Advertisement

உன் வருகை என் வரமாய்…
17
சுப்புக்கு, அவளின் இறுக்கம்.. பல்வேறு உணர்வுகளை தர… அவளே நிறைந்து இருந்தாள், ம்கூம்… உள்ளே குடைந்து கொண்டிருந்தாள்… அன்று இரவு முழுதும்.. 
‘ஏன், என்கிட்டே எதுவும் சொல்லல.. இன்னும் அவளுக்கு நான் பழகலையா.. நம்பலையா.. என்னிடம் அழமாட்டாளா, இருக்கட்டும்.. அப்படியே இருக்கட்டும்…’ என பல யோசனை சுப்புக்கு.. அவனே யோசித்து.. பலவிதமாக நினைத்து… அத்தைகள் எல்லாம் பின்னுக்கு போக… காதலியை.. புரியாத, விடலை காதலனாக சுப்பு விழித்திருந்தான்.
தன் தந்தையிடம் பேச வேண்டும்… அவளுக்கு நம்பிக்கை தர வேண்டும் என மனம் அல்லாடிக் கொண்டே இருந்தது… உறக்கத்தை அவனே தள்ளி வைத்தான் அன்று…
எப்போதுமான விடியல்.. ஆனால் புதுமண தம்பதிக்கு… சப்பென விடிந்தது… சுப்பு, நேரமே எழுந்து, நடைபழக சென்றுவிட்டான்.. இந்த ஒருவார நாட்களும், அதிகாலை அவளுடன்தான் கழிந்தது அவனுக்கு.. 
இன்று.. அருகில் இருந்தும்.. அவளை நெருங்க… முடியவில்லை.. எல்லாமுமாக நானுனக்கு என எப்போது உணருவாய் என.. இவன் முரடு பிடித்துக் கொண்டு.. எழுந்து கொண்டான்..
பக்கத்தில் பார்க்க… தான் கலைக்காமல் விட்ட ஓவியத்தின் அழகு அவனை அப்படி ஈர்த்தது… சீரான சுவாசத்தில்… அழகாக.. தன்னை மறந்து நேற்று உடுத்திய அதே புடவையில்.. தான் உரிமை கொண்ட இடங்கள் எல்லாம் அவளின் தங்க மேனியில் திமிறி நின்று அவனிடம் சண்டையிடுவதாக தோன்ற…
கன்னாளனில் கைகளும்.. கண்களும்.. பரவசமாக.. எங்கோ பாடிய அதிகாலை பறவையின் ஒலி… அவன் நினைவை கலைத்தது… “போடி… மொத்தமா எடுத்துக்கிறேன்… இப்போ சண்டைதான்” என முனு முணுத்து சென்றான் தன் வேலையை பார்க்க…
இன்று எப்போதும் போல, வர்ஷினி.. அவனையும்.. அவன் குறும்பையும்   எதிர்பாத்து, அவன் உறங்கும் பக்கம் நகர… அன்பனை காணவில்லை.. அவனின் அசுரதனமெல்லாம் முன் ஜென்மம் என தோன்றியது அந்த ஒற்றை நொடியில்…  
நேற்று நடந்தது எல்லாம் மறந்தது… ஏதோ கோவம்.. அத்தைகள் மேல, என  மனம் அவனுடன்.. தனக்கு தெரிந்த காரணம் கொண்டு… சாமாதானம் செய்தது.. மெதுவாக எழுந்து, குளித்து வேலைகளை பார்க்க சென்றாள்.
வந்தான்… டீ கொடுத்தாள், குடித்தான்.. தானும் குளித்து வந்து, உணவு உண்டு கிளம்பிவிட்டான்.. உள்ளிருந்து ‘பர்வதம்’ என அழைக்கும் குரல் வரவேயில்லை.
வர்ஷினியும் எதிர்பார்த்து.. நின்றாள்.. ஆனால் சத்தமே வரவில்லை.. நேற்று, இன்று என எங்கோ சென்றது மனம்… ‘நான் ஏதாவது பேசிட்டேனா…’ என யோசனை… வர்ஷினிக்கு.
செண்பா.. இப்போது கிளம்பவும், கணவனும் கிளம்பினான்.. ஏதும் சொல்லாமல். வருகிறேன் என எப்போதும் விடைபெறுவான்.. இன்று அந்த சத்தமும் வரவில்லை…
வர்ஷினிக்கு, ஒன்றுமே சொல்லாமல் செல்லும் தன்னவனை பார்க்க, எங்கோ அவனை கவனிக்க மறந்தேனோ… என தோன்றியது.
‘என்னாச்சு..’ என கேட்க தோன்றியது, ஆனால் காலையில் என்ன கேட்டு என்ன செய்ய.. நேரமிருக்காது என.. அவளே முடிவு செய்து.. தானும் ஸ்கூல்லுக்கு கிளம்பினாள்.
வர்ஷினிக்கு, வேலையே ஓடவில்லை… லெசன் எடுக்க எடுக்க… சுப்பு அவளை இழுத்தான் நினைவால்.. ரொம்பநாள் சேர்ந்திருக்கவில்லை.. நாலு நாட்கள்.. இன்னும் முழுதாக கூட தேடல் முடியாத…நிலை… 
வர்ஷினிக்கு ‘ஏதோ புரிந்து கொண்டோம்.. என நினைத்தேன்.. அது இல்லை போல, எனக்கு எதுவுமே தெரியலை அவங்கள பத்தி… எப்படி கேட்கறது.. என்னான்னு கேட்கறது… 
போடா… நீ எப்போதும் கரண்ட்தான்… கிட்ட நெருங்கிட்டேன்னு நினைச்சேன் இல்ல போல… வரவே முடியல உன்கிட்ட… ‘ என ஏதோ பகல் நினைவில் மனம் செல்ல…
“டேய்… கீப் சைலென்ட்…” என ஏதோ பிஞ்சு குழந்தையின் சத்தம் கேட்க… வகுப்பிலிருந்தாள்…… மிஸ்சின் நிலை பார்த்து.. அங்கிருந்த லீடர்… விக்டர்.. யாரோ ஒரு குழந்தை… மற்ற எல்லா குழந்தைகளையும் அமைதிபடுத்தியது..
எல்லாம் சின்ன பிள்ளைகள், ஒவ்வன்றும் பேச தொடங்கியது.. அவர்களை கட்டுபடுத்த தோன்றாமல்.. ‘என்னமோ பண்ணுங்க ப்பா’ என அவளும் அமர்ந்து கொண்டாள்.. 
எப்போதடா.. பள்ளி விடும்.. என வீடு வந்தாள்.. இன்று அவனுக்காக.. ஸ்பெஷல் சிற்றுண்டி  பிரட் மசாலா தயாராகியது.
கணவனும் ஏமாற்றாமல் வந்தான்.. அவளாக வந்து பேசுவாள், என எண்ணம் அவளின் மணாளனுக்கு.
அவளும் சிற்றுண்டி கொடுத்து, தன்னவன் முகத்தை.. முகத்தை பார்க்க… எந்த எதிர்வினையும் இல்லை அவனிடம்… லேசான சிரிப்பு, அட.. அன்று போல் ஒரு பார்வை, எதுவும் இல்லை தன்னவனிடம்…
சோர்ந்து போனாள் மனையாள்…
சுப்புக்கு அவளின் நிலை புரிகிறது.. ஆனால், நேற்றைய அவனின் ஏமாற்றத்தை அவனால் ஏற்க முடியவில்லை.. ‘எதுவாக இருந்தாலும் என்னிடம் வர வேண்டாமா.. அப்படியென்ன ஈகோ என்னிடம்’ என கோவம் மனைவியிடம். அதனை செயலில் காட்டி அமர்ந்திருந்தான். 
வர்ஷினிக்கும் அழுத்தம் வந்ததது… ‘போங்க போங்க… என்னான்னு சொன்னாதானே தெரியும்’ என அவளும் அவனை முறைத்து, முறுக்கிக் கொண்டாள்…
இரவும் அப்படியே.. வர்ஷினி, அவன் உலவா செல்லும் போது வந்து உறங்க தொடங்கினாள்.. சுப்புவும் எல்லாம் சரி பார்த்து, வந்து, தானும் அமைதியாக படுத்துக் கொண்டான்.
அந்த வாரம்.. முழுவதும்… கோவம் கொண்ட வானவில்லாய், நாட்கள்  மறைய… கருநிற மழை மேகமென… மறுவாரம் ஆர்பாட்டமாக தொடங்கியது..
நிறைய யோசனைக்கு பிறகும் சுப்பு, தன் தந்தையிடம் வர்ஷினியின், சொத்துக்கள் குறித்து கேட்க முடியவில்லை, தயக்கமாக இருந்தது.. 
ஆனால், அப்படியே விடவும் முடியவில்லை, தன் அத்தைகளின் பேச்சை. அது சொன்ன சாரத்தை… எனவே, வர்ஷினிக்காக, அவளின் சொத்துகளை பற்றி, விசாரிக்க தொடங்கினான்.. இந்த நாட்களில்…
டவுனில் அவர்களின் வீடு எவ்வளவுக்கு குத்தகை விட்டிருக்கிறார் தன் தந்தை என அரபுரசளாக விசாரித்தான்.. இந்த வாரத்தில்.
ஆனால், நேரடியாக எதுவும் கேட்கவில்லை, எப்போதும் போல பெரிய வீட்டுக்கு சென்றான்.. தன் தந்தையிடம் பேசினான்… விஜி அத்தையிடம் பேசினான்.. ஆனால் மறந்தும் மற்ற அத்தைகளின் பேச்சுக்கு பதில் சொல்லவில்லை.
தன் தந்தையிடம் கணக்கு, வழக்கு பேசினான்.. ஆனால், உள்ளுக்குள் அவர் மேல் சிறு கோவம் வந்தது… ‘என்ன இருந்தாலும் அது, வர்ஷினியின் சொத்துகள். அதை திருமணம் ஆன உடன் கொடுத்திருந்தாலோ.. அதுபற்றி பேசியிருந்தாலோ.. பெரிதாக தெரியாது.. எனக்கு.
ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்… அவளுக்கு நகைகளை கூட கொடுக்கவில்லை… அவர்களும் ஒன்றுமில்லாதவர்கள் இல்லையே’ என ஒரு கோவம்.
ஆனால் தன் தந்தையை பற்றி ஒரு ஷணம் கூட தப்பாக நினைக்க முடியவில்லை அவனுக்கு.. ஏதோ காரணம் என மனதில் எண்ணிக் கொண்டான்.. இருபக்கமும் ஆடும் பெண்டுலத்தின் நிலை… அவனின் மனம் இப்போது. அதனால் வாய்விட்டு ஏதும் அவரிடம் கேட்கவில்லை. 
இங்கு, இந்த ஒரு வாரமும் இருவரும்… முட்டி மோதிக் கொள்ளவில்லை ஆனால், தூரமாக நின்றனர், அது பழகியது மீண்டும்… ஏன் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏதாவது யோசிக்கிறாரா.. என காரணமே தெரியாமல் மனையாள் விலகி நிற்க..
என்னிடம் ஏதும் சொல்லாமல் உன்னால் இருக்க முடியும்.. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என கணவனும் விலகி நின்றான்.
காலையில் உணவு உண்டு கிளம்புவான்.. மதியம் உணவுக்கு வர முடிவதில்லை.. எனவே அங்கேயே உண்டு கொண்டான்… மாலை சரியாக மனையாள் வரும் நேரத்திற்கு வருவான்.. தோட்டத்தில் ஏதேனும்.. வேலை பார்த்து உலவி விட்டு… அவளின் டீக்காக காத்திருப்பான். என்னமோ.. டீ குடிக்கவே திருமணம் செய்தவன் போல.. அப்படியொரு நடை வேறு.. அந்த தோட்டத்தில்..
வர்ஷிணியும் அவனை ஏமாற்றாது.. ஏதாவது சிற்றுண்டி செய்ய தொடங்கினாள்.. சிலசமயம் செண்பாவிடம் காலையிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்ய சொல்லிவிட்டு செல்லுவாள்… இப்போது அப்படிதான் சுட சுட அவனுக்கான சிற்றுண்டியுடன்தான் டீ.. இரண்டு நிமிடம் நிற்பாள்.. ஏதாவது சொல்லுவான் கணவன் என….
சுப்புக்கு உள்ளுக்குள் சிரிப்புதான் வரும்.. கூடவே, என் கிட்ட எதையும் காட்டமாட்டாளாமா.. சொல்ல மாட்டாளாமா.. நான் மட்டும் நல்லா இருக்குன்னு சொல்லனுமா.. போடி, என மனதில் நினைத்து…
பாவனையே இல்லாமல்.. மென்று… அவளை நிமிர்ந்து கூட பார்க்காது, டீயை குடித்து மீண்டும் கிளம்புவான்… பினான்ஸ்சுக்கு. மனையாளுக்கு ‘போடா’ என தோன்ற தொடங்கியிருந்தது…
அன்றும் அப்படிதான்.
அவள்.. ஏதோ.. வெங்காய பஜ்ஜியுடன் வர… இவனும் எப்போதும் போல உண்டு கொண்டிருந்தான், சிறிதாக இருந்த, இந்த பஜ்ஜியை பார்க்காமல் உண்டான்… 
மனையாள்.. ஆசையாக பச்சை மிளாகாயில், மாவை தோய்த்து அப்படியே போட்டிருந்தாள், அவனும் பார்க்காமல் முழுதாக வாயில் போட… ப்பா.. அவளின் காரம்… எல்லாம், தெரிந்தது அதில். கண்கள் தன்னவளை தன் போல் பார்க்க… கையில் கரண்டியும், முகத்தில் சாந்த புன்னகையுமாக, நின்றாள் அவள்.. 
சுப்பு வேண்டுமென்றே.. மீதமிருந்த.. இன்னும் இரண்டு மிளகாய் பஜ்ஜியை மென்றுவிட்டு.. எதிர்வினை… இல்லா வினையாக சாந்தமாக எழுந்து சென்றான் ஏதும் சொல்லாமல்.. வர்ஷினி பேவென பார்த்து நின்றாள்..
அவனுக்கோ சிரிப்பு… பச்ச மிளகா கொடுத்தா பேசிடுவோமா.. என எண்ணி.. அவளை கடந்து சென்றான்.. 
வர்ஷினி “இருங்க, நாளைக்கு.. மிளகா காபி தரேன்” என மனதில் நினைத்தாள்.. “பாத்து டி, சத்தமில்லாமல் குடிச்சிடும் கரண்ட்..” என இன்னொரு மனம் சொல்ல… தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்…
இன்று ஆத்மநாதன்… அவனின் பினான்ஸ்சுக்கு வந்தார். தன் மகன் தன் மனைவியின் சொத்துக்கள் பற்றி விசாரித்தது, தெரிந்து வந்தார்.. 
அவரிடம் நேரடியாக கேட்க கூடாது என தெரிந்தவன், இப்படி சுற்றி வளைத்தான். எங்கு சென்றாலும், என்ன கேட்டாலும்.. அவருக்கு தெரியும் என தனையனுக்கு தெரியும்தானே… எனவே அதற்காக காத்திருந்தவன்   போல் இருந்தது அவனின் முகம்.
அவரை நான்கு நாட்கள் முன்னமே எதிர்பார்த்தான் போல, ஒரு வழியாக.. இந்த வாரமாவது வந்தாரே என நினைத்தான்…
ஏதும் பேசவில்லை இருவரும்… அமைதியாக இருந்தனர்.. இருவருக்கும் விழயம் தெரியும் புரியும்.. எனவே மௌனம்… சுப்பு வந்த போன் கால்ஸ் பேசி முடித்து… அமைதியாக இருக்க…
மகனிடம், இதற்கு மேல் மறைக்க முடியாது என நினைத்த ஆத்மநாதன் “என்ன ப்பா.. தெரியனும் உனக்கு” என்றார் சாதாரண குரலில்.
“என்ன ப்பா.. இப்படி கேட்குறீங்க… பர்வதம் பிறந்த வீட்டோட நிலை என்ன” என்றான் எடுத்த உடன்…
அவரும் “அப்போ ஒரு பத்து ஏக்கர்.. தென்னைதான்… போட்டிருந்தாங்க… என்னால பார்க்க முடியலை, அதான் அந்த இடத்த வித்துட்டேன்… இப்போ, அங்க அந்த ஸ்கூல் இருக்குள்ள.. அதாம் ப்பா… ஒரு பெரிய ஸ்கூல் நம்ம பைபாஸ் உள்ள… கட் ரோட்டில் முன்னாடியே இருக்கே, அதான் அவங்க இடம் முன்னாடி…” என்றார் அதிராமல்…
சுப்புக்கு, தூக்கி வாரி போட்டது… எவ்வளோ பெரிய இடம்… இன்னிக்கு, அதன் வால்யூ என்ன, இப்போது கோடிகளில் போகும் அந்த இடம்… அத்தோடு தென்னை என்பது.. முதல் பத்துவருட பாரமரிப்பு.. அதன் பிறகு… எல்லாம் லாபம் தானே… என, என்னனவோ எண்ணம் வர, பல்லை கடித்துக் கொண்டு “எவ்வளோக்கு கொடுத்திங்க” என்றான், தன் தந்தை… தவறே செய்திருந்தாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை… எனவே முகத்தில் அத்தனை கடுமை… அவனிடம்.. ஏதும் செய்ய முடியா கடுமை…
ஆத்மநாதன் அசராமல், கணிசமான ஒரு தொகையை சொன்னார்… இப்போது அது கால் பங்குதான்… ஒன்றும் சொல்வதற்கில்லை.. 
எனவே அடுத்து கேட்டான் “எதில் இன்வெஸ் பண்ணியிருக்கீங்க” என்றான்.
அவரும் அலட்டாமல் எல்லாம் உனக்குத்தான் ப்பா… சேர்ந்திருக்கு” என்றார் இவனும் புரியாமல் பார்க்க…
“அதான் சுப்பு, மணமா மணக்குதே.. அந்த பூந்தோட்டம்… அதுதான் அப்போ வாங்கினது… 
அத்தோட… உனக்கு பினான்சுக்கு கொஞ்சம் கொடுத்தேன்… மத்தது.. அ.. அவ்வளோதான் சுப்பு” என்றார்.
“அவர்களுக்குன்னு எதுவும் வாங்கலையா…” என்றான் சங்கடத்துடன்…
“என்ன… நீயும் இப்படி கேட்குற… 
இருக்க இடம், பாதுகாப்பு.. சாமான்செட்டு… 
தீபாவளினா துணி.. 
படிக்க காசு… 
இப்போ அந்த, பய எங்க படிக்கிறான்… எவ்வளோ பெரிய காலேஜ்… 
நீதானே சேர்த்த… எவ்வளோ ஆச்சு.. பார்த்தில்ல… 
அப்புறம் கணக்கு கேட்குற…
நான் இதுக்கெல்லாம் கணக்கு பார்த்தா… இப்படி படிச்சு…
என்கிட்டையே… கேள்வி கேட்க உன்னை அனுப்புவாளா…” என்றார் அதிராமல். தன் தந்தையை பற்றி தெரியும்தான்.. ஆனால் தங்கள் வீட்டில் அவர் அப்படி செய்ய மாட்டார் என நினைத்தான் சுப்பு… எல்லாம் மணல் கோட்டை… 
“நகை.. அ.. அவங்க அம்மாது ஏதாவது இருக்கா..” என்றான்.. அன்று ஆசையாக கேட்டது.. நினைவு வந்தது.. அதனால, அதுவும் முடிந்துவிட்டதா என தெரியவேண்டி கேட்டான்..
“டேய்.. அத உங்க அம்மாகிட்ட கொடுத்தாச்சு.. அதிலிருந்து ஒரு சல்லி பைசா எடுக்கல…
எல்லாம் சும்மா கொடுப்பாங்களா… ஒண்ட வந்தவங்களுக்கு செய்ய நான் என்ன ஏமாந்தவனா…
ஊரான் வீட்டை நான் சுமக்க, என்னக்கு என்ன தலையெழுத்தா…” என இன்னும் ஏதோ பேசினார்… தாளவில்லை சுப்புக்கு.
ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால்… அவ்வளவுதான் எப்படியும் மாறும் உறவும்… உறவுகளும் என தோன்ற… தன் மனைவியை நினைத்து வருத்தம் வந்தது…
அவள் விவரம் தெரிந்து கேட்ட துணிக்குதானே நான் காசு கொடுத்தேன்… ஆனால், அதற்கு முன்… என, அவனின் மனம் அவஸ்தையை உணர்ந்தது… என்ன சாப்பிட்டிருப்பாள்… எப்படி படித்தாள் என ஒவ்வன்றிலும் நின்றது அவனின் மனம்.
ஐயோ, என் காது படவே என்னவளை பற்றி எப்படி எல்லாம் பேசியது உறவு.. அதுவும் அவர்களின் சொத்து விற்று.. அதில் புதிதாக வாங்கி… அதில் விவசாயம் பார்த்து… தலை சுற்றியது சுப்புக்கு..
ஆத்மநாதன்… “என்ன இப்போ எல்லாம் சரியாதான் போச்சு… நம்ம வீட்டுக்குத்தானே வந்திருக்கு… பார்த்துக்கலாம்…
நீ ஏதும் கிறுக்குத்தனம் செய்யாத,
பொம்பளைங்களுக்கெல்லாம் அளவா இடம் கொடு…” என முடிக்க கூட இல்லை, இருந்த கோவத்தில்.. சுப்பு
அவன் “அதை முதலில் நீங்க உங்க அக்கா, தங்கைகிட்ட காட்டுங்க…” என்றவன் எழுந்து கொண்டான்.
அவனை மேலிருந்து கீழாக பார்த்தவர் “வயசுல.. எல்லாம் அப்படிதான் தெரியும்… தோ போனானே.. பணத்த எடுத்துட்டு… அவன புடிக்க எவ்வளோ பணம் கொடுத்த, அப்படிதான்.. பட படத்தான் புரியும்” என ஏதோ பேச… ஏதோ பழமொழி நினைவு வந்தது தனையனுக்கு… தன் நினைவை அடக்கி கொண்டான் சுப்பு.. தந்தையல்லவா..
ஏதோ இன்னும் நிறைய பேசினார்.. பேசாதவர்.. தன்னுடைய முகத்திரை கிழித்து பேசினார்..  இப்போது நீ கட்டும் வீட்டுக்கு, பணம் தரமாட்டேன் என்றார்..
இந்த பினான்ஸ்சிளிருந்து எனக்கு மாதமானால் வருமானம் வரவேண்டும் என்றார்..
தோட்டம்.. காடு எல்லாம் எனக்கு பிறகுதான் உங்களுக்கு என்றார்…
பெரிய ச்டோர்ம்… பெரிய சூறாவளி… என்பார்களே, அதேபோல் இத்தனை வருட கசடெல்லாம் வெளி வந்தது அவரிடமிருந்து…
ஏனோ அந்த மனிதர்க்கு பணமே, பிரதானமாக இருந்தது. அவரின் பேச்சில், சுப்பு… பித்து பிடித்து நின்றான்… அவன் விளக்கவில்லை அவர்களை, அவரே விளகிகொண்டார் அவனிடமிருந்து.
பணம் பாதளம் தாண்டி… மகன் வரை பாய்ந்தது… 
  

Advertisement