.. சுப்பு பக்கம் அமைதியாக நிற்க…
ஆத்மநாதன் ஆர்பாட்டமாக இந்த இரண்டு நாளும் வீட்டுக்கே வராமல் உண்ணாமல்… கடலை தோட்டத்திலேயே இருந்து கொண்டார்… 
சுப்பு உணவு கொடுத்து வந்தான்.. சிறு பிள்ளை பிடிவாதமாக முதலில் உண்ண மறுத்தார்… பின் பேச மறுத்தார்… எல்லாம் பிள்ளைகளின் முயற்சிக்கு முன், வீண் ஆனது…
இன்று ரெஜ்ஸ்ட்ரேஷன்… ஒன்றையும் மாற்ற முடியவில்லை ஆத்மநாதனால்… எல்லாம் இளையவர்கள் விருப்படி நடந்தது.. கிரி தன் அக்காவின் பேச்சை தட்டவில்லை… 
மதியம் இப்போதுதான்… பசங்க மூவரும் வந்தனர்.. வெளியவே.. அமர்ந்து கொண்டனர்… வர்ஷினியும் விடுப்பு எடுத்திருந்தாள்… மெல்ல பேச்சு, சிரிப்பும், கலகலப்புமாக சென்றது…
பானுமதி “வாங்க டா சாப்பிட… அங்க அப்பா வேற என்ன செய்யறாருன்னு தெரியலை… நான் அங்க போகணும்” என்றார்.. சற்று முகமே வாடியிருந்தது.. 
வர்ஷினி “நீங்க சாப்பிட்டு கிளம்புங்களே அத்த… நீங்க போய் மாமாவ பாருங்க, நான் இங்க பார்த்துக்கிறேன்..” என்றாள்..
அதை தொடர்ந்து… பானுமதி உண்ணவெல்லாம் இல்லை… உடனே கிளம்பினார்.. சுப்பு, தானும் செல்லுவதாக கூறி அன்னையை அழைத்து சென்றான்.
நாதன் ஏதோ போல் வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தார்.. உணவு எடுத்து வநதிருந்த பானு, தன் கணவனை பார்த்து “வாங்க சாப்பிடலாம்” என்றார் 
நாதன்… “இனி இப்படிதான், அடுத்தவங்க கையை எதிர்பார்த்துதான் நான் இருக்கணும் போல” என்றார்… சம்மந்தமேயில்லாமல். சுப்பு இந்த வார்த்தையை அமைதியாக கடக்கத்தான் நினைத்தான்…
அவரின் உடல் மொழியும், அந்த வார்த்தையும்… ஏற்கவே தன் மனைவி குறித்து அவர் சொல்லிய வார்த்தையும் இந்த ஷனத்தில் நினைவு வந்தது… அவனுக்கு…
சின்ன இடம்… நேற்றைய பேச்சுகளை விட… மிக சாதாரண வார்த்தைதான்… இது. ஆனால், எங்கோ சுட்டது அவனை… என்னை பிடிக்குமென்றால் என்னை நம்பி வந்தவளையும் பிடிக்க வேண்டும்… அதை நான் இவர்களுக்கு புரியவைக்கவில்லையோ… சட்டென பொறிதட்டியது… அவனுக்கு. அமைதியை சோதிப்பது எவ்வளோ பெரிய பேராபத்து…..
சுப்பு ரௌத்திரனான்… “வயதான உங்களுக்கே அப்படி இருக்குன்னா…. அந்த வயதில், அந்த பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்…” என அழுத்தமாக கேட்டான்… குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கினான்… கோவத்தின் வேகம் குறைக்க…
மீண்டும் தன்னை அமைதிபடுத்திக் கொண்ட குரலில்… “இங்க பாருங்க…. உங்க சொத்தை யாரும் பிடுங்கல… 
அவரவர்க்கு உண்டானதை… அதுவும்… அவர்களது ஆறு ஏக்கர்… நாம் கொடுத்தது அதில் பாதிதான்…
நல்லா கேட்டுக்கோங்க…. 
மிச்சம்… நீங்க.. இத்தனை வருடம், அவர்களை காப்பார்றியதுக்கு  கூலி…. “ என்றான் அழுத்தமாக….
“நீங்க எப்படியோ…. என் மனைவி இல்லாமல்… நான் இல்லை… நிர்கதியாய் நின்ற போது… அவள்தான் எனக்கு கை கொடுத்தாள்… எனக்கு அவள் முக்கியம்…
உங்களுக்கு நான் வேண்டுமென்றால், அவளை மதிக்க கத்துக்கொள்ளுங்கள்” என்றவன்… பெரியவீட்டின் வாசற்படி மிதிக்காது… தன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.
பானுமதி என்ன அழைத்தும் திரும்பவில்லை அவன்… ஆத்மநாதனுக்கு என்னவோ போலானது… இப்படி முகத்துக்கு நேரே அவன் பேசுவான் என நினைக்கவில்லை… சற்று உடைந்துதான் போனார்…
இப்படி நடக்க கூடாது எனதான் பொறுமையாக இருந்தான் சுப்பு… ஆனால்… எல்லாவற்றுக்கும் எல்லை என்பது… உண்டுதானே…
ஆக இந்த குடும்பஸ்தனுக்கு அடங்கவும் தெரியும்… அடக்கவும் தெரியும்…

Advertisement