Advertisement

ஹரே கிருஷ்ணா
உன் வருகை… என் வரமாய்…
2
அழகான… கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு  கார்டன் சாரீ… அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு… சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு… இடது கையில் டைடன் கோல்டு கலர் வாட்ச்… இன்னொரு கையில் மேச்சிங் வளையல்… என அவசர அவசரமாக கிளம்பி வெளியே நின்றாள் வர்ஷினி…
மாப்பிள்ளை சார், சுப்புதான்.. காரோட்டி வந்தான்.. அவள் கேட்டை திறக்கவும், கார் நிற்கவும் சரியாக இருந்தது… சிவப்புநிற ஸ்கார்பியோ… 
முன்பக்கம்… சுப்பு காரோட்டிக் கொண்டிருக்க, சுப்புவின் தந்தை ஆத்மநாதன்… அருகில் அமர்ந்திருந்தார்…
பின்னாடி… அவனின் அம்மா, பக்கத்தில்… அவனின் நடு அத்தை, மாமா.. அதற்கு அடுத்து, பின்னாடி.. அவனின் கடைசி அத்தை… அங்குதான் இப்போது வர்ஷினி ஏறினாள்.
சுப்புவுக்கு, பெண் பார்க்க… ம்கூம்… இன்றே பூ வைத்துவிடும் முடிவில் சென்று கொண்டிருக்கிறனர் சுற்றமும், குடும்பமும்… சுப்புவின் வயது முப்பத்தி நான்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது…
அவனின் வயது கணக்கை விட… பெண்பார்த்த கணக்கு ஒர்பங்கு அதிகமே… இன்னும் அமையவில்லை… ஏனோ… இவர்களின் சொந்தத்தில் இவன் மட்டுமே இன்னும் நிற்கிறான்… மணம் முடிக்காமல்..
ஆத்மநாதன் அவள் ஏறிய உடன்… “போலாம் ப்பா…” என்றார் கர்சனையாக தன் மகனிடம்… அவரின் முகமே சொல்கிறது…  வர்ஷினியை பார்த்த நொடி முதல் ‘நீ வருவதில் விருப்பமில்லை’ என… ஆனால் வேறு வழியில்லாமல் அந்த கோவத்தை குரலில் கூட்டினார் போல.. 
ஆத்மநாதனுக்கு… வர்ஷினி என்றாள் சற்று அலர்ஜி… தன் சகோதரிகள் சொல்லி சொல்லி அவளை ஏதோ சுமையாக நினைக்க தொடங்கிவிட்டார். இது எப்போதும் அவர் பார்வையில் தெரியும் இன்னும் அப்படியே.
வண்டி… பக்கத்தில் உள்ள சென்னிமலை கோவிலை நோக்கி சென்றது… பானுமதிக்கு பெரிய வேண்டுதல்… இந்த வரனே முடிந்துவிட வேண்டும்மென… அப்படியே பின்னிருந்த தன் மகனை அளந்து கொண்டிருந்தார்… பார்வையால்..
என்ன குறை… என் மகனுக்கு.. பார்ப்பதற்கும்.. நிறைவாய்… அமைதியாய் இருக்கிறான்.. ஒரு முக சுளிப்பு இல்லாமல் எல்லாம் பார்ப்பான்.. தன் அத்தை மகனின் திருமணத்திற்கு எல்லாம் செய்தான் முன்னின்று..
இவனை விட சிறியவர்களுக்கு எல்லாம் பார்த்த உடன் முடிந்து விடுகிறது.. என பெருமூச்சு வந்தது… தீராத குறை மகனின் திருமணம் பானுமதிக்கு.
யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை… திருமண வயதை கடந்து கொண்டிருக்கிறான்… யார் மேல் தவறு… எல்லாம் சரியாக தானே இருக்கிறது என ஆத்மநாதனுக்கும் எண்ணம்.. இப்படியே பெற்றோரின் எண்ணம் சென்றது… ஆனால், வண்டியில் துளி சத்தமில்லை…
ஆத்மநாதன் பானுமதி தம்பதிக்கு… இரண்டு மகன்கள்… முதலில்.. சிவசுப்பிரமணியன்… இரண்டாமவன் சரவணன். சரவணன் இப்போது சென்னையில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறான். அவனுக்கே இப்போது முப்பதை தொட போகிறது.
சுப்பு… நன்கு படித்தவன்… இப்போது பைன்னான்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறான்… அதை தவிர, இப்படி மஞ்சள்… கடலை… பூ என விவசாயமும் பார்க்கிறான். அதுபோக சொத்துபத்துக்கு குறைவில்லை… 
ஊரில் பெயர் சொல்லும் குடும்பம்… BTech… கெமிக்கல்.. படித்தவன், அவனின் முப்பது வயது வரை.. பறந்து பறந்து வேலை பார்த்தவன்.
அவனின் படிப்பு… கெமிக்கல் சம்மந்தமானது… தோள் பதனிடும் துறை சம்மந்தபட்டது.. முதலில் ஏனோ தனோவேனதான் படித்தான்.. போக போக பிடிக்கவும் செய்தது.. 
இவனின் படிப்பு முடியவும்… முதலில் அஹமதாபாத்தில் வேலை… ஒரு தோள் பதனிடும் தொழில்சாலையில். இவன்தான் கெமிக்கல் இன்சார். கற்றுக் கொண்டான்.. முதலில் இரண்டு வருடம்…
லாட் கணக்கில்… உள்ள, உள்ளூர் ஆடுகள் மாடுகளின் தோள்.. அதனை பதப்படுத்தும் போது… தேவையான கெமிக்கலை சேர்ப்பது இவனின் வேலை. அடுத்து அதனை கண்காணிக்க தேவையான அவகாச நேரம். அதன்பின்… அதன் தன்மை சோதிக்க வேண்டும்.. அவ்வளவுதான் இவனின் வேலை.. 
அந்த தோலின்… நிறம், வாசனையை வைத்தே தரத்தை சொல்லுவான். எத்தனை நாள் வரை… தாங்கும், இதில் என்ன வகை பொருட்கள் செய்யலாம் என்பது வரை… பிட்டு பிட்டு வைக்கும் மூளைக்காரன்… (இதற்கெல்லாம் தனியாக டீம் உண்டு) ஆனாலும் செய்யும் பொருட்களுக்கு தக்க… கெமிக்கல் சேர்க்க வேண்டுமே.. எனவே கொஞ்சம் அறிவை நீட்டியிருந்தான் அவ்வளவுதான்.
கொஞ்ச கொஞ்சமாக தனது வேலை குறித்த… தேவையை உணர தொடங்கினான்.. அப்போதே அவனிற்கு இருபத்தியாறு வயது தொடக்கம்.. பெண் பார்க்க தொடங்கியிருந்தனர்.. பானுமதியும், ஆத்மநாதனும்.
இப்போது சுப்புவை தமிழ்நாட்டுக்கு அழைத்தனர்… மகன் அருகில் இருந்தால் வசதி என எண்ணி. சுப்புவும், தமிழ்நாட்டில்.. தன் வேலைக்கான தேவை இருந்தது புரிந்தது, எனவே வாணியம்பாடி… ஆம்பூர்… ஜோலார்பேட் என அவனின் பயணம் இங்கு மையம் கொண்டு தொடர்ந்தது..
கை மேல் காசு.. அதுவும், இல்லீகலாக செய்யும்போது.. இரவு நேரத்தில் ஒரு பாக்டரிக்கு செல்வான்… அந்த டன் கணக்கை வைத்து… தேவையானதை சொல்லுவான்.. லட்சத்தை தொடும் சில சமயம்… அவனின் சம்பளம். அந்த ஒருமணி நேர வேலைக்கு. 
எல்லாம் அந்த திருமணம் என்ற பேச்சு அடிபடும் வரை. 
எல்லரும் தோல் சம்மந்தப்பட்ட வேலை என்றதும், சுப்புவின் ஜாதக்கத்தை நிராகரித்தனர். மேலும் ஏதோ தோஷம்.. செவ்வாய்… ராகு என்றார்கள்.. எல்லாம் சேர்ந்து கொண்டதோ, பிரிந்து கொண்டதோ.. இவன் ஜாதகத்தில்… திருமணம், தட்டிபோக தொடங்கியது.
டாப் கீரில்.. ஆள் அரவமில்லா சாலையில் சென்று கொண்டிருந்தவனை… உள்ளூர் கல்யாண சந்தையில் இறக்கினர்.. இப்போதுவரை ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.. 
இப்படியே வருடங்கள் கடந்தது.. ஆனால் சுப்பு தன் வேளையில் பிஸியாக இருந்தான்.. திருமணம் என்பதை நினைக்க கூட நேரமில்லை அவனுக்கு.. இந்தியாவின் முக்கிய பாக்ட்ரீக்களுக்கு விசிட் செய்யும் அளவுக்கு வளர்ந்தான்.. அவனின் வேளையில் ‘சிவா..’ என்றால் எல்லோருக்கும் தெரியும் என்ற உச்சத்தை தொட்டான். ஆனால் வயது முப்பதை தொடும் போது… எல்லாம் மாறியது.
ஆத்மநாதன்… சுப்புவை துரத்த தொடங்கினார்… ‘இங்கே வந்துவிடு… நம் தொழில் போதும்… வந்துவிடு வந்துவிடு’ என்றார்.
அவருக்கு, தன் அக்கா, தங்கை பிள்ளைகளுக்கு எல்லாம்.. திருமணம் கூடி வரும்போது… தன் மகனுக்கு இன்னும் அமையவில்லையே என பயம் அது பெற்றோரை தொற்ற தொடங்கியது..
காரணமாக எல்லோரும் சொன்னது… அவனின் வேலையை… எனவே பெற்றோர் பயந்து… பேசி பேசியே… வேலையை விட வைத்தனர்… ஏதோ திருமணம்தான் வாழ்வின் லட்சியம் எனுமாறு ஆத்மநாதன்… தன் மகனை படுத்திய பாட்டில்… தன் சுயத்தை தொலைத்து வந்துவிட்டான் தங்கள் இடத்திற்கு..
எனவே அதன் தாக்கம் எப்போதும் முகத்தில் இருக்கும்… அளவான பேச்சுதான்.. அப்பாவின் மேல் பாசம் என்றாலும், அவனின் விருப்பத்திற்கு மாறாக அழைத்ததால்… எதையும் வாய் திறந்து கேட்க்கமாட்டன்.. அவனின் இயல்பு தொலைந்தது… திருமணம் முடித்து பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியிருந்தான்.
சுதந்திரமாகத்தான் இருந்தான் இங்கு வந்தும்… ஆனால், ஏதேனும் விருந்து விழா என செல்லும் போது… சொந்தத்தில் எல்லோரும் எதோ போல் பார்ப்பதாக உணர்ந்தான்.. 
இன்னும் சிலர் ‘என்னப்பா… ஏதாவது பரிகாரம் பண்ணீங்களா’ என்பார்கள். சுப்புக்கு, அப்படியோரு கோவம் வரும்… என் உயரம் என்ன… என் படிப்பு என்ன.. என் திறமை என்ன.. என்னை நிற்க வைத்து, எப்படி கேள்வி கேட்கிறார்கள் இவர்கள் என தோன்றும்.
தன்னைவிட சின்னவனெல்லாம்… மணமுடித்து வீதியில்… ஜோடியாய் நடக்கும் போது… எங்கோ ஒழிந்து கொள்ள தோன்றும் இவனுக்கு..
தன்னைவிட சின்ன பசங்களெல்லாம்.. இப்போது தன்னை ஒதுக்குவதாக எண்ணம்.. அவர்கள் எல்லாம் குடும்பமாக இருக்கிறார்களாம், இப்போதெல்லாம் குடும்ப விழாக்களின் இவன் மட்டும் தன்னிமரமாய் உணர தொடங்கினான்.. 
ஆக, சுப்புக்கு திருமணம் ஆகவில்லையே.. என்பது பெரிய குறையாக தெரிய தொடங்கி இரண்டு வருடம் ஆகிறது.. 
எந்த பெண்ணையும் திரும்பியும் பார்க்கமாட்டான்… சைட், ட்டேட் என எதுவும் கிடையாது… சுத்தமானவன்… விதி அவனையேதான் சுத்தி சுத்தி ‘செய்து’ கொண்டிருந்தது போல… இவன் பெண் பார்க்க போகும் முன்னே… எல்லருக்கும், இவனை மறுக்க ரீசன் கிடைத்துவிடும்..
அதனால் இன்று ஒரு முடிவுடன்… கோவிலுக்கு வரசொல்லியிருந்தனர்.. பெண் வீட்டினரை.. பிடித்திருந்தால்.. அப்போதே பூ வைத்து திருமண தேதியும் குறித்துவிடும் நோக்குடன் கிளம்பியது படை..
அதனால்தான் பானுமதி… தனக்கிருக்கும் ஒரே சொந்தமான… வர்ஷினியை அழைத்திருந்தார் இந்த வைபவத்திற்கு. மேலும் அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டுமே.. அதையும் சேர்த்து நினைவுபடுத்திக் கொள்ளவே இந்த அழைப்பு.
பானுமதியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மக்கள்தான் வர்ஷினி.. கிரிதரன் இருவரும். இவர்களின் பெற்றோர்.. ஒரு விபத்தில் இறந்துவிட… பிள்ளைகள் அனாதையாகினர்.
அண்ணன், தம்பி என யாருமில்லா, வர்ஷினியின் அப்பாவிற்கு… அருகில் இருக்கும் ஒரே சொந்தமாய்… பானுமதியே இருந்தார். அதனால் தன்போல், பொறுபெல்லாம் அவரிடம் வந்தது.. அவருக்கு அதில் எந்த தயக்கமும் இல்லை…

Advertisement