Advertisement

உன் வருகை என் வரமாய்…
16
விஜி அத்தையும் அப்பாவும் கிளம்பவும்… அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் சுப்பு… ஏதும் பேசவில்லை. 
இரண்டாவது அத்தை “என்ன டா, நான் சொன்னது சரியா போச்சா.. அப்பாக்கு இங்க பிடிக்கலை… எப்போ அங்க வரபோற… இனி நாள் எதுவும் பார்க்க வேண்டாம், வந்திடு…” என்றார் அதிகார தோரணையில்.   
அந்த பெண்ணை ஒரு பொருட்டுக்கும் யாரும் மதிக்கவில்லை… வர்ஷினிக்கு, முகம் கருத்துக் கொண்டே சென்றது… தன் நிலை என்ன.. ஆக, வாவென்றால் வரவேண்டும்.. இன்னும் அப்படியேதான், தன் நிலை மாறவில்லை என எண்ணம் எழுந்தது, தன் கணவனின் பதில் அறிய காத்திருந்தாள்… 
ஏதோ நம்பிக்கை… அந்த கண்ணில்தான் எத்தனை ஆதங்கம்.. வார்த்தையால் சொல்லத்தான் முடியுமா… சொன்னாதல்தான் புரியுமா.. இன்னமும் மருமகள் என்ற உறவுக்கு.. சம்மந்தமே இல்லாத வேறு அர்த்தங்கள் இருக்கின்றன பல இடங்களில்.. எனவே தன் கணவன் என்ன சொல்லுவான் என பார்த்திருந்தாள்.
(மருமகள்: வேலையாள்.. சமையல்காரி, சில சமயம் நர்ஸ்.. நாதன் சொல்லுவது போல எங்க போய்ட போறா… என்ற இளப்பமான ஒரு பார்வை.. ஐந்தறிவு ஜீவன்களின் பெயர்கள் கூட உண்டு, இன்னும் சொல்ல முடியாத அர்த்தங்கள் உண்டு.. ‘இது சிலபர்ஸ் இல்ல…’)
வர்ஷினி, சர்ரு, பானு எல்லோரும் சுப்புவின் முகத்தையே பார்த்திருந்தனர்.. சர்ருக்கு கோவமே… “நீங்க யாருன்னு கேட்க்காமல், இவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறான்” எனதான் தோன்றியது.
சுப்பு அமைதியாக, தன் அத்தையை பார்த்தான், ஆழ்ந்து மூச்செடுத்து “த்த, அது சரி வராது த்த, பேசலாம்… 
ஆனா, இனி அது சரி வராது அத்த, நீங்க உங்க அண்ணன் மேல உள்ள பாசத்துல பேசுறீங்க, ஆனா… இத நீங்க முன்னாடியே செய்திருந்தா நல்லா இருந்திருக்கும்…
அப்போ ஏன், நீங்க… இதை உங்க அண்ணன் கிட்ட, சொல்ல” என்றான் குரலே இப்போது மாறியிருந்தது. எப்போம் பேசும்… இலகுவான த்வனியில்லை.. மாறியிருந்தது.
அவரும் “ஏன்… உனக்கு, தெரியாதா…” என்றார் அதே அதிகார குரலில், 
சுப்புக்கு அந்த த்வனி பிடிக்கவில்லை… சட்டென திமிரினான்.. “ஆமாம் எனக்கும் மூணுமாசம் ஏதும் தெரியலைதான்…” என்றான்.
சரவணன் “நீங்க ஏன், அண்ணன, விருந்துக்கு கூப்பிடல” என்றான்.
தடுமாறினார்.. என்ன சொல்லுவது, தனது கடமையை அவர்.. செய்யவில்லை, என இத அண்ணி, கேட்டிருந்தால் கூட பராவயில்லை… சிறியவன் கேட்கிறானே என கோவம் வந்தது… 
இரண்டு அத்தைகளும் தனியே சிக்கிக் கொண்டனர். அண்ணன் தம்பியிடம். திட்டம் போட்டு ஏதும் செய்யவில்லை.. அவர்களே வந்து விழுந்தனர்… 
விழித்தனர்.. முதல் அத்தை “என்ன டா… எங்க நேரமே இல்லை, எல்லோரும் பிசி… சம்பந்தி வீட்டு கல்யாணம்… அத்தோடு அவ மருமக வேற… கன்சீவா இருக்கா… யாருக்கும் நேரமில்லையே…” என்றார் பாவமான குரலில்.
பானுமதி அழகாக வேடிக்கை பார்க்க அமர்ந்து கொண்டார். அவரை பார்த்து இரண்டாவது அத்தைக்கு கோவம் வந்தது.. “என்ன அண்ணி… உன் பையன்தான், வந்தவ, பேச்சை கேட்டு பேசறான்… நீயும் வேடிக்கை பார்க்கற” என்றார், சுப்புவை வம்பிழுக்கும் எண்ணத்துடன்…
பானுமதி பேச தொடங்கும் முன்… சர்ரு… “என்ன ம்மா, உனக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே… அ… அப்படிதானே நீங்க சொல்லுவீங்க… இப்போ என்ன புதுசா…” என்றான், தன் அத்தைகளை நக்கலாக பார்த்தபடி.. 
அவர்களுக்கு சரியவணனை சமாளிக்க முடியவில்லை மிரட்டலில் இறங்கினர்.. “ஐயோ, அய்யோ… என்ன இப்படி மரியாதையே இல்லாம பேசுற, சரவணா… உங்க அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்” என முதல் அத்தை கேட்க…
சுப்பு “விடுங்க த்த, எல்லாம் பார்த்துக்கலாம்… யாரு வருவா… கூட்டி போக, இல்ல நான் கொண்டுபோய் விடவா… உங்களை..” என்றான் பொறுப்பாய்.
ஏதோ அவன் பயந்ததாக நினைத்து, இரண்டாம் அத்தை “என்ன இருந்தாலும் அப்பா பாவமில்ல, நீ அங்க இருந்தாதானே மரியாதை… போ ப்பா, உன் பெண்டாட்டி உன்னை மாற்றிட்டான்னு யாரும் சொல்ல கூடாதுல்லா… அதான் டா சுப்பு…
அத்த உனக்கு.. கெட்டது சொல்லுவெனா… என்னிக்கு இருந்தாலும் நீதானே எங்களுக்கு… “ என தன் தலைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டே அவனிடம் வந்தார்…
இப்போது சுப்பு, தன் நிலையிழந்தான்… யார் யாரை மாற்றுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என தோன்றியது… தன் தந்தை, தன் பேச்சு கேட்காமல் தன்னை விட்டு கொடுத்து சென்ற கோவமும்… இப்போது இவர்களின் வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள “அத்த, நீ இவ்வளோ சொல்லறதால, சொல்றேன்… உங்க அண்ணன வந்து கூப்பிட சொல்லு பர்வதத்த… அதுக்கப்புறம் எனகென்ன இங்க வேலை… “ என்றான், முடிக்க கூட இல்லை.
வர்ஷினி “என்னங்க…. என்ன இது, நா…. நான் அப்படியெல்லாம் நினைக்கல,  அதெல்லாம் இல்ல…. அப்படி சொல்லாதீங்க” என ஏதோ சொல்ல வர,
சுப்பு “நீ சும்மா இரு பர்வதம்…. யாரு, எப்படின்னு எனக்கு தெரியும்….       த்த… இதையும் போய் உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க, பார்க்கலாம்… எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிங்களா….
எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்னு தெரியும்…. இருந்தும் அமைதியா பேசிகிட்டு இருக்கேன்… 
இப்படியே விட்டுடுங்க… இல்ல” என சொல்லி தன்னை கண்ட்ரோல் செய்ய முடியாதவனாக… திரும்பி வெளியே போய்விட்டான்.. யாருக்கும் வாய் பேச முடியவில்லை… எல்லோரும் அவனையே பார்த்திருந்தனர்…
தோட்டத்தில் உலவ தொடங்கிவிட்டான்… எதை சொல்ல கூடாது, காட்ட கூடாது என நினைத்தானோ அதுவே வாயிலிருந்து வந்துவிட்டது.. தன் மீதே கோவம் அவனுக்கு… வந்துவிட்டான் நடைபழக… 
எல்லோரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.. யாரும் எதுவும் பேசவில்லை.. அத்தைகள் எதற்கோ அழுகை… இன்னமும். வர்ஷினி கிட்சென் சென்று நின்றுகொண்டாள்.. அடுத்த பதினைந்து நிமிடம் சத்தமேயில்லை அங்கு..
மெல்ல உள்ளே வந்தான். சுப்பு,. அவர்களின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது, ஆனால் முந்தைய கோவம் எல்லாம் சேர்ந்தது… “இன்னும் நான் அத்தைன்ற மரியாதை வச்சிருக்கேன்… நான் பேசிக்கிறேன்… எங்க அப்பாகிட்ட, நீங்க கிளம்புங்க…. 
பர்வதம்… காபி கொடு, அவங்களுக்கு” என்றவன்.
“டே… சரவணா… அங்க பெரிய வீட்டுக்கு போ… நீ, நான் இவங்கள, அனுப்பி வைச்சிட்டு வரேன்…
அப்பாகிட்ட எதுவும் பேசாத… நான் வரேன்” என்றவன். மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். பர்வதம் உள்ளே சென்றதும்… ஒரு நிமிடம் சத்தமே இல்லை….
முதல் அத்தை அழுகவே ஆரம்பித்தார்… பானுமதி “என்ன சுப்பு… என்ன பேச்சிடா பேசற…” என தன் மகனை கடிந்து கொண்டு அவரிடம் சென்றார்.
அவர்களை கிளம்ப சொன்னது கோவத்தை கொடுத்தது பானுமதிக்கு… என்ன இருந்தாலும், வீட்டு பெண்கள்… அவர்களை அப்படி கிளம்ப சொல்ல கூடாது என தோன்றியது அவருக்கு… 
சண்டை போடு… அது தப்பில்லை, ஆனால் கிளம்பு, என சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை எனவே நாத்தனாரின் அருகே வந்து அமர்ந்து கொண்டார் “அண்ணி அழாதீங்க அண்ணி, அவனுக்கு அங்க பினான்சில் ஏதோ பிரச்சனை… அதான்… இப்படியெல்லாம் கோவம் வருது… நீங்க எதுவும் மனசில் வைக்காதீங்க அண்ணி” என்றார்.
தன் அம்மா சொன்னதும், அப்படி சொல்ல கூடாதோ என தோன்ற, தன் அத்தைகளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்… சுப்பு “த்த… மன்னிச்சிடு அத்த, ஏதோ கோவம்… எங்கையோ உள்ள கோவத்த உன் மேல, காட்டிட்டேன்… விடுத்த…
நான் எல்லோரையும் பார்த்துக்குவேன்… ஏன், இங்க இருந்தா, பார்க்க முடியாதா… எல்லாம் பார்த்துக்கலாம்… 
நான் அப்பாகிட்ட பேசறேன்.. நீங்க சங்கட படாதீங்க” என அவரின் அருகிலேயே அமர்ந்து பேசினான்.. 
உறவை என்றும் இழக்க விரும்பவில்லை.. ஆனால், அவனையும் மீறி, உண்மை வெளிவந்துவிட்டதே.. அதில் சற்று தடுமாறினான்… 
இப்போது அதை சரி செய்கிறான்… இது எந்த வகையிலும் தன்னை பாதிக்கலாம் என உணர முடிகிறது. ஆனால், அந்த நேரத்து ஆத்திரம்… தன் மனைவியை இப்படி சொல்கிறார்களே.. என ஆதங்கம், சுப்பு நிலையிழந்து விட்டான்… உறவுகளிடம் இப்படிதான் வாய்விட்டு மாட்டிக் கொள்கிறோம்.. நம்மையறியாமலே….
பர்வதம், காபியோடு வரவும்… சுப்பு, அத்தைகள் பேசிக் கொண்டிருக்க,  அத்தைகள் இருவரும் அமைதியாகினர்… அவளும் அங்கே நிற்காமல்… உள்ளே சென்றுவிட்டாள். 
அந்த ஷணம் நேர அமைதி எதற்கு… வர்ஷினிதானே என தோன்றியது.. அவனுக்கு, அவள் சென்ற உடன் பேசினர் அத்தைகள்.. 
சுப்புக்கு, இவர்களை என்ன செய்தாலும்.. சொன்னாலும்.. மாற்ற முடியாது என புரிய… “த்த… விடுத்த, காப்பிய குடிங்க… போலாம்” என்றான் மீண்டும் அதட்டலாக.
ஒருவழியாக அழுது ஆர்பாட்டம் முடித்து.. தன் அத்தைகளை பஸ் ஏற்றி, வீடு வந்தான்.. சுப்பு… 
பானு, செண்பா… ஏதோ டிவியில் முழுகியிருக்க… பர்வத மலையை காணவில்லை… குடுபஸ்த்தனுக்கு.. கண்ணை கட்டியது.. எப்படி இவளை சமாளிப்பது என…
மஞ்சள் வானம்… நீளம் பூசிக் கொள்ள காத்திருந்த நேரமது… பனி பெய்ய தொடங்கியிருந்தது… அந்த மஞ்சள் தோட்டத்தின் தென் மூலையில்… சிவப்புநிற.. புடவையில் நின்றிருந்தாள்… சுப்புவின் பர்வதம்.
வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு.. அவளின் அருகில் வந்து நின்றான், மனையாள் இன்னும் உணரவில்லை.. “என்ன பர்வதம்… ஏன் இங்க நிக்கற, உள்ள வா” என்றான்.
அவளும் ஏதும் பேசாமல் “ம்…” என்றபடி நடந்தாள், தன்னவனை பார்கவில்லை.. எங்கே பார்த்தால் அழுதுவிடுவோமோ.. என எண்ணம்.. தானும் தன்னவனை ஏதும் கேட்க கூடாது என எண்ணி முகம் பார்க்காமல் நடந்தாள்.
கணவன், நின்றான் அங்கேயே, அவளையே பார்த்தபடி… முன்னால் நடந்தவள்.. திரும்பி, அவனை பார்த்து “ஏங்க… வாங்க போகலாம்” என்றாள், அவளின் கண்ணில் கூட ஏதும் மாற்றம் தெரியவில்லை… அமைதியாக இருந்தாள். அன்பு.. அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்… போல..
சுப்புக்கு இந்த நிலை ஏன் என தெரியவில்லை… புரியவில்லை, சண்டை போடுவாள்.. அழுவாள் என பார்த்திருக்க… அமைதியாக அழுத்தமாக நின்றாள்… மனைவி எனும் பாத்திரத்துக்கு தக்க…
சுப்பு “ஏன்.. இப்படி இருக்க… என்னாச்சு.. கோவமா” என்றான்.
“என்னை பார்த்தா, அப்படியா தெரியுது…. அதெல்லாம் இலைங்க… வாங்க” என்றாள். 
சுப்பு “என்ன டா” என்றான் கணவனாக… மனைவிக்கு அவனின் தோள்சாய்ந்து அழுகதான் தோன்றியது, இருந்து தன்னை முயன்று கட்டுபடுத்திக் கொண்டு “வாங்க.. அத்த, தனியா இருப்பாங்க…” என, அவனின் கைபிடித்து அழைத்து சென்றாள். ஏதும் பேசிக் கொள்ளவில்லை இருவரும் உள்ளே சென்றனர்.
சுப்பு, அங்கு பெரிய வீட்டுக்கு சென்றான்.. நேரம் கடந்தது.. சரவணன் அங்கிருந்து வந்தான்… அமைதியாகியது வீடு… யாரும் எதுவும், பேசவில்லை.. கிரி, மாலையே கிளம்பினான்.. கோவைக்கு.
நேற்று இருந்த சத்தம், சந்தோஷம்.. எல்லாம் கடன் வாங்கியதோ என எண்ணம் வந்தது…. ஏதோ உண்டு கிளம்பினான் சர்ரு.. “கிளம்பறேன்… பாரு, நீ சங்கடபடாத, அவங்கல்லாம் இப்படிதான் பேசுவாங்க… எல்லாம் அண்ணன் பார்த்துப்பான்..” என்றான் அமைதியான குரலில்.
இந்த வார்த்தைகள் மேலும், வர்ஷினியை பலமிழக்க செய்தது… “இன்னும் எத்தனை நாள்டா… “ என சொல்லி, ஒரே அழுகை… 
பானுமதி “இதெல்லாம் பெருசு பண்ணாத பர்வதம், அதான்… சுப்பு சொல்லிட்டானே, அப்பா, வந்து கூப்பிடா வரோம்ன்னு… என் பசங்க எல்லாம் தங்கம்… தம்பிய நல்லபடியா அனுப்பி வை… போ, அழாத,” என்றார் அதட்டலாய்.
சுப்பு வண்டியெடுத்து, வாசலில் நிற்க… முதலில், பானுமதியை டிபன்னுடன் அந்த வீட்டில் விட்டு, பின் சர்ருவை பஸ் ஏற்ற சென்றான் சுப்பு. சென்பா ம்மா, கிரியின் அறையில் உறங்க சென்றுவிட்டார்.
அவர்களை வழியனுப்பி, அங்கேய அமர்ந்து கொண்டாள் வர்ஷினி, அந்த திண்ணையில்… பனி பெய்தது… பழகிய பூச்சிகளின் சத்தம் தவிர, வேறு இல்லை… வளர்பிறை நிலவு, இப்போதுதான் விண்ணில் மின்ன தொடங்கியது… 
யாரோ ஏதோ சொல்லிட்டு போறாங்கன்னு விடமுடியவில்லை அவளால், எல்லாவற்றியும் கேட்டுக் கொண்டு நாதன் மாமா, அப்படிதானே பேசாமல் இருந்தார், எனக்காக வேண்டாம்.. தன் பிள்ளைக்காக ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் என எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஆத்மநாதன்னுக்கு என்னைப் பிடிக்கவில்லை எனபது வேறு… இப்போது தன் மாமனார்க்கு என்னை பிடிக்கவில்லை என்பது… அவளால், ஏற்க முடியவில்லை.. ஒதுக்க நினைக்கிறாள், முடியவில்லை..
சோர்ந்து போய்விட்டாள்.. தனியாய் நிற்கும்.. தேய்பிறை நிலவு போலானாள்.. தனியே அமர்ந்திருந்தாள்.. சுப்பு வந்தான்… உணரவில்லை அவள்.. 
அவளின் அருகில் வந்து அமர்ந்தான்… “பர்வதம்… சாப்பிடலாமா..” என்றான். அவளின் முகம் சோகமாகதான் இருந்தது, அதனை பார்த்தபடியே கேட்டான்.
“ம்…” என்றவள் எழ, சுப்பு “இரு…” என சொல்லி அவளை தன்னிரு கைகளில் அள்ளிக் கொண்டான்.. அவளின் சிரிப்பையோ, வெட்கத்தையோ பார்க்க ஆசை கொண்ட… கணவனாக..
ஆனால், எல்லா பாவத்தையும் துடைத்தது வைத்து, கல்லென நின்றாள்… முகத்தில் எந்த பாவமும் இல்லை அவளிடம், அமைதியாக அவனிடமிருந்து இறங்கிக் கொண்டாள் “எ.. எனக்கு தலை வலிக்குது… வாங்க சாப்பிடலாம்” என்றவள்.. உள்ளே நடந்தாள்.
சுப்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை அமைதியாக சென்றான் உண்டான்.. “நீ சாப்பிடு ம்மா” என்றான். அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை.. சுப்பு “என்ன பாரு.. என்ன… இப்படி இருக்க, சாப்பிடலைன்னா, எல்லாம் சரியாகிடுமா…” என சொல்ல..
அமைதியான குரலில் “சாப்பிட்டா, சரியாகிடுமா… “ என்றாள்.. 
லேசாக சிரித்தான் கணவன் “இரு “ என்றவன், தானே இரண்டு இட்லி தட்டில் வைத்து, ஊட்ட தொடங்க… வாய் பேசும்… பதின்ம வயது பிள்ளையானால் வர்ஷினி கண்ணில் நீருடன் உண்டாள். கண் பார்த்தால்.. அவளின் நிலை புரியும்.. வார்த்தை பேசினால்.. அவளின் வலி தெரியும்.. கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்ணவன் ஆனான்…
சுப்பு, அதன்பிறகே உள்ளே சென்றான்… எல்லாம் எடுத்து வைத்து, வர்ஷினி உள்ளே வர, சுப்பு உடைமாற்றி, அமர்ந்திருந்தான்.. 
வர்ஷினி, வந்து படுத்துக் கொண்டாள், உடை கூட மாற்றவில்லை.. சுப்பு “ஹேய் டிரஸ் மாத்திட்டு படுடா… உருத்தபோது…” என்றான்., ஏதும் பேசவில்லை கண்ணை இருக்க முடிக் கொண்டாள்.. ஏதாவது இதன் வழியே படித்துவிட போகிறான் என.. ஆனால் அவன் படித்தது வேறு வழி…
சுப்பு, அருகில் வந்து படுத்து கொண்டான்… ஆறுதலாய் அவளை அணைக்க, அவளின் இடுப்பில் கைபோட, உடல் இறுகியது… மனைவிக்கு.
சுப்புக்கு, ஏதோ போலானது.. மனைவியை சமாதனானப்படுத்த வழி தெரியாமல் திண்டாடும் கணவனாக அவன், அவளிடம் உரிமை கொள்ள… வர்ஷினிக்கு ஏனோ, மனமேயில்லாததால்.. சற்று இறுகினால் அவ்வளவுதான்…
எப்போதும் தன் விரலின் தீண்டலில், உயிர்பெறும் தன்னவள்.. இன்று இருகவும்… அப்போதிலிருந்து எதையுமே தன்னிடம் பகிராமல் விலகவும்… சுப்புக்கு, அவனை புறக்கணிப்பதாக தோன்ற… அடிவாங்கிய குழந்தையாக தனது கைகளை எடுத்துக் கொண்டான்.. கணவன்..
தன்னவனை காயபடுத்த கூடாது, ஏதும் கேள்வி கேட்டு அவனை, நானும் படுத்த கூடாது.. நான் அழுது அவனை சங்கடபடுத்த கூடாது.. தன் அப்பாவையே எனக்காகதானே பேசுனாங்க… சர்ரு, சொன்ன மாதிரி எல்லாம் அவர் பார்த்துப்பார்.. என நினைத்து வர்ஷினி அமைதியாக இருந்தாள்…
ஆனால், மனதின் எல்லா முலையிலும்… அவளை புறக்கணிக்கும் உறவுதானே நிற்கிறது.. அது மருமகாளாக பார்க்கும் போது வலிக்க செய்கிறதே.. எனவே அமைதியாக இருந்தாள்.. 
சுப்புவும் அப்படியே.. தன் தந்தையின் செயலில் இவளை நான் படுத்தக் கூடாது என இருந்தான்.. மேலும் என் மனைவியை எப்படி மதிக்காமல் இருக்கலாம்  
அவர்கள் சொல்லுவது போல அவளுக்கு சொத்து ஏதும் இல்லையா… அதான் இவளுக்கு கவலையா… அவளின் அப்பா விட்டு சென்ற சொத்து ஏதும் இல்லையா.. இதை எப்படி கேட்பது… அப்பாவிடம்… என யோசனை அவனிடம்…
இல்லைன்னா, என்ன, என்ன இப்போ என் மனைவி, எனும் போது.. சொத்து எதற்கு என பல யோசனைகள் அவனிடம்… எனவே அவள் ஏதாவது பேசுவாள்.. நடந்ததை பற்றி சொலுவாள்… என இவன் எதிர்பார்க்க..  
எல்லாம் தலைகீழ்… ஒருவர்க்காக ஒருவர்… அமைதி காக்க… இருவரும் இரு துருவ சிந்தனையில்… இருக்க…
சின்ன சின்ன பரிபாழைகள்.. ஏதோ சொல்ல… தாம்பத்தியமும்.. இறுதியில்.. விலகிக்கொள்ள… தம்பதிகளும் நிலவு போல் தனியாகினர்….
வீசுகின்ற தென்றலே…
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா…
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே….
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே….
புள்ளியாக தேய்ந்து போ,
பாவையில்லை பாவை , தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை…
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்….

Advertisement