Advertisement

உன் வருகை என் வரமாய்…
12
பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்டியா.. எல்லாம்” என்றார்.
அப்போதுதான் வந்து அமர்ந்தார் விஜயா அத்தை.. மதியம் உறங்கி அப்போதுதான் எழுந்து வந்தார்.. பானுமதி “ம் கேட்டாச்சுங்க… எல்லாம் சரியா இருக்கு….” என இழுத்தார்.
விஜயா “சொல்லு உன் மகன் என்ன சொல்றான்னு சொல்லு… எனக்கு அப்போதே தெரியும்… அவன் அங்க ரூம் போடும் போதே.. ஏதும் நம்மகிட்ட கேட்கல…
நினைச்சேன்… இப்போ நடந்திடுச்சி… நீ இவ்வளோ அமைதியா இருந்திருக்க வேண்டாம் நாதா… 
பாரு.. இப்போ எங்க வந்து நிக்குதுன்னு” என்று பொரிந்தபடி பானுவை முறைத்தார். பானுமதி இன்னமும் புதிதாக திருமணமாகிவந்த பெண் போலவே அமர்ந்திருந்தார்… ப்பா… ஏனோ.. பானுமதி பேசவேயில்லை.
ஆத்மநாதன் “ஏன், என்ன விஜி” என்றார்…
விஜி “நீ சொல்லு அண்ணி…” என அமர்ந்து கொண்டார்.
பானுமதி சுப்பு சொல்லியதை சொல்ல ஆத்மநாதன் “இதென்ன பேச்சு… அவன் சொன்னா.. நடந்திடுமா.. நான் பேசிக்கிறேன் அவன் கிட்ட…” என தன் தங்கையிடம் பேசியவர்.. 
தன் மனைவியை பார்த்து “பார்த்தியா… அந்த பொண்ணு… வந்து இன்னும் சரியா மூணுமாசம் கூட ஆகலை அதற்குள்… பிரிச்சிட்டா..” என்றார் கடுங் குரலில்.
ஆத்மநாதனுக்கு, ஏதோ ‘மனைவி’ என்ற வார்த்தையே அவருக்கு பிடிக்காது. அவர்கள் மயக்குபவர்கள் என்ற எண்ணம் ஆதிதொட்டே அவருக்கு உண்டு..  அதற்கு நிறைய சாட்சியும் உண்டு.. தன் மனைவியின் யோசனையை, கருத்தை.. மதிப்பதென்ன… காதில் கூட வாங்கமாட்டார்.
அவர் ஏதாவது சொல்லி அதை நாம் கேட்கவே கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அப்படியும் நாதன் ஏற்ற.. ஒரே செயல்… ‘கிரி, வர்ஷினிக்கு’ அடைக்கலம் கொடுத்தது. பானுமதிக்கே கூட அது இன்னமும் புரியாத ஒன்று.. எப்படி தன் கணவர் ஒத்துக் கொண்டார் என.
ஆக, இப்போது சுப்புவின் முடிவுக்கு, அவர் பெரிதாக என்ன காரணம் கண்டுவிட முடியும்.. பட்டென சொல்லிவிட்டார்.. ‘குடும்பத்தை பிரிச்சிட்டா’ என.
பானுமதி ஏதும் சொல்லவில்லை. இதில் எப்போதும் போல தன் தலையைதான் எல்லோரும் உருட்டுவார்கள் என அமைதியாகிவிட்டார்.. பசங்க நன்றாக இருந்தால் சரியென.. தாயாய், அமைதியாகிவிட்டார்.
இனி அந்த ஹாலில் விஜயா.. நாதன் சத்தமே ஒலித்தது. எப்படி எல்லாம் தன் மகனை அவள் பிடித்துக் கொண்டாள் என சரம் சரமாய்.. வந்தது வார்த்தைகள்..
விஜி அத்தை… ‘இங்கே உண்பதேயில்லை… வருவதேயில்லை… இரவு படுக்க மட்டும்தான் வரான்… நாமதானே திருமணம் செய்து வைத்தோம்.. நமக்கு நாள் பார்த்து எல்லாம் செய்ய தெரியாதா…’ என ஏனோ எதிரியுடன் குறைகாணும் குரலாகவே ஒலித்தது.
மாலை நேரம் சுப்பு, அங்கு போவான்.. டீ குடிக்க கூட வருவதில்லையே நீ போன் பண்ணு என விஜி அத்தை சொல்லி.. ஆத்மநாதன், சுப்புக்கு போனில் அழைத்து இங்கே வர சொன்னார்.
மகன் எட்டியும் பார்க்கவில்லை… சுப்புக்கு தெரியாதே இதெல்லாம்.. மேலும் அவனுக்கு இன்று ஒரு பஞ்சாயித்து… பினான்ஸ் அலுவலகத்தில்.. அதன் சாரம் இன்னும் நாதனுக்கு, தெரியவில்லை.
எனவே இவர்கள் இங்கு சாககாசமாக பேசிக் கொண்டிருக்க.. அங்கு அவன், சோறு தண்ணி இல்லாமல் யாருக்கோ பழி கிடந்தான்.
மணி ஐந்தாகியும் மகன் வரவில்லை பானுமதியிடம் “எங்க டி.. அங்க போயிட்டானா உன் மகன் “ என இவர் இங்கு சலங்கையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தார்.
பானுமதியும், வர்ஷினிக்கு அழைத்து பார்த்தார், அவள் இன்னமும் வரவில்லை போல… போனை எடுக்கவில்லை. இங்கு இவர்களும் சுப்புக்கு அழைத்தனர் போன் ரிங் போய்கொண்டிருந்தது எடுக்கவில்லை.. ஆத்மனாதனுக்கு கோவம்.. தன் மகன் தன்னை தவிர்க்கிறான்… என இன்னமும் பேசினார்.
ஒருவழியாக வர்ஷினி அடுத்த ஒருஅரைமணி நேரம் சென்றுதான் பானுமதிக்கு அழைத்தால்.. “தங்கம் சுப்பு, அங்க இருந்தா வர சொல்லுடா” என்றார் எடுத்த உடன்.
“த்த இங்க அவங்க சாப்பிட கூட வரல த்த… சாப்பாடு அப்படியே இருக்கு… எங்க த்த அவர்” என்றாள் திரும்பவும்.. பூமராங் மாதிரி அவரிடம். 
பானுமதி “இரு நான் மாமா கிட்ட சொல்லி பேசி.. என்னான்னு பார்க்கிறேன்” என்றவர் போனை வைத்து அந்த செய்தியை தன் கணவரிடம் சொன்னார்.
அதன்பிறகுதான் நாதனே சற்று அமைதியாகி… பினான்ஸ்க்கு அழைத்து கேட்க.. விவரம் வந்தது..
அவர்களின் பினான்சில் வேலை செய்யும் சங்கரன்… ஆத்மநாதனின் நண்பரின் மகன்.. ஒரே வயது அவனுக்கும், சுப்புக்கும்.. ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள்… ஆத்மநாதன் அவரின் தந்தைக்கு பலவகைகளில் உதவியிருக்கிறார்.
ஏதோ நேரம் சரியில்லை வேலையை விட்டு வந்துவிட்டான்.. நீ ஏதாவது செய்.. என் மகனை கொஞ்சம் நேராக்கி கொடு என ஆத்மனாதனிடம் அந்த நண்பர் கேட்க… 
ஆத்மனாதந்தான்.. சுப்பு அப்போது பினான்ஸ் பொறுப்பை பார்ப்பதால்.. கூட வைத்துக் கொள்ள அனுப்பினார் அந்த சங்கரை. சுப்புக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை அவனை பற்றி.. சிறுவயதிலிருந்து தெரியும் ஒரே பள்ளி… பழக்கம் இல்லை என்றாலும் தெரிந்த முகம் எனவே நம்பினான். எல்லா பொறுப்பும் அவனுக்கும் கொடுக்கப்பட்டது.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது.. இந்த வருடங்களில் அவனின் உழைப்பு நன்றாகவே இருந்தது.. சந்தேகம் வரவில்லை… தனியாக அவனுக்கு லைன் போட்டு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்.. ஏனோ இப்படி ஒரு தகவல் வந்தது சுப்புக்கு.
இவர்களின் கை பெரியது… பெரிய சாயப்பட்டறை… பனியன் கம்பனி.. துணி கடை… என இவர்களின் கஸ்டமர்ஸ் எல்லாம் கோடிகளில் வரவு செலவு பார்ப்பவர்கள்.. அப்போது இவர்களும் அவர்களுக்கு பினான்ஸ் எனும்போது… கோடிகளில்தான் இருக்கும்…
இப்போது இந்த சங்கர் எடுத்து சென்ற பணம்… 3.15 கோடி… ஒருவரிடமிருந்து வட்டியாக மட்டுமே வந்த தொகை அது… இது வாரகணக்கு, மாசகணக்கு.. என வட்டி பல வகை… 
எப்போதும் வரவு செலவில் பொறுமைதான் சுப்புக்கு.. முன்ன பின்ன நாட்கள் சென்றாலும் கண்ணியமாக கொடுத்துவிட வேண்டும் அவனுக்கு.. மிரட்டுதல்… வீட்டுக்கு செலுத்தல் என எந்த அடாவடியும் இருக்காது.. நேரே அவர்களின் தொழிலில் கை வைத்து விடுவான் அவ்வளவுதான்.
எப்படியிருந்தாலும் எல்லா நிறுவனங்களும் இவர்களுக்கு பழக்கம் இங்கிருந்து ஸ்டாக் எடுக்க வேண்டாம்… நம்பிக்கையானவர்கள் இல்லை என ஒரு வார்த்தை வந்தாலும்… அந்த இடத்தில், அந்த கம்பனி யோசிக்கும் தானே.. எனவே, சுப்பு அப்படிதான் அடிப்பான். 
பணம் தேவை என்றால், எந்த நேரமாக இருந்தாலும்.. எவ்வளவு பெரிய தொகையையும் ஏற்பாடு செய்யும் திறமை அவனுக்குண்டு. நம்பி கேட்கலாம்.. சொன்ன நேரத்திற்கு தருவான்.. இவனை நம்பி… ஏலம் எடுக்க சென்று.. ஏலம் கேட்ட பின் இவனுக்கு போன் செய்து.. தொகை சொல்லி.. எடுத்துவர சொன்னவர்கள் எல்லாம் உண்டு… நம்பிக்கையானவன்.
இப்படி எல்லாம் தெரிந்திருந்தும் அந்த சங்கர், எப்படி துணிந்தான் என தெரியவில்லை. ஆக சுப்புக்கு.. பர்சனல் லைப்.. இப்போது தொழிலில் ஒருவர் ஏமாற்றியது என எல்லாம் சேர்ந்து கொண்டது.
கண்டுபிடித்துவிட்டான்.. பனிரெண்டு மணி நேர தேடுதல், அவ்வளவுதான்… சிக்கிவிட்டான் சங்கர். இப்போது மைசூர் டு பெங்களூர் சாலையிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
மாலை ஆறு மணி.. சுப்பு, இப்போதுதான் போனை எடுத்தான். தன் தந்தைக்கு அழைத்தான் அவர், வந்துவிட்டார் பினான்சுக்கு.. “என்னடா… எப்படி டா… ஏமாந்த” என ஏதோ கேட்டவர், யார்.. என்ன.. என விவரம் கேட்க… ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாகி அமர்ந்து கொண்டார்.
அவர்கள் வர ஏழுமணி நேரமாகும்… சுப்புக்கு உதவியவர்கள், போனில் அழைத்து சொல்ல… அந்த செக்போஸ்ட் நபர்கள், காவலர்கள் என எல்லோருக்கும் முறையாக கவனிக்க வேண்டும் என பேச்சு சென்று கொண்டிருந்தது.. யாருக்கு எவ்வளோ.. எங்கே கொடுப்பது என அதுவே ஒரு பெரிய பராசாஸ்சாக சென்றது. 
இப்படியாக நேரம் செல்ல இரவுமணி ஏழை நெருங்கியது, சுப்பு “அப்பா நீங்க கிளம்புங்க… அவங்க விடிகாலம்தான் வருங்காங்க… அப்புறம் பேசிக்கலாம்” என்றான்.
நாதன் “நீ டா.. “ என்றார்.
“வரேன் ப்பா… மாணிக்கம் வரேன்னாரு.. பார்த்துட்டு வரேன்” என்றான். அவர்தான் இந்த ஆள்பலம், தேடுதல் பலம் கொண்டவர்.
ஆத்மநாதன் “என்னவோ டா.. அவன் எடுத்ததவிட, இதுக்குதான் அதிக செலவு..” என்றார்
“என்ன செய்யறது… எல்லாம் பயம் இருக்கணும்… இல்ல, இப்படிதான் நம்மள ஏச்சிடுவாங்க…” என்றவன் கிளபினான்.
நாதன் “டேய், அவங்க பேச்ச கேட்டுக்கிட்டு.. அந்த பையன ஒன்னும் பண்ணிடாத டா” என்றார்.
“அப்புறம் சும்மா விட முடியமா… நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என்ன டா.. இரண்டு பசங்க இருக்கு டா..” என்றார்
“யாருக்கு, அவனுக்கா.. ஏதேதோ நியுஸ் வருது அவன பத்தி… இங்க இல்லையாம் பொண்டாட்டி, பிள்ளை எல்லாம்… 
ஏதோ.. ஒரு தனி வாழ்க்கை வாழரானாம்… திமிர்ப்பா… இவனுக்கெல்லாம்… நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவரை கிளப்பினான்.
பானுமதிக்கு ஏதும் விஷயம் தெரியாது. ஆத்மநாதன் ஏதும் சொல்லவில்லை. எனவே இங்கே வந்துவிட்டார் தோட்டத்து வீட்டுக்கு. வர்ஷினியிடம் ஒரே நச்சு.. போன் செய் என. என் பையன், என்ன ஆனானோ… என அவரும் அடம். எனவேதான் சுப்புக்கு, இப்போதுதான் அழைத்தாள் வர்ஷினி… 
அவன் காதில் வைக்க, மனையாளின் குரல் சத்தமாக வந்தது “சாப்பிட வர மாட்டேன்னு சொல்லியிருந்தா, சமைச்சிருக்க மாட்டேன்ல்ல… எல்லாம் வீணா போச்சு…” என்றாள் பானுமதி வேறு அருகில் இருப்பதால் எப்படி பேசுவது.. எங்கே தொடங்குவது என தெரியாமல்.
மெல்லிய புன்னகையோடு அந்த சூழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.. இதமாக இருந்தது.. இதே போல் எத்தனை நிகழ்வுகள்.. அப்போதெல்லாம் யாரும் இப்படி அவனை அதட்டியதில்லை… கோவமோ.. வருத்தமோ.. இப்படி ஒரு உரிமையை அவன் உணர்ந்ததே இல்லை. என்னை கவனிக்கவும் கேள்விகேட்கவும் ஒருத்தி இருக்கிறாள்… மனம்மெல்லாம் இசைந்தது அவளின் குரலுக்கு.. இன்னொடு தரம் திட்டேன்… என சத்தமில்லாமல் சொல்லியது.
வர்ஷினி மீண்டும் “உங்களைதான்… கேட்டா, பதில் சொல்லணும்” என்றாள், உரிமை எடுப்பதை விட, கொடுப்பதுதான் வாழ்வின் முழுமை. இன்னார்க்கு நான் கட்டுபட்டவன் என்பது அழகான கெளரவம்தானே.. அதை இப்போது அனுபவித்தான் சுப்பு.
ஒரு நிமிடம் தன்னை அமைதியாக்கிக் கொண்டான் போல, பின் “நீ எப்போ ஸ்கூல்ல இருந்து, வந்த” என்றான் அமர்த்தலான குரலில்.
எதுக்கு சம்மந்தம் இல்லாம கேட்க்குறாங்க… என அவளுக்குள் ஓட “ஏன்…” என்றாள் அதே த்வனியில்.
“சொல்லு” என்றான் வார்டன்…
“ஈவ்னிங்” என்றாள். 
அவன் தொடர்ந்தான் “அப்போவே தெரியுமில்ல…  நான் சாப்பிட வரலைன்னு… இப்போ வந்து கேட்கிற… உண்மைய சொல்லு, எதுக்கு கூப்பிட்ட” என்றான் பத்து நிமிடம் முன்புவரை இருந்த இறுக்கம் மாறி.. 
வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாதே நம் சூழ்நிலை என்னவென. ஆனாலும் சுப்பு.. அமைதியாக எடுத்துக் கொண்டான். எல்லோருக்கும் வராதே..
வர்ஷிக்கு எதோபோலானது “இல்ல, இப்போ வரீங்களா.. சாப்பிட” என்றாள் ஒருவழியாக.
“ம்… வருவேன்.. லேட் ஆகும்.. அம்மாகிட்ட சொல்லிடு..” என்றான்.
“இருங்க, இங்கதான் இருக்காங்க” என்றாள்.
பானுமதியும் “ஏன் ப்பா, சாப்பிட வரலை… என்னாச்சு.. எப்போ வருவா “ என கேட்டு சுப்புவின் பதிலில் நிம்மதியாகி போனை வைத்தார்.
பானுமதி தங்கள் வீட்டுக்கு கொஞ்சம் குருமா எடுத்துக் கொண்டு கிளம்பினார். “பார்த்து தங்கம், இங்கதான் வருவான் சாப்பிட… அதனால நான் கொஞ்சமா எடுத்து போறேன்… வந்திடுவான் சீக்கிரமே” என்றார்.
“ஆமாம்… எது கொஞ்சம்.. என்னோட பாதி குருமாவ காணும்” என்றாள் சிரித்தபடியே..
பானுமதி ஒன்றும் சொல்லாமல் கிளம்ப.. “போடி” என சொல்லி கிளம்ப, செண்பா “இருங்க… அண்ணி.. நான் வரேன்.. இங்க டிவி தெரியலை” என சொல்லி கிளம்பினார்.
இந்த நேரத்திற்கு எப்போதும் போகமாட்டார்.. இப்போதெல்லாம் செண்பா வீடு தங்குவதே இல்லை என்பது வர்ஷினியை உறுத்த தொடங்கியது. அதற்காகவே பக்கத்தில் நடக்கும் வீட்டு வேலை முடிந்தால் பராவாயில்லை என தோன்றியது அவளுக்கு.
அடுத்த ஒரு மணி நேரம் சென்றது… சுப்பு இன்னும் வரவில்லை.. இப்போதுதான் சரவணன் நினைவு வர அழைத்தால்… நீண்ட நாட்களுக்கு பிறகு.
அவனும் எடுத்து “பாரு… இல்ல, அண்ணி.. எப்படி இருக்க… கோவம் போயிடுச்சா” என்றான். வர்ஷினிக்கு மனதேயில்லை.. இத்தனை நாள் எப்படி இவனோடு பேசாமல் இருந்தேன் என்றே சுற்றியது மனம்.
அவன் மீண்டும் “அண்ணி…” என்க.
“இல்ல… நீ எப்போதும் போல கூப்பிடு, இல்ல வைச்சிடுவேன்” என்றாள் லேசாக அழுத குரலில்.
“என்ன, என்ன ஆச்சு… ஏன் இப்படி இருக்கு குரல்” என்றான்.
“இத்தனை நாள் ஆச்சே வந்து பார்த்தியா என்ன… எதுன்னு கேட்டியா…” என்றாள் கோவமாக.
“நீதானே என்னை ப்ளோக் பண்ணி வைச்ச…” என்றான்.
“அதுக்காக அப்படியே விட்டுடுவியா… “ என்றாள் உடைந்த குரலில்… “வரமாட்டியா” என்றாள் உரிமையாக.
“ஹேய்ய்… சாரி.. எனக்கும் மனசே இல்லைதான்… என்ன செய்ய… நீ ஏதாவது கேட்டா கூட, என்கிட்டே பதிலில்லை… அதான் உன்னை பார்க்க கொஞ்சம் கஷ்ட்டமா இருந்தது.” என்றான் தன் தரப்பு நிலையை விளக்கி..
மீண்டும் அவனே “என்ன சொல்றான் அண்ணன்” என்றான்.
அவள் அமைதியாக இருந்தாள்.. என்ன சொல்லுவது என தெரியவில்லை… இந்த பதினைந்து நாட்களாக சுப்பு இங்கேதான் இருக்கிறான் உறங்க மட்டுமே வீட்டு செல்கிறான்.. அத்தோடு அவனின் நேற்றைய பேச்சு.. வேறும் சேர்ந்து கொள்ள.. முகம் மலர்ந்தது.
முன்பு நடந்த எல்லாம் கைமீறிய செயல்.. என்ற நிலைக்கு வந்துவிட்டாள் வர்ஷினி.. சரவணன் “என்ன சத்தத்தை காணம்… அம்மா, அண்ணன் புகழ் பாடுறாங்க…
இங்க வீட்டில் சாப்பிடறது இல்லையாம்… உன் சமையல்தான் சாப்பிடுரானாம்.. தனியா தோட்டத்தில் ரூம் போடுறானாம்…
ஜோடியா ரெண்டுபேரும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்தீங்களாம்… ப்ப ப்பா உங்க பெருமை பேசியே என் போன் ஆப் ஆகுது….” என்றான் அவனும் இன்பமாக சலித்தபடி…
வர்ஷினி “ஆமாம் அதனால்தானே உங்க வீட்டில் இன்னும் என்னை கூப்பிடல, இப்போதான் நாள் பார்த்திருக்காங்க…
ஏன், நீ கூட என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா, இதே எங்க அம்மா அப்பா இருந்திருந்தால்.. இப்படி அலட்சியமாக இருப்பீங்களா” என்றாள். லேசாக குரல் கரகரத்தது… தனக்கு யாருமில்லை என்ற எண்ணம் மீண்டும் எழ.. சருவை வெளுத்து வாங்கினாள்.
“நான் எதுக்கு கேட்கணும்” என்றான்.
அழுதால் வர்ஷினி ஏதும் பேசவில்லை.. மெல்ல சரவணன் “முன்னாடி யாருமில்ல சரி, இப்போதான் உன் புருஷன் இருக்கானே… அவன்தான் கேட்கணும்..
நீ அவன் கிட்ட சண்டை போடு… ஏன் அங்க கூப்பிடலன்னு, இப்போ உனக்கு எல்லா ரயிட்ஸ்ம் இருக்கே டா..” என்றான் பொறுமையான குரலில்.
வர்ஷினிக்கு அழுகைதான் வந்தது… வேறு வார்த்தையே வரவில்லை சரவணனுக்கு சங்கடமாக… “அண்ணி… அண்ணி… இங்க ஒரு பாப்பா இருந்தது… அது அண்ணியான உடனே… தைரியத்த தொலைச்சிட்டு இப்போதான் பாபாவா நிக்குது… பாவம் யாராவது லாலிபாப் வாங்கி கொடுத்து சமாதானம் செய்ங்க” ஏற்னான் கிண்டல் குரலில்.
“போடா..” என்றாள்.
“ஹேய்.. அறிவு, நீ சும்மா இரு அண்ணன் பார்த்துப்பான்…” என்றான் ஆழ்ந்த குரலில். தன்னையறியாமல் வர்ஷினி “ம்..” என்றாள்.
இப்போது சரவணன் “அப்புறம், நம்ம மஞ்ச வயக்காடு பூரா… உங்க ரெண்டுபேர் கதைதான் ஓடுதாம்… வேலைக்கு வர ஆயால்லாம் ஒரே கண்ணாம் உன் மேல, புருஷனுக்கு சமைச்சு வைச்சிட்டு, புள்ள வேலைக்கு போகுதுன்னு… இங்க வரைக்கும் சத்தம் கேட்க்குது…  
நீ வேற, நன்றி சொல்லவே உனக்கு,
என் மன்னவா வார்த்தையில்லையே,.. அப்படின்னு பாட்டா பாடுறியாம்” என அவளை கலாய்க்க, அது வேலை செய்தது.
“டேய்… என் புருஷனோட தம்பியாச்சேன்னு பொறுமையா இருக்கேன்… பார்த்து பேசு… இல்ல பழயபடி… குரங்காக்கிடுவேன்.. எருமைமாடு…
நான் ஏன் டா பாடனும்.. உங்க அண்ணன் பாடுவாரு…” என குரலுயர்த்தினால்.
சரவணன் “இது, இது… நல்ல புள்ளைக்கு அடையாளம்… “ என்றான் ஆழ்ந்த குரலில்.
“போடா” என்றாள்.
“ஹேய்… எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.. உங்க வீட்டுகாரகிட்ட சொல்லி எனக்கு சீக்கிரம் பெண்ணு பார்க்க சொல்லுடி…” என்றான்.
“ஹா… ஹா… ஹா…. அப்போ அண்ணி சொல்லு.. அண்ணி சொல்லு.. அண்ணி அண்ணி சொல்லு…” என்றாள் விவேக் குரலில்.
“நீ பொண்ணு பார்க்கிறேன்னு சொல்லு.. அம்மா கூட சொல்றேன்” என்றான் சிரித்துக் கொண்டே…
“போடா அவ்வளோ வயசாகல… அண்ணி சொல்லு, மரியாத தம்பி, மரியாத” என்றாள் அவளும் சிரித்தபடியே… தீராத நட்பு… நட்புடன் கூடிய உறவு.. கோடி ஆனந்தம்தானே…
“அழகே.. அழகே… 
எதுவும் அழகே..
அன்பின் விழியில் 
எல்லாம் அழகே…
மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட அழகே…
மலர் மட்டுமா அழகு…
விழும் இல்லை கூட ஓர் அழகே…”
 
 

Advertisement