உன் வருகை என் வரமாய்…
13
வர்ஷினிக்கு, சர்ருவுடன் பேசியது அப்படியொரு… நிம்மதியை தந்தது. அதுவும் அண்ணன் எல்லாம் பார்த்துப்பான் என்றதும்.. இரண்டு நாட்களாக தன்னவன் காட்டும் அக்கறையும் பேச்சும் சேர்ந்து கொள்ள… அப்படியே மிதந்தாள் வர்ஷி..
எங்கும் தவறவில்லை… எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணம் வந்தது, ஆனாலும் ‘நம்ம வீடு… நிலம் பத்தி எதுவும் தெரியலையே’ என வேண்டாதா எண்ணம் வந்தபோதும்… தனது அன்பன் பார்ப்பான் என்ற நம்பிக்கை வந்தது.
முழுவதும் தன் கணவனின் நினைவு… ஏதோ, புதிய மேகம்.. சொல்ல முடியா உருவில்.. பன்னீர் தூவலாய் அவளை நனைத்தது.. மூளையும் மனமும் அவனை பற்றிய சிந்தனையில் இருக்க… வஜ்ரனின் சப்தம் கேட்டது…
வர்ஷினிக்கு உள்ளுக்கு மெல்லிய… நடுக்கம்.. தன்னில் தோன்றும் எண்ணம்  அவனுக்கு இருக்குமா.. என தோன்றியபடியே நின்றாள்… சுப்பு வீட்டின் கதவை தட்டினான். பன்னீர் தூவிய அவன் வாசம், இப்போது நிஜமாய் கதவை தட்ட… சங்கோஜம் மெல்லிய இழையாய் அவளுள் ஓட, கதவு திறந்தாள்.. 
சுப்பு “தூங்கிட்டியா…” என்றபடி உள்ளே வந்தான்.
அவனின் கேள்விக்கு பதிலில்லை அவளிடம்… உணவு எடுக்க உள்ளே சென்றுவிட்டாள். அவனும் வந்து வாட்ச்.. கழட்டி, போனை சார்ஜ் செய்ய பல்க் செய்து, குளிக்க சென்றான்..
அவள் ‘பேவென விழித்தபடியே நின்றாள்.. இவன் உண்டு கிளம்பிவிடுவான் என எண்ணியிருந்தாள்.. அதனால், உடனே உணவு எடுத்து வைத்தாள்.. இவன் பொறுமையாக எல்லாம் செய்து, உடை களைந்து கிரியின் செல்ப் திறந்து, துண்டெடுத்து குளிக்க சென்றுவிட்டான்..
வர்ஷினிக்கு சொல்லமுடியாத நிறைவு.. திருமணமாகி மூன்றுமாதமாக எந்த பேச்சும் இல்லை.. இப்போதுதான் வர தொடங்கியிருக்கிறான்.. அதுவும்.. இந்த இரண்டு வாரமாகதான் என அவளுக்கே புரிகிறது.. ஏதும் கண்ணால் கூட என்னை ஆராயவில்லை.. எனவே வர்ஷிக்கு சின்னதாக ஒரு உறுத்தல்.. வருத்தம்.. கூடவே ஒரு ஆவலையும் தந்தது அவளுக்கு..
அத்தோடு தன் கணவனின் டேஸ்ட்டுக்கு நான் இல்லையோ, ஏதோ அவசரத்துல கல்யாணம் நடந்திடுச்சி.. எனவே வாழ்ந்தே தீர வேண்டும் என்ற நிலையோ..  என இப்படி… அப்படி.. என்ற அடிப்படை எண்ணம் எல்லாம் சேர்ந்து, அவளை சத்தமில்லாமல் உலுக்கிக் கொண்டிருந்தது… 
இது எப்படி.. தொடங்கியது என தெரியவில்லை.. ஆனால், எங்கோ மனைவி என்ற பிம்பம் அவள் மனதில் தன்போல் விழுந்ததோ.. அப்போதே.. இதுவும் விழுந்திருக்கும் போல… 
இந்த வெகு நேர தனிமை எல்லாவற்றையும் மனதின் மேல்பரப்பில் நிரப்ப… கொஞ்சம் சொல்ல முடியாத ஏக்கம். மேலும் அவனின் உயரம், அவனின் வளம் எல்லாம் தெரிந்ததால் சின்ன பயம் இப்படி எல்லாம் சேர்ந்த புது மனைவியின் நிலையில் அவள்..
இப்படி மனமெல்லாம் தறிகெட்டு ஓட சுப்பு வந்தான், பின் கதவை சாற்றியபடியே. அந்த சத்தில் மீண்டவள் செல்லும் அவனையே பார்த்தாள்.. சுப்பு “நீ சாப்பிட்டியா “ என்றான் திரும்பாமல்.
“ம்… எனக்கு பசி… அத்த, போன உடனே சாப்பிட்டுட்டேன், சர்ரு கிட்ட பேசினேன்” என்றாள். தன்போல் பேசினாள்.. ஏனோ படபடப்பு.. சுப்பு “என்ன சொன்னான்..” என்றான் தன் தலையை துடைத்தபடியே…
அவள் என்ன சொல்லுவாள் அமைதியாகினாள், அவனே மீண்டும் “கிரியோட ஏதாவது லுங்கி.. ஷார்ட்ஸ் இருக்கா” என்றான்.
“ம்.. வரேன் “ என்றவள் அடுத்த அறையிலிருந்து எடுத்து அவனிடம் கொடுத்து வந்தாள்… தன்னுடைய சோப்பின் மணம்.. அவன் மேல் வீச… அவனை கடக்க முடியவில்லை அவளால்.. 
சுப்புக்கு, அவளின் முகம் அருகில் தெரிய… அவளின் குனிந்த முகம் எதையோ சொல்ல ‘நிமிர்ந்தே பார்க்கமாட்டாளாமா..’ என தோன்றியது… அவளின் உள்காய்ச்சல்… அவனுக்கு தெரியவில்லையே.
அவளை நகரவிடாமல் அடுத்த கேள்வி கேட்டான் “என்ன டிபன்..” என்றான், இயல்பாய் உணர்ந்தால் வர்ஷி… நிமிர்ந்து “சப்பாத்தி… குருமா” என சொல்ல.. சுப்பு அவளின் அருகில் நெருங்கிவிட்டான்.. “பார்க்கமாட்டியா…” என்றான்.. காதில் பேசவில்லை அவ்வளவுதான், அவ்வளவு உரசல் அவள்மேல்.. அவளுக்கு ஈடாக தலை சாய்த்து கேட்டான்..
காற்று வந்ததா… பேச்சு வந்ததா என தெரியா சப்தத்தில் “ம்.. என்ன..” என்றாள் நிலைபுரியாத சித்திரமாக… 
சுப்பு “இல்ல கல்யாணம் ஆகி.. மூணுமாசம் ஆகுது… இன்னும் நடுங்குற… அப்படி ராட்ஷ்சனாவா இருக்கேன்” என்றான் அமைதியின் ராட்ஷ்சன்…
வர்ஷிக்கு தொண்டையில் ஏதோ சிக்கியது.. வார்த்தை வராமல்.. கண்கள் தாழ்ந்து ‘இல்லை’ என்பதாக தலையாட்ட..  அவளின் இடையை தன் ஒற்றை கையால் பற்றி தூக்கிக்கொண்டு அமர்ந்தான், அங்கிருந்த கட்டிலில்.. அவனின் சுழற்றலில் அவள், அவனின் தோள்களை பற்றிக் கொண்டாள்.
தன் மடி மீது வாகா அமர்த்திக் கொண்டான்.. “எ… என்ன தீடீர்.. ன்னு… இ இப்படி… “ என அவள் திணற.. 
அவன் “நீதான் எப்போ வீட்டுக்கு வந்தாலும்.. அழுகுற.. எப்படி பேசினாலும் சண்டைக்கு வர… இன்னிக்குதான் கொஞ்சம் அமைதியா இருந்தியா, அதான்” என்றான் அவளின் மேல் மூச்சு காற்று மோத… அவஸ்த்தையாக நிமிர்ந்தாள்.. 
அவனின் பார்வை வேறு, ஏதோ செய்ய, கீழே இறங்க நினைக்க… அவளின் இடுப்பை தன்னிரு கைகளாலும் இறுக்கி பிடித்தவன் “இரு..” என்றான் அழுத்தமாக.
முயன்று தன்னை சமாளித்து “ஏன் இவ்வளோ லேட்.. அத்தைக்கு சொல்லியிருக்கலாம்மில்ல… பாவம் பயந்துட்டாங்க…” என்றாள்.. இப்போதுதான் சற்று தெம்பு வந்தது அவளுக்கு..
லேசாக சிரித்தவன் “அங்க பினான்சில் சங்கர், தெரியுமா..” என்றான்.
“ம்… உங்க பிரின்ட்.. இங்கதானே வேலை பார்க்கிறாங்க” என்றாள்.
“ம்.. அவன்தான் பணத்த எடுத்துட்டு.. போயிட்டான்… அதான் அவனை தேடி, புடிச்சு… ச்சு… விடு.. ஆள் சிக்கிட்டான்” என்றான். வர்ஷினி “ஐயோ.. அவங்களா…” என்றாள்.
இவன் ஒன்றும் சொல்லவில்லை யோசனைக்கு சென்றுவிட்டான் போல.. “சரி, வாங்க சாப்பிடலாம்…” என்றாள் அவனிடமிருந்து திமிரியபடியே…
சட்டென மீண்டவன் “ம்… “ என்றவன் அவளை இப்போது உரிமையாய் ஆராய்ந்து தன் கண்களை சிமிட்டியபடியே “இன்னொருதரம் சொல்லு” என்றான். 
“எ… ஏன்… சாப்பிட வரேன்னு சொன்னீங்கதானே” என்றாள்.
“ம்… ம்… சொன்னேன்… நீ இப்படி கூப்பிடுவேன்னு தெரியாம சொல்லிட்டேன்…” என ஏதோ சொல்ல வர இவள் “எப்படி” என்றாள் கேள்வியாய்…
“இல்ல என்மேல உட்கார்ந்துட்டு… இப்படி… அதான் இன்னொருதரம் சொல்லேன்” என்றான் காதலா, கட்டளையா… ஏக்கமா என பிரித்தறியமுடியா குரலது. 
முன்பு போல “சாப்பிடலாம் வாங்க” என்றாள் தயங்கிய குரலில்.. அவளின் இந்த நெருக்கத்தில்.. பசியெல்லாம் பறந்தது அவனுக்கு.. இருந்தும், அவளின் அழைப்பை மறுக்காமல் ஏற்று.. அவளுடன் நடந்தான்.. 
சப்பாத்தி, குருமா.. சாதாம் என எல்லாம் இருந்தது.. அவள் பரிமாற.. உண்டு கொண்டிருந்தவன் “இந்தா..” என்றான் திடுமென கையில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு.. வர்ஷிணியும் பிகு செய்யாமல் வாங்கிக் கொண்டாள்… “ தேங்க்ஸ்” என்றாள்..
சுப்பு “எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லுவியா… அப்போ நானும் தேங்க்ஸ் சொல்றேன்… நீ சாப்பிட வா கூப்பிட்டதுக்கு” என்றான், அவளை பாராமல் உணவில் கவனமாக.. 
இவள் அமைதியாவிட்டால்.. அவனுக்கும் எனக்கும் இடைவெளி குறைக்க முயற்சிக்கிறான்… என அவளின் மனம் கூற.. சட்டென சுதாரித்து அமைதியாகிவிட்டாள்..
பின் பேச்சில்லை, நிம்மதியாக உண்டான்.. அவள் எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருக்க.. இவன் வாசல் கதவை திறந்து உலாவ சென்றான்…
எல்லாம் முடித்து இவள் வெளிவந்து பார்க்க.. சுப்பு அவளிடம் “டார்ச்சு எடுத்துவா” என்றான்.
இவளும் எடுத்து வந்தாள்.. கதவை பூட்டி விட்டு, சுப்பு “வா..” என கூறி இருவரும் கேட்டை தாண்டி.. அந்த அனாதையான தார் சாலையில் நடந்தனர்… கூடவே பைரவன் துணைக்கு. வீட்டுக்கு வஜ்ரன் காவல்..
நிசப்தமான நேரம்.. பழகிய சாலை… பக்கத்தில் உள்ளதை காட்டும் கண்ணாடி முகமாய் மனையாள்… நட்சத்திரங்கள் புடை சூழ.. உச்சி வெண்ணிலா குடையென… உடன் வர… அவளின் கைகளை வலிந்து பற்றி, அதில் தன் உதடுகளை பதித்தபடியே நடந்தான்… ஒன்று.. இரண்டு.. மூன்று… முத்தங்களும் நட்சத்திரம் போல எண்ணிக்கையை கடக்க… இன்னும் முடியவில்லை.. வர்ஷினி சிணுங்கினாள் “என்ன இப்படி” என..
“நீ தேங்க்ஸ் சொல்லுவியோன்னு பார்த்தேன்” என்றான்… இப்போதுதான் நிறுத்தி. பட்டென சிரித்தாள்… அவளின் சிரிப்பில், கன்னங்கள் நிலவொளியில் மின்னும் வைரமாய் தெரிய… சுப்பு, அதனை ரசித்தபடியே “ம்… பயமெல்லாம் போயிடுச்சா… “ என்றான்.
வர்ஷி “ம்…” என்றாள் மையமாக தலையசைத்து..
“சொல்லு… ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட” என்றான்… முன்னுரை இல்லாமல்..
அவளும் முகாந்திரத்தை எதிர்பார்க்கவில்லை போல.. “உங்களுக்கு தெரியாதா” என்றாள்.. நிமிர்வான குரலில்.
“எனக்கு தெரியும், அதை உன் வாயால் சொல்லேன்… இனி என்ன பயம்.. உன் கூட தானே இருக்கேன்.. நீ எதுன்னாலும் தயங்காம சொல்லு… எனக்கு எல்லாம் தெரியும், புரியும். ஆனால்… நீ சொன்னா உனக்கு நிம்மதியா.. ஒருமாதிரி ரெலிப்பா இருக்குமில்ல…சொல்லு…” என்றான்.
பைரவன் வேறு… எங்கோ நின்று, எதையோ பார்த்து குரைத்து வம்பிழுத்துக் கொண்டிருந்தது… அந்த சத்தம் அவர்களின் காதில் விழவேயில்லை..
வர்ஷினியிடமிருந்து பெருமூச்சு… அவனிடமிருந்து கைகளை விளக்கிக் கொண்டு மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டாள்.. “ஒரு பழமொழி.. அத்தை சொல்லுவாங்க, ஏண்டி கல்யாணம் பண்ணிக்களைன்னு யாரோ கேட்டாங்களாம்.. ஒருத்தர்கிட்ட, அதுக்கு அவங்க.. நீயே பண்ணிக்கோன்னு பதில் சொன்னாங்களாம்.. அப்படிதான் எனக்கு ஆச்சு.. உங்களுக்கு பொன்னு, நான் பார்த்துடுட்டு வந்தேன்.. கடைசியில.. நானே உங்கள கல்யாணம் செய்துகிட்டேன்” என்றாள் லேசாக சிரித்து…
சின்னதாக “ம்… ஹா…ஹா…. அப்படியா“ என்றான் சிரித்தபடியே… தனக்கு வேண்டிய பதில் அவளிடமிருந்து வரவில்லையே அதனால், லேசாக வழியை மாற்றினான் “எப்படி போகுது.. கல்யாண லைப்” என்றான் மூன்றாவது மனிதனாய்..
வர்ஷினி என்ன நினைத்தாலோ “ம்.. போகுது.. அது ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்னு…” என்றாள் அவனை பாராமல்.. மெல்ல நடந்தபடியே.. சுப்பு “ம்கூம் அப்புறம்” என்றான்.
அந்த ம்கூம்… என்ற சத்தம், அவளை நிலையிழக்க செய்தது… கண்ணில் நீர் வந்தது “அவங்க.. அவசரத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டாங்க… இப்போ யோசிக்கிறாங்க போல… தெரியலை, அவங்க கூட என்னை கண்டுக்கல… ச்சு… எனக்கு எல்லாம் அப்படிதான் நடக்கும் போல…” என்றாள் நிதானமாக, யாரிடமும் கேட்க முடியாத வார்த்தையை உரியவனிடமே கேட்டாள்…
மூன்றாம் மனிதன் இப்போது உடமைபட்டவனான் “அது அப்படியில்ல டா பாரு, இது… வேற… கண்டுக்காமல் இல்ல… எல்லாம் பெரியவங்க செய்தாங்க… நாமும் அதன் வழியில் போகாம்னு நினைச்சு தள்ளியிருந்தேன்… அவ்வளவுதான்.. 
இப்போ பார்.. அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கன்னு புரிஞ்டுச்சி… அதான்… ஆனா, சாரி.. சாரி… எனக்கு வேற வேற டிப்ரஷன்… அதுல… முக்கியமானது நீ.. அதனால தள்ளியிருந்தேன்… வேற ஒண்ணுமில்ல டா…” என்றான் அவள் முகம் பார்த்து.
அவளின் முகமும் தெளியவில்லை, கலங்கிய கண்களும் மாறவில்லை.. “எனக்கு அப்பா அம்மா இருந்திருந்தா… இப்படி நடந்திருக்காதில்ல… எனக்கு அதான் தோணுது… இல்ல அதுதான் சரி கூட..” என இவள் எங்கோ செல்ல.. 
சுப்புக்கு, இது பதட்டத்தை கொடுத்தது… இருவரும் பேசி… புரிந்து கொள்ள நினைத்தவனுக்கு.. இப்போது பதட்டம்… அப்படியல்ல நான், என சொல்ல வேண்டிய பதட்டம் எனவே, யோசிக்காமல்.. அவளை இடையிட்டான்.. “இரு இரு… நான் எப்போதும் உன்கிட்ட நெருங்க கூடாதுன்னு நினைக்கிறவன்.. அப்படிதான் அத்தை, அப்பாவின் பேச்சு எல்லாம்…
சரவணன் அப்படி இல்ல… அப்பாவ மீறி எல்லாம் செய்வான்.. எனக்கு அது வராது.. அத்தோட.. உன்னோட வயசும் ஜாஸ்திதானே… எனக்கு எந்த தாட்ஸ்சும் வரல… அப்போல்லாம்..
ஆனால்… இப்போ கல்யாணத்துக்கு முன்னாடி.. உன் கிட்ட வந்தேனே.. அப்போதான் லேசா சலனம்… அப்படிதான் அது.. இத்தனை நாள் உரிமையான பெண், கூடவே இருந்திருக்கா.. பார்க்காம விட்டுடியே என அந்த ஒருவாரமும் அடித்துக் கொண்டது… மனது.
நீயும் என்னை அவாயிட் பண்ணியே… உனக்கு தெரியும்… எனக்கும் தெரியும்” என்றான் மீண்டும் அவளின் கைகளை பற்றிக் கொண்டு…
“நீங்க என்னை சொல்லாதீங்க… எனக்கு அப்படியெல்லாம் இல்ல… நீங்க ஏதோ மாதிரி பார்த்தீங்க.. அதான் அவாய்ட் பண்ணேன்” என்றாள் முறைப்பாக..
“அடியேய்.. உன்னை எதுவும் சொல்லலடி… என்னைத்தான் சொல்றேன்… போதுமா” என்றான் செல்ல கோபமாய்.
“ம்.. அது, நானெல்லாம் கணவனை மட்டுமே நம்புவேன்னு சர்ருக்கு, சத்தியம் பண்ணியிருந்தேன்…” என்றாள் மீண்டும் அதே முறைப்பான குரலில்.
“ஹா… ஹா… நல்ல பிள்ளைடி.. எங்க வளர்ப்பு வீண் போகல” என்றான் அவளை மெச்சி தன் தோளோடு அனைத்து… வர்ஷி “பார்ரா… பெருமைய..” என்றாள் அவனிடமிருந்து திமிரியபடியே…
“சரி… சரி… அப்போவே எனக்கு உன்ன பிடிச்சுதுடி… ஆனால் கல்யாணம் பிக்ஸ் ஆகி நடந்தது… அதான்.. அது சலனமா மாறி… உன்னை தள்ளி வைச்சிட்டேன்…
ஆனால், அன்னிக்கு.. மீண்டும் எல்லாம் தலைகீழா மாறிச்சி… என் நிலையை உன்னால் மாற்றமுடியும் என உன்னிடம் வந்தது என் கௌரவம், நான் வரலை.. ஆனா, என் மனசெல்லாம் இங்கதான் இருந்தது… 
எப்படி சொல்றது.. வேண்டாம்னு சொல்ல மாட்டான்னு நம்பிக்கை, ஆனா… என்னை நிமிர்ந்தும் பார்க்க மாட்ட.. இப்படி.. ஒருமாதிரி… சொல்லமுடியாத… நிலை..
என் அனுமதியில்லாமலே என் சலனத்திற்கு மீண்டும் உயிர் வந்தது… மதிப்புடன் நீ என் உறவாக வருவாய், அப்படின்ற போது… நான் ஏன்.. விடனும்… அதான் பட்டுன்னு பிடிச்சிகிட்டேன்… உன்னை. மாத்திக்கலாம்… பேசிக்கலாம்ன்னு.. சொல்லிக்கலாம், புரியவெச்சிக்கலாம்ன்னு… இப்படி லாம்ல ஒரு நம்பிக்கை…” என இன்னும் சேர்த்தனைத்தான்… தன்தோளோடு அவளை.
இப்போது திரும்பி வீடு நோக்கி நடந்தனர்…. 
மீண்டும் தொடர்ந்தான் “ஆனாலும்… இயல்பான தயக்கம்.. உனக்கு பிடிக்கணுமே… அப்படின்னு… அப்புறம் அப்பா… எல்லாம் சேர்ந்து ஒரு மூணு மாசம் முடிஞ்சி போச்சி… இப்படியே விட்டா… எல்லாம் கைமீறி போயிடும்னு  பயம் வந்தது… 
உன்கிட்ட வந்தா… ஏண்டா வந்தேன்னு ஒரு பார்வை பார்க்குற.. பேசினா அழுகுற… ஏதாவது சொன்னா சண்டைக்கு நிக்குற… ப்பா… முன்னாடி உள்ள வர்ஷினிக்கும்.. கல்யாணத்துக்கு அப்புறம் உள்ள வர்ஷினிக்கும் எ…எவ்வளோ… டிபரன்ஸ்… “ என்றவன் அவளின் இடையில் கை போட்டுக் கொண்டான்.
சுப்பு “என்ன புரியுதா… தனியா விடல… டைம் அமையல… அவ்வளவுதான்..” என்றான்..
வர்ஷி “ம்கூம்.. கடைசியா என்ன சொல்ல வரீங்க..” என்றாள் அவன் வாய்மொழியாக கேட்க எண்ணி… ஒன்றும் சொல்லவில்லை அமைதியாக வந்தான்.
லேசாக சாயம் வெளுத்த வானம்.. கிழக்கில் இறங்கிக் கொண்டிருந்த நிலவும்.. விடியலின் குளிர் காற்றும்.. அவனின் நடையில் ரசனையை கூட்ட.. அவளின் இடைவளைத்த கைகளில் இறுக்கத்தை உணர்ந்தாள் வர்ஷினி…
வீடு வரும் வரை… அவர்களுக்கு பைரவனின் குரல் மட்டும் உடன்வர… வீடு சேர்ந்தனர்.. எல்லாம் சரிபார்த்து பூட்டி வந்தான்.. சுப்பு. அவள் தனக்கென கீழே படுக்கை விரித்துக் கொண்டிருந்தாள்.. 
பின்னிலிருந்து ஆவேசமாக தூக்கி, சுழற்றி கட்டிலில் அவளை போட்டு தானும் அவள் மேல் படிந்தான்… எல்லாம் மின்னல் வேகம்தான்.. அந்த பொறுமைக்கும், இந்த வேகத்திற்கும் முடிச்சிட முடியவில்லை அவளால். 
இதழ் தொட முனைந்திட்ட போது அவளின், பன்னீர் விரல்கள் இடையிட மென்று தின்றான் விரல்களையும் இதழ்களையும் சேர்த்தே… பின் செயலில் வேகம் கூட்டி.. “காட்டு கத்தலா.. கத்திட்டு இருக்கேன்னு… பிடிக்குது, பிடிச்சுதுன்னு… நீ என்னான்னு கேட்கிற… திமிராடி உனக்கு….
ம்… யாருடி நீ… ஏதோ காட்டு பூ மாதிரி.. கண்ணா பின்னான்னு… இருக்க. எங்க வைச்சிருந்த இவ்வளோ திமிரையும்…” என இன்னும் என்னவோ… அலங்கார வார்த்தைகளுடன், அவளின் தடைகளை முத்தத்தால் தட்டி தட்டி உடைத்தான் கணவன்… 
வார்த்தைகளே இல்லாமல் மனைவியின் சங்கீத சிரிப்பில்.. இன்னும் அவளை படுத்தி… சின்ன கொடுமைகளும் செய்து… அதற்கு… பரிகாரமும் செய்து என முழு விடியலில்.. யார் தொலைந்து, யார் மீண்டார்கள்.. என தெரியாமல்… மெல்ல கண்ணயர்ந்து கொண்டிருந்தனர்..
வஜ்ரனின் ஓயாத குரலில் இருவரும் எழுந்தனர்… யாரும் அதுவரை வரவேயில்லை, பெரிதாக நேரம்மாகவில்லை.. மணி ஏழுதான்.. ப்பா… வர்ஷி மெல்ல எழுந்து குளித்து வந்தாள். 
அதற்குள் சுப்பு பரபரப்பாக நின்றான்.. “சீக்கிரம்… வா, பசிக்குது… நான் குளிச்சிட்டு வரேன்… ஏதாவது செய்” என சொல்லி குளிக்க சென்றான்.
(பாட்டு.. உங்கள் சாய்ஸ் மக்களே)