Advertisement

உன் வருகை என் வரமாய்…
19
நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன்       பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன் எதுவும் தன்னை மீற செய்ய   மாட்டன் என நம்பிக்கை. ஆனால் சுப்பு வேறு செய்து வைத்திருந்தானே..
ஆனால், சுப்பு அடிக்கடி தன் மனையாளுடன் பழைய கதைகளை பேச தொடங்கினான்.. ஏதேதோ கேள்விகள்.. எப்போதும் ஏதோ ஒரு ஆராய்ச்சியில்.. கேள்வி கேட்க தொடங்கினான்.
ஒரு கட்டத்தில்.. வர்ஷினியே “சிவாஜி… என்னாச்சு… “ என கேட்டுவிட்டாள். இது இப்படிதான் சிவா என்பதை.. சிவாஜி என மாற்றியிருந்தால்… மரியாதையாம்…
தெரியாமல் அன்று சுப்பு இதென்ன டி சிவாஜி… என விளக்கம் கேட்டுவிட்டான்… பாவம் அந்த நடு இரவில் அவனுக்கு விளக்க உரை வழங்கியே… பாதி படுத்திவைத்தாள் வர்ஷினி..
இப்போது தன் கணவனிடம் எதையும் மறைக்காமல் பேச தொடங்கியிருந்தாள்.. அவனின் விருப்பங்கள்… ஆசைகள் என எல்லாம் தனக்கு பிடிக்கும் படி ஆசையாக மாற்றிக் கொண்டாள்.. 
வர்ஷினியின் இந்த கேள்வியில், சுப்புக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை, ஆனால் தள்ளிபோட நினைக்கவில்லை… அவளாக வந்து ஏதும் கேட்டபாடில்லை… எனவே தானே பத்துநாள சென்று இன்று பேச்சை ஆரம்பித்தான்…
இப்போது மீண்டும் “உன்கிட்ட உங்க மாமா கையெழுத்து வாங்கினாரா கேட்டேன் “ என்றான்.
அவளும்.. இப்போதுதான் சிற்றுண்டி கொடுத்துவிட்டு, தங்களுடையாய துணியை மடித்து வைத்தபடியே.. பள்ளிக்கு கட்டி சென்ற ஆரஞ்சு வண்ண கரிஷ்மா புடவையில்.. தன்னவனை பாராமல்.. ஏதோ விளையாட்டு போக்கில்,  ஒயிலாக அமர்ந்து கொண்டு “ஆமாங்க.. நாங்க இங்க வந்த புதுசுல.. வாங்கினாங்கன்னு, நினைக்கிறேன்.. ஏன்” என்றாள், எந்த சந்தேகமும் இல்லாது..
அந்த பாவனையே சுப்புவை.. தாக்கியது… என்ன சொல்வேன் இப்போது, ப்பா. பதில் சொல்லுவது எவ்வளவு கடினம் என அந்த நொடி உணர்ந்தான்.
அமைதியாக சேரில் அமர்ந்திருந்தவன், அவளின் அருகே, கீழே வந்து அமர்ந்தான்… வர்ஷினி இன்னும் தன் கணவனின் தடுமாற்றம் புரியாமல் “என்னாச்சு” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.. ஹஸ்கி வாய்ஸ்சில்… விளையாட்டாய்..
சுப்பு, ஆசையாக திட்டிக் கொண்டான் ‘இங்க நான் கொள்ள(கொல்லை)போச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. புரியுதா பாரு’ என தனக்குள் செல்லம் கொஞ்சியவன்,
ஒரு பெருமூச்சு விட்டு, நன்றாக அமர்ந்து கொண்டு அவளை நேர பார்வையாக பார்த்து “உங்களோட.. அதான், அந்த தென்னந்தோப்பு… நீ கூட சொன்னியே அன்னிக்கு… அத அப்பா.. உங்க மாமா, வித்துட்டார்…” என்றான்..
வர்ஷினியிடம் சட்டென ஒரு பார்வையாக தன்னவனை பார்த்தல் அவ்வளவுதான்.. மீண்டும் துணி மடிக்க தொடங்கினாள்.. “ம்..” என்றாள் அனிச்சையாக.
சுப்பு அவளை ஆராய்ந்தான் “என்ன பதிலே இல்ல.. உங்க சொத்து… வாய திறந்து பேசு… மத்த நேரமெல்லாம் ஏதாவது வள வளன்னு பேசுவ… இப்போ என்ன…” என்றான் கோவமாக…
நியாமாக அவள் கோவப்பட வேண்டும் ஆனால், இடமாறி வந்தது போல.. வர்ஷினி “என்ன சொல்லணும்… “ என்றாள்.
“ஏதாவது சொல்லு, கோவம் வரல உனக்கு… நீயே சொன்ன எவ்வளோ பெரிய இடம்ன்னு… அப்போ உனக்கு அத பத்தி தெரிஞ்சிருக்கு…
நீ அழ கூட மாட்டியா… எந்த இடத்த சொல்றேன்னு தெரியுதா..” என்றான் ஆற்றாமையாக… தொழிலில் அடி நுனி காண்பவன்.. ஒவ்வரு பைசாவின் மதிப்பு தெரிந்தவன்… 
இப்படி ஒருவர்.. ஒன்றுமே தெரியாதவர்களை ஏமாற்றி இருக்கிறாரே… என்ற கோவம் கூட வரவில்லையா, தன் மனையாளுக்கு என கோவம் வந்துது கணவனுக்கு…
ஆனால், என்ன செய்ய வர்ஷினி அப்படியே அமர்ந்திருந்தாள். சுப்பு எழுந்து கொண்டான்.. “நீ சரியான அழுத்தம் டி… எவ்வளோ சொல்றேன்… கல்லுமாதிரி உட்கார்ந்திருக்க… 
உனக்கெல்லாம் நல்லது செய்யானும்னு நினைச்ச என்னை சொல்லணும்” என கத்திக் கொண்டே… தங்களறைக்கு சென்று ரெடியாகினான்.. பினான்சுக்கு.
வர்ஷினிக்கு என்ன செய்வது என தெரியவில்லை… ஏனோ இந்த சொத்து, காசு, நகை இதில் எதன் மதிப்பும் அவளுக்கு தெரிந்ததில்லை.. அதை கையாண்டிருந்தால் தெரிந்திருக்கும்… 
மேலும் தனக்கு அவ்வளவு வளமை இருக்கு என்பதே அவளுக்கு தெரியாதே.. எனவே கணவனின் கோவத்தில்.. பயம் வந்தது ஒருவேளை.. எல்லாம் பெரிய சொத்தோ… எனக்கு, கணக்கு தெரியவில்லையோ என…
இப்போதுதான் அந்த பயம் வர.. உள்ளே, கணவனிடம் சென்றாள்… அவளின் முகத்தில் பயம்தானே தவிர வேறு பாவமில்லை… பார்த்த சுப்புக்கு கோவமே வந்தது… தன் மனையாளின் குழந்தை முகத்தை பார்க்க பார்க்க.. 
“என்ன” என்றான் கர்ண கொடூரமான குரலில்…
“ஏன்.. எப்போ வித்தாங்க… எனக்கு தெரியாதே….” என்றாள் அவன் பேசியதில் தெளிவு வந்து…
“பேசாதடி… உன்னோடதுதானே அது” ஏற்னான் ஆராய்ச்சியாய்.
“இங்க பாருங்க… எனக்கு அந்த வயசுல எதுவும் தெரியாது… ஏதோ கையெழுத்து கேட்டார் போட்டேன்… அவ்வளவுதான்..
இப்போ உங்க பொண்டாட்டி சொத்துன்னு தெரிஞ்சி, குதிக்கிறீங்க… அப்போ உங்க வீட்டில் இருந்த வர்ஷினியின் சொத்துன்னா… அமைதியா இருப்பீங்களா” என்றாள்… அதிகாரமாக… அழுத்தமாக…
சுப்பு வாயடைத்து நின்றான்…’சரிதானே… இப்போது என்னவளுடையது என தெரிந்ததால்… நான் அப்பாவிடம் கேட்டேன்… இல்லையென்றால்… எதுவும் கண்டுக்காமல் விட்டிருப்பென்தானே என நடுமண்டையில் ஓங்கி அடித்தாள் வார்த்தையால்… மனையாள்…
ப்பா… இது ஒரு வகை… சிலதை தெரிந்து கொண்டால்… அப்படியா என கேள்வி கேட்டால், வாழ்க்கை வஞ்சிக்கப்படும் என உணர்ந்து அமைதியாக இருப்பது… அதன் போக்கில் நடப்பது.. இதில் வர்ஷினி இந்த வகை போலும்…
நிறைய ஏமாற்றம்… இதில் காசு பணம், சொத்து கணக்கு பார்த்து… அதை கேட்டு… உள்ள பாதுகாப்பும்… துணையும் போய்விட்டால் என்ன செய்வது என பயம் அப்போது… எனவே அமைதியாக இருந்துவிட்டால்… எதையும் கண்டுகொள்ளாமல்… 
ஆனால் மனதின் மூலையில்… எங்கோ இருந்திருக்கும்… இல்லாமல் இருக்காது தானே, அதான் இப்போது தன் கணவன் கேட்க்கவும்… அவனையே காயபடுத்தினாள்… நேசிப்பு இப்படியும் வெளிப்படும்…
சுதாரித்த சுப்பு.. “என்ன சொல்ல வர… உனக்கு தெரியுமா…” என்றான்.
“எனக்கு எப்படி தெரியும்… நீங்க சொல்லித்தான் தெரியும்.. ஆனா.. மனசு சொல்லிச்சு… உ.. உங்க அப்பா… எங்களுக்கு எங்க சொத்தை தரமாட்டார்ன்னு” என தலை குனிந்து மெல்லிய குரலில் தடுமாற்றத்துடன் சொல்லி முடித்தாள்.
அவளை இழுத்து கட்டிக் கொண்டான்… என்னென்றே தெரியவில்லை “பர்வதம்… உனக்கு, எல்லாம்… ஏதோ.. எப்படியோ அவர.. புரிஞ்சிருக்குல்ல..” என்றான்.
அந்த தங்க மங்கை அமைதியாக அவனின் அணைப்பில் இருந்தாள்… ஏதும் பதில் சொல்லவில்லை… அழுகையில்லை ஆர்பாட்டமில்லை… ஆழமான அமைதி… 
சுப்பு இப்போது அவளின் முகத்தை நிமிர்த்தி… “சொல்லு… எ… எல்லாம் தெரிஞ்சி… எ…என்னை எப்படி கல்யாணம் செய்துகிட்ட… எ.. எப்படி இங்கிருந்து போகணும்ன்னு தோணலை…” என்றான்.. எதையோ எதிர்பார்க்கும் குரல்… ஆனால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என தெரிந்த குரலில் கணவன் கேட்க…
வர்ஷினி தன்னவனை ஊடுருவும் பார்வை பார்த்து “அந்த நேரத்தில்… நான் அப்படி போயிருந்தால்… என் அத்தைக்கு எவ்வளவு அவமானம்” என்றாள் திக்காது. திணராது…
பின் சட்டென சுதாரித்து “எதுக்கு பழசெல்லாம்… நமக்கு கல்யாணம் ஆகி.. ஐந்து மாசம் ஆகுது… என்னமோ இப்போதான் இந்த கேள்விய கேட்குறீங்க…
போங்க.. கிளம்புங்க… உங்களுக்கு டைம் ஆகல..” என தன்னவன் பிடியிலிருந்து திமிறினாள்.
சுப்பு.. ஆடிபோனான்… இவள்.. எப்படி… வாய்வலிக்க பேசுகிறாள்… மனம் நிறைய தடுமாறுகிறாள்… எ..எப்படி, எதில் சேர்ப்பது… அழுத்தமா… விளையாட்டா.. இன்னும் உன்னை புரிந்துகொள்ள முடியவில்லையடி… என இன்னும் தன்னோடு அவளை சேர்ந்து இறுக்கி கொண்டான்.
அதில் என்ன புரிந்ததோ… தன்னவனின் பாதத்தின் மீது தன் பாதம் வைத்து ஏறி நின்றாள்… தன்னவனின் தலையை.. அப்படியே தன்னிரு கைகளால் கோத தொடங்கினாள்…
சுப்பு கண்மூடிக் கொண்டான் எந்த நொடி காதலை உணர முடியும் என யாருக்கு தெரியும்… அந்த தருணம் போலும் இது… ஆனால், யார் உணர்ந்தனர்… யார் உணர்த்தினர் என தெரியவில்லை…
சுப்பு “சொல்லு… இப்போ… இந்த நொடி… உனக்கு என்ன தோணுது… “ என்றான் அவளை பார்க்காமல்…
“சிவாஜி… என்னாச்சு..” என்றாள் சிணுங்கலாக… 
அவனும் “சொல்லுடி… நான் ரொம்ப… ரொம்ப… டென்ஷனா இருக்கேன்… விளையாடாத” என்றான்.. அதே நிலையில்…
கண்களில் கண்ணீர்… ஆனால் தன்னவன் முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. கண்ணிமைக்காமல்… “எனக்கு முன்னாடியெல்லாம்… எல்லாத்துக்கும் பயம் வரும்.. 
கிரிய எப்படி படிக்க வைக்க போறோம்.. என் தம்பிக்கு எப்படி கல்யாணம் செய்வேன்னு… யாருகிட்ட போய் கேட்கணும்.. இன்னும் எத்தனை நாள் அடுத்த வீட்டில் இருக்கிறது…. இன்னும் எத்தனை நாள் ஒரு துணியெடுக்க கூட காசு கேட்பது… இப்படி, இன்னும் ஏதேதோ பயம்…
ஆனா… இ…இப்போ எல்லாம் காணாம போச்சு… ஏதோ… செய்துட்டீங்கல்ல நீங்க… 
அதான்… எனக்கும் என் தம்பிக்கும்… 
ஏதோ, புதுசா… தோணுது… உங்கக்கிட சொன்னா போதும்… எல்லாம் சிவாஜி பார்த்துபார்ன்னு தோணுது… சரிதானே” என்றாள் ஆசையாக… நம்பிக்கை வந்துவிட்டது என வேறேதோ.. வார்த்தைகளில் தன் கணவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்..
சுப்பு அந்த வார்த்தையை உள்வாங்கி… தன் மனக்கிடங்கில் சேமித்து வைத்துக் கொண்டான்.. இவள் எதையும் எளிதில் சொல்லமாட்டாள்… என்னக்குண்டான நேசிப்பை கூட, என எண்ணி சேமித்துக் கொண்டான்.
மெல்லிய குரலில்… “தோணுதா… அப்படியே… தோணுதா டி…. தேங்க்ஸ்… டா… கண்டிப்பா, நான் பார்த்துப்பேன்…” என்றபடியே கண்ணகளை திறந்தான்.. 
ஆசையாக உச்சு முத்தம் வைத்தான்… தன்னவளுக்கு. பின் கசிந்த கண்களில் இரு முத்தம்…  “தேங்க்ஸ்… டா…” என்றான் இருக கட்டிக்கொண்டு…
“அப்போ நான் சொல்ற மாதிரி கேளு.. இந்த வாரம் உன் தம்பிய வர சொல்லு.. சரியா.. நான் சர்ரு வ, வர சொல்றேன்.. பேசணும்..” என்றான்.
“இப்போதானே போனாங்க… எப்படி லீவ் போட்டு வருவாங்க… அப்புறம் பேசிக்கலாம் “ என்றாள்.
“இல்ல.. உடனே செய்திடலாம்.. வர சொல்லு” என்றான்.
“அப்படி என்ன செய்ய போறீங்க…” என்றாள்.
அப்படியே அவளை சேரில் அமர்த்தி… தானும் கட்டிலில் அமர்ந்து எல்லாவற்றையும் சொன்னான். எப்படி, இதை விற்றார்… என்ன செய்தார் தன் தந்தை என எல்லாம் சொன்னான்.. அவளும் கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.. வேறு பேசவில்லை.
“அதனால… அந்த பூந்தோட்டத்த.. கிரி பேரில் எழுதிடலாம்… உனக்கு, நீ என் பினான்ஸ்ல பார்ட்னர்.. 
அந்த லீசுக்கு விட்ட உங்க பூர்வீக வீடு உன் தம்பிக்குத்தான்… 
நகை உனக்கும் அவனுக்கும் பாதி பாதி… அதனால, அவன வர சொல்லு… அடுத்த வாரத்தில் எல்லாம் பரப்பரா செய்திடலாம்…” என்றான் கடகடவென கணக்கு போட்டு…
ப்பா, கனகச்சிதமாக தீர்வு சொல்லும் தன் கணவனை விழிஎடுக்காது பார்த்தாள்…. பின் ஆசையாக மெச்சுதல் பார்வை பார்த்து தன்னவனின் தோள் சாய்ந்தாள் பாவை.. “மாமா..” என்றாள் கூடவே… “நீ ஏன்டி பயப்படுற,  நான் பார்த்துக்கிறேன்…” என்றான்..
“சித்தி…. பெரியம்மா.. எல்லாம் திரும்பவும் சண்டைக்கு வருவாங்க” என்றாள்.
“ஹா… ஹா…. 
அப்புறம்.. சும்மா விடுவாங்களா… 
வரட்டும்… பார்த்துக்கிறேன்… ஆனா அவங்க வந்து பேசிட்டு போனதுக்கப்புறம்… நீபோய் காட்டுக்குள்ள ஒரு மூலையில் நிற்க கூடாது… என்கிட்டே வரணும்..” என்றான் கேலியாக ஆரம்பித்து கட்டளையாக முடித்தான்… மையலான பார்வையுடன் அவனின் கன்னம் கடித்தாள் மனையாள்.. இப்படியாக இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதற்கடுத்து நாட்கள் வேகமாக சென்றது… 
கிரிக்கும்.. சர்ருக்கும் நேரமில்லை… இங்கு வருவதற்கு எனவே.. சுப்புவின் யோசனையில் வேலைகள் நடந்து, அவர்களின் கைகையெழுத்துக்காவும், பதிவுக்காவும் காத்திருந்தது… 
யாருக்கும்… சர்ரு, கிரி கூட செய்தி சொல்லவில்லை சுப்பு.
இப்படியாக நாட்கள் நகர,
மஞ்சள், அறுவடை நேரம்… அந்த மஞ்சள் காடு முழுவதும் நிறைய ஆட்கள்… பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது. வர்ஷினிக்கு லீவ் எடுக்க முடியவில்லை. 
சுப்பு சொல்லி  பார்த்தான் கேட்கவில்லை… ‘எக்ஸாம் போயிட்டு இருக்கு நான் என்ன பண்ண முடியும்..’ என ஒருபாடு பேசி சென்றாள் ஸ்கூலுக்கு.
பானுமதி வந்துவிட்டார்… இங்கு. கடலைகாட்டில் ஆத்மநாதன் நின்று கொண்டிருந்தார்… சுப்பு பினான்ஸ் செல்லவில்லை.. இங்கு தோட்டத்தில் நின்றிருந்தான். 
எப்போதும் இப்படிதான் அறுவடை நாட்களில் எல்லோரின் பார்வையும் இங்குதான் இருக்கும்.
வேலைகள் நடந்தது… வீட்டு வேலைகளும் முடியும் தருவாயில் இருந்தது. சுப்பு அனைத்துக்கும் சேர்த்து மேற்பார்வை பார்த்து நின்றிருந்தான்.
இந்த அறுவடையை காரணம் காட்டி தன் அன்னையை தன்னுடன் வைத்துக் கொண்டான்… நாதனின் வில்லன்.
இன்றோடு ஒருவாரம் ஆகிறது பானுமதி பெரிய வீட்டுக்கு சென்று.
விஜி அத்தை, அமைதியாகவே இருந்தார்… அண்ணன் தங்கை இருவருக்கும்  சமைத்து… வேலை செய்து என சரியாக இருந்தது… பானுமதி இருந்தால் வேலை வாங்கியபடியே வளம் வருபவர்.. இப்போது தடுமாற தொடங்கினார். 
ஆயிற்று ஒரு வாரம்.. சுத்து வேலைக்கு ஆட்கள் வருவார்கள்.. ஆனால் சமையல், இரண்டு நபராக இருந்தாலும் செய்துதானே ஆகவேணும்.. உடம்பும் முடிவதில்லை… எனவே தன் அண்ணனிடம் கேட்க தொடங்கினார்…
“ஏன் அண்ணி அங்க இருக்கு… வர சொல்லுங்க” என்றார் அதிகாரமாக. 
நாதன் எதையுமே காதில் வாங்கவில்லை.. தான், சென்று மனைவியை அழைப்பதா என எண்ணம்.. மேலும் எங்க இருந்தா என்ன என அசால்ட்டு.. 
அவருக்கு நேரத்திற்கு.. உணவு வந்துவிடுவதால் தெரியவில்லை எனவே அமைதியாக இருந்தார், இரண்டு நாட்கள். அடுத்தடுத்த நாட்களில் விஜி அத்தையின் தொல்லை தாங்க முடியவில்லை.
இங்கு அறுவடையும் முடிந்தது.. மொத்தமாக குவிண்டால்களில் மகசூல் காணும் காடு அவர்களது… எப்போதும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றுக்கு ஒருபாதி.. மற்றொரு பாதி உணவு கம்பனிக்கும் கொடுப்பார். 
இந்த முறையும் அப்படி வந்து எடுத்து செல்வர் கம்பெனிகாரர்கள்.. எனவே சுப்பு, அதில் பிஸி… விலை பேசி… அதற்கு அவர்களை ஒத்துகொள்ள வைத்து, கணக்கை முடித்து.. என நேர் செய்யவே அடுத்த ஒருமாதம் ஆனது… தரம் பார்த்து.. அதற்கு தக்க விலை கொடுப்பார். அதற்கு நாட்கள் இழுக்கும்தானே.. 
எனவே இந்த நாட்களில், எதையோ காரம் சொல்லி… பானுமதி இங்கேயே இருந்து கொண்டார்… அந்த பெரியவீடு… இருவருடன் அனாதையாக நின்றது.
நாதன் பெரும்பாலான நேரத்தை… தோட்டத்திலேயே செலவிட்டார். கூடவே இப்போதெல்லாம் வீட்டிற்கு சென்றால், தன் மனைவி இருப்பதில்லை… விஜிதான், டீ கேட்டால் அரைமணி நேரம் கடந்து கொண்டுவந்து கொடுத்தார். எனவே நாதனுக்கு தன் மகன் மேல் எரிச்சலில் இருந்தார். பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க தொடங்கினார்.

Advertisement