Advertisement

உன் வருகை என் வரமாய்…

22(1)

இருவரும் பொறுமையாக வந்து வர்ஷினியின் அருகே அமர்ந்தனர்… ஏதும் சொல்லவில்லை அவளும்… பானுமதி வந்தார்.. “சுப்பு, நாளைக்கு எல்லோரும் அத்த, வீட்டுக்கு போய்ட்டு வந்திடுங்க… 

அத்த, இப்போதான் போன் பண்ணாங்க… உனக்கு பண்ணாங்களாம்.. நீ எடுக்கலையாம்.. அதான் எனக்கு கூப்பிட்டாங்க… நீ பேசு… இப்போ சரவணனும் இருக்கான்ல்ல… ஓட்டுக்க எல்லோருமா போயிட்டு வாங்க… மாமா பேசினாரு… உனக்கு கூப்பிடுவாங்க” என்றார் ஒரே மூச்சாக… சொல்லியவர் சென்றுவிட்டார்…

சுப்பு இயல்பாய் மனைவி முகம் பார்த்தான்… வர்ஷினியும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தததால்… எப்படி இருந்தாலும்… அந்த கட்டத்தையும் தாண்டித்தானே ஆக வேண்டும் என எண்ணி… சரி என்பதாக தலையசைத்தாள்.. அதுவே போதுமாக இருந்தது சுப்புக்கு “என்ன ஏதாவது குடிச்சியா… டீ வேண்டாம்னா… ஜூஸ் தரவா” என்றான்.

“அத்த கொடுத்துட்டாங்க” என்றாள்.. சரவணன் பார்த்தான்… எழுந்து சென்றான் நாம் எதற்கு நடுவில் என… வர்ஷினி “சர்ரு… எங்க போற…” என்றாள்..

“நீங்க கண்ணாலையே பேசுறீங்க… நான் வேற எதுக்கு கரடி மாதிரி அதான்.. அப்படிய நழுவலாம்ன்னு” என்றான் நல்லவனாக…

“ஆமாம் , அப்படியே நான் கனண் பேசிட்டாலும்…” என்றவள்… “ஏன் மாமாவ கோவபடுத்தர.. அவர் எப்போதும் போலதானே இருக்கார்… நீ விடு சர்ரு… இனி எதுவும் எனக்காக கேட்காத… அதான் உடமபட்டவர் இருக்காருல்ல.. பார்த்துப்பார்…

நீ பேசி.. மாமா உன்மேல கோவபட்டு.. எதுக்கு… நீ அமைதியா இரு” என பேசிக் கொண்டே இருந்தாள் வர்ஷினி…

சுப்பு இருவரையும் சிரித்தபடியே பார்க்க… சர்ரு.. அப்படியே வாய்திறந்து கிண்டலாக பர்வதத்தை பார்த்திருந்தான்… 

இவளும் சத்தமே இல்லாமல் போக, அவனை நிமிர்ந்து பார்க்க… சர்ருவின் இந்த தோற்றம் எப்போதும் போல.. அவனின் கிண்டல் உடல்மொழியை காட்ட.. நண்பனை முறைத்தபடி “எ…. என்ன” என்றாள்.

“ஒண்ணுமில்ல… பேசி முடி” என்றார் லேசாக சிரித்தபடியே…

“ம்… சொல்லு” என்றாள்… தன் கணவனை ஒரு தரம் பார்த்து…

“இல்ல… எங்களோட அந்த பழைய வர்ஷினி வளர்ந்துட்டா… இப்போ சுப்புவோட பொண்டாட்டிதான் இருக்காளா… அதான் பார்த்தேன்” என்றான் சிரிப்பு மாறாத குரலில்.

“ம்… என்ன செய்ய… எங்களுக்காக நீங்க செய்ய போற வேலையில.. இன்னும் மாமா உன்மேல கோவபாடுவார் சர்ரு… எனக்காகவும் நீ திட்டு வாங்க கூடாதில்ல… எனக்கு இப்போ பயமாதானே இருக்கும்…

என்னால நீங்க செய்யறத வேண்டாம்னு சொல்ல முடியலை… நாளைக்கு கிரி வாழ்க்கைக்கு அது தேவை.. 

அதே சமயம்… இப்போ இதனால வீட்டில் திரும்பவும் பிரச்சினை வரும்மோன்னு பயம்… என்ன செய்யறது… என்ன பண்றது எதுவும் தெரியலை…” என்றாள் கைகளை பார்த்தப்படியே… கண்ணில் நீர் திரண்டு நிற்கிறது.. விழவா… கொட்டவா… என.

ப்பா… பெண்கள்… இருவீட்டையும் காக்கும் அழகு… சொல்லிமாளாது போல… சர்ரு… “ஹேய்… இவ்வளோ திங்க் பண்ணாத.,.. நாணும் அண்ணனும் இத முழு மனசோடு செய்யறோம்….” என்றான்.

வர்ஷினி “எனக்கு தெரியாதா…” என்றாள் 

சர்ரு “ச்சு.. அப்படி இல்ல… அப்போ அவருக்கு, அதான் எங்க அப்பாக்கு, என்ன யோசனையோ… அதனால.. அப்படி செய்து இருக்கலாம்….

இப்போ ‘நீ’ வேற… இந்த குடும்பத்தோட… வேர்… அதான்.. அவரின் முழு நம்பிக்கை கொண்ட பெரிய மகனோட மனைவி…

அத்தோட உனக்காக இங்கயே வந்து குடியிருக்கற மகனை பற்றி அவருக்கு, தெரியாதா…. 

அதனால… பயப்படாத… நான் அப்படி செய்தா கூட… எனக்கு சொத்தில்லைன்னு சொல்லி.. வெளிய துரத்தி விடுவார்… பேசாம இருப்பார்… ஆனால், இந்த உத்தமபுத்திரண்ட அப்படி நடக்காது…

நீ நிம்மதியா இரு…” என்றான் நண்பனாய்… இரண்டு நிமிடம் மௌனம்… மீண்டும் சர்ருவே “ஆனா, இதுக்கெல்லாம் நீ எனக்கு ஒரு நல்லது செய்யணும்” என்றான்

பர்வதம் இந்த பேச்சை எடுத்ததே.. கணவனின் நிலை தெரியும், ஆனால் சர்ரு.. என்ன நினைக்கிறான் என தெரியவில்லை… மேலும் அதை தன் நண்பனிடம் தானே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தாள்… அதனால்தான்…

கடைசியாக சர்ரு இப்படி கேட்கவும்… “எ.. என்ன” என்றாள்…

அவனும் அலட்டவில்லை… “எனக்கு.. அழகா அமைதியா.. நான் எது சொன்னாலும் தலையாட்டற மாதிரி ஒரு பொண்ணு, பாத்து கட்டி வைக்கணும்” என்றான் சிரிக்காமல்…

அவனின் தோழியும் அலட்டல் இல்லாம், தன் கணவனின் முகம் பார்த்து மிகவும் கவனமான குரலில் “அப்போ.. இந்த துணிக்கடை ஷோகேஸில் நிற்குமில்ல அந்த பெண்ணா பார்த்திடுவோம்ங்க… நல்லா நினைவு.. வை…” என்றாள் சிரியாமல்… என ஏதோ சொல்லிக் கொண்டிருக்க.. 

“ஹேய்… என்ன குடும்பமே ஒன்னு சேர்ந்து என்னை வைச்சு செய்யறீங்களா… அம்மா என்னமோ… சமைக்க வராதுங்கறாங்க… நீ என்னமோ பொம்மை பொண்ணா பார்க்கிறேன்கிற… உன் புருஷனும் தலைய ஆட்டுறான்… இன்னும் உன் மாமனார் என்ன சொல்லுவாரோ… 

சர்ரு.. உனக்கிங்க யாரும் கிடையாது… “ என சொல்லியபடியே எழுந்து சென்றான் உள்ளே…

வர்ஷினி “சர்ரு… சரி கோவபடாத… நல்ல பெண்ணா பார்க்கிறேன்… அண்ணி சொல்லுடா” என்றாள்..

“நீ முதல்ல சொன்னத செய்ய.. அப்புறம்… பார்க்கலாம்” என்றான்… சத்தமாக.

வர்ஷினி ஆசையாக தன் அருகில் அமர்ந்திருந்த கணவனை பார்த்து “என்ன பேசவே மாட்டேங்கிறீங்க” என்றாள்.. அவனின் மீசையை வருடிய படியே…

அமைதியாகவே இருந்தான்… அவளை ஆழ்ந்து பார்த்தபடி… மீண்டும் வர்ஷினி “என்ன…” என்றாள்.

“இல்ல, ரொம்ப பெரிய சந்தேகம் தீந்தது போல” என்றான் அவளை ஆராய்ச்சியாய்…

வெடுக்கென நிமிர்ந்தாள்… “அஹ்ய்யோ கண்டுபிடிச்சிட்டீங்களா…” என்றாள் கணவன் முகம் பார்த்து… அமைதியாகவே இருந்தான் பதிலே சொல்லவில்லை… “நா… நான் எதுவும் தப்பா பேசலையே” என்றாள்.

ரெண்டு நிமிடம் இடைவேளை விட்டு… “நீ தப்பா பேசியிருந்தாலும் தப்பில்லை… இது உன் வீடு… எதுவேண்ணா பேசு… நான் சமாளிச்சிக்கிறேன்…” என்றான் ஆசையாக.. அவளின் கையை விளக்கியபடியே…

“நான் ஒன்னும் அப்படியெல்லாம் பேசமாட்டேன்… “ என்றாள் மீண்டும் அவனின் மீசையை விரல்களால் வருடியபடியே…

“அதனே நீ அப்படி பேசமாட்டேன்னு எனக்கு தெரியும்…” என்றான் பெருமிதமாய்…

வர்ஷினி “ம்கூம்… அதானே சிவாஜிக்கு எ…ல்லாம்… தெரியுமே…” என்றாள் தன் கணவனை ஆசையாக பெருமை பீற்றியபடியே..

“ஹேய்… கைய எடு டா… எல்லோரும் இங்கதான் இருக்காங்க…” என்றான் உள்ளே எட்டி பார்த்தபடி…

“ச்சு… யாரும் வரமாட்டாங்க….” என்றாள் இன்னும் அவனின் மீசையை ரசித்தபடி…

இவனும் செல்லமாக “ராட்சஷி…. எடுடுடி…. “ என சொல்லி மீண்டும் அவள் கையை தட்டிவிட…

மீண்டும் அவளின் விரல்கள்… அவனிடம் செல்ல… பொறுக்க முடியாத கண்ணாளன்.. அவளின், வெளிறிய கன்னத்தை கடித்தபடியே எழுந்து கொண்டான்… “வா…” என ஏதோ திருடன் போல இருபக்கமும் பார்த்து அவளின் கை பிடித்து எழுப்பி, வீட்டினுள் கூட்டி சென்றான். 

மழை நின்ற பின்னாலும் 

இலை சிந்தும் துளி அழகு….


அலை மீண்டு போனாலும் 

கரை கொண்ட நுரை அழகு…

பெண்ணோடு காதல் வந்தால்.. 

பிறை கூட பேரழகு…

என்னோடு நீ இருந்தால் 

இருள் கூட ஓர் அழகு….”

#%#%#%#%#%#%#%#%%#%#%

 

Advertisement