Advertisement

உன் வருகை என் வரமாய்…
18
ஆத்மநாதன் எதுமே நடக்காதவர் போல “நான் கிளம்பறேன்… எதுவும் வெளிய வராதுன்னு நினைக்கிறேன்” என்றார், ஒருமாதிரி குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சுப்புக்கு சிரிப்பு வந்தது… என்ன வகை மனிதர்… அன்பு என்ற ஒன்றை… உணர்ந்திருப்பாரா, மாட்டாரா.. எங்கே, பணம் என்ற மாய தேவதை, அவருடன் இருக்கையில்.. உணமையான தேவதைகள் தெரியவேமாட்டார்கள் தானே…
தன் அன்னையை நினைத்து கவலை வந்தது.. இது போன்ற ஒரு மனிதருடன், என்ன மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ்த்திருப்பார்… ஐயோ நினைத்து பார்க்கவே… முடியவில்லை… அவனால்.
கிட்ட தட்ட முப்பத்தைந்து வருட வாழ்க்கை… வாழும், போது.. எதுவும் முகத்தில் கூட காட்டாது தன் அன்னை, பயந்த நாட்கள் எல்லாம் கண்முன்னே வந்தது… நான் எப்படி அதை பார்த்துக் கொண்டிருந்தேன்… ஆக சிறு நரகத்தில்.. இருந்திருக்கிறார்… என தன்மேல்தான் கோவம் வந்தது..
சரவணனுக்கு, புரிந்த அளவு கூட, எனக்கு புரியவில்லையே, என மனமெல்லாம் அழுந்த தொடங்கியது… சுப்புக்கு. தன் தம்பிக்கு அழைத்தான் சுப்பு…
சரவணன் “என்ன ண்ணா, என்ன…” என்றான் எடுத்தவுடன்… சுப்புக்கு எப்படி தன் தம்பியிடம் இதை சொல்லுவது என தெரியவில்லை…
சுப்பு பொறுமையான குரலில், எல்லாம் விளக்க… சரவணன் சும்மாவே குதிப்பான்.. இன்று “அதான், உங்க அப்பாவ பத்தி தெரியாதா… ஏதாவது செய்திருப்பார்ன்னு தெரியும்.. ஆனா, இப்படி முழுசா எதிர்பார்க்கல… அண்ணா” என்றான். என்னமோ அவருக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாதவன் போல…
கூடவே “ண்ணா, பாருக்கிட்ட சாரி, அண்ணிகிட்ட சொல்லிட்டீங்களா” என்றான்.
“டேய்.. இது என்ன டா.. எப்போதும் போல, கூப்பிடு….
இத எப்படி டா… பர்வதத்துக்கிட்ட சொல்றது…” என்றான் தயங்கி தயங்கி… சோர்ந்து..
“வேண்டாம் ண்ணா, பார்த்துக்கலாம்.. அவளுக்கு ஏற்கனவே யார் மேலையும் நம்பிக்கை இல்ல… இதுல.. இப்படின்னு தெரிஞ்சது.. உன்னையும் நம்பாம போயிட போறா ண்ணா…” என்றான்..
சுப்புக்கு இப்போது எதற்கோ விடை கிடைத்தது… அமைதியாகினான்..
“இல்ல டா..” என தொடங்க..
சர்ரு “ண்ணா… வேண்டாமே” என்றான் இறைஞ்சுதளாக…
என்ன சொல்ல முடியும் தன் தம்பியிடம்.. எனவே “சரி டா.. பார்க்கலாம்” என சொல்லி வைத்துவிட்டான். இரவு மணி பதினொன்றை நெருங்கியது… இன்னும் இருந்த இடத்திலிருந்து எழவில்லை சுப்பு… 
வர்ஷினியும் வீட்டில், ஒரு தூக்கம்.. தூங்கி எழுந்து மணி பார்த்தாள், இன்னும் வந்திருக்கவில்லை, தன் கணவன்.. எனவே போன் செய்தாள்..
போன் அடிக்கவும்தான் சுப்புக்கு கொஞ்சம் நினைவு வந்தது போல.. ஏனோ, ஒரு வழியாக போன் எடுத்து “ஹலோ… “ என்றான் குரலில் ஏனோ வலி… தெரிய…
“எனாச்சுங்க…. ஏன், ஏதாவது பிரச்சனையா” என்றாள் மனையாள் பதறியவளாக.
சுப்புக்கு அந்த நொடி வாழ்க்கை இனித்தது… “இல்ல டா… தோ வரேன்…” என பேசியபடியே கிளம்பினான்.. அடுத்து என்ன செய்வது என தெரியாத நேரங்களில்.. அக்கறை கொண்டவர்களின் அழைப்புகள்.. நம்மை உயிர்பிக்கும்…
அவனின் ஆபீஸ் லாக் செய்து… வண்டி எடுத்து, என எல்லாம் போனில் பேசியபடியே செய்தான்… நீண்ட இடைவெளியல்லவா.. எங்கே வைத்தால்.. ஆரம்பிக்க சிரமமோ என எண்ணினான் போல… “நீ தூங்கல…” என்றான்..
“என்ன டிபன்” என்றான்… “அம்மா வந்தாங்களா” என்றான். என நிறைய கேள்வி.. 
வர்ஷினிக்கு கோவம் வர “ஏன்… நான் போன் பண்ணாதான் பேசுவீங்களா… போங்க.. போங்க…  நான் வைக்கிறேன்” என அவன் நாலு கேள்வி கேட்டவுடன்.. முறுக்கிக் கொள்ள…
அப்பா.. செய்தது எல்லாம் ஓரமாக வைத்தான்.. அதுதான் நாலுமணி நேரமாக யோசித்துவிட்டானே.. என்ன, இன்னும் விடைதான் தெரியவில்லை.. 
அத்தோட, தன்னவளிடம் எப்படி சொல்லுவது… ஆனால் சொல்லாமல் இருக்கவும் மனம் வரவில்லை… முன்பானால் கூட.. ஏதோ.. அதற்கு ஈடாக சொத்தோ, பணமோ கொடுத்தால் சரி… 
இப்போது, எல்லாம்.. வேறு… தன்னவள்… அவளின் கள்ளமில்லா.. மனம் முழுவதும் தனக்கு வேண்டும் என.. அடம் செய்யும்… கணவனாக நானிருக்கையில்.. எப்படி மறைப்பது… அது தன்னவளுக்கு நான் செய்யும்.. துரோகம் அல்லவா… என மனம் அல்லாடா… அந்த நேரத்தில் தன்னவளின் போன் ஒலி… அமிழ்தமாக தோன்றியது…
எனவே விட மனதில்லை… “அடி… இரு டி… நானே வண்டியில தனியா வரேன்.. ஏதாவது காத்து, கருப்பு அடிச்சிடும்… அதான் பயமா இருக்கு… 
என்னமோ.. கொஞ்சம் நேரம் பேசுடின்னு சொன்னா… 
என்னமோ… பிகு பண்ற” என்றான் விளையாட்டாய்.. ஆனால் குரலில் எத்தனை பாவம்…
“என்ன பார்த்தா… உங்களுக்கு எப்படியிருக்கு… உங்க குடும்பத்துக்கே… ஏமாந்தவன்னு தெரியுதா..” என்றாள் படபடப்பாக வர்ஷினி… 
ஆக செய்கைகளும் வட்டம்தான் போல… எங்கு சுற்றினாலும் சேருமிடம் சேரும் போல… சுப்பு சோர்ந்து போனான்.. என்ன சொல்லுவது.. ‘அது தான்டி.. அப்படிதான் போல’ , ‘நீ ஏமாந்தவதான், இனி விட கூடாது’ என அவனின் உள்மனம் அடித்துக் கொண்டது… 
ஐயோ இவளுக்கும் ஏதோ புரிந்திருக்கும் போல… இத்தனை வருடமாக என் தந்தையை தெரியாமலா இருக்கும் என எங்கோ சென்றது எண்ணம்… 
இழுத்து பிடித்தான் அதனை…
சுப்புக்கு, ஏற்கனவே இருந்த நெருக்கம் இப்போது கூடியது… ‘உங்க குடும்பம்..’ எனவும் அது ஏனோ இயல்பாக வரும்… கோவம் கூட வராமல்… முதலில் அவளை குளிர்விக்க எண்ணி..
“ஹேய்… பச்சமிளாக… கொஞ்சம் காரம் கம்மியா பேசு… 
நடு ராத்திரி இப்படியெல்லாம் பேசின… பயந்திர போறேன்…” என்றான்… இன்னும் சண்டை… ‘இதுதான் உங்க சண்டையா’ எனுமாறு… அவள் கோவமாக பேசும் எல்லா வார்த்தைகளுக்கும்… கிக்கானா பதில் தந்து… புது மாப்பிள்ளை இல்லையடி… அசராத… உன் அசுரன் என வார்த்தையில் அவளுடன் விளையாடிய படியே வீடு வந்தான்.. கதவை தட்டியபடியே இன்னும் பேசிக் கொண்டிருந்தான்… 
வர்ஷினி “போனை வைங்க, திறக்கிறேன்” என்றாள்..
“ம்கூம்.. நீ திற.. வைக்கிறேன்” என்றான்.. ஆக, அதற்கும் ஒரு பஞ்சாயித்துதான்.. இது போன்ற நேரங்களில் இரவின் நீளம் அழகோ அழகு…
வேறுவழி… ஆசையாக, அலுத்துக் கொண்டே கதவையும் திறந்தாள் வர்ஷினி.. அவனும் திமிராய்.. கணவன் பார்வையால்.. அவளை மேலிருந்து கீழ் வஞ்சனையில்லாமல் பார்த்து கெண்டே.. உள்ளே சென்றான்.
இன்னும் போன் பேசிக் கொண்டேயிருந்தான் “ஏன்.. டிரஸ் மாத்தின” என்றான்… “நைட்டி யா அது.. ஏதோ.. அலிபாபா காலத்து அங்கி, மாதிரி இருக்கு… எதுவுமே தெரியல…
இப்போவெல்லாம் எவ்வளோ ஸ்டைல்லா வந்திருக்கு…. உனக்குன்னு ஒரு கலரு…
ஆமாம், இது என்னடி கலரு…” என, இதுபோல நிறைய… அத்தனை அதிகாரமான வழிசல் அவளிடம், அவனுக்கு… 
வர்ஷினிக்கு சிரிப்பே வந்தது… என்ன இது, நம்ம கிட்ட எதுவுமே தெரியலைன்னு கவலை படறானா… இல்ல நைட்டி சரியில்லன்னு… சொல்றானா… என பெரிய குழப்பம்… ஆனாலும் மனம் அவனின் வார்த்தையிலும், அதிகாரத்திலும் தொலைந்தது…
“ப்ளீஸ் போன வைங்க… செண்பா ம்மா இங்கதான் இருக்காங்க… ரகளை பண்ணாதீங்க” என்றாள் அழாத குறையாக…
“சரி, டிபன் எடுத்து வை” என்றவன், ஒருவழியாக போனை வைத்து… வெளியே, சென்று.. கைகால் முகம் கழுவி வந்தான்… கிட்சனுள்.
ஆசையாக அவளை பின்னிலிருந்து அணைக்க… வர்ஷினி “தொடாதீங்க… தொட்டிங்க” என ஏதோ சொல்ல வர… 
சுப்பு “சும்மா இருந்தாலாவது பரவாயில்ல… என்னை தொடக்கூடாதுன்னு சொல்லுவியா..” என்றபடி அவளை கன்னாபின்னாவென முத்தம் வைக்க தொடங்கினான்.. 
உணவும், இரவும் அவர்களுக்காக அந்த இடத்திலேயே உறைந்தது போல… வர்ஷினியை அள்ளிக் கொண்டே தங்களறைக்கு சென்றான்.
வர்ஷினிக்கு ஏதும் புரியவில்லை எதற்கு இத்தனைநாள்.. தள்ளி வைத்தான்… ஏன் இப்போது சேர்த்து படுத்துகிறான்.. என எதுவுமே தெரியவில்லை… புரியவில்லை… 
கார்கால.. அடைமழையாக.. என்னென்று.. கேள்வியே கேட்க முடியாமல் அவளுள்… குளுர்ச்சியாய்… விளக்கமே இல்லாமல்.. பட்டு, படர்ந்து.. விரவி… அவளுள் கலந்து, தொலைந்தான்.. 
அதிகாலை மூன்று மணி… வர்ஷினி குளிக்க கிளம்ப.. அவனும் பின்னோடு வந்து காவலிருந்தான்… “ஏங்க.. சாபிடல…” என அவளும் சொல்ல… தன்னவள் தனியே செல்லுவது பிடிக்காமல்… வந்து பின்பக்கம் அமர்ந்து கொண்டான் “போயிட்டு வா” என்றான்.
வர்ஷிணியும் குளித்து, உடைமாற்றி வந்து உணவு எடுத்து கொடுக்கவும்தான் உண்டான்…. உண்ணும் அவனையே குறு குறுவென பார்க்க தொடங்கினாள்..   
“என்ன.. வாய திறந்து கேளு.. டா…” என்றான், அவளை தனதருகில் இழுத்துக் கொண்டு, உணவில் கவனமாக…
“இல்ல.. இந்த கரண்ட்… இ… எந்த போதிமரத்துல… உங்களுக்கு ஞானம் கிடைச்சிதுன்னு” என்றாள்.. அவன் சொன்னது போல்.. அல்லாமல் ஒரு அழகான மஞ்சள் வண்ண நைட்டி அணிந்து கொண்டு… வாசமாய் அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு… அவன் கொடுத்த.. ஒருவாய்.. ஆறிப்போன இட்லியை வாங்கிக் கொண்டு.. விசாரணையை தொடங்கினாள்..
“இரு..” என கைகாட்டி சொல்லியவன் உண்டு, எழுந்து கொண்டான்.. இருவரும் வெளியே சென்றனர்… 
சிலு சிலுவென… மார்கழி மாத காற்று வீச… மனமெல்லாம் நிறைந்து இருந்தது இருவருக்கும்.. கயிற்று கட்டிலை எடுத்து வெளியே போட்டு அமர்ந்தான்.. வர்ஷினி “குளிருது” என்றாள்..
“அடி வாடி… “ என சொல்லி அவளை கட்டில் அமர வைத்து தன்னுடன் சேர்த்து கட்டிக் கொண்டான்.
மென்மையான அவள் இதழ்களை வருடியபடியே “என்ன கேட்ட” என்றான். வார்த்தைகள் இல்லை வர்ஷினிக்கு… குளிரும், அவனும் சேர்ந்து… மிதமான மயக்கத்தில் இருந்தாள்… “இல்ல என்னாச்சு.. அன்னிக்கு.. ஏன் கோவமா” என்றாள்.
“நான்தான் கேட்கணும்… என்னாச்சு… நீ வாக்குல போய்.. ஒரு மூலையில் நிக்குற… அன்னிக்கு…
நான் அங்கிருந்து அடிச்சி பிடிச்சு வரேன்… என் பொண்டாட்டி அழுவா.. அத பாக்கலாம்… 
அப்படி இப்படின்னு கட்டிபிடிச்சு… ஏதாவது சமாதனம் பண்ணலாம்னு வந்தா… எங்கையோ… தெக்க பாத்து நின்னுட்டு இருக்க….
ஏன், என்ன.. ஏதுன்னு.. என்கிட்டே சொல்ல மாட்டியா” என்றான்.. அங்கங்கே கரைந்த கோவமாக.. வார்த்தைகள் நின்று கரைந்து வந்தது..
“என்னிக்கு… உங்க அத்தைங்க வந்திட்டு போனாங்களே அன்னிக்கா….
இதென்ன எனக்கு புதுசா… எப்போதும் இப்படிதான் பேசுவாங்க.. 
அதான் நான் பெரியவீட்டுகே வரதில்ல….
இனி இப்படிதானே, எல்லாம் பழகிக்கணும்… ம்…” என பெருமூச்சு விட்டாள், சட்டென ஏதோ தோன்ற தன்னவன் முகம் பார்த்தாள், வெடுக்கென நிமிர்ந்து…
அவளை கட்டுக் கொண்டு சரிந்தபடியே “ஏன் என்னாச்சு…” என்றான்..
“இல்ல உங்க அத்தைகள… சொன்னதும் கோவம் வருதான்னு பார்த்தேன்” என்றாள்.
“ம்…. வரணும்… பார்க்கலாம் வருதான்னு” என்றான் எதையோ யோசித்தபடி… அதற்கு அடுத்து ஒரு பத்து நிமிடம் ஏதோ மௌனம்…
மெல்ல அவளின் கடந்த காலம் கேட்டான் “நீ ஏன், இங்க வந்த டா… அங்க உன்ன அம்மா, நல்லா தானே பார்த்திருப்பாங்க…” என்றான்.. தன் நெஞ்சில் திருமகளாய்.. தன்னவளை தாங்கி.. வான்வழி… நட்சத்திரம் பார்த்து.. அவளின் ஈர கார் கூந்தலில் கைகள் அலைய… சிந்தனை முழுவதும் அவளின் கடந்த காலத்தில் நிலைக்க.. பொறுமையாக கேட்டான்..
வர்ஷினி “என்ன இப்போ… ஏன் கேட்குறீங்க” என்றாலே தவிர… தன்னவனை ஆராயவில்லை…
சுப்பு மெல்ல அவளின் காதுமடல் வருடி… “ஏதோ இருக்குன்னு தோணுது… அதான் மறைக்காம சொல்லு டா” என்றான் எத்தனை வாஞ்சை குரலில்…
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீங்க ஏதோ..” என சொல்ல…
அவன் “ஏன் அப்பா ஏதாவது சொன்னாங்களா…” என்றான்
“இல்ல… அதெல்லாம் இல்ல” என சொல்ல…
“தெரியும் ஏதோ அவர் சொல்லியிருக்கார்…” என சொல்ல சொல்ல.. அவளின் நெஞ்சில் சூடான.. ஈர துளிகள் அவளின் பொய்யை சொல்ல… இன்னும் கண்ணை அவள்புறம் தாழ்த்தாமல்.. “சொல்லு… நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றான்.
அவளுக்கு அந்த வயதில் அதன் அர்த்தம் விளங்கியதே.. பெரிது… ஏதோ தோழிகளுடம் பேசும் போது.. அவர்கள் கூறிய பொருளில் சற்று ஆடி போய்தான்… வர்ஷினி, தனியாக சென்றதே.
ஆனால் இன்று கணவன் கேட்கிறான்.. எனும் போது அவனின் தந்தை பற்றி எப்படி சொலுவது என நினைத்திருக்க, அவளின் கண்ணீர் துளிகள் காட்டி கொடுத்தது அவளை..
“அது… மாமா… மாமா… அத்த, நான் இப்படி ஆகிட்டேன்னு…” என சொல்ல
சுப்பு “எப்படி” என்றான்.
“அதான், நான் பெரிய பெண்ணாகிட்டேன்னு சொல்லவும்” என நிறுத்தினாள்..
“ம்…” என்றான் அழுத்தமாக…
“இதுவேறையா…. பெரியவனுக்கு தெரியும்.. யாரு, எப்படின்னு… இனி சரவணன, பார்த்துக்கணும்… சின்ன புள்ளைன்னு சும்…” ன்னு இன்னும் ஏதோ சொன்னதும்… எனக்கு புரியலை… 
அப்புறம் ஒருவாரம் லீவ் முடிஞ்சி ஸ்கூல் போகும் போதுதான்.. அதுக்கு வேற அர்த்தம்ன்னு தெரிஞ்சது, அதான் நான் இங்கேயே… செண்பா ம்மா கூட இருந்துக்கிறேன்னு சொல்லிட்டேன்…. “ என்றாள் ஏதும் குரலில் அழுகையில்லை.. அது நீருடன் நின்றது.. இப்போது வார்த்தையில் வருத்தம் மட்டும்தான்.. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவள்… கேட்டிருந்தவனுக்குதான்…. ஓவ்வன்றும் புதிதாக விளங்கியது….
சிறிது நேரம் இடைவெளி விட்டு.. அவனும் அடுத்து “அப்பா உன்கிட்ட ஏதாவது கையெழுத்து வாங்கினாரா” என்றான்.
“என்னாச்சுங்க… இன்னிக்கு மாமாவ பத்தி கேட்குறீங்க…” என்றாள் தெளிவாக…
ஐயோ தெளிவாகிட்டா… என எண்ணியவன் “ம்..”. லேசாக சிரித்தவன்…  “வாங்க போங்க… இதென்ன, மாமா.. அத்தான்.. இப்படியெல்லாம் கூப்பிட மாட்டியா…” என்றான் வம்பிழுக்கும் எண்ணத்துடன்..
கொஞ்சம் தெளிவாகியவள்… “உங்களுக்கு நான் ஒரு பேரு வைச்சிருக்கேன்…” என்றாள் கீழே படுத்திருந்தவள், அவன் மீதேறி படுத்துக் கொண்டு… “ம்…. இது எப்போ…” என்றான்.
“அது… முன்னாடியிலிருந்து…. நான் இங்க வந்த போதிலிருந்து…” என்றாள்.
“சொல்லு என்ன அது” என்றான் சுவாரசியமாக…
அவன் கண்ணின் சுவாரசியம் பார்த்து “சிவா…” என்றாள் அவன் மீது படுத்தபடி…
அவளை கீழே தள்ளியவன் “ம்… சிவா… என்னோட கொலிக்ஸ் அப்படிதான் கூப்பிடுவாங்க…. “ என்றவன் அவளின் முகம் பார்த்து…
“இல்லையே… கண்ணு வேற சொல்லுதே… சொல்லுடி..” என அவளின் மென்மையை, வன்மையாக அழுத்தியபடியே கேட்க…
வர்ஷினி, அர்த்தசாம வேளையில் ஆனந்தமாக சிரித்தாள்… அந்த மஞ்சள் காடு முழுவதும் அவளின் சிரிபொலி.. முரசறைந்தது… 
இருளும் அல்லாத, ஒளியும் அல்லாத அந்த பொழுதில்.. அவளின் மின்னும் கன்னங்களும்.. செழித்த… திமிரிய அங்கங்களும்… காளையவனை மீண்டும் பித்தனாக்க… இதழ் கவ்விக் கொண்டவன் “சொல்லுடி” என்றான்…
அவனின் ரசனைகளை, கண்வழி கண்டவள் “ம்… சரியான கரண்ட் கம்பம்…ன்னு” என சொல்ல… வார்த்தைகளும்… வரவில்லை சற்று நேரம் மூச்சும் வரவில்லை… அவளுக்கு.
சற்று நேரம் பொருத்தே அவளை விட்டவன்.. “கரண்ட்… சரி அதென்ன கம்பம்…” என்றான்..
அவளும் எழுந்தபடி.. “அது… அமைதியாத்தான் இருக்கும்… ஆனா எப்போ தொட்டோமோ.. அப்போ மட்டும்தான் ஷாக் அடிக்கும்னு..” என சொல்லிபடியே உள்ளே சென்றாள்.
அவனும் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்…
அறைக்கு வந்தவன் “கண்டிப்பா அப்படிதான்.. பாரு… நாளையிலிருந்து எப்படி ஷாக்கா தரேன்னு” என்றான்..
வர்ஷினி தன்னவனை ஒருமாதிரி பார்த்தாள்.. சுப்பு “என்ன” என்பதாக  புருவம் உயர்த்த… 
வர்ஷினி படுத்துக் கொண்டாள்… அவனும் அவளை அணைத்தவாறே படுத்துக் கொண்டான்… இன்னும் தீராத மோகம் .கண்ணில் மின்ன… “என்ன டி” என்றான் கிறக்கமாக.
“இல்ல… ஏதோ.. உங்க அப்பாவ பத்தி அதிகம் கேட்குறீங்க… நான் முதலில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே வரல…” என்றாள்.
அலட்டாமல் “எல்லாம் சொல்றேன்… ஆனா, நாளைக்கு… இன்னுக்கு என்னோட டே… எனக்கு உன் பதிலும்… இசைவும்தான் வேணும்… ஓகே…” என்றபடி மீண்டும் அவளை ஆசையாய் தழுவினான்…
“நள்ளிரவு துணையிருக்க…
நாமிருவர் தனியிருக்க…
நாணமென்ன.. பாவமென்ன…
நடை தளர்ந்து போனதென்ன…
இல்லை உறக்கம்..
ஒரே மனம்…
என் ஆசை பாராயோ..
என்னுயிரிலே… உன்னை எழுத…
பொன்மேனி தாராயோ…”

Advertisement