Advertisement

ஆனால், ஆத்மநாதன்… சற்று முகம் சுளித்தார்… கூடவே அவரின் சொந்தங்கள் எல்லாம் இது உனக்கு தேவையில்லாத வேலை… நாளைக்கு நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பாவ, பெண் பிள்ளை வேற, இப்போவோ அப்போவோன்னு நிக்குது… ஏதாவதுன்னா… நீதான் பார்க்க்கனும் அத்தோட.. உனக்கு பசங்க வேற இருக்காங்க… அப்புறம் எங்கையாவது வந்து நிக்கும்… என ஆளாளுக்கும் சொல்ல இன்னமும் தயங்கினார்.. அவர்.
ஆனால் பானுமதியை சமாளிக்க முடியவில்லை கணவரால்.. “எனக்கிருக்கும்… ஒரே அண்ணன்… இப்போ அவங்களும் இல்லை… நான் எப்படி அப்படியே விட முடியும்..” என பிடிவாதமாக நின்று தன் ஒன்றுவிட்ட அண்ணன் பிள்ளைகளை தங்களுடன் சேர்த்துக் கொண்டார். ஆதில் ஆத்மனாதனுக்கு நிறைய ஆதாயமே… அதனால் தயங்கினாலும் ஏற்றுக் கொண்டார்.
#$#$#$#$#$#$#$#
கோவில் வந்தது எல்லோரும் இறங்கிவிட்டனர்… பின்னாடி இருந்த வர்ஷினி மட்டும்… இன்னும் இறங்கவில்லை… சுப்பு, காரை லாக் செய்ய பார்க்க… இவள் உள்ளே… எப்போதும் போல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
சுப்புவும் அமைதியாக பின்னே சென்று… “இங்க என்ன செய்யற, இறங்கு… வா போகலாம்” என்றான் சாதாரண குரலில்…
இவள் ஒன்றும் சொல்லாமல், காதில் வாங்கிய அசைவு கூட இல்லாமல் அமர்ந்திருந்தாள்.. “பர்வதம்ம்ம்……..” என்று நிதான குரலில் இழுத்தான்.
“நீங்க போங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்றவள்.. மெசேஜ் செய்தபடியே நிமிர்ந்து இவனை பார்த்தாள்… அங்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தவன் சரவணன்… என்ன கேட்டானோ…
“ஒரு நிமிஷம் இருங்க…” என்றாள்.
“சர்ரு தான், உங்க போட்டோ கேட்க்கிறார்…” என்றாள்… லேசாக சிரித்தானோ… “சரி நான் அனுப்பறேன்” என்றான்.
“இருங்க.. என்கிட்ட கேட்டான்… நான் அனுப்பறேன்… அப்புறம் கோச்சுக்குவான்.. ப்ளீஸ்” என்றாள்.. தெளிவான குரலில்.
சட்டென கோவம் வந்தது… ஏதோ புதுசா இப்போதான் பொண்ணு பார்க்க போறமாதிரி.. இதென்ன என தோன்ற… சட்டென முகம் மாற… “மரியாதை இல்லையா… அவன் இவன்னு சொல்லிக்கிட்டு… 
மாமா, இல்ல அத்தான், இல்ல வாங்க, போங்க… ஏதாவது ஒன்னு சொல்லு…
இப்படி டா போடாத….” என்றான்… அவளின் முகத்தை பார்த்து அதட்டலாய்.. இவள் இப்போதும் அந்த போனை பார்த்துவிட்டு இவனை பார்க்க… அதில் கடுப்பானவன் “நான் அனுப்பிக்கிறேன்…” என்று கூறி நடக்க, திரும்ப…
“இங்க பாருங்க” என்றாள்.. சட்டென… கொஞ்சம் கடுப்பாகவே திரும்பவும்… ”க்க்ரக்’ என்ற சப்தம் எழவும்.. “சலித்தபடியே நடந்தான் என்னவோ செய்”  நீயெல்லாம் திருந்தாத கேஸ்… எனும் விதமாக முறைத்தான்.
கோவமான முகம்… சிறு திருநீர் கீற்று… ப்ளூ கலர் ஜீன்… அதே ப்ளூ கலர்.. வித் வைட் செக்டு ஷர்ட்.. கையில் க்ரே கலர்… பாஸ்ட் ட்ராக்.. லூசாக.. அவனின் மணிக்கட்டை தாண்டி கையை தாண்டாமல் நடுவில் ஊசலாட.. அவளின் போனின் வழி… சரவணனுக்கு பறந்தான்… நிழல்படமாக. 
அவளும், இறங்கி கொண்டு, திரும்பவும் காரின் முன் நின்று செல்பி எடுக்க தொடங்கினாள். அவனும் காரிலிருந்து இறங்கினால் போதுமென நினைத்து, காரை லாக் செய்து, உள்ளே சென்றான்.
உள்ளே எல்லோரும் சாமியை தரிசிக்க சென்றனர்.. தன் கூட்டத்தோடு சென்று இணைந்து கொண்டான்… சுவாமி தரிசனம் முடிந்து… மண்டபத்தில் காத்திருந்தனர். 
சுப்புக்கு கடினமான நேரம் அது… எத்தனை வருடமாக இப்படி பெண்களை பார்ப்பது… ரசனையான பார்வையோடு யாரையுமே அவனால் காண முடியவில்லை.. 
இந்த இடம் அமைந்துவிட வேண்டும்… இத்தோடு என் பெண் தேடும் படலம் முடிந்து விட வேண்டும் என்ற நினைவுதான் வருகிறதே தவிர… ‘பார்த்தவுடன் பரவசம்’ எல்லாம் அந்த கண்ணில் இல்லை… ஏதோ உணர்ச்சியே இல்லாமல் அவர்களின் வருகையை பார்த்திருந்தான்..
ம்… இப்போதுதான் பெண் வீட்டார் வந்தனர்.. பெரியவர்களின் விசாரிப்புக்கு பின் அவர்களும் கோவிலை வலம் வந்து… அதே மண்டபத்தில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தனர்.. 
பெண்ணின் புகைபடத்தை ஏற்கனவே பார்த்ததால்… சுப்புக்கு, யார் பெண்ணென புரிந்தது.. ஆனாலும் அவன் தன் போனை கையிலெடுத்து அமர்ந்திருந்தான்.
பெண் நன்றாகவே இருந்தாள்.. அவளும் கிட்ட தட்ட முப்பதை தொடும் முகம்.. லேசான வயதின் சாயல் தெரிந்ததுதான்… ஆனாலும், நன்றாக இருந்தாள்.
பெரியவர்கள் இப்போதே பேசிவிடலாம் பூ வைத்து விடலாம் எனத்தான் நினைத்து எல்லா ஏற்பாடுகளும் நடத்திக் கொண்டிருந்தனர்..
இப்போதுதான் பொறுமையாக உள்ளே வந்தாள்.. வர்ஷினி. கோவிலை வலம் வந்து, அங்கு நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு.. பொறுமையாக தன் அத்தையிடம் வந்து அமர்ந்தாள்.
பானு “என்ன தங்கம்… எங்க போயிட்ட… அந்த புள்ளைக்கிட்ட கொஞ்சம் பேசித்தான் பாரேன்..” என்றார். மெல்லிய குரலில்.
வர்ஷினி “எங்கத்த, எல்லாம் பெரியவங்களா… இருக்காங்க… 
நான் போனா, ஏதாவது சொல்ல போறார் உன் புருஷன்” என்றாள்… அவளும்.
“சத்தமில்லாம போயிட்டு வா… அதான் உறுதி பண்ணிட்டாங்கல்ல… போ, போயி அந்த புள்ள போன் நம்பர் வாங்கிட்டு வா… 
மெதுவா பேசுடி… படபடன்னு பேசாத… புள்ள பயந்துட போகுது…
பார்த்தா… அமைதியான புள்ளையா தெரியுது…” என முடிக்க கூட இல்லை..
“ஏன் என்னை பார்த்த எப்படி தெரியுது…
சண்டை போன்ற மாதிரியா..” என்றாள்.
அதற்குள், இவர்கள்… எதிரெதிரே அமர்ந்து… சம்பிரதாயம் செய்ய தொடங்கினர்.. ஆத்மநாதன் “பானு..” என தன்னருகே மனைவியை அழைத்தார், சுப்பு நடுவில் அமர்ந்திருந்தான் மற்றபடி பெரியவர்கள்தான் பேசினார். 
பானு, வர்ஷினியிடம் “மெதுவா பேசு டா தங்கம்…” என்றார் கொஞ்சலாக.. சொல்லியபடியே எழுந்தார்.
இவளும் எழுந்து “ம்… அது..” என அவரை மிரட்டி விட்டு சென்றாள் அந்த பெண்ணிடம்..
அடுத்த பத்து நிமிடத்தில் ஒப்புதாம்பூலம் மாற்றினர்.. சுப்புவின் இரண்டாவது அத்தை… பெண்ணிற்கு பூ வைத்தார்.. அங்கே அப்போதே கோவிலின் குருக்களை அழைத்து… திருமணநாள் குறித்தனர்.
புது பெண்ணிடம், வர்ஷினி இப்போது மெல்ல பேச்சு கொடுத்தாள்… ‘என்ன படிச்சிருக்கீங்க…’ என்றாள்… அந்த பெண்ணின் தம்பி “B.A ஹிஸ்டரி” என்றான்.
இவள் அவனை பார்த்தால், மீண்டும் “என்ன கலர் பிடிக்கும்” என்றாள். அதற்கும் அவனே.. “எல்லோ” என்றான்.. இப்போது வர்ஷினி முறைத்தாள் அவனை… 
மீண்டும் எதோ கேட்க அதற்கும் அவன்தான் பதில் சொன்னான்.. கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அந்த பெண்… ‘சர்தான்’ என எண்ணியபடி… போன் நம்பர் கேட்டாள்… அதற்கு அவன் “என் நம்பர்க்கு கூப்பிடுங்க… நான் அக்காட்ட கொடுக்கிறேன்” என்றவன். தன் நம்பரை கொடுத்து… அவளின் நம்பரை பெற்றுக் கொண்டான்..
எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பாய் பதில் சொல்லி, அக்காவை அப்படி பாதுகாப்பதாக தோன்றியது அவளுக்கு.. இந்த பெண்தான் பேசவில்லை… சாரி பேசவிடவில்லை… அவன் நம்மைமாதிரி போல… ‘ என எணணிக் கொண்டாள்.. ஆனால் உள்ளுக்குள்.. ஏதோ உறுத்தலாக இருந்தது.. ஆனாலும் வர்ஷினிக்கு இந்த இடம் அமைந்ததில் நிம்மதி… அப்படா… இனி தூது போக கூப்பிடமாட்டாங்க என நினைத்தபடியே கோவிலை வலம்வந்தாள்.
இப்போது இரு குடும்பமும் விடைபெற்று… கிளம்பியது.. காரில் வர வர “அத்த… நான் அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்கிறேன்…” என்றாள், மணி அப்போதே எட்டே முக்கால்…
பானு “ஏண்டா… இரு வீட்டில் இறங்கி எப்போதும் போல வண்டியில போ… 
அப்புறம் வரும் போது… எப்படி வருவா… நீ போ சுப்பு” என்றார்.
“இல்ல த்த… லேட் ஆகும்.. நான் ஒரு ப்ரியடுதான் பெர்மிஷன் போட்டுருக்கேன்” என சொல்ல சொல்ல… கார் அந்த பஸ் ஸ்டாப்பை கடந்தது..
இவள் யாரை கேக்க முடியும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.. ஆத்மநாதனும், அவரின் மாப்பிளையும் இவர்களின் பேச்சை கவனிக்காமல் எதோ பேசியபடியே வந்தனர்…
அடுத்த பத்து நிமிடத்தில் வண்டி.. வீட்டை வந்தடைந்தது… இவளை கேட்டிலேயே இறக்கிவிட்டு… சுப்பு அவர்கள் வீடு நோக்கி வண்டியை கிளப்பினான்.
உள்ளே சென்றவள்… அவசரமாக வண்டி சாவி எடுத்து கிளம்ப.. செண்பா “சாப்பிட்டு போடா…” என சொல்லி ஒரு தட்டை கையில் திணித்தார்.
“ம்… வேண்டாம் பாட்டி.. மணியாச்சு… நான் அப்போவே இறக்கி விடுங்கன்னு சொன்னேன்… யாரு கேட்கிறா… 
எல்லாம் அவங்க விருப்பம்… என் நேரம்… எல்லாம் அந்த ஆறுமுகம்… சுமித்ராவ சொல்லணும்…
என்னை அம்போன்னு விட்டு போயிட்டாங்கல்ல…” என குரல் கரகரக்க… சுதாரித்தவள்… 
மீண்டும் தன் புத்தியை அவர்களை நோக்கி செலுத்தினாள் “இவங்க, வான்னா… வரணும்.. போன்னா போகணும்..
நாம எதுவும் சொல்லிட கூடாது…” என தனக்குள் புலம்பியபடியே தன்னுடைய ஹன்ட்பாக் தேடினாள்.
செண்பா “என்னாச்சு…” என்றார் பாவமாக
“எல்லாம் என்னை சொல்லணும்… 
நான் போனெல்ல… இப்போ எனக்குதான் லேட்… “ என்றவள் புலம்பிக் கொண்டே வெளியே வர… சுப்பு வண்டி எடுத்து வந்திருந்தான்…
சுப்புவுக்கு… ஒரு இயல்பான எண்ணம், தன் விழாவிற்கு வந்திருக்கிறாள்… உணவு கூட தாங்கள் கொடுக்கவில்லை…  அவன், வீட்டில் உறவுகளுக்கு டிபன் நடந்து கொண்டிருந்தது… எனவே போகும் போது ஏதேனும் வாங்கி கொடுத்து அனுப்பனும்… என எண்ணியபடியே வந்தான்.. 
அவள் வெளியே வர, அமைதியாக வண்டியோடு நின்றான்… ஏதும் பேசவில்லை.. இவள் அவனை நன்கு முறைத்துவிட்டு, தன்  வண்டியெடுக்க செல்ல “வா…. நான் ட்ரோப் பண்றேன்… “ என்றான்.

Advertisement