Advertisement

உன் வருகை என் வரமாய்…
14
சுப்பு, அடித்து பிடித்து கிளம்பினான் மணியாகிவிட்டதே…. சங்கரை,    அழைத்து வந்த ஆட்கள்… அங்கு காத்திருந்தனர். எனவே இவன் செல்ல வேண்டும்.
குளித்து வந்தவன் “பர்வதம்… அம்மாக்கு போன் செய்து, டிரஸ்         எடுத்து வர சொல்லு.. அதுக்குள்ள நீ சாப்பிட ஏதாவது எடுத்து வை… “ என்றான் அழுத்தமான குரலில்.
இவன் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு.. அங்கிருந்த பூஜை அறையில் நுழைந்தான்.. இந்த தோட்டத்து வீடு எல்லா அறைகளையும் கொண்டது.. . முன்பு இங்குதான் சுப்புவின் குடும்பம் இருந்தது.. 
அதன்பின் படிப்பு, போக்கு.. வரத்து.. என வசதிக்காக.. முன்னில் இருந்த தங்கள் நிலத்தில் வீடு கட்டி சென்றனர். சுப்புக்கு பெண் பார்க்க    தொடங்கவும் அதை எடுத்து பெரிதாக கட்டினர் நான்கு வருடத்திற்கு முன்பு. 
இங்கு, நல்ல சிமென்ட் தரையில், ஹாலில் மட்டும் ரெட்டாக்சைடு போட்ட முரட்டு வலுவலுப்பான தரை… வர்ஷினியின் பெரிய படுக்கையறை… பூஜையறை… சமையலையும்… பக்கத்தில் ஒரு சின்ன அறை.. சாமான்கள் வைக்க, அத தவிர ஒரு அறை அப்போது, அலுவலக அறையாக இருந்தது.. இப்போது கிரியின் அறையாக மாறியது. 
முன்னாடி வாசலில், முன்பு திண்ணை இருந்தது.. இப்போது பெரிதாக  ஷேட்டு போட்டு… சிமென்ட் போட்டு, சிறிய திட்டாக மட்டும் வைத்து கட்டியிருந்தனர்… அதன் பக்கத்தில்தான் இப்போது… ஒரு ஹால், ரூம்.. அட்டச்சிடு பாத்ரூம்வுடன் கட்டட வேலை நடந்து கொண்டிருக்கிறது… 
வர்ஷினி தன் அத்தைக்கு அழைத்து, விரவத்தை சொல்லி… வைத்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் ஓட்டமும் நடையுமாக பானுமதி சுப்புவின் உடையுடன் வந்தார்.
இடுப்பில் துண்டுடன்.. நெற்றியில் திருநீருடனும் அப்போதுதான் வெளியே வந்தான் சுப்பு… பானுமதி “இந்தா ப்பா.. சரியா இருக்கா பாரு…” என்றார்.
“பரவாயில்லம்மா… அப்பா எங்க, தோட்டம் போயிட்டாரா” என்றான். 
“ம்.. கிளம்பிட்டாரு ப்பா… எப்போ அங்க வர” என்றார்.
“ம்… வரேன்ம்மா… ஏன் இப்படி கேட்கிறீங்க” என்றான் ஆராய்ச்சி பார்வையாய் அவரை பார்த்தபடியே… உடை மாற்ற அறைக்கு சென்றான்.
இங்கிருந்தே இவர் சத்தமாக “நேத்து உங்க அப்பா, ரொம்ப நேரம் முழிச்சிருந்தாருப்பா…” என்றார். சுப்புக்கு என்னவோ போல ஆனது… இப்போதுதான் வர்ஷி வெளியே வந்தாள்.. தன் கணவனுக்கு டிபனுடன்.. “வாங்கத்த… என்ன செய்தீங்க காலையில” என்றாள்.
வர்ஷினியின் முகம் பூரித்து இருந்தது… ஏதோ மினுமினுப்பு… வகிட்டில் குங்குமம் அதற்கு ஈடாக கன்னத்தில் ஏதோ… ப்ரௌன் நிற தடையம் என தன் மருமகளை அந்த கணத்தில் ஆராய்ந்து, அறிந்தார் பானு.   
மனமெல்லாம் நிறைவே.. என்ன நினைத்தாரோ “ஏன்ப்பா… இன்னிக்கு ஒரெட்டு.. சென்னியப்பன பாத்திட்டு வந்திடுங்களேன்” என்றார்   வாஞ்சையாக தன் மகனிடம் திரும்பி..
இவ்வளவு நேரமிருந்த கலக்கம் எல்லாம் போயிற்று போல அவருக்கு… அவனுக்கு காரணமும் கேட்க நேரம் இல்லாதவனாக “பார்க்கறேன்ம்மா… இப்போ கிளம்பனும்” என்றவன் அவளிடமிருந்து தட்டை வாங்கி… அங்கிருந்த சேரில் அமர்ந்து உண்ண தொடங்கினான்… தோசையும் தேங்காய் சட்னியும்தான்… படக் படக்கென… நெருப்புகோழி மாதிரி.. நாளுவாயில் மூன்று தோசையையும் முடித்தவன் வெறும் தட்டை அவளிடம் கொடுத்து கைகழுவ சென்றான்.. 
இவள் இன்னொன்று வேண்டுமா… சட்னி வேண்டுமா என கேட்க கூட அவகாசம் தராமல், தட்டுதான் அவளின் கைகளுக்கு வந்தது. மீண்டும் உள்ளே சென்று வாட்ச் அணிந்த படியே “பர்வதம்” என்றான் சத்தமாக.. 
இவள் “வரேன்” என குரல் கொடுக்க… “சீக்கிரம் வா” என்றான். பானுமதிக்கு சிரிப்பு.. அடித்து பிடித்து வந்தாள் வர்ஷி உள்ளே…. அவளின் அருகில் வந்தவன் “எங்கயும் போயிடாத இன்னிக்கு…” என்றான்.
இவள் ஒருமாதிரி குரலில் “ஏன்” என்றாள் அவனை முறைத்தபடியே..
“முகத்த கண்ணாடில பார்த்தியா, இல்லையா.. நல்லா கடிச்சிட்டேன் போல… எல்லோரும் கேட்பாங்க.. எங்கயும் போகாதடி.. மானமே போயிடும்” என மீண்டும் அவளின் மற்றொரு கன்னத்தில் கடித்து விட்டு.. “ப்ளீஸ்..” என்றான் கண்சிமிட்டி..
முறைத்தாள் “இருங்க நானும் கடிக்கிறேன்… நீங்க இன்னிக்கு வெளிய  போகாதீங்க” என சொல்லி எம்பி அவனின் கன்னத்தில் இவள் கடிக்க முயல… “ஹேய்.. ஹேய்… ஷர்ட், ஷர்ட் டா…” என்றபடி கழுத்திலிருந்த அவளின் கையை எடுத்து விட்டு, லேசாக தன் உயரத்துக்கு அவனே தூக்கியபடி “ம்.. கடி பார்ப்போம்… உன் பால்பல் ஒன்னும் பண்ணாது” என்றான் திமிராய் சத்தமில்லாமல். 
கன்னம் சிவந்த போதும் அவளும் பல் தடம் படியும்படி கடித்தாள்தான்… பெரிதாக அலட்டாமல் அவளை இறக்கிவிட்டு “ஆச்சா… பை…. எனக்கு எதுவும் ஆகல… பாரு…” என்றான் சிரித்தபடியே.
இவள் அங்கிருந்த கண்ணாடியில், தன்னை ஆராந்து கொண்டிருக்க… சுப்பு “சரி, நான் கிளம்பறேன்… அம்மாவை, இங்கயே இருக்க சொல்லு.. அப்பாவ நான் கூட்டிட்டு போறேன்… 
அங்க அத்த, ஏதாவது கேட்பாங்க… ஏன் அவன் வரலைன்னு.. அம்மாவ படுத்துவாங்க… நீயும் இங்கேயே இரு, மதியம் வரேன்” என்றவன்… அவளை கடிப்பது போல் பாவனை செய்து, வெளியே சென்றான். ப்பா… பம்பரமா சுத்த வைக்கிரான்ய்யா… என எண்ணியபடியே வெளியே வந்தாள் அவனின் மனைவி.
சுப்பு, பானுவிடம் “ம்மா… இங்கேயே இருங்க… கட்டடத்துக்கு, இன்னிக்கு முத்து பிரிக்க ஆளுங்க வருவாங்க.. இவளையும் லீவ் போட சொல்லியிருக்கேன்… பாத்துக்குங்க… மதியம் வரேன்” என இயல்பாய் தன் பேச்சில் வர்ஷினியை இழுத்து… நேற்றுவரை இருந்த தூரத்தை பொதுவிலும் குறைத்து… அழகாக அவர்களின் பார்வைக்கும், சற்று முன் அவர்கள்  சொன்ன செய்திக்கும் விடை சொல்லி கிளம்பினான் குடும்ப தலைவனாய்.
பானு இப்போது தன் கண்வனை நினைத்து பயந்தார்… இன்னும் என்ன சொல்லுவாரோ என. வர்ஷினிக்கு, இப்போது தர்மசங்கடம்… பானுமதி முகத்தை பார்க்காமல்.. “த்த… வாங்க சாப்பிடுங்க” என்றாள்.
“ஏன் தங்கமா இவ்வளவு சீக்கிரமாவா.. அப்புறம் சாப்பிடுறேன்.. 
சென்பாவ வர சொல்லு.. 
அப்படியே விஜி அண்ணிகிட்ட போன் பண்ணி சொல்லு… என் மகன் என்னை இங்கேயே இருக்க சொன்னனான்னு… 
நான் சொன்னா… ஏதாவது வேலையை சொல்லுவாங்க… நீ சொல்லி சென்பாவ வர சொல்லு… அவளும் பாவம்… இங்க வரட்டும்..” என தன்னுடைய நெருக்கடியை கூட பதறாமல் சொல்லி சென்றார்… அந்த பேரிளம் பெண்… சிலருக்கு வாழ்க்கை இப்படிதான்… மாற்றமே வராதோ… அவர்பாட்டில் சொல்லி, பூ பறிக்க சென்றார்.. சாமி படத்திற்கு வைப்பதற்கு.
மருமகளும் அவர் சொன்னதை செய்தால்… பொறுப்பாய். விஜி சித்தியிடம் பேசவே மாட்டாள்.. இன்று, சுப்புவின் மனைவியாய்.. இயல்பாய், பதறாமல் பேசி எல்லாவற்றியும் சொல்லி, வர செய்துவிட்டாள் செண்பாவையும்.
அங்கு சுப்பு.. தோட்டத்தின் மறுமுனைக்கு சென்றான்.. அங்குதான் ஆத்மநாதன் இருப்பார்.. அங்கு சென்றான், இன்று பாண்டி இருந்தார் “ஏலே, அப்பாவ கூப்பிடு…” என்றான், வண்டியில் அமர்ந்தபடியே…
அந்த பாண்டி என்பவரும் சென்று.. ஆத்மநாதனை அழைத்து வந்தார்… அவரிடம் சுப்பு “வாங்க போலாம்…” என்றான். ஆத்மநாதனுக்கு ஏதும் கேட்க முடியாத நிலை.. ‘இரவிலிருந்து… இவன் வருவான் பேசலாம், என நான் பார்த்திருக்க… ஆளையே காணவில்லை… முகம் வாடித்தான் போனது.. முதல்முறை… ‘மகன் கைவிட்டு போய்விடுவானோ’ என பயம் வந்தது அவருக்கு.
சுப்பு “வாங்க ப்பா…” என்றான் மீண்டும் ஒருதரம். அவர் “நீ போ, நான் என் வண்டியில வரேன்” என்றார். சுப்பு “வாங்க ப்பா… ஒரே வண்டியா போட்யிடும்… அவ்வளவு தூரம் ஏன், தனியா வரீங்க, வாங்க” என ஒருமுறைக்கு இரண்டு முறை… பேசி அழைத்துக் கொண்டே சென்றான் அவரையும்.
நல்ல ஆஜானுபாகுவான தோற்றம்… நரைமுடியை அப்படியே விட்டு வெள்ளை வேட்டி சட்டையில்… வேலை ஏவும் கலையுடன்… பார்வையாலேயே எல்லோரையும் தள்ளி நிறுத்தும், திமிரான விவசாயி… அவர். 
மடித்து கட்டிய வேட்டியுடன் தன் மகனில் பின்னால் அமர்ந்தார்… இருவரும் இப்படி வண்டியில் போனதில்லை எனலாம்.. சேர்ந்து செல்ல வேண்டும் என்றால்.. கார்தான் வசதி. 
மற்றபடி எங்கும் தனியேதான் செல்வார்.. அவரின் வண்டி அக்டிவா… அதனை அப்படியே பொறுமையாக ஒரு முப்பதில்தான் செலுத்துவார்… அப்படியே… இந்த தோட்டம் யாருடையது… யார் நிற்கிறார்கள்… என்ன வேலை நடக்கிறது.. என ஒரு பார்வை பார்த்தபடியே அவர் வந்து சேர்வதற்குள் இன்று பேச்சு வார்த்தை முடிந்து விடுமே… எனவே சுப்பு கூட்டிக் கொண்டு சென்றான்.
தன் தந்தையின் மனம் புரிந்து நடப்பவன்… ஆனால், அவனால்… ‘அந்த வார்த்தையை’ ஜீரணிக்க முடியவில்லை. தன் தந்தை, தன்னுடைய மனைவியை அப்படி சொல்லும் போது… சுருக்கெனவே இருந்தது அவனுக்கு.
ஆக, கணவனாக நான் அவளை கௌவ்ரவபடுத்தியிருக்க வேண்டும்… அதனால்தான் இப்படியொரு பேச்சு தன் தந்தை வாயிலிருந்து. நானும் அப்படியே இருந்தால், எல்லோரும் பேசுவார்கள் என்ற எண்ணம் வந்தது.. அதன்பிறகுதான் இந்த தோட்டத்து வாசம் அவனுக்கு.
மேலும் எங்கே தன் அன்னையை போல், வர்ஷினியையும்… ஒன்றுமே பேசாமல் இருக்க செய்துவிடுவாரோ என ஒரு எண்ணம் வந்தது அவனுக்கு.
இப்படி எல்லாம் சேர்ந்து அவனை.. தன் பொறுப்பை உணர செய்தது.. அதனால் வர்ஷினி, என் மனைவி. 
ஆக, எனக்கும் அவளுக்கும் நடுவில்… அவரை சற்று தள்ளி வைக்க வேண்டும் என எண்ணினான்.  
அதன்படியே அவனின் இத்தனை செயல்களும் நடந்தது.. அதற்காக அவரை, அவன் புறக்கணிப்பான் என்று இல்லை… தங்கள் இருவருக்கும் இடையில் அவரை சற்று தள்ளி வைத்தான் அவ்வளவுதான்.
இருவரும் அவர்கள் இருக்குமிடம் சென்றனர். சங்கரின் தந்தை வந்திருந்தார். சுப்பு அழைத்திருந்தான். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது… 
சங்கரின் தந்தை எத்தனை முறை மன்னிப்பை வேண்டியும்… சுப்பு அசரவில்லை.. அவனால், தான் தோற்றத்தை, அதுவும் நண்பன் என ஒரு பெயர் சொல்லி தன்னை ஏமாற்றியவனை மன்னிக்கவே முடியவில்லை… 
போலீசிடம் ஒப்படைத்தான்… அதுவும், முழு பணத்தையும் வாங்கிக் கொண்டே. பணம் தராவிடில் தலை தப்பாது என அவரின் தந்தையிடம் மிரட்டி பணத்தை வாங்கிக் கொண்டான்.  
சங்கர் பணத்தை பதுக்கி வைத்திருந்தான், யாரிடமோ கொடுத்து வைத்திருந்தான். அவனின் கையில் இல்லை. எனவே தந்தையை மிரட்டி… அவரிடம் கேட்டு வாங்க சொல்லி… அமைதியாக ஒருநாள் விட்டுவிட்டான். 
அது ஒரு முழு டார்ச்சர்… சங்கரின் தந்தை.. எப்படியோ பேசி…  தன் மகனிடமிருந்து வாங்கினார்.. தன்னுடையதை பாதி தந்தார் போல.. எப்படியோ எனக்கு பணம் வேண்டும் என்று விட்டுவிட்டான் சுப்பு.
போலீசிலும் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டான். இனி அது வழக்கு… கோர்ட் என அலைய வேண்டும். சுப்புக்கு, அது புதிதல்ல… எனவே அனுபவிக்கட்டும் என விட்டுவிட்டான். 
அதுவும் வெறும் ஐந்து லட்சம் தரவேண்டும் என கம்ப்ளைன்ட்.. ஊரில் பெயர் கெட்டு.. வழக்குக்கு, வக்கீல் வைத்து என இனி சங்கருக்கு அலைச்சல்தான். 
இப்படியாக எல்லாம் பேசி முடித்து அடுத்த இரண்டு நாட்கள் அதே வேலைதான் சுப்புக்கு… நாதன் கூட ஏன் டா இவ்வளவு கடுமை ‘அவர் என் நண்பன்’ என்றார்.. 
ஆனால் பதில் என்னவோ பொறுமையாகவே சொன்னான் ‘இன்று இவன், நாளை எவனாவது எடுத்து ஓடுவான்.. அவனை பிடிக்க நான் ஆட்கள் வைத்து வேலை பார்த்து… அதற்கு வேறு தெண்டம் அழனுமா..’ என மிக பொறுமையாக அவரையும் ஒரு ஏறு ஏறிவிட்டான்.. அமைதியாகிவிட்டார் அவரும்.
துரோகம் தரும் வலி அப்படி.., நம்பி… ஏமாந்து.. மேலும் மேலும் அடி விழுகிறது எனும் போது… எப்படி பொறுப்பது, அதான் இந்த ஆத்திரம் போலும்.. அமைதியான ஆத்திரம்தான்.. எங்கும் தவறு சொல்ல முடியாதுதானே. இப்போதாவது எல்லைகளை வகுக்க வேண்டும் என எண்ணி செய்கிறான்.
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%
வெள்ளிகிழமை இரவு கிரி வந்து சேர்ந்தான்… ஊருக்கு. இன்று ஸ்னாக்ஸ் நன்றாக செய்திருந்தாள் வர்ஷினி. அவளை கணவன் முறைத்தபடியே.. உண்டு கொண்டிருந்தான். 
வரிஷினியும் ஏதோ உதட்டசைத்து… கண்கள் சுருக்கி ஏதோ சொன்னாள்.. ஆனால் அவனுக்கு புரியவில்லை.. ‘இரு இரு பேசிக் கொள்கிறேன்’ என்ற பதில் மொழி சொல்லி அமைதியாக உண்டான். 
கிரிதான் மெதுவாக.. “என்ன மாமா.. அக்காவ அங்க கூப்பிடுவீங்கன்னு பார்த்தா… நீங்க இங்க வந்துட்டீங்க” என்றான். சலிப்பா.. இல்லை சந்தோஷ குரலா என புரியவில்லை சுப்புக்கு.
சுப்பு அமைதியாகவே இருக்க.. கிரி தன் அக்காவை பார்த்தான் ‘ஏதேனும் தவறா கேட்டுட்டேனோ’ என, அவளும் சைகையில் ‘இரு இரு ‘ என கண்ணால் அமைதிபடுத்தினாள்.
மனைவி, அக்கா… பக்கத்தில்தான் பானுமதி இருந்தார்.. அதனால் அத்தை வேறு… எனவே மருமகள்… என வர்ஷி இப்போதும் உறவுகளுக்குள் சிக்கி தவிக்கிராள்தான்… ஆனால்.. முன்போல மனம் வலிக்கவில்லை… அவளின் அந்த உதட்டோர புன்னகை சொல்கிறது…
எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்வி… இவன் பட்டென தன் மாமனிடம் கேட்டுவிட்டான்.. அதுவும் சுப்புவின் வீட்டில் எல்லோரிடமும் இந்த கேள்வி இருந்தது…
ஆத்மநாதன் அன்று கோவமாகதான் இருந்தார். ஆனால், மகனிடம் இப்போது நெருங்க முடியவில்லை.. பட்டென பேசுகிறானோ.. என எண்ணினார். எப்போதும் போல் வந்தவள்.. மாற்றிவிட்டாள் எனதான் எண்ணினார்.
சுப்புவும் அன்று மாலை வீட்டிற்கு வந்தான்தான்… தன் உடைகளை சிறிது எடுத்துக் கொண்டு அவர்களுடன் பேசி.. அமர்ந்து.. தன் தந்தையிடம் எப்போதும் போல கணக்கு வழக்கு பேசி என எல்லாம் சொல்லி சென்றான்தான்… 
ஆனால், அதை மீறி… வீடு கட்டுகிறேன் என்றோ… நாங்கள் அங்கேயே இருக்கிறோம் என்றோ.. ஒருவார்த்தை பேசவில்லை.. அவரும் கேட்கவில்லை.. அவனின் பேச்சு அப்படி இருந்தது. எனவே தன் தங்கையை பார்த்து உதடுபிதுக்கி… நீ கேள் என்பதாக சொல்லி அமைதியாகிவிட்டார் ஆத்மநாதன்.
விஜி அத்தையும் பாவம் என்ன செய்யமுடியும்… அண்ணணே அமைதியாக இருக்கிறார் என முதல் முறையாக சற்று பின்வாங்கினார்.. பப்பா. ப்பா.. பானுமதிக்கு இவர்களின் பரிபாஷை.. புரிந்தது.. 
அவர்கள் அமைதியாக இருந்த விதம் அப்படியொரு சந்தோஷத்தை கொடுத்தது… ஏதோ ஜென்ம சாபல்யம் கொண்டதாக உணர்ந்தார் அந்த வாயில்லாபூச்சி…
தன் கணவன்தான்… தன் நாத்தனார்தான்.. ஆனாலும் சந்தோஷமே அவர்களின் இந்த அமைதி பார்த்து பானுமதிக்கு அன்று.
இப்போது, பானுமதியும் அங்கேதான் இருந்தார் கிரி கேட்ட கேள்விக்கு ஆவலுடன் தன் மகனின் வாய்பார்த்து நின்றார்… சுப்பு “இதுவும் என் வீடுதான் கிரி… எங்க இருந்தா என்ன, அவ இங்கிருந்தால்… ப்ரீயா இருப்பா… அதான்” என்றான் பொறுமையான குரலில், ஒன்றும் பெரிதாக காரணம் இல்லை என்பதான பாவனையில்… 
வர்ஷி தன் கணவனையே குறுகுறுவென பார்த்தாள், அவனும் கண்டுகொள்ளவேயில்லை அவளை.. இது பொதுவான பேச்சு… என தோன்றியது அவளுக்கு… அதனால் அந்த பார்வை… சுப்புக்கு தெரியும் அதனால் அவளை நிமிர்ந்து பதில் பார்வை பார்க்க முடியவில்லை அவனால். தன் தந்தையை விட்டு கொடுக்க அவன் தயாராகயில்லை.
சரவணன் வரவில்லை.. என்றான், இந்த சிறிய விழாவிற்கு. யார் விட்டது அவனை… எல்லோரும் பேசியே அவனை வரவைத்தனர்… இதோ பஸ் ஏறபோகிறேன் என அழைத்தான் தன் அண்ணனை.
  
 

Advertisement