Advertisement

உன் வருகை என் வரமாய்…
21
பானுமதி பெரியவீட்டில் எப்போதும் போல தன் வேலையை செய்தார். விஜி அத்தைக்கு, இன்று பானுமதி வரவும்… ஏதோ நிம்மதி… முழங்கால் வலிக்கு.. ஏதோ அவர்தான் விடுதலை தருபவர்… போல் எண்ணினார்… முன்போல் அதிகாரமாக பேசாமல் “ஏன் அண்ணி, அங்கேயே இருந்திட்டீங்க” என்றார் உரிமையாய்..
“என்ன செய்ய… அவன் தனியா வேலையை பார்க்க்கனும்,     
அறுவடை… பாரு, மசாமா இருக்கா… அவளையும் வேலை வாங்க முடியாது, செண்பா பூந்தோட்டம் போகணும்… அப்புறம் யாரு பார்ப்பா.. 
எல்லாம் நாமதானே பார்க்கணும்… உங்க அண்ணன் கடலை காட்டை விட்டு வரவேமாட்டேன்கிறாரு… 
பாவம் சுப்பு… ஒரு டீ போட கூட ஆள் வேண்டாமா… நீங்க இங்க அண்ணன பார்த்துக்குவீங்க அதான்” என மொத்தமாக சொல்லி முடித்தார் பானுமதி…
ப்பா.. எவ்வளோ வேலை, இங்க எனக்கு இரண்டுபேருக்கு சமைக்கவே… இப்படி கால் வலிக்குது… என எண்ணாமல் இருக்கமுடியவில்லை… விஜி அத்தையால்… 
பானுமதி “ஏன் அண்ணி, என்ன செய்தீங்க… டிபன்” என்றார்.. இரவு உணவுக்கு என கேட்க.. திரு திருவென விழித்தார் விஜி அத்தை…
“இல்ல, மாவு இருக்கு அதான்.. ஏதாவது சட்னி அறைச்சிக்கலாம்ன்னு” என சொல்ல தொடங்கினார்… அவ்வளவுதான் அதன்பிறகு எப்போதும் போல பானு தனது வேளைகளில் மெய் மறந்தார்…
ஆத்மநாதன் உணவு உண்ண வரவும், சூடாக சாம்பார் சட்னி என இரண்டுமாக தோசையுடம் பறிமாரினார் மனைவி… 
அவரும் விஜியின் தோசையில் இரண்டு சாப்பிடுபவர்.. இன்று ஐந்து தோசை உண்டு நகர்ந்தார்.. ஏதும் கேட்கவில்லை, ஏன்.. ‘வந்திட்டியா’ என்ற பார்வை கூட பார்க்கவில்லை…
ஆனால் சத்தமாக “பானு, நாளைக்கு காலையில… சீக்கிரம் எழுப்பிவிடு… இயற்கை உரத்துக்கு சொல்லி வைச்சிருக்கு… போய் எடுக்கணும்” என்றார் அதே விட்டேற்றியான குரல்தான்… எந்த சந்தோஷத்தையும் காட்டாத குரல்தான்… 
ஆனால் இன்று உயிர்ப்புடன் வந்த்து… இது ஒரு பாண்டிங்… என் மனைவிக்கு மட்டுமே என் செய்கை புரியும் எனும் விதமான.. வார்த்தைகள் அவை.. அவள் இருந்தாள்.. என் வீட்டே ஆனாலும், எத்தனை வயது ஆனாலும் நான் அரசன் என உணரும் தருணம் அது… அந்த ஷனங்களை கடந்து தம்பதிகள் எப்போதும்போல.. தத்தமது… வேலையை பார்க்க சென்றனர்…
இப்போது சம்மந்தமே இல்லாமல் விஜிக்கு அந்த இடத்திலேயே தேங்கி நின்றார்…. கொஞ்சமாக புரிந்தது.. இப்போது, தன் நிலை புரிந்தது.. அண்ணன் இத்தனைநாள் தன்னிடம் உணவை தவிர வேறு பேசவில்லை என தெரிந்தது…
ஏதோ, வேலை அதான், அண்ணன் பேசவில்லை என எண்ணியிருந்தவர்க்கு… இந்த பூடகமான பேச்சு வார்த்தை… இத்தனை வருடம் சொல்லாத ஒன்றை சொன்னது…
“என்னதான் அண்ணன் எங்கள் பேச்சை கேட்டாலும்… அண்ணிக்கான இடம் எப்போதும் உண்டு போல, என தோன்றியது…
வர்ஷினியை நம்முடன் தங்க வைக்க, நாங்கள் மறுத்த போது… எப்படி அதை செய்தார் என்பது இன்றுவரை… சகோதரிகளுக்கே புரியாத ஒன்று… 
மேலும்… சுப்புவை தங்கள் அருகில் அழைத்துக் கொண்டது… இப்போதும் அவனின் ஜாகையை… அங்கே இருப்பதை மறைமுகமாக ஆதரிப்பது என எல்லாம்… இப்போது விஜியை யோசிக்க வைத்தது…
ஆக… கணவன் மனைவி ஒற்றுமை என்பது… ஒருவர் வளைய, ஒருவர் நிமிர்வதுதான்… கண்ணுக்கு தெரியாத இடங்களில் பானுமதி நிமிர்ந்து கொண்டார்…
பல தெரிந்த இடங்களில்… இன்னமும் வர்ஷினியை ஒதுக்குவது.. சொத்தை விற்றது போன்ற இடங்களில் நாதன் நிமிர்ந்து கொண்டார்… ஆக… வாழ்க்கை இப்படிதானே… யார் எப்போது நிமிறவர்.. வளைவர் என தெரிவதில்லை…
#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#
அழகான பொங்கல் நாள்… வாசலில், வரிந்து கட்டிக் கொண்டு, பானை வரைந்து கொண்டிருந்தாள் வர்ஷினி.. யார் சொல்லியும் கேட்கவில்லை, நல்ல ஆரஞ்சி வண்ண நைட்டியில்… வெளுத்து போய்… அந்த பனியில் இன்னும் வெளிறி தெரிந்தால் வர்ஷினி…
பானுமதியும் செண்பாவும் “வேண்டாம் தங்கம்.. வயிறு அழுந்துது பாரு… போதும் எந்திரி” என முதலில் பொறுமையாக சொல்லி.. பின்பு கத்த தொடங்கினர்.
ஒருவழியாக கலர் செய்து… நிமிரவும், சர்ரு வரவும் சரியாக இருந்த்தது… வண்டி நின்றவுடன் ஆர்பாட்டமாக இறங்கியவன்.. “பாரு…. எங்க பாரு…. இப்போ பாரு…. இன்னும், கொஞ்ச நாளில்.. பாப்பாவோட, பாரு…” என அவளை கைபிடித்து சுற்றினான்… 
பானு “டேய்.. அவளே இப்போதான் குனிஞ்சி கோலம் போட்டு எந்திரிச்சியிருக்கா… தல சுத்தும் டா” என கத்த தொடங்கினார்…
வர்ஷினி அவர் சொல்லவும் “ஆமாம் சர்ரு… தல சுத்துது” என்றாள். அதெல்லாம் காதில் வாங்கவில்லை அவன், இன்னும் இரண்டு சுற்று சுற்றிவிட்டுதான் கையை விட்டான் சர்ரு… 
அவளும் அங்கிருந்த திட்டில் அமர… இப்போது கிரி பிடித்து கொண்டான் “மாம்ஸ், நான் மாமா…. நீ சித்தப்பா” என இருவரும் சேர்ந்து சுற்றினார்…
சர்ரு “டேய்.. அப்பன் கையையும் பிடி டா… முறைக்கிறான்” என்றான், கிரிக்கு மட்டும் கேட்கும் குரலில்… கிரியும் “மாமா..” என சொல்லி, சுப்புவையும் தங்களுடன் சேர்த்து சுற்றினர்..
பானுமதிக்கு சிரிப்புதான் வந்தது… “வாங்க… காபி தரேன்” என சொல்லி உள்ளே சென்றார்.
வர்ஷினி குளிக்க சென்றாள்… 
இங்கு மற்ற மூவரும் காபியை குடித்தனர்… சுப்பு எப்போதும் போல, சத்தமில்லாமல் குடித்தான்… சர்ரு “ஏன் ம்மா, மருமக வந்த உடனே.. நீ காபி போட மறந்து போயிட்டியா” என்றான்.
“வாயாடாத தம்பி.. அப்புறம் உனக்கு வரவளுக்கு சமைக்கவே தெரியாம போயிடும்…” என்றார் சிரித்தபடியே…
“என்ன சாபம் விடுறியா” என்றான் கோவமாக…
“ஆமாம் என் பையனுக்கு நான் சாபம் விடுறேன்.. போடா போய் குளிச்சிட்டு வா… முதல் முதல்ல… பாரு, பொங்கல் வைக்கிறா.. சீக்கிரம் வாங்க எல்லோரும்..” என பொதுவாக பேசி அவனின் வாய்க்கு இப்போதிக்கு பூட்டு போட்டார்.
“இப்போவேவா” என்றான் இன்னும் அடங்காத குரலில்.
சுப்பு “போடா… பேச்ச குறைச்சிட்டு… போய் குளி..” என சத்தம் போட…
“எங்களுக்கு தெரியும், இவரு.. திபாவளியப்ப… எப்படி உட்கார்ந்த்திருந்தார்ன்னு எங்களுக்குத்தானே தெரியும்… இப்போது பாரு.. பேச்ச… எங்களுக்கும் கல்யாணம் செய்து வைங்க… அப்போ பாருங்க.. எங்க பெர்பாமென்ஸ்ச” என சத்தமாக முனகியபடியே சென்றான் கிரியின், அறைக்கு…
சுப்புக்கு, லேசாக அந்த திபாவளி நாள் நிழலாடியது… அதெல்லாம் ஏதோ முன் ஜென்மம் போலானது… யாருக்கும் தெரியாமல் லேசாக சிரித்துக் கொண்டான்.
வர்ஷினி, இப்போது அழகான பட்டு புடவையில், தன் ஈர தலையை, துண்டால் உதறியபடியே வந்தாள்… நெற்றியில் சற்று பெரிய சைஸ் பொட்டு… வகிட்டில் குங்குமம்… அவள் கேட்ட டியூப் லைட் நெக்லெஸ்… அணிந்து.. ஏதோ பழைய ஓவியமாக வந்தாள் தங்களறையிலிருந்து.
சுப்பு, யாருக்கும் தெரியாமல்… ரசிக்க தொடங்கினான்.. ஆனால், “பொட்டு, நகை  எல்லாம் ஒகே…. அந்த புடவை இதுவா நான் அவளுக்கு எடுத்து கொடுத்தேன்…” என பயங்கர சிந்தனை… 
அதெல்லாம் கணவனுக்கு நினைவு இல்லை பாவம்… அது அப்படிதானே… ஏதோ, அன்னிக்கு… அவள் பார்த்தாள், அருகில் வந்து நின்றான், அப்போதிக்கு எது நல்லதா, கண்ணுக்கு தெரிஞ்சிதோ.. அதுக்கு தலைய.. தலைய ஆட்டினான்… காசு கொடுத்தான்… அவ்வளவுதான்… 
இப்போது அந்த புடவையை அவள் கட்டி இருக்கவும் “இந்த புடவையா அது ” என ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
சும்மா இல்லாமல்… இப்போது சுப்புவும் சந்தேகமாக பார்க்க… அவன் பார்வை மாற்றம் ஏனோ என தெரியாமல் வர்ஷினி என்ன என கண்ணால் வினவ… அவன் தலையை இந்தப்பக்கமும் அந்த பக்கமும் பலமுறை உருட்டிய பிறகே… அந்த பக்கம் சென்றாள்…
அழகாக வாசலில்.. செங்கல் அடுப்புமூட்டி… வெண்கல பானையில்… பசும்பாலும்.. நீரும் சேர்த்து உலை வைத்தாள்.. வர்ஷினி…
எல்லோரும் குளித்து வருவதற்கும்… புத்தரிசி போட்டு, பொங்கல் பொங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது,… கிரியும் சர்ருவும்… கையில் தட்டும் கரண்டியுமாக… “டங்.. டங்… டங் .. டங்..” என அடித்தபடி… “பொங்கலோ பொங்கல்…” என பாடிக் கொண்டிருந்தனர்…
இளம் வெயில்… வர்ஷினியை வேர்க்க வைக்க, அத்தோடு பொங்கலை கிளரிக் கொண்டிருக்க… 
சுப்பு.. அடுப்பை ஊதிக் கொண்டிருந்தான்.. தனது வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு.. ஒரு டீஷர்ட் அணிந்து, அமர்ந்து கொண்டு, அவளுக்கு உதவியாக. 
பானு, வெல்லத்தை கத்தியில் துருவி.. அவளிடம் கொடுக்க… அந்த பொங்கல் பானையில் வெல்லமிட்டு… அதற்கு சுவை சேர்த்தாள்… வர்ஷினி…
செண்பா சமையலில் இருந்தார்… இவர்கள் கத்துவதை கேட்டு… தான் வளர்த்த மகள்.. பொங்கல் வைக்கும் அழகை காண உள்ளிருந்து ஓடி வந்தார்… 
எந்த அலட்டலும் இல்லை… கண்ணு எரியுது… சுடுது… இப்படி எந்த குறையும் சொல்லாது… வேர்க்க விருவிருக்க… ஏதோ.. அலட்டாத தேவதை, வரம் தந்தது போல, அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்… பெண்ணவள்..
செண்பா உள்ளே திரும்பி செல்ல நினைக்க சுப்பு “அக்கா.. வாங்க… பொங்கலோ பொங்கல் சொல்லுங்க…” என்றான் சிரித்த முகமாக…
“ஆமா.. ஆமா… நான்தான் சின்ன பிள்ளை ஏன் தம்பி… நீங்க, வரேன்.. அடுப்பில் எண்ணை வைச்சி வந்திருக்கேன்… சீக்கிரம்.. பூஜை முடிச்சு உள்ள வாங்க” என் சொல்லியபடியே உள்ளே சென்றார், இல்லை.. உள்ளே சென்றபடியே சொல்லினார்..
முன் பகல்… நேரம்.. எல்லோரும், ஏதோ ஸ்னக்ஸ் உண்டு.. பானுமதி கொடுத்த ஜூஸ்.. குடித்தபடியே இருந்தனர்.. இன்னும் உண்ணவில்லை…ஆத்மநாதனை விஜி அத்தையையும் இங்கே உண்ண அழைத்திருந்தனர்… எனவே அவர்களுக்காக காத்திருந்தனர்.
பனிரெண்டு மணிக்குதான் வந்தனர்… இருவரும். வர்ஷினி முறையாக வரவேற்றாள்.. இலை போட்டு உணவு பரிமாறினர்… எல்லோரும் உண்டு கொண்டிருக்க, பேச்சு வந்தது சர்ருவிடம்… “அப்பா.. ஏன் ப்பா.. இவ்வளோ லேட்… இன்னமும் யாரும் சாப்பிடல.. பாவம் பாருவும், சாப்பிடல…” என தன் தந்தையை கடிந்து கொண்டான்.
வர்ஷினிக்கு.. பானுமதி ஏதோ… பழம் ஜூஸ் என கொடுத்து கொண்டிருந்தார்தான்… ஆனால், அவள்… “இல்ல, மாமா வரட்டும் “ என சொல்லி அமர்ந்து கொண்டாள்..
சுப்பு, அவ்வபோது எதையோ சொல்லி.. சின்ன சின்ன ஸனக்ஸ்களை கொடுத்தான்.. 
இப்போது யாரும் கேட்காததை சர்ரு கேட்கவும்… நாதன் “ஏன் டா… எனக்கு என்ன தெரியும்… உங்க அம்மாதான் இதெல்லாம் பார்க்கணும்… இன்னும் யாரும் சின்ன பிள்ளை கிடையாது… “ என பேசிக் கொண்டிருக்க..
வர்ஷினி “சர்ரு… அமைதியா இருக்கமாட்டியா… எனக்கு பசிக்கல, நான் சாப்பிடல…” என்றாள் அவனை முறைத்தபடியே…
தன் மாமனாரை பார்த்து “நீங்க சாப்பிடுங்க மாமா” என்றாள்.. யாரையும் பார்க்காது உள்ளே சென்றுவிட்டாள்.. 
அவளுக்கு இன்றும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமே என பயம்… ‘இவன் ஏதாவது கேட்க.. அவர் ஏதாவது எடக்காக சொல்ல… அந்த சிவாஜிக்குதான் சங்கடம்… இந்த சர்ரு கொஞ்சம் அமைதியா இருந்தா பராவயில்ல.. அவர் எல்லோரையும் இழுத்து பிடிக்கிறார்… இவன் வேற சும்மா இல்லாமல்..” என தனக்குள் எண்ணிக் கொண்டாள்.. அதன்பின், அங்கு அமைதி நிரம்பியது.
விஜி அத்தை இங்கேயே இருந்தார்… நாதன் உண்டு, உடனே கிளம்பிவிட்டார்… பசங்களெல்லாம் உறங்கினர்… வர்ஷினி உண்டு… ஒருபாடு வாமிட் செய்து.. மீண்டும் அரைமணி நேரம் சென்று.. உண்டு.. என அவள்… தன்னோடே போராடிக் கொண்டிருந்தாள்…
ப்பா… இப்போதுதான் உண்டு வந்தாள்… சற்று நேரம் நடந்தாள்… அமர்ந்தாள்… திரும்பவும் எதுத்துக் கொண்டு வரவது போல் இருந்தது… பானுமதி லெமன் ஜூஸ் எடுத்து வந்து தந்தார்.. அவள் படும் அவஸ்த்தையை பார்த்து… “அத்த.. தொண்டையிலேயே நிக்குது… வேண்டாம் இப்போ” என்றாள்
“குடி தங்கம்.. ஒரு ஏப்பம் வந்தா சரியாகிடும்” என முடிந்த அளவு பேசியே.. உள்ளே அனுப்பினார்.. அந்த எலுமிச்சை சாரை. இப்போதுதான் வர்ஷினிக்கு பரவாயில்லையாக இருந்தது… ப்பா… என அவர் மடியிலேயே படுத்துக் கொண்டாள்.. கணவன் சட்டென பொதுவில் அவளிடம் உரிமை கொண்டாடமாட்டான்.. அப்போதெல்லாம் இயல்பாய் பானுமதியைதான் நாடும் வர்ஷினியின் மனம்… இன்றும் அப்படியே.
இதெல்லாம் விஜி அத்தை பார்த்துதான் இருந்தார்… என்ன உணர்ந்தார்… என்ன நினைக்கிறார் என தெரியவில்லை.. அவரும் தன்போல் “போ, உள்ள போய் தூங்கு, ரெண்டுமணி நேரம். 
அலைச்சல் அதான் ஒத்துக்கல… இனி இப்படி யாருக்கும் காத்திருக்காத.. சுப்புவா இருந்தாலும்… வரட்டும், வேலைய பொறுத்து… நீ சாப்படு முதல்ல… ப்பா… கண்ணெல்லாம் வெளிய வருது.. சப்பிடுநல்லா…” என்றார்.. அதட்லாக… “சரி சித்தி” என்றாள் வர்ஷினி… அப்படியே பானுமதி தலை கோத… வர்ஷினி அசந்து உறங்கினாள்..
நான்குமணிக்கு பசங்க ஒவ்வருவராக எழுந்து கொள்ள… பானுமதியும் எழுந்து டீ போடார்..  அப்படியே பேச்சு சென்றது.. அந்த சத்தத்திலும் விழிக்கவில்லை அவள்.. கைகால்களை குறுக்கிக் கொண்டு உறங்கியிருந்தாள்… சாதாரண காட்டன் சுடிக்கு மாறியிருந்தால்.. எனவே அப்படியே உறங்கினாள்..
பானுமதி “சுப்பு அவளை உள்ளே கொண்டு படுக்க வை…” என்றார்.
கிரி “ஏன், த்த… என்னாச்சு” என பதற…
சர்ரு “டேய்.. ஒண்ணுமில்ல உன் பாசமலருக்கு… தூக்கம், கலைய வேண்டாமேன்னு சொல்றாங்க… அப்படியே பொங்கறான்… அடங்கு.. எங்க அண்ணன் இருக்கான் உடமைபட்டவன், பார்த்துப்பான்” என்றான் முறைத்தபடியே..
கிரியும் “அப்போ நாங்க யாரு… முதல்ல, நாங்கதான் தெரியுமில்ல..” என வேண்டுமென்றே பேச… 
விஜி அத்தை “டேய்… சத்தத்த குறைங்க டா… முழிக்க போறா… பாவம் முடியல அவளால… சுப்பு நீ தூக்கி போ” என்றார்.
சுப்பு அன்றுபோல் இன்றும் அவளை அலுங்காமல் கைகளில் தாங்கி உள்ளே சென்றான்.. தங்கள் படுக்கையில் விட்டவன்… அவளுக்கு கால்வரை.. போர்த்திவிட்டு திரும்ப “சிவாஜி… எங்க போறீங்க… உட்காருங்க” என்றாள்..
சிரித்தபடியே வந்து அமர்ந்து கொண்டான் அவளின் அருகில்.. அவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.. சுப்பு “என்ன ஆச்சு… முடியலையா… இப்படி தூங்கற” என்றான்.
“என்ன செய்ய… காலையிலிருந்து அந்த நெய்.. பொங்கல்.. எல்லா வாசனையும் சேர்த்து… படுத்திடுச்சி… ப்பா… எப்படிதான் சாப்பிட்டீங்களோ” என்றாள்…
ஒன்றும் சொல்லவில்லை அவளின் தலை கோதினான்… “ஏதாவது குடிச்சிட்டு தூங்கிரியா… அம்மாவ எடுத்து வர சொல்லவா..” என்றான்.
“க்கும்… குடிச்சா எங்க தூங்கறது… அது வெளிய வர வரைக்கும்… விடாது உங்க புள்ள…” என சொல்லி கண்களை இருக மூடிக் கொண்டாள்.. கணவனும் அவளின் தலையை வருடி… தூங்க செய்தே வெளியே வந்தான்.
எல்லோரும் அங்கேயே இருக்க.. சுப்பு டீயுடன் வெளியே வந்தான்… முன்பக்கம்… ஏதோ.. எண்ணம்… விஜி அத்தை இப்படி பேசி பார்த்திராததால் ஒரு நிறைவு… நிம்மதி… ஏதோ எண்ணியபடியே வந்தான்…
சர்ருவும் வெளியே வந்தான்… அண்ணன் தம்பி இருவரும்… இத்தனை நாள் போனில் பேசிய விழயத்தை, நேராக பேசினர்.. அப்படியே, நடையாக விளைச்சல் இல்லா மஞ்சள் காட்டில் நடக்க தொடங்கினர்..
சர்ரு “சொல்லிட்டிய கிரிகிட்ட.. அப்பாகிட்ட…” என கேட்டான்.
“ம்… சொல்லனும்… அன்னிக்கிங்க சொல்லிக்கலாம்… முன்னாடியே சொல்ல முடியாது… ஏதாவது தடங்கல் வந்திடும்… பார்த்துக்கிறேன்… நீ அப்பாகிட்ட வாயமட்டும் கொடுக்காத… அளவா பேசு…
அவரே இப்போதான்… ஒருமாதிரி போரம்க்கு வந்திருக்கார்… நீவேற… பேசி பேசி கலைச்சிடாத சர்ரு…” என்றான் எச்சரிக்கையாய்…
சர்ரு “எப்படிண்ணா… அப்பா அத வித்தாரு…” என்றான்… ஆற்றாமையாக…
“அட ஏண்டா… வாரிசு செர்டிபிகேட்… வாங்கி அம்மா பேரில் எல்லாம் மாற்றி… அம்மாவ கையெழுத்து போடா வைச்சிட்டாரு…
அப்போ தாசில்தார்… ரேஜெச்ட்டார்… எல்லோருக்கும் தாரளாமா.. ஏதோ செய்திருக்கார்… இதெல்லாம் அப்போ பெரிய விழயமா… போறபோக்குல.. செய்வர் டா  அப்பா..” என்றான் லேசாக சிரித்தபடியே…
சர்ரு… “ச்சு… மனசே சரியில்ல ண்ணா… ஊரு முழுக்க நாங்கதான் பாதுக்காப்புன்னு சொல்லிட்டு.. இப்போ நாமளே… எல்லாம் செய்துட்டோமே ண்ணா…” என்றான் வருத்தமான ஆழ்ந்த குரலில்…
பின் சுதாரித்து “என்ன சொன்னா… உன் பொண்டாட்டி… எதுவுமே புரியாத மாதிரி இருந்திருப்பாலே….  அது ஒரு ஊமை குசும்புண்ணா…” என்றான் சலித்தபடியே..  
நல்ல கட்டை குரலில் சுப்பு “டேய்… எல்லாம் அவகிட்ட வைச்சிக்க.. 
என் எதிரே… மரியாதையா பேசு, அதுவும் அத்தைங்க முன்னாடி.. கவனமா இரு… எல்லாம் ஒரு மார்கமா இருக்காங்க… புரியுதா..” என்றான் ஸ்ருதி மாறாத அதே குரலில்..
தலையை எல்லா பக்கமும் உருட்டினான் சரவணன்…
இப்போதுதான் சற்று நார்மல் மோடுக்கு வந்தான்… சுப்பு, அவனே “நீ சொல்றது சரிதான்.. எல்லாம் ஏதோ அரசபுரசலா தெரியும் போல… என்கிட்டயும் அதிகம் காட்டல… ஆனா, ச்சு… விடு…
கிரி பெயரில் மாற்றுகிறேன்னு சொன்னேன் ஒன்னும் சொல்லல… மனசுல எல்லாம் இருக்கு… யார்கிட்ட காட்டமுடியும்னு அமைதியாக இருக்கா…
நேத்துதான் அவ அம்மா நகையெல்லாம்… பேங்க் லாக்கர்லருந்து எடுத்தேன்… கொஞ்சம் அழுகைதான் பர்வதம்… சங்கடமா போச்சு…
ம்…. “ என பெருமூச்சு விட்டான் பெரியவன்…
“விடுண்ணா… சரியாகிடுவா… நீ இப்போவே பாதி சரிபண்ணிட்ட… இனி என்ன, பார்த்துக்கலாம்… எப்போ ரெஜிஸ்ட்டர்.. என்ன சொல்லு… சத்தம் போடாம பண்ணிடலாம்” என்றான் தம்பி..
இப்படியே பேசியபடியே திரும்பி வந்து கொண்டிருந்தனர் அண்ணன் தம்பி இருவரும்.. அதை அமர்ந்தபடியே பார்த்திருந்தாள்… பர்வதம்… 
“கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது… 
மறைவதும்… பின் உதிப்பதும்…. மரபானது…
கடலினில்… உருவாகும் அலையானது… 
விழுவதும் பின் எழுவதும் இயல்பானது….
நிலவினை நம்பி.. இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும்… வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி… 
மறுவாசல் வைப்பான் இறைவன்…”

Advertisement